"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, September 2, 2019

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி, விநாயகர் சதுர்த்தி - சிறப்பு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கு முந்தைய பதிவில் பிள்ளையார்பட்டி விநாயகர் தரிசனம் பெற்றிருப்பீர்கள் என்று நம்புகின்றோம். கடந்த சில பதிவுகளில் விநாயகர் சதுர்த்தி, விநாயகர் பற்றி நாம் பேசி இருக்கின்றோம். கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் அழைப்பிதழும் பகிர்ந்தோம். இன்றைய பதிவிலும் விநாயகர் பற்றி மேலும் சிந்திக்க உள்ளோம்.

அதற்கு முன்பாக மீண்டும் கூடுவாஞ்சேரி விநாயகர் தரிசனம் பெற்றுவிடுவோம்.



விநாயகர் தரிசனம் இல்லாது நாம் எந்த காரியம் செய்ய இயலாது, குலம் காக்கும் குலா தெய்வத்திடமும், வினை தீர்க்கும் விநாயகரிடமும் அனுமதி இன்றி நாம் ஒரு அடி  கூட எடுத்து வைக்க இயலாது. எனவே தான் எந்த செயல் செய்தாலும் விநாயகரிடம் அனுமதி வாங்கி செய்ய வேண்டும் என்றார்கள் நம் முன்னோர்கள். சிதறு காய் உடைப்பது போன்றது. விநாயகர் ஒரு முழுமுதற் கடவுள். விநாயகர் என்றால் வினைக்கு நாயகர் என்று பொருள். தான் செய்யும் வினைகளுக்கு தானே காரணகர்த்தாவாக இருப்பவர். அதனால் தான் அவரிடம் மட்டும் தோப்புக்கரணம் போடுகின்றோம். வேறெந்த இறைத்தன்மைக்கும் இந்த தோப்புக்கரணம் இல்லை.இப்போது பள்ளிகளில் இது உண்டா? என்றும் தெரியவில்லை. ஆனால் இன்று மேலைநாடுகளில் சூப்பர் பிரைன் யோகா என்று தோப்புக்கரணம் சொல்லித்தரப்படுகின்றது. தப்பு செஞ்சா தண்டனைக்காக என்று தோப்புக்கரணம் இல்லை.

தோப்புக்கரணத்தின் பயன்கள்.. மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன நாடிகள் சுத்தம் பெறுகின்றன.

நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள்.

தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.

தினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும். தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.

உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.

காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.

தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கைவிரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.

எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.

இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் –  மூலாதாரத்தில் - சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில்
செய்ய முடியாது என்பதே உண்மை.


இதனை நாம் இரண்டு உழவாரப்பணிக்கு முன்னர் செய்து பார்த்து உணர்ந்தோம். தோப்புக்கரணம் ஒன்றே போதும்  நம் உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். இது தான் தோப்புக்கரணத்திற்கான அறிவியல் காரணமும் கூட..எதிர்கால சந்ததிக்கு இது போன்ற அறிவியலோடு பக்தியை ஊட்டுங்கள்.அப்போது தான் நம் இந்து தர்மம் வளரும். அடுத்து கூடுவாஞ்சேரி ஆலய விநாயகர் பற்றி பாப்போம். இங்கு இடம்புரி விநாயகர் இருக்கின்றார். வலம்புரி விநாயகர் இருக்கின்றார். இடர்களை நீக்கும் இடம்புரி கணபதியையும் , வளங்களை அருளும் வலம்புரி கணபதியையும் ஒரு சேர வணங்கிட  கூடுவாஞ்சேரி விநாயகரை தரிசியுங்கள்.

இதோ..இன்றைய தரிசனக்காட்சிகள்




எப்படி இருக்கின்றது இன்றைய தரிசனம்.?


அதை விட, 1960 களில் இந்த ஆலயம் எப்படி இருந்தது? என ஒரு பதாகை வைத்து இருந்தார்கள். இந்த கோயில் எப்படி யாரால் ஆரம்பிக்கப்பட்டது. அண்ணனுடைய கோயிலை தம்பி அல்லவா ஆரம்பித்து வைத்துள்ளார். ஆம். முருக வள்ளல் கிருபானந்த வாரியாரால் இந்த கோயில் ஆரம்பிக்கப்பட்டது.



முருகா சரணம்.



அப்படியே கோயிலை சுற்றிவிட்டு வந்தோம். முருகனருள் பெற்றோம்.



 அடுத்து அகத்தியரின் அருள் பெற்றோம்.




அடுத்து அப்படியே அம்மையப்பர் தரிசனம் பெற்றோம்.





அடுத்து அப்படியே உற்சவர் தரிசனத்தில் சொக்கிபோனோம். நீங்களே பாருங்கள்.










அலங்காரம் எப்படி உள்ளது? நம் அகங்காரத்தை அளிக்கின்றது அல்லவா? 

சரி..அடுத்து இடம்புரி & வலம்புரி விநாயகர் பற்றி சில செய்திகள் உங்களோடு பேச விரும்புகின்றோம். ஏற்கனவே தோப்புக்கரணம் பற்றி கூறியுள்ளோம். தோப்புக்கரணத்திற்கும் மூச்சிற்கும் தொடர்பு உண்டு.அப்படியென்றால் விநாயகருக்கும் நம் மூச்சிற்கும் தொடர்பு உண்டு. நமக்கு இரண்டு சுவாசங்கள். அதாவது இரண்டு மூக்கின் வழியே..இடகலை, பிங்கலை .இதனை உணர்த்தவே இடம்புரி விநாயகர், வலம்புரி விநாயகர்.

உடலின் செயல்பாடும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும்.  அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.  இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள்.

 இனி கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள்.விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும்.வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம்.
வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?விநாயகர் விக்ரஹத்தின் இந்த அரிய இரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளவும்.

வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.

வலது நாசிக் காற்று (சூரிய கலை)
* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.

* வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.

* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.

* உடலின் வலிமை அதிகரிக்கும்.

* மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.

* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை)

* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.

* சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.

* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.

* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.

* மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.

* அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.

பசுவிற்கு எப்படி மூக்கனாங்கயிறு உள்ளதோ, நமக்கு மூச்சுக்கயிறு உள்ளது. எனவே விநாயகரிடம் சென்று வழிபடும் போது உங்கள் மூச்சை சிந்தியுங்கள். மூச்சின் ஆழமே நம் மனதின் ஆழம். மனமே தான் நம் உள்ளம். நம் உள்ளத்தளவே நம் வாழ்க்கை.இதனைத் தான் நம் தாத்தா

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளதனையது உயர்வு

என்றார். அப்படி என்றால் மூச்சை கவனிக்கவே நம் விநாயகர் வழிபாடு என்று உணர்க !
இது மட்டுமா ? இன்னும் சொல்லப்போனால் நம் அவ்வைப் பாட்டி இன்னும் ஒரு படி மேலே போய் விநாயகருக்கு அகவல் பாடி உள்ளார்.

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

என்று கூறும் போது சித்தமாகிய நம் உடலுள் சிவலிங்கமாக இருப்பவர் யார்? அந்த மூச்சுக்காற்று தான். அதனை விநாயகர் நம் பாட்டிக்கு அருளியுள்ளார். நீண்ட காது, பெரிய தலை, சிறிய கண், தும்பிக்கை, தந்தம் பெரிய வயிறு என நகைச்சுவை ஊட்டும் வண்ணம் உள்ள விநாயகரிடம் நம் அவ்வை முத்தமிழ் மூன்றும் தா என்று கேட்கின்றார். இவர் தான் முழுமுதற் கடவுள். பிரணவம் பொருந்தியவர். இவருக்கு தோற்றம் என்ற ஒன்று இல்லை. ஆதலால் விநாயகர் ஜெயந்தி என்று நாம் கொண்டாடுவதில்லை. மாறாக ஆவணி மாத சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுகின்றோம். நாமும் அவ்வைப் பாட்டி கேட்டது போல் முத்தமிழை கேட்போம்.





இன்றைய விநாயகர் சதுர்த்தி தினத்தில், புது முயற்சியாக காணொளி சேவை - யூ ட்யூப் சேவை தொடங்கி முதல் காணொளி வெளியிட்டுள்ளோம். இன்று முதல் நம் சேவைகள்,தொண்டுகள், சித்தர்கள், மிக முக்கிய ஆன்மிக நிகழ்வுகள் காணொளி சேவையில் கிடைக்கும். இணைய அன்பர்கள் வழக்கம் போல் ஆதரவு தர வேண்டுகின்றோம்.



தினசரி நட்சத்திரத்தின் அடிப்படையில் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்று வருகின்றது. அணைத்து பிரார்த்தனையும் இன்றைய நாளில் விநாயகரிடம் சமர்ப்பித்துள்ளோம்.

தேடல் உள்ள தேனீக்களாய் குழு அன்பர்கள் மற்றும் தள  வாசகர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று விநாயகரின் அருளால் நீடூழி வாழ நம் குழுவின் சார்பாக வாழ்த்துகிறோம்...

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_59.html


 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் சதுர்த்தி பெருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_35.html


 விநாயகர் சதுர்த்தி தின விழா ...தொடர்ச்சி (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1_30.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/08/tut_29.html

No comments:

Post a Comment