அனைவருக்கும் வணக்கம்.
இன்றைய பதிவில் அறம் செய்ய விரும்ப இருக்கின்றோம். ஒவ்வொருவர் வாழ்விலும் கொடுப்பதும் பெறுவதும் நிகழாமல் இருப்பதில்லை. நாம் உயர்ந்த சமூக-பொருளாதார நிலையில் இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் மற்றவரிடமிருந்து பெறுவது நடந்தே தீரும்; எவ்வளவு வறுமையில் இருந்தாலும் கொடுப்பதும் நடந்தே தீரும். எனவே அறம் செய்வது ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையாததாக இருக்கிறது. ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது கேட்ட. படித்த முதல் மூன்றே மூன்று வார்த்தைகள்
அறம் செய விரும்பு
இதில் உள்ள அறம் என்ற சொல்லிற்கே நாம் நாளெல்லாம் பொருள் கூறலாம். அறம் என்றால் தர்மம். அறம் இருவகைப்படும். இல்லறம்,துறவறம். சொன்னது நம் வள்ளுவர். அவர் சொல்லிவிட்டால் நாம் கேட்டுத் தான் ஆக வேண்டும். இல்லறத்தார்க்கு இருபது அதிகாரத்திலும், துறவறத்தார்க்கு பதிமூன்று அதிகாரத்திலும் அவரவற்குரிய ஒழுக்க மற்றும் வாழ்வியல் நடைமுறைகளை, தர்மத்தை, கடமையை (செயல்முறையை) விளக்குகிறார். இது மட்டுமின்றி அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் அறனை பற்றிய சிறப்பை வலியுறுத்தி பத்து குறட்பாக்கள் உள்ளது. இது நம் தாத்தா சொன்னது. இன்னும் திருமூலர் போன்ற சித்தர் பெருமக்கள் ஆறாம் பற்றி கூறி இருக்கின்றார்கள். அவற்றைப் பற்றி எழுதினால் பதிவின் நீளம் நீளும். இவற்றைத்தான் நம் ஒளவை பாட்டி ஒரே வரியில் அறம் செய விரும்பு என்று கூறி உள்ளார்.
இந்த அறம் செய்ய விரும்பு என்ற நிலையை நாம் திருஅண்ணாமலை சித்தாஸ்ரமத்தில் கண்டோம். ஒரு நாள் முழுதும் நாம் அங்கிருந்து பார்த்த செய்திகளை இங்கே பகிர்கின்றோம்.
அன்பே சிவமாக நம்மை வரவேற்கும் ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்
பசிக்கு உணவளிப்போனே பரமன். பரமன் என்றால் இங்கே இறைவன் என்று பொருளாம்.
அன்னதானத்தில்தான் ஒருவரை பூரணமாக திருப்திபடுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இதுபோன்றவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறவர்கள், அதற்கு மேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அன்னம் போடுகிற போதுதான் போதும் என்ற திருப்தி ஏற்படும்.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான் பசியற்ற பாரதத்தைக் காண விழையும் சிந்தனை. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் என்கிற உயரிய தானம்.
அன்னதானத்தால் ப்ராணனையும், ப்ராணனால் பலத்தையும், பலத்தால் தவத்தையும், தவத்தால் ச்ரத்தையையும், ச்ரத்தையால் புத்தியையும், புத்தியால் மனத்தையும், மனத்தால் சாந்தியையும், சாந்தியால் சித்தத்தையும், சித்தத்தால் நினைவையும், நினைவால் ஸ்திதப்ரக்ஞையையும், ஸ்திதப்ரக்ஞையால் விஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னதானம் செய்வது இவையனைத்தையும் தருவதற்கு சமமாகும்.
மீண்டும் அனைவருக்கும் உணவு வழங்கி விட்டார்களா? என்று சரிபார்த்து உணவிடும் காட்சி
சாதுக்களுக்கு மரியாதை செய்தல். அந்த பரமனை இங்கே காணுதல்
பூ,சந்தனம், வாழைப்பழம், தட்சணை என்று சாதுக்களை வணங்குதல்
அடுத்து சாதுக்களுக்கு தூப தீபம் ஆராதனை செய்யும் காட்சி காண இருக்கின்றோம்.
சுமார் 80க்கும் மேற்பட்ட சாதுக்களை அழைத்து அமர வைத்து, தூப தீபம் காட்டி, தட்சினை வழங்கி, அவர்கள் உள்ளம் மலர உணவு படைத்து, அவர்களிடம் ஆசி பெறுவது என்றால் அறம் செய்ய விரும்புவது தானே..பணம் இருக்கும் அனைவரும் இந்த மகேஸ்வர பூசை செய்து விட முடியாது.அருள் இருப்பவர்களால் தான் இது போன்ற அறங்களை செய்ய முடியும். இங்கு சாதுகளுக்கான தர்மம் செய்யப்பட்டு வருகின்றது.
மீள்பதிவாக:-
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான்
கிருஷ்ணபகவானும் கீதையில், “எவன் தனக்காக மட்டும் ஆகாரம்
தேடிச்சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான்
அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார்
என்கிறார். இங்கே திருஅண்ணாமலை வாழும் சிவ கணங்கள் அனைவருக்குமாக ஆகாரம்
படைக்கப்படுகிறது.அதுவும் ஒரு நாள்..இரண்டு நாள் என்று அல்ல..தினமும்
அனுதினமும் ...
இங்கு நடைபெறும் மகேஸ்வர பூசையில் சிறப்பே..அன்னம்பாளிப்பு தான்.
அன்னதானத்தில்தான் ஒருவரை பூரணமாக திருப்திபடுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இதுபோன்றவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறவர்கள், அதற்கு மேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அன்னம் போடுகிற போதுதான் போதும் என்ற திருப்தி ஏற்படும்.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான் பசியற்ற பாரதத்தைக் காண விழையும் சிந்தனை. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் என்கிற உயரிய தானம்.
அன்னதானத்தால் ப்ராணனையும், ப்ராணனால் பலத்தையும், பலத்தால் தவத்தையும், தவத்தால் ச்ரத்தையையும், ச்ரத்தையால் புத்தியையும், புத்தியால் மனத்தையும், மனத்தால் சாந்தியையும், சாந்தியால் சித்தத்தையும், சித்தத்தால் நினைவையும், நினைவால் ஸ்திதப்ரக்ஞையையும், ஸ்திதப்ரக்ஞையால் விஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னதானம் செய்வது இவையனைத்தையும் தருவதற்கு சமமாகும்.
அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டு, அனைத்து சாதுக்களும் சேர்ந்து பதிகங்கள்
ஓதிய பின்னர் தான் உணவு அருந்துவார்கள். அதற்கு முன்பாக வள்ளலார் தரிசனம்.
மீண்டும் அனைவருக்கும் உணவு வழங்கி விட்டார்களா? என்று சரிபார்த்து உணவிடும் காட்சி
சாதுக்களுக்கு மரியாதை செய்தல். அந்த பரமனை இங்கே காணுதல்
பூ,சந்தனம், வாழைப்பழம், தட்சணை என்று சாதுக்களை வணங்குதல்
அடுத்து சாதுக்களுக்கு தூப தீபம் ஆராதனை செய்யும் காட்சி காண இருக்கின்றோம்.
சாதுக்கள் ஒவ்வொருவரும் இங்கே சிவப் பரம்பொருளாய் நமக்கு காட்சி தருகின்றார்கள்.
அடுத்து மகேஸ்வர பூசை உபயம் செய்பவர்கள் ஆசி பெரும் காட்சி
சுமார் 80க்கும் மேற்பட்ட சாதுக்களை அழைத்து அமர வைத்து, தூப தீபம் காட்டி, தட்சினை வழங்கி, அவர்கள் உள்ளம் மலர உணவு படைத்து, அவர்களிடம் ஆசி பெறுவது என்றால் அறம் செய்ய விரும்புவது தானே..பணம் இருக்கும் அனைவரும் இந்த மகேஸ்வர பூசை செய்து விட முடியாது.அருள் இருப்பவர்களால் தான் இது போன்ற அறங்களை செய்ய முடியும். இங்கு சாதுகளுக்கான தர்மம் செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் விபரங்களுக்கு:
ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்,
கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில்,
திருவண்ணாமலை,
செல்: (0)9944800220
(இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html
No comments:
Post a Comment