"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, September 27, 2019

முன்னோர்களின் ஆசி பெற மறைமதி வழிபாடு - 28.09.2019

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மறைமதி வழிபாடு என்றவுடன் என்னமோ என்று குழம்ப வேண்டாம். அமாவாசை வழிபாடு தான் அது. நம் முன்னோர்கள் இதனை சிறப்பாக கொண்டாடி உள்ளார்கள்.அதுவும் குறிப்பாக
ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை . தமிழ் மாதங்கள் அனைத்திலும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிக பிரசித்தி பெற்றது. பௌர்ணமி வழிபாடு குறிப்பாக இல்லறத்தின் தேவைகளுக்காக செய்ய வேண்டிய ஒன்றாகும். அமாவாசை வழிபாடு முக்தி போன்ற மறைபொருள் தேவைகளுக்கு செய்ய வேண்டியது. அதற்காக அமாவாசை வழிபாடு பற்றி அஞ்ச வேண்டாம். நம் முன்னோர் அருள், பித்ரு தோஷம் போன்றவற்றிற்கு அமாவாசை வழிபாடு சிறப்பாக அமைகின்றது.


நம்மைப்  பொறுத்தவரை அமாவாசை வழிபாடு நம் TUT குழுவின் உதவியின் மூலம் அன்னதானமாக நடைபெற்று வருகின்றது. முதலில் நாம் அகத்தியர் வனம் மலேஷியா குழுவினர் துணையோடு அன்னதானம் செய்ய ஆரம்பித்தோம். கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் செய்த அன்னதானம், பின்பு சென்னை வேளச்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் விரிந்தது.அனைத்தும் குருவருளால் மட்டுமே. நாம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. ஆனால் நடப்பவை அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இது அன்னதானத்தில் மட்டும் அன்று, உழவாரப் பணி ஆகட்டும், அகத்தியர் ஆயில்யம் பூஜை ஆகட்டும், தல யாத்திரை ஆகட்டும், மோட்ச தீப வழிபாடு ஆகட்டும். அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு தொடங்கிய அன்னதான சேவை, நம் குழுவின் உறவுகளால், அமாவாசையில் செய்தாலும் நன்றாக இருக்கும் என்ற வேண்டுகோளுக்கிணங்க, அமாவாசை தோறும் அன்னசேவை எங்களால் முடிந்த ஒரு 10 பேருக்கு செய்து வருகின்றோம். இனிமேல் நாம் அன்னதானம் என்ற வார்த்தையை உபயோகிக்க மாட்டோம். மாற்றாக அன்னம்பாலிப்பு, நாராயண சேவை என்று பயன்படுத்துவோம்.நம் உடலை எடுத்துக் கொண்டால் தலைப்பகுதி சிவம், வயிற்றுப்பகுதி விஷ்ணு, அடிப்பகுதி பிரம்மன் என்று பார்த்தால், வயிற்றுப்பகுதி நாராயண சேவையே ஆகும்.

பொதுவாக அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்காக விரதம் இருக்கலாம். முன்னோர்களுக்காக திதி,தர்ப்பணம் செய்யலாம், இவற்றையும் தாண்டி ஏதேனும் ஒரு புண்ணிய காரியங்களில் ஈடுபடலாம். நம் வீட்டின் அருகே உள்ள மரம்,செடி கொடிகளுக்கு நீர் ஊற்றலாம், சூரிய வழிபாடு செய்யலாம், கோயிலுக்கு சென்று நம்மால் முடிந்த கைங்கர்யத்தில் ஈடுபடலாம். குறைந்தது 1 நபருக்கு அன்னம்பாலிப்பு செய்யலாம். நம் தளம் சார்பில் மாதந்தோறும் அமாவாசை அன்று குறைந்தது சுமார் 15 நபர்களுக்கு அன்னம்பாலிப்பு செய்து வருகின்றோம். இந்த அன்னம்பாலிப்பு செய்யும் போதே, ஆலய தரிசனமும் நடைபெற்று விடும். கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலயம், மாமரத்து விநாயகர் ஆலயம், வள்ளலார் கோயில், நந்தீஸ்வரர் கோயில் என ஆலய தரிசனம் இணைவது நமக்கு இன்னும் சிறப்பாக இருந்து வருகின்றது.

நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது. 

முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதரவற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். அமாவாசையில் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும்.இப்பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நாமும் நம்முன்னோர்களுக்கு மகாளய அமாவசை தினத்தன்று பூஜை செய்து அவர்களின் ஆசி பெறுவோம்.

வசதி இல்லாதவர்கள் நம் முன்னோர்களை மனதில் நினைத்து பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை உணவாகத் தந்தாலே போதும். அமாவாசையில் அவர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் செல்வம், புகழ், நீண்ட ஆயுளைத் தரும்.

அடுத்து நம் தளம் சார்பில் நடைபெற்று வரும் மோட்ச தீப வழிபாடு ஆகும். இதுவும் சென்று ஆண்டு ஆடி மாதம் முதல் சித்தர்களின் அருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு மகாளய பட்ச சேவை நம் தளம் மூலம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மோட்ச தீபம் பற்றி அறிய கீழே உள்ள இணைப்பு படத்தை பார்க்கவும்.






மஹாளய பக்ஷ காலம் 
ஆரம்பம் ~14.09.2019
நிறைவு ~ 28.09.2019
மஹாளய அமாவாசை 28.09.2019
இன்று முதல் மஹாளய அமாவாசை வரை நம் தளம் சார்பில் கூடுவாஞ்சேரி & திருஅண்ணாமலையில் அன்னதானம் செய்ய உள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் நம்முடன் இணையலாம். 
முதல் நாள் : 14.09.2019









நன்றி 


2 ம் நாள் - 15.09.2019



 பைரவர்களுக்கு 20 பாக்கெட் பிஸ்கட் மருதேரி பிருகு குடிலில் TUT தளம் சார்பில் கொடுத்தோம் 

3ம் நாள் – 16.09.2019 - திரிதியை
கூடுவாஞ்சேரியில் உள்ள அன்பர்களுக்கு 4இட்லி கொண்ட உணவுப் பொட்டலம் கொடுத்தோம்







அனைவருக்கும் நன்றி


4ம் நாள் – 17.09.2019 - சதுர்த்தி
கூடுவாஞ்சேரியில் கோமாத்தாகளுக்கு 5 டஜன் வாழைப்பழங்கள் கொடுத்தோம்.













அனைவருக்கும் நன்றி


5ம் நாள் – 18.09.2019 - பஞ்சமி










குருநாதர் பிருகு மகரிஷி வாக்கின்படி, கடந்த மே மாதம் முதல் மோர் மற்றும் நீர் தானம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் நம் தளம் சார்பில் குருவருளால் செய்து வருகின்றோம்.மகாளய பட்ச TUT சேவையாக நேற்று நீர் தானத்திற்கு வழங்கினோம்.


6ம் நாள் – 18.09.2019 - பஞ்சமி 
கூடுவாஞ்சேரியில் கோமாத்தாகளுக்கு 20 கட்டு அகத்திக்கீரை கொடுத்தோம். நேற்றைய மழை சூழலில் கோமாதாக்களை எங்கு பார்ப்பது என நினைத்தோம். எங்கள் வீட்டை நோக்கி ஒரு கோமாதா வந்து அகத்திக்கீரை பெற்றார்கள்..இணைப்புப் படங்கள் பார்த்தால் உங்களுக்கு புரியும்.











அனைவருக்கும் நன்றி


7ம் நாள் – 19.09.2019 - சஷ்டி
கூடுவாஞ்சேரியில் TUT அன்பர் பத்மகுமாரின் உதவியால் சுமார் 15 அன்பர்களுக்கும் உணவு வழங்கினோம்
அனைவருக்கும் நன்றி








8ம் நாள் – 21.09.2019 - அஷ்டமி
உத்திரமேரூர் ஶ்ரீ சிவார்ப்பணம் கோசாலைக்கு 25 கி மாட்டுத் தீவனம் கொடுத்தோம். நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று திருமலைவையாவூர், உத்திரமேரூர் பெருமாள், திருப்புகழ் பாடல் பெற்ற உத்திரமேரூர் முருகப் பெருமான் தரிசனம் பெற்றோம். விரைவில் நம் தளத்தில் தரிசனப் பதிவுகள் தர குருவருள் வேண்டுகிறோம். 












அனைவருக்கும் நன்றி


9ம் நாள் – 22.09.2019
ஆரணியில் 10 அன்பர்களுக்கு நம் தளம் சார்பில் மகாளய பட்ச அன்னதானம் செய்தோம்.




அனைவருக்கும் நன்றி


10ம் நாள் – 23.09.2019 - தசமி 
திருஅண்ணாமலையில் தயவு ஆசிரம்ம் மூலம் சாதுக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

11 ம் நாள் – 24.09.2019 - ஏகாதசி
கூடுவாஞ்சேரியில் உள்ள அன்பர்களுக்கு அன்னதானம் செய்தோம்






12 ம் நாள் – 25.09.2019 - துவாதசி
திருஅண்ணாமலை தயவு ஆசிரமத்தில் கோமாதாக்களுக்கு தீவனம் வழங்கினோம்





13ம் நாள் – 26.09.2019 - திரயோதசி 

இன்று முதியோர் இல்லத்திற்கு பிஸ்கட் பாக்கெட் கொடுக்க எண்ணினோம். அவர்கள் கோதுமை மாவு, சீனி, தேயிலைத் தூள் கேட்டார்கள். இன்றைய மகாளய TUT சேவை இனிதே நடைபெற்றது








14ம் நாள் –  27.09.2019 - சதுர்த்தசி 

இன்று கூடுவாஞ்சேரியில் 10 அன்பர்களுக்கு உணவு வழங்கினோம்.






15ம் நாள் – 28.09.2019 - மகாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். 

காலை திருஅண்ணமலையிலும், மதியம் ராமேஸ்வரத்தில் மாலை சதுரகிரியில் அன்னபாலிப்பு நம் தளம் சார்பில் செய்ய உள்ளோம். நம்முடன் இணைந்த அத்துணை உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் நாளை  நடைபெற உள்ள அமாவாசை பூசை உள்ள ஆலயங்களை கீழே தருகின்றோம்.வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்துகொண்டு குருவருளும் திருவருளும் பெற வேண்டுகின்றோம்.



மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html


 ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html
 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

 மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html
 ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

No comments:

Post a Comment