"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, June 26, 2020

கற்போம். கடைப்பிடிப்போம்.. காப்போம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆனி மாத வழிபாடுகளில் தற்போது நாம் சென்று கொண்டிருக்கின்றோம். ஆனி மாத மோட்ச தீப வழிபாடு ஆத்ம தீப வழிபாடாகவும், ஆனி அமாவாசை அன்னசேவை வழக்கம் போல் சிறப்பாக நடைபெற்றது. மேலும் ஆனி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை சிறப்பாக குருவருளால் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நடைபெற்றது. அடுத்து ஆனி மாத மகம் நட்சத்திரம் கண்டு மாணிக்கவாசகர் பற்றி சிறிது நம் தளம் வாயிலாக கண்டோம். இன்றைய தினம் சற்று பொதுவான சிந்தனையாக பதிவில் காண உள்ளோம். ஆம். நம் பண்பாட்டின் உயர்வுகளை கற்க உள்ளோம். அவற்றை கடைபிடிக்க உள்ளோம். கடைபிடித்த நம் பண்பாட்டை காக்க உள்ளோம். 



எது ஒன்றையும் விரும்பி கற்க வேண்டும், கற்றதை கடைபிடிக்க வேண்டும். கடைபிடித்ததை காக்க வேண்டும். உதாரணமாக நாம் குழந்தைப் பருவம் அடுத்து பள்ளிக்கு சென்று கற்றோம். இது வெறும் எட்டுக்கல்வியாக மட்டுமே தற்போது வரை இருந்து வருகின்றது. கற்ற விஷயங்களை கடைபிடித்தோமா என்றால் வெறும் கேள்விக்குறியே மிஞ்சி நிற்கின்றது. உலகிற்கே அறம் செய்ய விரும்பு என்று சொன்ன ஒளவைப் பாட்டியின் செய்திகள் வெறும் மதிப்பெண் பெறுவதற்கே போதும் என்றாகி விட்டது. இது போல் தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனார் சொன்ன வாழ்வியல் நெறியும். அனைத்தும் சும்மா போகிற போக்கில் படித்தோம் அவ்வளவே. கற்றவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது. திருவள்ளுவரிடம் சென்று கேட்டால்,

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

ஆம். நாம் கற்றோம். ஆனால் கற்றதை வாழ்வில் கடைபிடித்தோமா என்பது தான் நாம் இன்று எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். இனிமேலாவது நம்மை கொஞ்சம் மாற்றுவோம்.

சரி..இன்றைய பதிவிற்குள் செல்வோமா?

கற்போம்:

பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!

என்று சொன்ன பாரதியாரின் வரிகளை இங்கே சொல்ல விரும்புகின்றோம். ஆம். இந்த புண்ணிய தேசத்தில் பிறக்கவே கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பாரத நாட்டின் மாபெரும் நூற்களை அனைவரும் அறிய வேண்டும். நான்கு வேதங்கள், இதிகாசங்கள், பதினெட்டு புராணங்கள், போன்ற அனைத்தும் அறிந்திருக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் திருக்குறளையும், திருவாசகத்தையும் வழிகாட்டும் நூட்களாக கொண்டிருக்க வேண்டும். இவற்றை படித்துவிட்டாலே போதும். நாம் நம் வாழ்வின் அறத்தை போற்ற முடியும். திருவாசகம் என்றதும் மதச் சார்பு பூச வேண்டாம். அன்றைய காலத்தே கிருத்துவ மதத்தை பரப்ப வந்த ஜி.யூ.போப் திருவாசகம் படித்து கண்ணீர் விட்டிருக்கிறார். மேலும் தம் கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கின்றார் என்று எழுத சொல்லி இருக்கின்றார் என்றால் நம் தமிழ் மொழியின் வளமை, இனிமை, பழமை, புதுமை என்றும் குன்றாது. 



கடைப்பிடிப்போம்:

பணம் சம்பாதிப்பதும், புலனின்பங்களை அனுபவிப்பதும் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் அல்ல. அறத்தைக் கடைபிடித்து , அன்பு முதலான பண்புகளை வளர்ப்பதே வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.பொருளும், புலனின்பங்களும் இதனைச் சார்ந்து தானாகவே அமையும்.

அறம் என்பது நன்மை தரும் செயல் என்று எடுத்துக் கொள்ளலாம். அதாவது விருப்பு, வெறுப்பு அற்ற திட்டமிட்ட சீரான வாழ்க்கை முறையே அறம் ஆகும்.அதிகாலை எழுவது கூட அறம் தான். நம் உடலும், உயிரும் இயல்பாகவே அறம் ஓத்தே வாழ்ந்து வந்தது. ஆனால் எங்கோ சற்று பிறழ்வு ஏற்பட்டு இன்று மாயைக்குள் இருக்கின்றோம். அதிகாலை எழுவது முதல் இரவு உறங்க செல்வது வரை அறவாழ்வில் வாழ முயல வேண்டும். பணம் சம்பாதிக்க நேரம் ஒதுக்குகின்றோம் அல்லவா? அது போல் மன அமைதியைக் கொடுக்கும் நற்செயல்கள் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும்.

முக்கியமாக அனைவரும் ஐம்பெரும் வேள்விகளை செய்ய வேண்டும்.

1. நாள்தோறும் கடவுளைப் போற்றி வழிபட வேண்டும். 

வள்ளுவர் வழியில் கற்றதின் பயனாவது இறையை தொழுவதே ஆகும்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?



2. தாய், தந்தையரை போற்றி பேரன்புடம் பாதுகாக்க வேண்டும். பெற்றோர் இல்லையெனில் அவர்களை நினைத்து நாள்தோறும் நன்றியுணவுடன் வணங்க வேண்டும். 

ஒளவையாரின் வழியில் "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் "

3.  பறவைகள், விலங்குகள் போன்ற பிற உயிர்களை பேணிக் காத்தல். மேலும் சுற்றுப்புறத்தை பாதுகாத்தல் என்பவை.

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா. 

என்று கூறும் பாரதியாரை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

4. சக மனிதர்களுக்கு உதவுதல் 

இது மிக மிக தேவையான ஒன்றாகும். நம்மால் முடிந்தவரை மற்றவருக்கு உதவிட வேண்டும். பாரதியாரின் வழியில்,

"வயிற்றுக்குச் சோறிட வேண்டும், இங்கு 
வாழும் மனிதருக் கெல்லாம் ; 
பயிற்றிப் பலகல்வி தந்து, 
இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்." 

முதலில் கல்வி தர வேண்டும் என்று சொல்லவில்லை. முதலில் உண்ண உணவு தர வேண்டும். இதனைத் தான் வள்ளலாரும்,

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் 

என்று கூறியுள்ளார்.

5. அற நூற்களை அனுதினமும் ஓதுதல் 

நம் தாய் மொழியில் உள்ள நூற்களை தினமும் ஓத வேண்டும். திருக்குறள், ஆத்திச்சூடி, திருவாசகம், திருவாய் மொழி, நாலாயிர திவ்விய பிரபந்தம், பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் போன்ற மெய்யறிவு தரும் நூற்களை தினமு படித்து அவற்றை ஒத்த சிந்தனையுள்ள அன்பர்களுக்கு சொல்லவும் வேண்டும்.

காப்போம்

எவற்றை காக்க வேண்டும்? சற்று சிந்தித்துப் பார்த்தாலே நமக்குத் தெரியும். ஆம். நாம் கற்றவற்றை, கடைபிடித்ததை காக்க வேண்டும். அதனால் தான் மீண்டும் மீண்டும் நாம் அறம் பற்றி பேசுகின்றோம்.அறத்தை காத்தாலே போதும். மற்றவை தானாக காக்கப்படும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது நாட்டின் அடிநாதம். இது மனிதநேயத்தால் சாத்தியமாகும். மனித நேயம் என்பது "அறத்தால் " கிடைக்கும். எனவே இது போன்ற அறத்தை காத்து மனிதம் வளர்த்து புண்ணியம் சேர்க்கும் அமைப்புகள் பல உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றில் இணைந்து காத்து வாருங்கள்.



மனதில் பட்ட சில செய்திகளை உங்களோடு பகிர்ந்துள்ளோம். மேற்சொன்ன செய்திகளை நாம் கற்று, கடைபிடித்து, காக்க விரும்புகின்றோம். "தேடல் உள்ள தேனீக்களாய் - TUT" குழுவும் இந்த பதிவின் கருத்துக்களை ஒட்டியே எப்போதும் செயல்படும் என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சிந்தனைக்கு சில - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_8.html

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_4.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

 TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html


 வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

No comments:

Post a Comment