"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, September 8, 2019

சித்தர்கள் போற்றுகின்ற ஸ்ரீ பாலாம்பிகை பாடல்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 

சித்தர்கள் போற்றும் வாலை தெய்வத்தின் பாடல் இரண்டை  இங்கே பகிர்கின்றோம். மற்றொரு பதிவில் பாலாம்பிகை அம்மனின் புகழ் பற்றி மேலும் அறிவோம். சித்தர் மார்க்கத்தில் நுழைந்து சித்தர் நெறியை பின்பற்றுபவர்கள் கண்டிப்பாக பைரவர்,ஆஞ்சநேயர், பாலாம்பிகை தெய்வங்களை வணங்கி இருப்பார்கள் என்று கேள்விப்பட்டோம்.நம்மைப் பொறுத்த வரையில் உண்மையே.இந்த பதிவை படிக்கும் அன்பர்கள் மேற்சொன்ன செய்தியை தங்களோடு இணைத்து உறுதிப்படுத்தி கொள்ளவும்.

நாம் இந்த பதிவை அளித்த போது நமக்கு கிடைத்த செய்தியை அப்படியே உறுதிப்படுத்தி, இணைய வெளியில் தேடிய போது இங்கே வழங்கியுள்ள ஸ்ரீ பாலாம்பிகை பாடல் கிரி ட்ரேடர்ஸ் சென்னை அவர்களால் குறுந்தகடாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை அப்படியே 
யூ ட்யூப் (YouTube ) இணையத்திலும் காணலாம்.

Goddess Sri Bala Thripurasundari by S.Poorvaja. Lyrics: Sri Gomathidos. Music: Manikanth Kadri.Produced by KADRI'S KEYS. Chennai. Marketed by GIRI TRADERS. Chennai



சரி ! வாலைக் கும்மி அடிப்போமா?






ஸ்ரீ பாலாம்பிகை பாடல் -1





1.  தேடுகின்ற நெஞ்சினிற்குள் ஓடி வந்து நிற்பவள் (2)
     நாடி வந்த அன்பருக்கு நன்மை யாவும் செய்பவள் (2)
     ஓடி வந்து உட்களந்து ஜோதியாகி நின்றவள்
     ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

2.  மூன்று எழுத்து மந்திரத்தை மூலமாக கொண்டவள்
     மூன்று நாதரவர்க்கும் தானே தாயுமாகிருப்பவள்
     மூவுலகை காத்து நிற்கும் சக்தியாகி நிற்பவள்
     ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

3.  கலைமகளின் மந்திரத்தை துவக்கமாகக் கொண்டவள் (அம்மா .....)
     காமன் மந்திரம் தனை மத்தியிலே வைத்தவள் 
     சவுக்கியம் தரும் மந்திரத்தை இறுதியாகக் கொண்டவள் 
     ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

4.  அன்பு கொண்ட நெஞ்சம் தனை அறியணையாய் வைத்தவள் 
     ஆசை கொண்டு அழைத்த போது ஓடி வந்து நிற்பவள் 
     இச்சை கொண்டு வந்து சேர்ந்து இன்பமுறச் செய்தவள் 
     ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

5.  ஈசன் முதல் தேவர் போற்றும் கன்னி தெய்வமானவள் 
     உயிருமாகி உடலுமாகி உணர்வுமாகியிருப்பவள் 
     ஊக்கம் தந்து சோர்வு நீக்கி வேகம் தனை தருபவள் 
     ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

6.  என்று அவளைப் பாப்போம் என ஏக்கமுறச் செய்பவள் (அம்மா .....)
     ஏக்கம் தனை தீர்ப்பது போல் எதிரில் வந்து நிற்பவள் 
     ஐயம் தொலைத்த மனதினுள்ளே ஐக்கியமாகி நிற்பவள் 
    ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)



7. ஒடுங்குகின்ற மனதினுள்ளே ஒளிமயமாய் வருபவள்
    ஓடும் மனதை தடுத்தி நிறுத்தி ஆனந்தத்தை தருபவள்
   ஒளடதமாய் பிறவிப்பிணியை தீர்த்து நம்மைக் காப்பவள்
     ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

8. கஞ்ச மலரில் இருந்து நம்மை காமமுறச் செய்பவள் 
    தஞ்சம் என்று வந்தவரை தாங்கி நிற்கும் தாயவள் 
    கொஞ்சும் சலங்கை சலசலக்க ஓடி வந்து நிற்பவள் 
   ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

9. கவலை கொண்டு கதறும் போது கடுகி வந்து காப்பவள்
    கருணை கண்கள் கொண்டு நம்மை விழி இமைப் போல் காப்பவள்
    நெக்குருகி அழைக்கும்போது சொக்கி வந்து நிற்பவள்
    ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

10. வினை அறுத்து பகை முடித்து விதியை மாற்றி வைப்பவள்  (அம்மா .....)
      சதி ஒழித்து செருக்கறுத்து மதியை தெளிவு செய்பவள் 
      குதித்து ஓடும் மனதை அடக்கி நிதியும் அருளை தருபவள் 
      ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

11.  குஞ்சலங்கள் ஆட ஆட குதித்து குதித்து வருபவள் 
       குறைகள் தீர்த்து குலத்தை காத்து குதூகலத்தை தருபவள் 
       குணத்தை செம்மை ஆக்கி வைக்கும் குற்றமில்லா குரு அவள்
      ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)

12. கொஞ்சி கொஞ்சி அழைக்கையிலே குழந்தையாக வருபவள் 
      வஞ்சனைகள் செய்பவரை வந்து நின்றொழிப்பவள் 
      தலை வணங்கி தாள் பணிய வரமும் அருளும் தருபவள் 
      ஆதி அந்தம் ஆகி நின்ற அன்னை பாலைதானவள்(2)
     ஓம்  ஸ்ரீ பாலாதிரிபுர சுந்தரி திருவடி போற்றி ! திருவடி சரணம் !!

ஸ்ரீ பாலாம்பிகை பாடல் -2




1.  சின்ன சின்ன நடை நடந்து சிங்காரமாய் ஆடி வந்து 
     சின்ன சின்ன நடை நடந்து சிங்காரமாய் ஆடி வந்து 
     செல்ல மகளாக நின்றாய் அம்பிகே,உன் பேர் 
     சொல்ல சொல்ல இனிக்குதடி அம்பிகே (சின்ன சின்ன )
     அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)

2.  ஜல் ஜல் சலங்கை ஒலிக்க சடுதியில் நீ ஓடி வந்து 
     சங்கடங்கள் தீர்த்து வைப்பாய் அம்பிகே
     எமக்கு சந்தோசம் சேர்த்திடுவாய் அம்பிகே 
     அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)

3.  கரு முதல் காசி வரை,துணை வந்தாயே 
     கற்பகம் கருவே காமதேனுவே ,நீ (சின்ன சின்ன )
     அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)

4.  கங்கை நதி கரையோரம் கண்ணே உன் கை பிடித்து (2)
     காலாற நடக்க வேண்டும் அம்பிகே,கனவு 
     மெய்ப்பட வேண்டும்,அம்பிகே 
     அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)

5. மனம் வெம்பி மதிமயங்கி மன்றாடும் மனித 
    வாழ்வில்,மகத்துவம் சேர்த்திடுவாய் அம்பிகே 
    மனசை,ஒருமுகப்படுத்தி வைப்பாய் அம்பிகே 
    அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)



6. அன்பு கொண்டு அழைத்தவரை அருகிருந்து காக்க வேண்டி (2)
    அன்னை என வந்து நிற்பாய் அம்பிகே 
    அளவிலா,ஆனந்தம் தந்திடுவாய் அம்பிகே 
    அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)

7. கொஞ்சி குலவ வேண்டி கெஞ்சி உனை தொடர்ந்தழைத்தால் (2)
    குழந்தையாய் வந்து நிற்பாய் அம்பிகே 
    எம்மோடு குதித்து விளையாடிடுவாய் அம்பிகே 
    அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)

8. கல்வியும் கலைகளும் கசப்பில்லா வாழ்வதுவும் (2)
    கனிந்தெமக்கு அருள்வாய் அம்பிகே,உனை கண்ணார 
    காண வைப்பாள் அம்பிகே 
    அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)

9. இகபரம் இரண்டிலும் இன்பமே பெற வேண்டி (2)
    இனிதாய் உனை வேண்டினோம் அம்பிகே 
    எமக்கு இனிது தந்தருள்வாய் அம்பிகே 
    அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)

10. வாலையே உனை புகழ்ந்து வளமிகு செந்தமிழில் (2)
      வரவேற்று பாடி வந்தோம் அம்பிகே,எமக்கு 
      வரம் பல தர வேண்டும் அம்பிகே 
      அம்பிகே ஜகதம்பிகே அம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே! (2)


                             ஓம்  ஸ்ரீ பாலாம்பிகை  திருவடி போற்றி ! திருவடி சரணம் !!

அருமையான பாலா அம்மாவின் பாடலை தொகுத்து வெளியிட்ட பாலா.S. பூர்வஜா அவர்களுக்கு நம் தளம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

YouTube முகவரி : https://www.youtube.com/channel/UC1ML9BS9I0PdMyYJp4A2pCA

முந்தைய பதிவுகளுக்கு :-

 அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html


 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut- temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment