"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, September 16, 2019

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 14.09.2019 முதல் 28.09.2019 வரை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

திரும்பி பார்க்கும் இடமெல்லாம் மகாளய  பட்சம் என்பதே பேச்சாக உள்ளது. நாமும் நம் தளம் சார்பில் மகாளய  பட்சம் பற்றி இந்தப் பதிவில் பேச விரும்புகின்றோம். நம்முடைய ஆதி வழிபாடாக முழுமதி வழிபாடும், மறைமதி வழிபாடும் நிறைந்து இருக்கின்றது.  அதான் பௌர்ணமி வழிபாடும், அமாவாசை வழிபாடும் ஆகும். பௌர்ணமி வழிபாடாக அண்ணாமலை கிரிவலம் நாம் சென்று வருவது வழக்கம். சென்ற ஆவணி பௌர்ணமியும் கிரிவலம் சென்று ,ஒவ்வொரு லிங்கத்திலும் தூய பசு நெய் கொண்டு விளக்கேற்றி, லோக ஷேமத்திற்காக வேண்டிக்கொண்டு வந்தோம். அடுத்து அமாவாசை வழிபாடு என்று பார்த்தோமானால் நாம் நம் தளம் சார்பில் செய்து வரும் மோட்ச தீப வழிபாடு ஆகும்.








இதே போன்று தான் அமாவாசை அன்னதானம் செய்து வருகின்றோம். சென்ற ஆடி  அமாவாசை அன்று நாள் முழுதும் மூன்று பொழுதும் அன்னதானம் செய்தோம்.

 ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மூன்றும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ் மாதங்கள் அனைத்திலும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிக பிரசித்தி பெற்றது. பௌர்ணமி வழிபாடு குறிப்பாக இல்லறத்தின் தேவைகளுக்காக செய்ய வேண்டிய ஒன்றாகும். அமாவாசை வழிபாடு முக்தி போன்ற மறைபொருள் தேவைகளுக்கு செய்ய வேண்டியது. அதற்காக அமாவாசை வழிபாடு பற்றி அஞ்ச வேண்டாம். நம் முன்னோர் அருள், பித்ரு தோஷம் போன்றவற்றிற்கு அமாவாசை வழிபாடு சிறப்பாக அமைகின்றது.






நம்மைப்  பொறுத்தவரை அமாவாசை வழிபாடு நம் TUT குழுவின் உதவியின் மூலம் அன்னதானமாக நடைபெற்று வருகின்றது. முதலில் நாம் அகத்தியர் வனம் மலேஷியா குழுவினர் துணையோடு அன்னதானம் செய்ய ஆரம்பித்தோம். கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் செய்த அன்னதானம், பின்பு சென்னை வேளச்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் விரிந்தது. சென்ற மாதம் சைதையில் செய்தோம். இந்த மாதம் சென்னையை விட்டு, எம்பிரான் அருளும் திருஅண்ணாமலையில் செய்தோம். அனைத்தும் குருவருளால் மட்டுமே. நாம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. ஆனால் நடப்பவை அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இது அன்னதானத்தில் மட்டும் அன்று, உழவாரப் பணி ஆகட்டும், அகத்தியர் ஆயில்யம் பூஜை ஆகட்டும், தல யாத்திரை ஆகட்டும். அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு தொடங்கிய அன்னதான சேவை, நம் குழுவின் உறவுகளால், அமாவாசையில் செய்தாலும் நன்றாக இருக்கும் என்ற வேண்டுகோளுக்கிணங்க, அமாவாசை தோறும் அன்னசேவை எங்களால் முடிந்த ஒரு 10 பேருக்கு செய்து வருகின்றோம். இதோ புரட்டாசி    அமாவாசை வரப் போகின்றது.
மறந்தவர்களுக்கு மகாளய  பட்சம் என்று பொதுவாக சொல்வார்கள். 14.09.2019 முதல்  28.09.2019 வரை மகாளய  பட்சம் வருகின்றது. 28.09.2019 அன்று மகாளய  பட்ச அமாவாசை கொண்டாடப்படும். நாமும் நம் தளம் சார்பில் அன்றைய தினம் மோட்ச தீப வழிபாடு செய்ய இருக்கின்றோம்.

பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களை குறிப்பதாகும்.மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்றும், பட்சம் என்றால் பாதி மாதம் என்றும் பொருளாகும். மகான்கள் பாதி மாதம் பூமியில் வந்து வாழுகின்ற காலம் என்பதை மகாளயபட்சம் என்று கூறுகிறார். இந்நாள்களில் இறந்து போன முன்னோர்கள் ஆவி ரூபத்தில் கோயில்களின் தீர்த்தங்களில் நீராடி தங்களுடைய சக்திகளைப் பெறுவார்கள் என்றும், அவர்களின் சந்ததியினர் வாழிடங்களுக்குச் சென்று தங்களுக்கு அவர்கள் அளிக்கும் உணவினை ஏற்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.  

அதனால் இந்த நாள்களில் நீர்த்தார் நீர்கடன் அளிப்பதையும், வழிபடுவதையும் இந்துக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பதினைந்து நாள்களில் மாளய அமாவாசை முக்கிய நாளாகும்.

நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக்கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் கவசத்துக்கு ஒப்பாகும். மஹாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 14ம் தேதி பிரதமை திதியில் இருந்தே பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளிக்கத் தொடங்கலாம். ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது. 

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன. 

1ம் நாள் – 14.09.2019 - பிரதமை - செல்வம் சேரும் 

2ம் நாள் – 15.09.2019 - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம். 

3ம் நாள் – 16.09.2019 - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும் 

4ம் நாள் – 17.09.2019 - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம். 

5ம் நாள் – 18.09.2019 - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும். 

6ம் நாள் – 19.09.2019 - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும். 

7ம்நாள் – 20.09.2019 - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும்.

8ம் நாள் – 21.09.2019 - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும். 

9ம் நாள் – 22.09.2019 - நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும். 

10ம் நாள் – 23.09.2019 -  தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும். 

11ம் நாள் – 24.09.2019  - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும். 

12ம் நாள் – 25.09.2019 -  துவாதசி - ஆபரணங்கள் சேரும். 

13ம் நாள் – 26.09.2019 - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும். 

14ம் நாள் –  27.09.2019 - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும். 

15ம் நாள் – 28.09.2019 - மகாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். 
இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மகாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அனைத்து முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல், நண்பர்களுக்கும், முகம் தெரியாதவர்களுக்கும் கூட அன்று தர்ப்பணம் செய்யலாம் என்பது மகாளயத்தின் சிறப்பு. 

நாம் மகாளய  பட்சம் அன்று திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்று கொண்டு இருந்தோம். அங்கு நமக்கு ஒரு வாய்ப்பாக அன்னசேவை கிடைத்தது. அன்று தொடங்கிய அன்னசேவையை வரும் 28.09.2019 வரை செய்ய விழைகின்றோம். மனிதர்களுக்கு என்று மட்டும் அல்ல; நமக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த வழியில் செய்து வருகின்றோம். இந்த மகாளய  பட்ச காலத்தில் தர்ப்பணம் செய்யுங்கள். தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் 28.09.2019 அன்று நடைபெறும் மோட்ச தீப வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்.

 ‘மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை’ என்று சொல்வது வழக்கம். ஒரு சிலருக்கு தன்னுடைய தாய் தந்தையரின், முன்னோர்களின் இறந்த திதி தெரியாமல் இருக்கும். அவர்கள் மகாளய அமாவாசையில் திதி கொடுத்தால் நன்மைகள் விளையும் என்பதால் ஏற்பட்ட சொல் அது.


முன்னேற்றம் ஏற்பட நீங்கள் முன்னோர்களை வழிபட வேண்டிய நாள் மகாளய அமாவாசை என்பதை மறந்து விடாதீர்கள். இதுவரை திதி கொடுக்க மறந்தவர்கள்,  மகாளய  பட்ச காலத்தில்  திதி கொடுத்தால் அதை முன்னோர்கள் ஏற்றுக்கொள்வர். எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும், தைமாதம் வரும் அமாவாசையை ‘தை அமாவாசை’ என்றும், புரட்டாசி மாதம் வரக்கூடிய அமாவாசையை ‘மகாளய அமாவாசை’ என்றும் சிறப்பு வாய்ந்தவைகளாகச் சொல்வர்.

இன்றோடு 3ம் நாள் TUT சேவை தொடர்ந்துள்ளோம்.

1ம் நாள் – 14.09.2019 - பிரதமை
திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் சுமார் 50 பேருக்கு அன்னசேவை செய்தோம்.
















2ம் நாள் – 15.09.2019 - துவிதியை
மருதேரி பிருகு அருள்குடிலில் பைரவரர்களுக்கு சுமார் 20 பாக்கெட் பிஸ்கட் கொடுத்தோம்.






3ம் நாள் – 16.09.2019 - திரிதியை 
கூடுவாஞ்சேரி சுற்றியுள்ள பகுதியில் சுமார் 10 பேருக்கு இன்று காலை உணவு கொடுத்தோம்.





வழக்கம் போல் இந்த பாட்டிக்கு உணவு கொடுப்பது வழக்கம். காலை உறக்கத்தில் இருந்தபடியால் நாம் அவர்களின் அருகில் உணவு வைத்துவிட்டு வந்தோம்.

வீட்டில் நீங்கள் முதல் உணவை எடுத்து கொஞ்சம் காகத்திற்கு வைத்து, உங்கள் முன்னோரை நினைத்து இந்த மகாளய  பட்ச காலத்தில் வழிபாடு செய்து வாருங்கள். நாமும் உத்திரமேரூரில் உள்ள கோசாலையில் பிதுர்களுக்கு சங்கல்பம் செய்ய உள்ளோம்.விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி சென்று, தேவைப்படும் தகவல்களை வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிவு செய்யவும். மேலும் வருகின்ற மோட்ச தீப பிரார்த்தனையில் இவை அனைத்தும் இணைக்கப்படும்.

பித்ரு சங்கல்பம் செய்ய: http://docs.zoho.com/forms/published.do?rid=gngh18157af1a88e44aea9b7495a974d69d36

- மீண்டும் சந்திப்போம் 

முந்தைய பதிவுகளுக்கு:-

திரும்பிப் பார்க்கின்றோம் - ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22.07.2017 - https://tut-temples.blogspot.com/2019/09/22072017.html

 பெரியபுராணம் கூறும் பூரண தானம் அறிவோமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_14.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

 தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html


அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html
 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html
 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html


No comments:

Post a Comment