"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, September 20, 2019

சோலைமலை வந்து கந்த பெருமாளே!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்...

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே!

இன்றைய ஷஷ்டி தினத்தில் முருகனருள் பற்றி பேசுவோம். இரு பதிவுகளுக்கு முன்னர் திருமாலிருஞ்சோலை தரிசனம் பெற்றோம். இதோ மேலும் அங்கிருந்து முருகப் பெருமான் தரிசனம் பெற தொடர்வோம்.

ஆறாவது படைவீடாகத் திகழ்கிறது பழமுதிர்சோலை. இது 'அழகர் கோயில்'என்றும் வழங்கப்பெறுகிறது. முருகப்பெருமானின் தலமாகவும் திருமாலின் தலமாகவும் இது விளங்குகின்றது. திருமாலுக்கு உரியதாய் விளங்கும் அழகர் என்னும் திருப்பெயர் முருகனுக்கும் பொருந்துவதாகும்.

நக்கீரர், பழமுதிர் சோலையில் வீழும் அருவியின் அழகை வருணித்துள்ளார். திருமுருகாற்றுப்படையில் வரும் அப்பகுதியின் இறுதியில், அவர் 'பழமுதிர்சோலை மலைகிழவனே' என்று குறித்துள்ளார். 'பழமுதிர்சோலை' என்பதற்கு நச்சினார்க்கினியர், பழம் முற்றின சோலை என்றுபொருள் கூறுகிறார். 'பழம் உதிர்ந்த சோலை' என்றும் பிற உரையாசிரியர்கள் அதற்குப் பொருள் தந்திருக்கினறனர்.

வள்ளிநாயகிக்கு அருள்புரிந்த முருகவேளே பழமுதிர்சோலையில் எழுந்தருளியவன்என்று கந்தபுராணம் கூறுகிறது. அருணகிரிநாதர் திருப்புகழில்,

சோதியின் மிகுந்த செம்பொன்மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்து கந்த  பெருமாளே

என்று முருகப் பெருமானைப் போற்றுகிறார். (திருப்புகழ்  பாடல் 1312  - 'வாரண முகங்கி ழிந்து').

பழமுதிர்சோலை என்னும் பெயர் முருகப்பெருமானது திருவிளையாடலின்அடியாகத் தோன்றியது என்றும் கூறப்படுகிறது. இத்தலத்தில் முருகப் பெருமான் ஒளவைப் பிராட்டிக்கு நாவற் பழங்களை உதிர்த்தார் என்றும், சில விளக்கங்களைக் கேட்டு, தமிழ் மூதாட்டியின் வாயிலாகப் பயனுள்ள நீதிகளை உலகுக்கு உணர்த்தினார் என்றும் கூறப்படுகிறது.

அழகர் கோயில் மலைமேல் பழமுதிர்சோலை முருகப்பெருமான் கோயில், அமைதியை நல்கும் இயற்கை எழில் நிறைந்த இடத்தில் அமைந்திருக்கின்றது.

கள்ளழகர் தரிசனம் பெற்றோம். அடுத்து அப்படியே அங்கிருந்து பேருந்தில் சென்றால் பழமுதிர்ச்சோலை செல்லலாம்.ஏற்கனவே ஒரு முறை சென்று உள்ளோம்.அப்போது அடியார் பெருமக்கள் சோலைமலைக்கு நடந்து செல்வதை பார்த்தோம். நாமும் இம்முறை நடந்து செல்ல விழைந்தோம்.


கள்ளழகர் தரிசனம் பெற்று அங்கே குடிதண்ணீர்  இடத்தில் நூபுரகங்கை தீர்த்தம் செல்லும் வழி என்று இருந்தது. அந்த பாதை வழியே புறப்பட்டோம்.


நமக்கு மலை யாத்திரை என்றாலே ஒரு வித ஈர்ப்பு வந்து விடும். அதும் தனியாக பயணம் என்றால் சொல்லவே வேணாம். நாம் நமக்குத் தெரிந்த இறை பாடல்களை ஓதிக் கொண்டே சென்றோம். காலணியை கழற்றி விட்டு தான் நடை தொடர்ந்தோம்.


பார்க்கும் போதே தெரிகின்றதா? கரடு முரடான பாதை என்று





அட..பெருமானின் திருநாமம். இந்த தரிசனம் தான் நம்மை ஒளஷத கிரிக்கு அழைத்து வந்துள்ளது என்று நமக்கு தோன்றுகின்றது.









ஓம் நமோ நாராயணாய என்று ஓதிக் கொண்டே நடந்தோம். புது அனுபவமாக இருந்தது.




















இங்கே சற்று இளைப்பாறினோம். அன்பர்கள் நடந்து கொண்டு இருந்தார்கள். வழி நெடுகிலும் பச்சை தோரணங்களாக இருந்தது. மலை ஏற்றத்துக்கு முதல் காரணமே இந்த பசுமை தான். இந்த பசுமை நம்மிடம் பேசும். நம்மை ஈர்க்கும். நம்மை வளப்படுத்தும்.



இந்த பசுமைக்காகவே நாம் ஒரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இது போன்ற மலை யாத்திரை செல்ல வேண்டும்.







கற்கள். பாறைகள் என பாதை மாறி மாறி வந்து கொண்டிருந்தது.





அங்கிருந்த மரங்களைக் கண்டோம். வரம் தரும் மரங்கள் ..தான் தாவரம் என்று அழைக்கின்றோம்.




அப்பப்பா..எத்தனை ஆண்டுகளாக இங்கே தவம் இருக்கின்றதோ 










இது போன்ற மலை யாத்திரையில் பசுமைக்கு அடுத்து நாம் முக்கியம் தருவது இயற்கை காற்று..காற்றிலே இயற்கையா என ஐயம் வேண்டாம். நாம் வாழும் காலம் அப்படி உள்ளது. இது போன்ற மலை யாத்திரைகளில் தான் நாம் சில நுணுக்கமான சுவாசங்களை இயல்பாக மேற்கொள்வோம். மூச்சை இழு, வெளியிடு என்ற எந்த புறக்கட்டளைகளும் இன்றி, உடலே தானாக சுவாசம் எடுக்கும். இயற்கையை மிஞ்சிய குரு வேறு யாருமிலர்.



நெடு தூரம் பயணப்பட்டோம். வழியில் இந்தப் பதாகை கண்டோம்.இது மிக மிக உண்மையே..செல்லும் வழியில் உள்ள வானர அம்சங்களுக்கு நாம் உணவிட வேண்டாம். இது நமைய் சில தொந்தரவுக்கு ஆட்கொள்ள நேரும் என்பது சரி என்றே புரிந்தது. இதனை நாம் கைக்கொள்ள வேணாம்.

அடுத்து ஒரு தார் சாலை கண்டோம்.





தார் சாலை இரு மருங்கிலும் மரங்கள் இருந்தது. இதனால் வெய்யிலின் தாக்கம் பெரிதாக தெரியவில்லை. சுமார் 8 மணி அளவில் தொடங்கிய பயணம் என்று நினைக்கின்றோம்.












அட...கோயிலை நெருங்கி விட்டோம் என்று தெரிந்தது.

பதிவின் ஆரம்பத்தில் ஒரு பாடல் கண்டோம் அல்லவா? இந்த பாடல் ஒரு சிறப்புப்பெற்ற பாடல். அது என்ன என்று அடுத்த பதிவில் காண்போம்.

பழம் உதிர்ந்த சோலை அல்லவா இது? ஒளவைப் பாட்டிக்கு பழம் உதிர்த்து தரும் நிகழ்வு பற்றி கண்டோம். இங்கேயே இருங்கள்.மீண்டும் அடுத்த பதிவில் கந்தன் அருள் பெறுவோம்.

மீள்பதிவாக:-

 ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 14.09.2019 முதல் 28.09.2019 வரை - https://tut-temples.blogspot.com/2019/09/14092019-28092019.html

திரும்பிப் பார்க்கின்றோம் - ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22.07.2017 - https://tut-temples.blogspot.com/2019/09/22072017.html

 பெரியபுராணம் கூறும் பூரண தானம் அறிவோமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_14.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

 தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

No comments:

Post a Comment