"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, September 4, 2019

"சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி

 அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தில் வெகு நாட்களாக உழவாரப் பணி பற்றிய பதிவுகள் இல்லாது இருப்பது போல் தோன்றலாம். ஆனால் சுமார் 4 உழவாரப் பணி அனுபவப் பதிவுகள் நம்மிடம் உள்ளது. பெருங்களத்தூர் சதானந்த ஸ்வாமிகள், கோடகநல்லூர் உழவாரப்பணி, கூடுவாஞ்சேரி நூலக உழவாரப்பணி, குன்றத்தூர் கோவிந்தன் அட..நம்ம திருஊரகப்பெருமாள் கோயில் என பட்டியல் நீளுகிறது.இன்றைய பதிவில் கோடகநல்லூர் உழவாரப் பணி பற்றி அறிவோம்.

சித்தன் அருள் இணைய தொடர்பாளர்களுக்கு கோடகநல்லூர் ஒரு வரப்பிரசாதம். நாமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்று வர முயற்சிதோ. ஆனால் அதற்கென்று வாய்ப்பு கிட்டவில்லை. இந்த முறை எப்படியாவது சென்று தரிசனம் செய்ய தீர்மானித்தோம். மேலும் தாமிரபரணி புஸ்கரமும் இணைந்து விட்டது. எனவே இந்த முறை கோடகநல்லூர் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் சென்ற வருடம் போல், ஏதேனும் உழவாரப் பணி செய்கிற வாய்ப்பு கிடைத்தால், முடிந்தவரை ஏற்றுக்கொள்ளுங்கள் எனவும் வேண்டிக்கொள்கிறேன் என்று சித்தன் அருளில் சொல்லி இருந்தார்கள். நாமும் உன் தரிசனம் கிடைக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் உழவாரப் பணி செய்ய வாய்ப்பு கொடு பெருமாளே! என்று பிராத்தனை செய்து விட்டு, அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நம் குழுவோடு புஷ்கரம் சென்று நீராடி விட்டு, பின்னர் கோடகநல்லூர் சென்றோம்.

கோடகநல்லூர் திருத்தலம் பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். மீண்டும் ஒரு முறை பதிவின் இறுதியில் தருகின்றோம். இந்தப் பதிவின் நீளம் சற்று அதிகம். மிக பொறுமையாக பார்க்கவும்.

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து எந்த பேருந்து கோடகநல்லூர் செல்லும் என்று நாம் சரியாக கணிக்க முடியவில்லை. பின்னர் ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு கோடகநல்லூர் சென்றோம். மனதில் பல கற்பனைகள், பெருமாள் கோயில், அதிகம் மக்கள் நடமாடாத இடம், பக்கத்திலே தாமிரபரணி. நம் கற்பனை நிஜத்தை மிஞ்சியது.

அன்று மதியம் சுமார் 1 மணி அளவில் கோடகநல்லூர் பெருமாள் கோயிலுக்குள் சென்றோம். நம்மை சித்தன் அருள் அக்னிலிங்கம் ஐயா அவர்கள் பெயர் சொல்லி அழைத்து வரவேற்றார்கள்.அனைத்தும் அகத்தியரின் அருள் என்று மனதில் கூறிவிட்டு, பாண்டிச்சேரி சுவாமிநாதன் ஐயாவிடம் என்னென்ன பணிகள் என்று கலந்து ஆலோசனை செய்தோம்.

நம்முடன் எம் தம்பி, எம் தங்கை, சுவாமிநாதன் ஐயாவின் குழுவில் சுமார் ஆறேழு பேர் என்று இருந்தோம்.மனதுள் பெருமாளை வேண்டிவிட்டு பணியை செய்ய ஆரம்பித்தோம்.



















முதலில் அங்கிருந்த மேடையை நன்கு கழுவி சுத்தம் செய்ய ஆரம்பித்தோம். மேடை சுற்றியுள்ள தேவையில்லாத பொருட்களை எடுத்தோம், மகளிர் கூட்டும் பணியை செய்தார்கள். இந்த மேடையை சுத்தம் செய்யவே நமக்கு சுமார் 1 மணி நேரம் ஆகி விட்டது.







ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு இந்த மேடையை தேய்த்துக் கொண்டிருந்தார்கள்.




அடுத்து கோயிலைச்சுற்றி வலம் வந்தோம்.












பின்னர் கோயிலை சுற்றி நன்கு கூட்டி, நீர் விட்டு அலசி விடலாம் என்று அதற்கான பணியில் ஈடுபட்டோம்.





மேடை இருந்த பகுதியிலே இருந்த பகுதியை சுத்தம் செய்ய ஆரம்பித்தோம். 






இவ்வளவு தூசிகள் கொண்டதாக அந்தப் பகுதி இருந்தது.



அங்கே இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து பக்கத்தில் உள்ள இடத்தில வைத்தோம்.



உழவாரப்பணிக்கு நானும் தயார் என்று எம் குருவே நிற்கும் அழகை..இன்னும் காணவே மனம் ஏங்கியது.















ஆளாளுக்கு இந்தப் பணிதான் என்று என்று இல்லை. இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். வழக்கமாக நாம் செய்யும் உழவாரப்பணியில் சிறு ஓய்வு போன்றவை இருக்கும். இங்கு அப்படி அல்ல, ஒரே சீரான, நேர்த்தியான  பணி தொடர்ந்த வண்ணம் இருந்தது.








மேடையை சுத்தம் செய்த பிறகு, தரையை நீர் ஊற்றி அலம்பிய காட்சி. இந்த மேடையின் சிறப்பு என்னஎன்று தொடர்பதிவில் காண்போம்.




இங்கு முடித்த பிறகு, பக்கத்தில் இருந்த இடத்தை ஏற்கனவே கூட்டியாகி விட்டது.அடுத்து மீண்டும் அங்கே நீர் ஊற்றி கழுவ வேண்டியது தான்.


















அக்காவும் தம்பியும் இங்கே தத்தம் பணிகளை செய்து கொண்டிருந்தார்கள். இந்த உழவாரப் பணி நமக்கு பல வழிகளில் சிறப்பானது.













கோயிலை சுற்றி உள்ள பாதையில் நீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யும் பணியை அடுத்து செய்தோம். கோயிலை சுற்றியுள்ள நடைபாதை தற்போது சுத்தம் செய்து வருகின்றோம். இங்கேயே இருக்க வேண்டுகின்றோம். 


 - அடுத்த அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம்.

மீள்பதிவாக:-

 அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

  ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html
  தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html

 முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html
 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html
 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
  வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment