"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, September 19, 2019

திருமாலிருஞ்சோலை தரிசனம் பெறலாமே!

 அனைவருக்கும் வணக்கம்.

பதிவின் தலைப்பைப் பார்த்ததும் வியக்க வேண்டாம். இது போன்ற பெயர்களை நாம் இழந்து விட்டோம். அதனால் தான் புதிதாக தெரிகின்றது. மதுரையில் உள்ள கள்ளழகர் கோயில் தான் திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்பட்டு வருகின்றது. நாம் திருமாலிருஞ்சோலை என்ற பெயரை பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்களின் உரையை கேட்ட போது குறித்து வைத்தோம். அழகர் கோயிலின் மறு பெயர் தான் திருமாலிருஞ்சோலை என்றதும் மீண்டும் ஒரு முறை அவரை தரிசிக்க விரும்புகின்றோம். அடுத்த முறை யாராவது திருமாலிருஞ்சோலை என்று சொன்னால் இந்த பதிவு நினைவிற்கு வந்தால் அதுவே நமக்கு போதும்.

இது மட்டுமா? சோலை மலை என்றும் மாவிருங்குன்றம் என்றும் இந்த கோயில் அழைக்கப்பட்டு வருகின்றது.




அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. இந்தப் பதிவை நாம் பாடல் பெற்ற தலங்கள் தொடர்பதிவிலும் அளிக்கலாம். இருப்பினும் மீண்டும் தொடர்வோம்.

இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார்.பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோயில் கொண்டுள்ளது.





இதில் அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது . இதற்குத் திருமாலிருஞ் சோலை , உத்யான சைலம் , சோலைமலை , மாலிருங்குன்றம் , இருங்குன்றம் , வனகிரி , விருஷ பாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு. இது கிழக்கு மேற்காக 18 கி .மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது .அதிலிருந்து பல சிறிய மலைகள் , நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோயில் இருக்கிறது. இம் மலையில் பலவகை மரங்களும் ,செடிகளும் , கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியைத் தந்து நிற்கின்றன. இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதைச் சோலைமலை , திருமாலிருஞ் சோலை , வனகிரி , முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள்.இச் சோலைகளில் பூக்களும் காய்களும், கனிகளும் மிகுதியாக உண்டாகிப் கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டுகிறது.

இங்கு கோயில் கொண்டு உறைகின்ற இறைவன் "அழகர் " என்று போற்றப்படுகிறார் .இவரே வடமொழியில் " சுந்தர ராஜன் " என்று சொல்லப்படுவர். திருமாலுக்கும் அவருடைய அவதாரமாகிய இராமபிரான் முதலானவர்களுக்கும் அழகர் என்னும் பழைய தமிழ் நூல்களிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. அழகர் என்பதற்கு அழகுடையவர் , அழகானவர் என்று பொருள் மதுரை நகரத்தில் உள்ள பழைய திருமால் திருத் தலத்தில் எழுந்தருளியுள்ள மூர்த்திக்கும் கூடலகர் என்னும் பெயர் ஏற்பட்டிருப்பதும் இதனால் தான். இன்னும் பல திருத் தலங்களிலும் எம் பெருமானுக்கு அழகர் என்றும் சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள் உண்டு. 108 திவ்ய தேசங்களில் அன்பில் என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் திருநாகை ( நாகப்பட்டினம் ) என்றதிருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் மற்றும் கூடல் ( மதுரை ) என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.



கள்ளழகர் திருத்தலம் மிகவும் பழமையானது. இது எப்பொழுது தோன்றியது என்ற சொல்ல முடியாத பழமை உடையது .மிகவும் பழைய தமிழ் நூல்களிலும் வடமொழிப் புராணங்களிலும் கூட இதன் பெருமை பேசப்பட்டிருக்கிறது. இங்கே உள்ள மூர்த்தி , தலம் , தீர்த்தம் , ஆகியவை பற்றிய வராக புராணம் , பிரம்மாண்டமான புராணம் , வாமன புராணம் , ஆக் நேய புராணம் முதலியவற்றில் மிகவும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது . அவற்றை தொகுத்து ஒன்று சேர்த்து "விருஷ பாத்திரி மகாத்மியம்" என்ற ஸ்தல புராணத்தின் தமிழாக்கம் தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது . அந்நூலில் இத் தலத்தின் புராணப் பெருமைகளை அறிந்து கொள்ளலாம்.



  •     மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.
  •     ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள் உள்ளன. இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது.
  •     கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சன்னதி கலைநயத்துடன் உள்ளது.
  •     திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.
  •     வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஒவியங்கள் உள்ளன.
  •     கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.
  •     இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது.
  •     கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை , அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.





புராண அடிப்படையில் கள்ளழகர், மீனாட்சியம்மனின் உடன்பிறந்தவர். சித்திரைத் திருவிழாவின்பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார். வைகை ஆறு வரை வந்து பின் வண்டியூர் சென்று அழகர்மலை திரும்புகிறார். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று மதுரையை அடுத்துள்ள தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், கள்ளழகரை மதுரை வைகையாற்றில் எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தியவர்.

சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வை எதிர் சேவை என்று கொண்டாடப்படுகிறது. முக்கிய விழாவாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 
ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் புகழ் பெற்றது.

அவ்வழி படரீர் ஆயின்,இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின் பெருமால் கெடுக்கும் பிலமுண்டு. என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகர் கோவிலின் சிறப்பு பற்றி கூறுகிறார்.

மேலும் விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபில் புண்ணிய சரவணம்,பவகாரணி யோடு இட்ட சித்தி எனும் பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்கு என்று மூன்று பொய்கைகள் இருப்பதாகவும் கூறுகிறார் . ஆனால் நாம் அறிந்தது நூபுர கங்கை என அழைக்கப்படும் ஒரே ஒரு பொய்கை. இதன் மூலம் சிலப்பதிகாரத்திற்கு முன்பே ஆழகர் கோவில் அமைக்கப்பட்டது என தெரியவருகிறது.ஆழ்வார்களின் காலத்திற்கு பிறகும் கோட்டைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.



  • மூலவர் - அழகர் அல்லது அழகியத்தோளுடையான் (தமிழில்), சுந்தரபாஹூ (வடமொழியில்)
  • தாயார் - சுந்தரவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)
  • காட்சி - சுதபமுனி, தர்மதேவன், மலையத்வஜ பாண்டியன்
  • திசை - கிழக்கே திருமுக மண்டலம்
  • தீர்த்தம் - நூபுர கங்கை எனும் சிலம்பாறு
  • விமானம்- சோமசுந்தர விமானம்
  • உற்சவர் - கள்ளழகர்

  • இக்காலத்தில் இம் மலையடி திருமாலை கள்ளழகர் என்கின்றனர். இதற்கு அடிப்படையாக அமைந்த பரிபாடல் அடிகள்
பாடல் (மூலம்)செய்தி
கள்ளணி பசுந்துளவினவைகருந்துளசி மாலை அணிந்தவன்
கருங்குன்று அனையவைகருங்குன்றம் போன்றவன்
ஒள்ளொளியவைஒளிக்கு ஒளியானவன்
ஒரு குழையவைஒரு காதில் குழை அணிந்தவன்
புள்ளணி பொலங்கொடியவைபொலிவுறும் கருடக்கொடி உடையவன்
வள்ளணி வளைநாஞ்சிலவைமேலும் கீழும் வளைந்திருக்கும் கலப்பை கொண்டவன்
சலம்புரி தண்டு ஏந்தினவைசிலம்பாறு என்னும் நீர் வளைந்தோடும் வில்லை உடையவன்
வலம்புரி வய நேமியவைசங்கும், சக்கரமும் கொண்டவன்
வரிசிலை வய அம்பினவைவரிந்த வில்லில் வலிமை மிக்க அம்பு கொண்டவன்
புகர் இணர் சூழ் வட்டத்தவைபுள்ளி புள்ளியாக அமைந்த பூங்கொத்து விசிறி கொண்டவன்
புகர் வாளவைபுள்ளி போட்ட வாள் ஏந்தியவன்
  • பெரியாழ்வார் - 24 பாடல்கள்
  • ஆண்டாள் - 11 பாடல்கள்
  • பேயாழ்வார் - 1 பாடல்
  • திருமங்கையாழ்வார் - 33 பாடல்கள்
  • பூதத்தாழ்வார் - 3 பாடல்கள்
  • நம்மாழ்வார் - 36 பாடல்கள்
உதாரணமாக
சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ.
-நாச்சியார் திருமொழி
ஆக மொத்தம் 108 பாடல்கள். இவைத்தவிர உடையவர் இராமானுசர், கூரத்தாழ்வார், மணவாள மாமுனிகளும் இவரை மங்களாசாசனம் செய்துள்ளனர்.



அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் சிற்பங்கள்
  • தேர் மண்டபம்.
  • யானை வாகன மண்டபம்.
  • பதினாறு தூண் மண்டபம் (ஆண்டாள் மண்டபம்).
  • கொண்டப்ப நாயகர் மண்டபம்.
  • திருகல்யாண மண்டபம்.
  • கோடைதிருநாள் மண்டபம்.
  • பொன்வைத்த பெருமாள்l மண்டபம் (சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது).
  • ஆர்யன் மண்டபம் (படியேற்ற மண்டபம்).
  • மஹா மண்டபம் (அழகேந்திர மண்டபம் ).
  • வசந்த மண்டபம்.
  • மாதவி மண்டபம்.
 ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்ரா பௌர்ணமித் திருநாள் தான் . மதுரை ஸ்ரீ மீனாட்சிக் கோயிலில் தொடங்கும் சித்திரைத் திருவிழாவும் இவ் விழாவும் ஒரே சமயத்தில் நடக்கின்றன . திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு இந்தா இரண்டு உற்சவங்களும் வெவ்வேறு மாதங்களில் நடந்தன . அப்போது அழகரின் சைத்ரோற்சவம் சித்திரை மாதத்திலும் மீனாட்சி கோயில் உற்சவம் மாசி மாதத்திலும் நடந்தன . இதனால் தான் மாசி மாதத்தில் நடக்கும் இத் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர்களுடைய ரதம் செல்லும் வீதிகளுக்கும் மாசி வீதிகள் என்று பெயர் ஏற்பட்டது . திருமலை காலத்திற்கு முன்பு ஸ்ரீ அழகர் சித்திரை மாதத்தில் அலங்காநல்லூர் , தேனூர் முதலிய ஊர்கள் வழியாக வந்து வைகை ஆற்றில் இறங்கி வண்டியூரில் தங்கியிருந்து , மீண்டும் அழகர் மலையையைடைவது வழக்கம் . திருமலை நாயக்கர் , இந்த இரண்டு விழாக்களையும் ஒன்றாகச் சேர்ந்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கருதி அப்படியே செய்தார் . அவருடைய ஏற்பாட்டின் படியே இப்பொழுதும் நடந்து வருகிறது .


ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்ரா பௌர்ணமித் திருநாள் தான் . 
மதுரை ஸ்ரீ மீனாட்சிக் கோயிலில் தொடங்கும் சித்திரைத் திருவிழாவும் இவ் விழாவும் ஒரே சமயத்தில் நடக்கின்றன . திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு இந்தா இரண்டு உற்சவங்களும் வெவ்வேறு மாதங்களில் நடந்தன . அப்போது அழகரின் சைத்ரோற்சவம் சித்திரை மாதத்திலும் மீனாட்சி கோயில் உற்சவம் மாசி மாதத்திலும் நடந்தன . இதனால் தான் மாசி மாதத்தில் நடக்கும் இத் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர்களுடைய ரதம் செல்லும் வீதிகளுக்கும் மாசி வீதிகள் என்று பெயர் ஏற்பட்டது . திருமலை காலத்திற்கு முன்பு ஸ்ரீ அழகர் சித்திரை மாதத்தில் அலங்காநல்லூர் , தேனூர் முதலிய ஊர்கள் வழியாக வந்து வைகை ஆற்றில் இறங்கி வண்டியூரில் தங்கியிருந்து , மீண்டும் அழகர் மலையையைடைவது வழக்கம் . திருமலை நாயக்கர் , இந்த இரண்டு விழாக்களையும் ஒன்றாகச் சேர்ந்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கருதி அப்படியே செய்தார் . அவருடைய ஏற்பாட்டின் படியே இப்பொழுதும் நடந்து வருகிறது .



இப்பொழுது கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி வண்டியூர் சென்று , தன் மலைக்குத் திரும்பி வருவதை பற்றி ஒரு கதை வழங்குகிறது . இக் கதைக்கு சாஸ்திர ,புராண ஆதாரம் ஒன்றும் இல்லை ஆகையால் பொதுவாக சைவ , வைஷ்ணவ மதங்களை ஐக்கியப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இதைக் கொள்ள வேண்டும் தன் தங்கை ஸ்ரீ மீனாட்சிக்கும் ஸ்ரீ சுந்தரேசுவரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீ அழகர் , கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபத்தைப் பார்க்க 24 கி . மீ தூரத்திலுள்ள தன் இருப்பிடத்தை விட்டுச் சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார் என்பது இக் கதை பல்லக்கில் கள்ளர் திருக் கோலத்துடன் வழியில் பல மண்டபங்களில் தங்கி , இந்தச் சேவையைப் பார்பதற்கும் அழகரை எதிர் கொள்வதற்கும் மதுரை மக்கள் திரண்டு வரும் காட்சிகள் ஸ்ரீ கள்ளழகர் எதிர் சேவை என்று சொல்லப் படும் இரவில் அம்பலத்துக்காரர் மண்டபத்தில் பிரம்மாண்டமான வாண வேடிக்கைகள் கூத்துக்கள் , கொட்டு மேளங்கள் முதலியவை நடக்கும் . மறுநாள் விடியற் காலை தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து ( சித்ரா பௌர்ணமியன்று ) அழகர் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வைகையை நோக்கி செல்வார் . புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுதூரிலிருந்து சூடிக் கொடுத்த நாச்சியராகிய ஸ்ரீ ஆண்டாளின் மாலையை சாற்றிக் கொள்கிறார் . இது தவறாமல் நடந்து வரும் விஷேசம் .

ஸ்ரீ அழகர் ஆற்றுக்குச் செல்லும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும் , பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்து அருளும் காட்சியே கண் கொள்ளக் காட்சியாகும் .ஆற்றில் எழுந்தருளியருளும் மதுரை ஸ்ரீ வீர ராகவப் பெருமாள் அவரை எதிர் கொண்டு அழைக்கிறார் . இந்த வைபவம் அழகர் ஆற்றில் இறங்குதல் என்று சொல்லப்படும் இதனைக் காண இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருவதும் கண் கொள்ளாக் காட்சியாகும் . மதுரையில் இவ் விழாவே மிகப் பெரிய திருவிழா .. வெயில் , மழை என்று பாராமல் ஜனங்கள் பகலும் இரவும் ஒரு சிறிய இடத்தையும் விடாமல் நிறைத்துக் கொண்டு ஆற்றிலும் அதன் கரைகளிலும் மண்டபங்களிலும் கூடியிருப்பார்கள் . பின்பு வைகையாற்றின் வழியாகவே நேராக வண்டியூர் போகிறார் . அங்கு அன்றிரவு தங்கி இளைப்பாறிச் சைத்யோபசாரம் செய்து கொண்டு , மறுநாள் காலை சே ஷ வாகனத்தில் எழுந்தருளி தேனூர் மண்டபத்தை அடைகிறார் . அங்கு தங்க கருட வாகனத்தில் காட்சி நல்கி மண்டுக மகரிஷிக்கு மோஷ மளிக்கிறார் . பிறகு அன்றிரவு ராமராயர் மண்டபத்திற்கு எழுந்தருளி தசாவதார சேவை சாதிக்கிறார் . மறுநாள் காலை அழகர் மோகனாவதார சேவையருளி ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க சேவையுடன் புறப்பட்டு மைசூர் மண்டபத்தில் கள்ளழகர் திருக் கோலத்துடன் புஷ்பப் பல்லக்கு சேவை நடக்கும் . மறு நாள் காலையில் ஸ்ரீ அழகர் அப்பன் திருப்பதிக்குச் சென்று திருமலையை அடைவார் . மறுநாள் அவருக்கு அங்கு சாத்து முறை நடக்கும்



இந்த அழகர் திருவிழா மொத்தம் ஒன்பது நாட்கள் நடக்கும் அழகர் மதுரைக்குப் புறப்படும் முன்பே திருமலையில் அவருக்குத் திருவிழாக்கள் தொடங்கி விடும் அந்தத் திருவிழாவின் 4 - ஆம் நாள் மதுரைக்குப் புறப்படும் ஒன்பதாம் நாள் மீண்டும் தம் மலைக்குத் திரும்பி விடுவார். அழகர் வைகையாற்றில் தங்கியிருக்கும் படியான மூன்று நாட்களில் இரவும் பகலும் அங்கு சேரும் ஜனக் கூட்டம் கணக்கிட முடியாதது . அங்கே அழகர் அருளுகின்ற பலவிதமான சேவைகளைக் கண்டு களிக்கவே மக்கள் கூட்டம் திரண்டிருக்கும். அப்போது இரவில் வாண வேடிக்கைகளும் , விளையாட்டுக்களும் , ஆரவாரங்களும் அளவற்று நடக்கும். இவற்றியெல்லாம் காண , பல மைல் தூரத்திலுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் மாட்டு வண்டிகளில் வந்து மூன்று , நான்கு நாட்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து போவார்கள்.



அழகருக்கு நடக்கும் மற்ற திருவிழாக்களில் முக்கியமானவை வைகாசி வசந்த உற்சவ திருநாள் ( இது வசந்த மண்டபத்தில் 10 நாள் நடக்கும் ) ஆடி பிரமோற்சவம் ( 10 நாள் ) ஐப்பசி தலையருவி உற்சவம் அல்லது தொட்டி உற்சவம் ( 3 நாள் )கார்த்திகை கைசிகம் மார்கழித் திருநாள் , திரு அத்தியயன உற்சவம் இது பகற் பத்து , இராப்பத்து என்று இரண்டு பிரிவுகளாக மொத்தம் 20 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நாட்களில் நாலாயிர திவ்விய பிரபந்தம் முழுவதும் அத்யா பகர்களால் சேவிக்கப் படுகிறது பகற்பத்தில் இங்கு பெரியாழ்வார் அழகரின் திருவடி சேர்வதாக விழா நடை பெறு வது தனி சிறப்பு வாய்ந்தது மற்ற திவ்விய தேசங்களில் திருமங்கையாழ்வார் திருவடிச் சேருவதாக விழா நடைபெறும். இங்கு பெரியாழ்வார் இறுதிக் காலத்தில் வாழ்ந்து அழகர் திருவடி சேர்ந்ததால் இவ்வாறு விழா அமைக்கப்பட்டிருக்கிறது . மாசி தெப்பம் , பங்குனி திருக் கல்யாணம் முதலியன நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவிற்கு அடுத்தப்படி பெரிய திருவிழா ஆடிப் பிரமோற்சவமே. இந்த ஒன்பதாம் நாள் பௌர்ணமியன்று திருத் தேர் நடக்கும். இந்தப் பிரமோற்சவதிற்குக் கிருஷ்ண தேவராயர் இரண்டு கிராமங்களை மானியமாகக் கொடுத்தார்.ஸ்ரீ ஆண்டாள் இங்கு கள்ளழகரைக் கல்யாணம் செய்து கொண்டதாக ஐதீகம் உண்டு . ஆகையால் இந்த விழா இங்கு மிகச் சிறப்பாக நடைபெறும் . இத் திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தில் நடைபெறும்.


"இந்த நீருற்றில் உள்ள தண்ணீர் ஆனது சொர்க்கத்தில் இருந்து கோவிலின் மலை உச்சிக்கு வருவதாக நம்பப்படிகிறது . இக்குளத்தில் குளிப்பதன் மூலம் மனிதர்களின் ஆசைகள் நிறைவேறுவதாக கூறப்படுகிறது . அதனால் இக்குளத்திற்கு இஷ்ட சித்தி என ஒரு பெயர் உள்ளது, மேலும் ச்ரவனம், பவ தரணி மற்றும் இஷ்ர சித்தி என மூன்று நீரூற்றுகள் இந்த புனித நீரில் கலப்பதாக சிலப்பதிகாரத்தில் ஒரு குறிப்பு உள்ளது. இந்த நீரில் உயர்தர தாதுக்கள் நிறைந்துள்ளது. இதில் இரும்பு மற்றும் செம்பு போன்ற கனிமங்கள் உள்ளன. இந்த நீரானது பல நோய்களை குணப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது. இந்த நீரானது இனிப்பு சுவை கொண்டது. இங்கே இறைவன் ஹனுமனுக்கு (ராம பக்தர்) ஹனுமான் தீர்த்தம் உள்ளது. இதன் பெயர் "கருட தீர்த்தம்" என்றழைக்கபபடுகிறது. கோவிலின் வடக்கு புறத்தில் உள்ள உத்தர நாராயனவினி நீர் மற்ற சிலைகள் நீராடுவதற்கு பயன்படுகிறது.



பதிவை படித்த பின்பு அழகா, கள்ளழகா என்று பாடத் தோன்றுகின்றது அல்லவா? அதுதான் பெருமாளின் பெருமிதம். இங்கிருந்து நாம் அறுபடை வீடுகளில் ஒன்றான சோலைமலை செல்ல இருக்கின்றோம். இங்கிருந்து பேருந்து வசதி உண்டு. நாம் நடந்து செல்ல விருப்பப்பட்டோம். நீங்களும் தயாராக இருங்கள். அடுத்து முருகன் தரிசனம் பெறுவோம்.

மீள்பதிவாக:-

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_70.html

இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 90 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2019/05/90.html


முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html


ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html
அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05
ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019) - https://tut-temples.blogspot.com/2019/07/06-07-2019.html

No comments:

Post a Comment