அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய பதிவில் ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் பற்ற குருவருள் நமக்கு அருளட்டும்.
ஸ்ரீ உரகமெல்லணையான் என்றதும் நமக்கு புதுமையாக இருந்தது. இது போன்ற செய்திகளை நாம் அறிந்து கொள்வதோடு, அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். திரு என்ற அடைமொழியோடு சேர்ந்த நூலும்,ஊரும் போற்றத்தக்கது. உதாரணமாக திருப்பதி, திருஅண்ணாமலை ( திருவண்ணாமலை என்று வழக்கமாகி விட்டது). திருமயிலை, திருப்பரங்குன்றம், பழம் நீ (பழனி என்றாகிவிட்டது) ,திறுசீரலைவாய் (அட..நம்ம திருச்செந்தூர் தாங்க )என்று சொல்லலாம். சில ஊர்களில் காரணம் நம்மை இன்னும் வியக்க வைக்கின்றது. அறம் தாங்கிய ஊர் என்பதால் அறந்தாங்கி, நாமே பரம்பொருள் என்று உயர்த்தியதால் தாம்பரம் என்று சொல்லலாம். அந்தவகையில் ஊர் மிக விசேஷசம். இன்றைய சனிக்கிழமையில் இவரைப் பற்றி படிப்பது இன்னும் சிறப்பாம்.
திருப்பத்தூரிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள இத்திருத்தலம் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் என நால்வரும் மங்களாசாசனம் செய்துள்ள பெருமை வாய்ந்தது இக்கோயில். என்ன கண்டுபிடித்து விட்டிர்களா? உலக உயிர்களுக்காக நாராயண மந்திரத்தை ராமானுஜர் வெளிப்படுத்திய ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 95-வது தலம், நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்ம கோலத்தை பெருமாள், தேவர்களுக்கு காட்டியருளிய இடம், இந்திரன் பூஜித்த சவுமியநாராயணர் விக்கிரகம் உற்சவராக இருக்கும் ஆலயம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது சவுமியநாராயணர் திருக்கோவில். ஹ்ம்ம்..சரி தான் திருக்கோட்டியூர் தான்.
செங்கமலம் மலரும் திருக்கோட்டியூரானே! என்று திருமங்கையாழ்வார் பாடுகின்றார். அதுவும் எப்படி என்றால் எங்கள் எம் இறை எம்பிரான் தம் மனத்து பிரியாது அருள்புரிவான் என்று.
எங்கள் எம் இறை எம்பிரான், இமையோர்க்கு
நாயகன், ஏத்து அடியவர்
தங்கள் தம் மனத்து பிரியாது அருள்புரிவான்
பொங்கு தண் அருவி புதம் செய்யப்
பொன்களே சிதற இலங்கொளி
செங்கமலம் மலரும் திருக்கோட்டியூரானே!
- திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி.
திருமண தடை நீக்கும் தலங்களில் இந்த தலம் பிரசித்தி பெற்றது ஆகும். நாம் நேராக சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வந்தோம், சுவாமிக்கு அருகில் விளக்கேற்ற இயலவில்லை. விளக்கேற்றும் இடம் என்று இருந்த இடத்தில் வழக்கம் போல் விளக்கேற்றி வழிபாடு செய்தோம்.இங்கு விளக்கு வழிபாடு விசேஷம்.
சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி மட்டுமின்றி மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். இவருக்கு "பிரார்த்தனை கண்ணன்' என்று பெயர். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், அப்பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.மகாவிஷ்ணு இரண்யனை வதம் செய்யும்வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது. பெரியாழ்வார் இவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்திருக்கிறார். பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம் இது.
தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். "ஓம்', "நமோ', "நாராயணாய' எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார். திருமாமகள் தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு. இக்கோயிலில் விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றது. இங்கு பிரார்த்திப்பவர்கள் ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின், வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். பின் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசி தெப்ப திருவிழாவின்போது இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை தீர்த்த கரையில் வைத்து வழிபடுகின்றனர். அந்நேரத்தில் புதிதாக வேண்டுதல் செய்பவர்கள் இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.
தல புராணம் பார்த்துவிட்டு வருவோமா?
இரணியன் தொல்லை தாங்காது தவித்த தேவர்களும் முனிவர்களும் விஷ்ணுவைச் சந்திக்க விழைய, தன்னைத் தரிசனம் செய்ய ஏற்கனவே கடம்ப மகரிஷி ஏகாந்தமான இடத்தில் தவமிருந்ததால், அவ்விடத்திற்கே அவர்களையும் வரவழைத்து, இரணியனைத் தான் வதம் செய்யப்போகும் நரசிம்மக் கோலத்தை அந்த அவதாரம் எடுப்பதற்கு முன்பாகவே காட்டியருளினார் என்பதே இத்தலத்தின் வரலாறாகும்.
தேவர்களும், முனிபுங்கவர்களும் கோஷ்டியாக வந்து எம்பெருமானைத் தொழுததால் திருக்கோஷ்டியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
இந்திரன் தான் தேவலோகத்தில் பூசித்த சௌம்யநாராயணன் திருவுருவை கதம்ப மகரிஷிக்கு அளிக்க, அவர் அதை இங்கு உறசவராகப் பிரதிஷ்டை செய்தார் என்பர்.
அசுர, தேவ சிற்பிகளான விஸ்வகர்மா, மயன் ஆகிய இருவரும் இணைந்து அமைத்த நான்கு நிலை விமானத்தின் கீழ் நிலையில் நர்த்தன கிருஷ்ணனாகவும் (பூலோகப் பெருமாள்), முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமியநாராயணனாகவும் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது நிலையில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணனாகவும் (தேவலோகப் பெருமாள்), மூன்றாம் நிலையில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதனாகவும் (வைகுண்ட பெருமாள்) என்று எம்பிரான் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என்று நான்கு கோலங்களிலும் நான்கு நிலைகளில் அருளுகிறார்.
இத்தலத்தின் வடகிழக்கில் உள்ள கிணற்றில் கங்கை பொங்கியதால், இதை மகாமகக் கிணறு என்று அழைக்கின்றனர்.
புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூபர். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை "மகாமக கிணறு' என்றே அழைக்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமக விழாவின்போது, சுவாமி கருட வாகனத்தில் இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார்.
இவ்வூரில் வசித்த திருக்ககோஷ்டியூர் நம்பியிடம் உபதேசம் பெறச் சென்ற ராமானுஜர் 17 முறைகள் அது கிட்டாமல், 18ஆம் முறை "ஓம் நமோநாராயணாய' என்னும் முத்தி தரும் மந்திரோபதேசம் பெற்றார். அதைத் தான் மட்டுமல்லாது, அனைவரும் அறிய இக்கோயில் கோபுரத்தின் மீதேறி கூவினார். தன்னைக் கடிந்து கொண்ட நம்பியிடம், உலகோர் அனைவரும் உய்ய வழி பிறக்குமெனில், தான் நரகம் செல்வதற்கும் அஞ்சவில்லை என்றுரைத்து, அவர் 'என்னிலும் உயர்ந்தவன் நீ; எம்பெருமானார்' என்று பாராட்டித் தழுவிக் கொண்ட நிகழ்வும் இத்தலத்தில்தான்.
கோட்டியூர் போகாதவன் குரங்காய்ப் போவான் - என்றொரு வைணவ மொழியும் உண்டு!
பல பெருமாள் கோயில்களிலும் காண்பதற்கரியதாக, இங்கு ராஜகோபுரத்தின் அருகில் சுயம்பு லிங்கம் உண்டு. இதை வணங்கிப்பின்னர் கோயிலுக்குச் செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மூலவர் உரகமெல்லணையான்.
உற்சவர் சௌம்ய நாராயணன்.
தாயார் திருமாமகள். நிலமாமகள், குலமாமகள் எனவும் அழைப்பர்.
தலச்சிறப்பு
மாசியில் தெப்பத்திருவிழா இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
மத்திய அன்னதான திட்டம் இங்கு உண்டு. நம்மால் முடிந்த உதவியை இங்கே செய்யலாம்.
என்ன அன்பர்களே ! தரிசனம் எப்படி இருந்தது? இந்த நன்னாளில் பெருமாள் பற்றி படிப்பதும்,கேட்பதும் சிறப்பு தானே!
எப்படி செல்வது?
மதுரையிலிருந்து 62 கி.மீ., தூரத்தில் திருப்பத்தூர் சென்று, அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
முந்தைய பதிவுகளுக்கு:-

மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது.
ராமானுஜர் உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்த தலம்.
ஸ்ரீ ராமானுஜரின் பதமும், பாதமும் பட்ட இடத்தில் நாம் இப்போது தரிசனம் பெறுகின்றோம் என்றால் இது பெறற்கரிய பேறு தானே.

- இங்கு, தொட்டிலில் 'பிரார்த்தனை கண்ணன்' என்ற பெயரோடு காட்சிதரும் சந்தான கிருஷ்ணனைத் தொழுதால், புத்திரபாக்கியம் கிட்டும்.
- இங்கு திருமாமகள் தாயாரைத் தொழுவதால் ஐஸ்வர்யம் பெருகும்.
- இங்கு நரசிம்மருக்கு அருகில் ராகு, கேது கிரகங்களைக் காணலாம். அவற்றால் ஏற்படும் தொல்லை துன்பங்களுக்கு இது பரிகாரத் தலமாக விளங்குகிறது.
- திருமந்திரம் இங்கு விளைந்ததால் பத்ரிகாஸ்ரமத்தை ஒத்த திருத்தலமாக, தென்பத்ரி என்றே வழங்கப் பெறுகிறது. நைமிசாரண்யத்திலும் கங்கைக்கரையிலும் தவம் செய்த பயனை இத்தலமேகின் ஒருசேரப் பெறலாம்.
- இங்கு முலவரிடம் ஒரு சிறு அகல்விளக்கு வைத்துப் பின் அதை வீட்டில் காசும், துளசியும் வைத்துப் பூசித்தால் முறையான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மாசியில் தெப்பத்திருவிழா இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
மத்திய அன்னதான திட்டம் இங்கு உண்டு. நம்மால் முடிந்த உதவியை இங்கே செய்யலாம்.
என்ன அன்பர்களே ! தரிசனம் எப்படி இருந்தது? இந்த நன்னாளில் பெருமாள் பற்றி படிப்பதும்,கேட்பதும் சிறப்பு தானே!
எப்படி செல்வது?
மதுரையிலிருந்து 62 கி.மீ., தூரத்தில் திருப்பத்தூர் சென்று, அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
முந்தைய பதிவுகளுக்கு:-
மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_91.html
ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - மாதாந்திர பௌர்ணமி பூசை - 38 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/38.html
நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_22.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை! - https://tut-temples.blogspot.com/2019/09/6.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html
அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html
கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html
No comments:
Post a Comment