"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, September 18, 2019

மீண்டும் மீண்டும் அழைக்கும் பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் - உழவாரப்பணி அனுபவம்

அனைவருக்கும் வணக்கம்.

சதானந்த சுவாமிகள் ஆசிரமம் நமக்கு ஆனந்தத்தை தரும் கோயில்களில் ஒன்று. இதுவரை நான்கு முறை உழவார செய்து இருப்போம். நாமாக இங்கு உழவாரப் பணி செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. சதானந்த சுவாமிகள் தான் தற்போது வரை நம்மை இங்கே அழைக்கின்றார். எப்போதெல்லாம் நமக்கு சறுக்கல் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நமக்கு தெம்பைத் தந்து, பிள்ளையார் சுழி ஒன்றை போட்டு, நம் அனைவருக்கும் ஆசி தருவது இவருடைய சிறப்புகளில் ஒன்று.

இன்னும் அங்கிருக்கும் குரு பீடத்தில் ஐயாவின் ஆற்றலை உணரலாம். ஒவ்வொரு ஆண்டு குருபூசைக்கு முன்னர் நமக்கு இங்கே உழவாரப் பணி செய்ய வாய்ப்பு கிடைப்பது நாம் செய்த புண்ணியமே ஆகும்.


எண்ணிக்கை முக்கியமில்லை எண்ணங்களே முக்கியம் என்று மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது. நமக்கு அருகில் இருக்கும் கோயில் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அது போல் தான் சதானந்த சுவாமிகள் ஆசிரமம். நீண்ட நாள் கழித்து அங்கு சென்று, பேசிக் கொண்டு இருந்தோம். நம் தளத்திக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இவர் தான். பிள்ளையார் கொண்டு சித்து ஒன்றை செய்தவரும் இவர் ஆவார். நம்மைப் பொறுத்த வரை இங்கு தான் , இப்படி தான் , இந்த பொழுதில் தான் உழவாரம் செய்ய வேண்டும் என்று நாம் நினைப்பது கூட இல்லை.அவன் பார்த்து நம்மை இழுத்துக் கொண்டிருக்கின்றான். அந்தப் பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம்.
அன்றைய தினமும் அப்படியே. ஆசிரம நிர்வாகி ஆனந்த் ஐயாவிடம் பேசிக்கொண்டு இருந்த போது, இந்த ஆண்டு குருபூஜைக்கு முன்னர் நாம் உழவார செய்ய அனுமதி தாருங்கள் என்றோம். இதோ கிடைத்து விட்டது. அந்த அனுபவத்தை இங்கே தருகின்றோம்.

முதலில் இரவின் ஒளியில் ஆசிரமத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வரலாமா?




































வழக்கம் போல் நம்மை சேர்த்து 4 பேரோடு உழவாரம் செய்ய ஆரம்பித்தோம். எண்ணிக்கையில் ஒன்றுமே இல்லை. எண்ணங்களே முக்கியம் என்பது நிரூபணமாகிறது. குருபூசைக்காக இந்த உழவாரப் பணி என்பதால் சற்று கவனம் செலுத்தி செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.






முதலில் அங்கிருந்த தியானக் கூடத்தை சுத்தம் செய்ய விரும்பினோம். இரண்டு நபர்கள் இந்தப் பணியை எடுத்துக் கொண்டார்கள். முதலில் துணி கொண்டு துடைத்தார்கள். அடுத்து நீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்தார்கள்.

அடுத்து விஜய சுந்தரி அவர்கள் அங்கிருந்த விளக்கு போன்ற பொருட்களை சுத்தம் செய்தார்கள்.





அங்கிருந்த நண்பர்களோடு சேர்ந்து நம் விஜயசுந்தரி அம்மா அவர்களும் சேவையில் ஈடுபட்டார்கள்.












தியான அறையை முழுதும் சுத்தாமாக்கிவிட்டு தான் இருவரும் நகர்ந்தார்கள். மீண்டும் ஐயாவின் சந்நிதியை தூய்மைப்படுத்த ஆரம்பித்து விட்டனர்.


பின்னர் அங்கிருந்த மற்ற சமாதி இடங்களையும் தூய்மைப்படுத்த ஆரம்பித்தோம். முதலில் கண்டிராஜ் சுவாமிகள் சந்நிதி எடுத்துக் கொண்டோம்.












சபித்து மாயாசாமி சந்நிதி எடுத்துக்கொண்டோம்.


அடுத்து மிகப் பெரிய வேலை என்றே சொல்லலாம். பச்சை சுவாமிகள், வேலு சுவாமிகள் ஜீவ இடத்தை சுத்தமாக்க எடுத்துக் கொண்டோம். இவை பல நாட்களாக வெட்ட வெளியில் தூசு படிந்தே இருக்கும்.






முதலில் அங்கிருந்த இலைகளை கூட்டித் தள்ளினோம். அப்புறம் நீர் கொண்டு கழுவ முடிவெடுத்தோம்.







































நன்கு நீர் ஊற்றி  பிறகு நீங்களே பாருங்கள். எவ்வளவு தூய்மையாக இருக்கின்றது. கூட்டமெல்லாம் போட்டு செய்வதை விட, இரண்டே இரண்டு பேர் ஆத்மார்த்தமாக தூய்மை செய்துள்ளனர். திரு.அனந்தகிருஷ்னன் ஐயாவிற்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.




விளக்குகள் போன்ற பொருட்களை தூய்மை செய்யும் பணி மற்றொரு பக்கத்தில் நடந்து கொண்டிருந்தது. அடுத்து மீண்டும் ஐயாவின் இடத்தை சுத்தம் செய்ய மூவரும் புறப்பட்டார்கள்.











இங்கு நாம் மன அழுக்குகளையும் துடைத்துக் கொண்டிருக்கின்றோம்.


















ஐயாவின் சந்நிதி முழுதும் நீர் ஊற்றி தூய்மை செய்யப்பட்டது.





சென்ற ஆண்டு நாம் கொடுத்த கூடுவாஞ்சேரி விநாயகர் நாட்காட்டி கண்டோம்.




அட..நிறைவாக இருந்தது. நீங்களே சந்நிதியை பாருங்கள். எவ்வளவு சுத்தமாக இருக்கின்றது. ஐயாவின் சந்நிதி,தியான அறை, பச்சை சுவாமி இடம் என அனைத்தும் மூன்று அடியார்களைக் கொண்டு சுத்தம் செய்தோம். அடுத்து அங்கிருந்த குழந்தைகளோடு மதிய உணவு அருந்தினோம்.


சாப்பிடுவதற்கு முன், இறைக்கு நன்றி சொல்ல  வேண்டும் என்று இவர்களைப் பார்த்து பழகிக் கொண்டோம். 





உழவாரப் பணியில் ஈடுபட்ட அன்பருக்கு நம் தளம் சார்பில் சிறு பரிசு ஒன்றை நிர்வாகி ஆனந்த் ஐயா வழங்கினார்கள். பின்னர் சற்று நேரம் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

தென்காசியில் இருந்து வந்து நமக்காக உழவாரப் பணியில் ஈடுபட்ட  சகோதரர் மாதவனுக்கு, தாம்பரம் ஆனந்த கிருஷ்னன் ஐயா குடும்பத்தாருக்கும் நம் நன்றியை இந்தப் பதிவின் வாயிலாக சமர்ப்பிக்கின்றோம்.

விரைவில்  குருபூசை தரிசனம் தருகின்றோம்.

முந்தைய பதிவுகளுக்கு:-

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019) - https://tut-temples.blogspot.com/2019/07/06-07-2019.html

No comments:

Post a Comment