"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, September 11, 2019

தேடலின் சிறு முயற்சி - தெரிந்தும் தெரியாமலும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்...

இன்றைய பதிவில்  அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்ற பல செய்திகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம். அனைத்தும் நாம் பள்ளிப் பருவத்தில் படித்தது, ஆனால் இந்த செய்திகள் பள்ளியோடு மறக்க கூடியவை அன்று, நம் தலைமுறை தோறும் கடத்தப்பட வேண்டிய செய்திகள். வழக்கம் போல் இந்த பதிவு உங்களுக்கு புது விதமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.


பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துகின்றோம். அந்த 16 பேறுகள் என்னென்ன என்று நமக்குத் தெரியுமா எனபது கேள்விக்குறியே? இது தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகின்றது என்று நீங்கள் நினைக்கலாம். சொல்லுக்குள் அடங்காத, அளவிட முடியாத செய்திகள் நம் தமிழ் மொழியில் உண்டு. இப்படி ஒரு மொழி இருந்தது என்ற அடையாளமே இல்லமால் போய் விடுமோ என்று ஒரு நிலை உருவாகுமா? உதாரணமாக இங்கே நாம் சொல்லிய பதினாறு பேறுகள் என்று நீங்கள் தேடினால் நமக்கு ஒரு விளக்கம் கிடைக்கும். ஆனால் நம்பகமான 16 பேறுகள் வேறு என்று தற்போது நமக்கு கிடைத்து. இப்படியெல்லாம் கூட நடக்குமா? போகிற போக்கில் சமூக வலைத்தளங்களில் பகிரும் போது, நம்பத்தகுந்த செய்திகளை நம் தமிழ் மொழியின் பேறுகளை பகிருங்கள்.

உதாரணமாக கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதியை எடுத்துக் கொள்வோம்.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை-தூய
உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்.

ஆயகலைகள்  அறுபத்து நான்கு எது என்று கேட்டால் நமக்குத் தெரியாது, கூகுள் ஆண்டவரிடம் கேட்டால் சாம்பல் நிறத்தில் உள்ள ஒரு படத்தில் சில பட்டியல் கிடைக்கின்றது. யாரோ தவறான தரவை இங்கே பதிவேற்றி உள்ளார்கள். நாமும் இது தான் சரி என்று பகிர்ந்து வருகின்றோம். அந்த பட்டியலை இங்கே x குறியீட்டு பகிர்ந்துள்ளோம்.



சரி உண்மையான பட்டியல் தான் என்ன? இந்த 64 கலைகளில் இரண்டு கலைகள் மட்டுமே 8 வயதிற்கு பின்பு கற்க வேண்டியவை. மற்றவை எல்லாம் 8 வயதிற்கு முன்பாக ஆரம்பித்து விடலாம். அந்த பட்டியல் இதோ. இவை அனைத்தும் நம் குருகுலக் கல்வி முறையில் பயிற்றுவித்த கலைகள் ஆகும்.

எழுத்திலக்கணம், எழுத்தாற்றல், கணிதம், வேதம், புராணம், இலக்கணம், நயநூல் ( நீதி சாத்திரம் ), ஜோதிடம் ,தரும சாத்திரம், யோகா சாத்திரம், மந்திர சாத்திரம், சகுன சாத்திரம், சிற்ப சாத்திரம், வைத்திய சாத்திரம், உருவ சாத்திரம், இதிகாசம், வனப்பு, அணி நூல், மதுர மொழிவு, நாடகம், நடனம், ஒலி நுட்ப அறிவு, யாழ், குழல், மிருதங்கம், தாளம், வில் பயிற்சி, பொன் நோட்டம்,ரத பாட்சை, யானையேற்றம், குதிரையேற்றம், மணிநோட்டம், மண்ணியல், போர்ப் பயிற்சி, மல்யுத்தம், ஆகர்ஷணம், ஒட்டுகை, நட்புப் பிரிக்கை, காம நூல், மோகனம், வசியம், இதளியம்,இன்னிசை, பிறவுயிர் மொழியறிதல், மகிழுறுத்தம், நாடி, காருடம், இழப்பரிகை, மறைத்ததையறிதல், வான்புகல், வான் செல்கை, கூடுவிட்டு கூடு பாய்தல்,தன்னுருக் கரத்தல், இந்திர சாலம், பெருமாய செய்கை, அழற் கட்டு, நீர்க்கட்டு, வளிக்கட்டு, கண்கட்டு,நாவுக்கட்டு, விந்து கட்டு, புதையற் கட்டு , வாட்கட்டு, சூனியம் 

ஆனால் நம்மிடம் உள்ள தகவல் வேறாக உள்ளது. இது வெறும் சாம்பிள் தான். இது போன்று என்னென்ன உள்ளது என்று தெரியவில்லை. இதனைப் பற்றிய செய்தியை ஹீலர் பாஸ்கர் அவர்களும் அமைதியும் ஆரோக்கியமும் என்ற இதழில் பதிவிட்டுள்ளார்கள். 



இதே போன்று நமக்கு கிடைத்த தொகுப்புகளை கீழே காண்போமா? அதற்கு முன்பாக இவற்றை 96 தத்துவங்களாகவும் கூறுவார்கள். அதனை இங்கே தொடர்வோம்.
முக்குணங்கள் - சத்துவம், தாமசம், ராஜஸம் 
மும்மண்டலம் - அக்கினி, ஆதித்யம், சந்திரன் 
முப்பற்று - பொருள்,புத்திரன், உலகம் 
முத்தோஷம் - வாதம், பித்தம், கபம் 
மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை 
அந்தகரணம் - மனம், புத்தி, சித்தி, அகங்காரம் 
அவஸ்தை - நனவு, கனவு , உறக்கம் ,பேருறக்கம் , உயிரடக்கம் 
கோஷம் - அன்னம், வளி, மனம், அறிவு , இன்பம் 
பொறி  - மெய், வாய், கண், மூக்கு, செவி 
பூதம் - நிலம், நீர், காற்று ,நெருப்பு, விண்



 ஆதாரம் - மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம் ,விசுத்தி, ஆக்கினை 
வினை - நல்வினை, தீவினை

மீண்டும் சிந்திப்போம்

முந்தைய பதிவுகளுக்கு:


 பிரார்த்தனை...பிரார்த்தனை... பிராத்தனை..! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_80.html

நேர்மறை விமர்சனத்தோடு வாழ்வோம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_29.html

கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

தினசரிப் பிரார்த்தனை - எண்ணிய முடிதல் வேண்டும்.  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_75.html

No comments:

Post a Comment