"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, March 31, 2024

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 11

                                                           இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவாக நம் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கை காண உள்ளோம். காண்பதை விட கருத்தில் ஏற்றுவது பெரிதாக உள்ளது. பெரிதினும் பெரிது கேள் என்று சொல்ல கேட்டிருப்போம். ஆம். நம் குருநாதர் நமக்கு உரைக்கும் வார்த்தைகள் மிக மிக பெரியது.இவற்றை வெறும் வார்த்தைகளாக கொள்கின்றோமா? இல்லை. வாழ்க்கையாக கொள்கின்றோமா? என்பதில் தான் அர்த்தம் உள்ளது. மதுரைக்கு முன்பாக கோயம்பத்தூரில் குருநாதர் வாக்குகள் அருளியுள்ளார். இதில் யாருமே கூறாத தான, தருமம் பற்றி உரைத்துள்ளார். இவற்றையெல்லாம் நாம் கேட்டு, வாழ்வில் பின்பற்ற வேண்டும்.  குருநாதரின் வாக்கிற்கு அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் குருநாதரின் நேரடி வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்கும் வாய்ப்பு கிட்டிய நிகழ்வை இன்று காண இருக்கின்றோம். குருநாதரின் உபதேசம் எப்படி எல்லாம் இருக்கும் என்று யார் அறிவார்?ஆனால் நாம் தான் எதையெதையோ தேடிக்கொண்டு இருக்கின்றோம். குருவை இறுக இரு கை கொண்டு சிக்கென பிடித்தாலே போதும். நமக்கு வேண்டியது கிடைக்கும். வாழ்வு சிறக்கும்.

இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும். அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம் காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று வருகின்றோம் 

ஓம் குரு வழியே ஆதி ஆதி

           ஓம் குரு மொழியே வேதம் வேதம்

 ஓம் குரு விழியே தீபம் தீபம்

                                                                ஓம் குரு பதமே காப்பு காப்பு  

குருநாதர்:- அப்பனே தன் தனக்கு அவை வேண்டும், இவை வேண்டும் நீங்கள் இப்படி கேட்டுக் கொண்டிருந்தால் அப்பனே சிறு குழந்தைகள் கூட அப்பனே தாய் தந்தையர் இல்லாமல் இருக்கின்றார்களே, அவர்கள் எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள்? யாராவது அதை உணர்ந்து இருக்கின்றீர்களா? என்பேன் அப்பனே. ஆனால் நீங்கள் உங்கள் சுயநலத்திற்காகத்தான் கேட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள். எப்படியப்பா? (நியாயம்). நீங்கள் சரியாக இருந்தால் “அகத்தியனே, நீங்கள்தான் எந்தனுக்கு அனைத்தும், நீங்கள் ஏதாவது கொடுங்கள்” என்று கையை தூக்கி வணங்கிவிட்டால் அப்படி கூட வணங்க வேண்டாம் அப்பனே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். யான் தருவேன் அப்பா. என்பிள்ளைகளுக்கு தராமல் யாருக்கு தரப்போகின்றேன் அப்பனே சொல்லுங்கள்.

உங்கள் கடமையை செய்யுங்கள். உன் கடமை என்றால் அப்பனே பிறர் நலனை காணுங்கள் அப்பனே. போதுமானது அப்பனே. என் வழியில் வருபவர்கள் இப்படித்தான் செய்ய வேண்டும். இப்படி செய்தால்தான் கஷ்டங்கள் நீங்கும். ஆனாலும் அச்செல்கள் அங்கங்கு மாறி கிடக்கின்றது. அவை ஒன்றாக இணைந்தால்தான் வெற்றி உண்டாகும்.
கடைசியில் இணைத்து விடுகின்றேன். இதற்காகத்தான் அப்பனே திருநீறு, திருநீறு. ( திரு = இறைவன். நீறு = சாம்பல் ).

அடியவர்:- (அமைதி)

குருநாதர்:- அப்பனே அன்றைய நேரத்தில் (பழங்காலத்தில்) அவ்செல்கள் சிதறாமல் இருக்க பல மூலிகைகள் ஆன நீற்றை அணிந்தார்கள். ஆனால் இன்றளவும் பின் மாறிவிட்டதப்பா. அதை இழுத்தால் அப்பனே எங்கும் செல்லாதப்பா. அங்கேயே (அவ் செல்கள்) தேங்கி நிற்கும் அப்பா. உயர்ந்த பக்தியை காண்பித்தார்களப்பா. இன்றளவு அப்பனே மாறிவிட்டது. அதாவது இயற்கை முறையில் நன்றாக (திருநீறு செய்து) அப்பனே அனைவருக்கும் கொடுங்கள் அப்பனே. அணியச் சொல்லுங்கள் அப்பனே. (பின் அவ்செல்கள்) அது மாறாதப்பா. அதை (அவ்செல்களை பழைய நிலைக்கு ஈசன் படைத்தது போல் உங்கள் நெற்றியில் ) மாற்றுவதற்கு பசும் சாணியிலே இருக்கின்றதப்பா.

அடியவர்:- சரி அய்யா

குருநாதர்:- அப்பனே நல்ன்கள். ஆசிகள். நின்று கொண்டு இருப்பவர்களே யாராவது என்ன கேள்விகள் எதிர்பார்க்கின்றார்கள் என்று தெரிந்து எவை என்றும் புரியப்புரிய. ( கேள்விகள் கேட்கலாம் )

அடியவர்:- ஐயா, (எங்கள்) உடல் பொருள், எண்ணம் , செயல், சொல் அனைத்தாலும் பிறர் நலத்தை மட்டுமே நாட வேண்டும். ஐயா ஆசிர்வாதம் செய்யவேண்டும். வழி காட்டனும்.

குருநாதர்:- இவ்வளவு நேரம் யான் என்ன தெரிவித்துக் கொண்டிருந்தேன் அப்பனே?

அடியவர்:- இதைத்தான்…(சொல்லி கொண்டு இருந்தீர்கள்)

குருநாதர்:- அப்பனே என்னை நோக்கி வந்து விட்டாலே யான் அப்படித்தான் செய்வேன். முதலில் அதைத்தான் கொடுப்பேன். பின்பு அனைத்தும் கொடுப்பேன் அப்பனே. முன்பே அனைத்தும் கொடுத்து விட்டால் பறப்பீர்கள் நீங்கள். பறந்தாலும் நீங்கள் விழுந்து விடுவீர்கள். அதனால்தான் உங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு நீங்கள் இப்படியும் செல்லாமல், அப்படியும் செல்லாமல் எப்படி பக்குவப்படுத்த என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்து மாற்றுகின்றேன். நின்று கொண்டு இருப்பவர்களே ஈசனை எப்படி அழைப்பது?

அடியவர்:- கருணை வடிவானவர்.

குருநாதர்:- அப்பனே இது சரியா? பக்கத்தில் இருப்பவனே கூறு?

அடியவர்:- சிவபுராணம் படிச்சு அழைக்கனும்.

குருநாதர்:- அப்பனே (ஆதி ஈசன்) வந்து விடுவானா என்ன?

அடியவர்:- உண்மையான பக்தி இருந்தால் வருவார். மாசற்ற…

குருநாதர்:- அப்பனே உண்மையான பக்தி என்றால் என்ன?

அடியவர்:- தன்னலம் இல்லாமல் பொது நலத்தோட இருத்தல்.

குருநாதர்:- அப்பனே அது யாரிடத்திலும் இருப்பது இல்லை அப்பா. அதனால்தான் (அந்த பொது நலம் உங்களிடம்) இருப்பதற்கு யாங்கள் பல கஷ்டங்கள் பட்டுக்கொண்டிருக்கின்றோம் அப்பனே. இது தவறா? சரியா?

அடியவர்:- (அமைதி) சரிதான்

குருநாதர்:- அப்பனே நல் எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் முதலில் கூட அப்பனே. தூய்மையான எண்ணத்தில், இதயத்தில் இறைவன் வாழ்வான் என்பேன் அப்பனே. அப்படி இல்லாமல், கடன் அங்கு, அங்கு மனம் செலுத்துவது இப்படி கஷ்டங்களோ என்றெல்லாம் இருந்தால் அப்பனே அவ்மனதில் இறைவன் குடி கொண்டு இருக்க மாட்டான் அப்பா. முதலில் பின் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை பற்றி நினைக்காதீர்கள் அப்பனே. இறைவன் நம் மனதிலே உள்ளான் என்று எண்ணிக்கொண்டால் அப்பனே நிச்சயம் வருவான் இறைவன். அனைத்தும் செய்வானப்பா.

அப்பனே உடல் எப்படி எல்லாம் இயங்குகின்றது? உயிர் எங்கு இருக்கின்றது? அப்பனே உயிர் எப்படி எல்லாம் இவை பற்றி எல்லாம் எடுத்துரைக்கின்றேன். முதலில் இவை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. அப்பனே உணவை எப்படி உண்ணுகின்றீர்கள்? அப்பனே. அதனை அருமை பற்றி பெருமை பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு அப்பனே முதலில் நீரை ஊற்ற வேண்டும். பின்பு எதைச்செய்ய வேண்டும். எதை இட வேண்டும் என்றெல்லாம் அனைத்தும் தெரிவித்துக் கொண்டுதானே உண்ணுகின்றீர்கள்? அப்பனே. இது தெரியாமல் உண்டு விட்டால் என்ன லாபம்? அரிசி மட்டும் உண்டுவிட்டால் போதுமா அப்பனே? இப்பொழுது அரிசி மட்டும்தான் உண்டு கொண்டு இருக்கின்றீர்கள் அப்பனே. அப்படி இல்லாமல் பக்குவங்கள் பட்டு பட்டு வாழந்தால்தான் சிறப்பு. ஆனால் தெரியாமலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் பைத்தியக்காரர்கள். இங்கு மனிதர்கள்தான் பைத்தியக்காரர்கள் என்பேன் அப்பனே. அவ் பைத்தியனே அப்பனே பொய் சொல்லி ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றான் அப்பா. இதுதான் அப்பா திருடன் மனிதன் என்றார்கள் அப்பனே. இன்னும் (வாக்குகள் சொல்ல) புசண்டன் ( சித்தர் ஶ்ரீ காகபுசண்ட பிரம்ம ரிஷி ) வருவான் அப்பனே. அப்பனே புரியவைப்பான் வரும் காலத்தில் என்னென்ன தவறுகள் செய்திருக்கின்றான் என்று கூட. இதனால் என்ன பிரயோஜனம்? அப்பனே. எங்களால் அனைத்தும் நீக்க முடியும் ஒரு நொடியில். ஆனால் நீங்கள் சரியான முறையில் நிச்சயம் அதனை பயன்படுத்த மாட்டீர்கள் என்பது தெள்ளத் தெளிவான கருத்து என்பேன்!. இன்று யான் சொல்லி விடுவேண். நாளை மனிதன் அங்கு சென்று ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் “ஆ இப்படியா” என்று அங்கேயே மயங்கி விடுவீர்கள் என்பேன் அப்பனே. இதுதான் அப்பனே மனிதனின் புத்தியை கீழ் நோக்கி அழைத்துச் செல்கின்றது என்பேன்.

அதனால் முதலில் தன்னை உணருங்கள் யார் என்பதைக்கூட. தன்னை உணர்ந்தால் அங்கு இறைவன் வருவானப்பா. அனைத்தும் சொல்லிக் கொடுப்பானப்பா.

கூறு இன்னும்?

அடியவர்:- ஐயா , இங்க உள்ள எல்லோரும் உங்களை பற்றி நல்லபடியா வேண்டுவதற்கு ஒரு அருமையான பாடல் ( ஒன்று கூறுங்கள்).

குருநாதர்:- அப்பனே அகத்தியன் என்று சொல்வதற்கே புண்ணியங்கள் தேவைப்படுகின்றதப்பா. பல கோடி அப்பனே. ஆனால் சரியாக அதை பயன் படுத்த தெரியவில்லை அப்பா. அதனால்தான் அப்பனே மீண்டும் அப்பனே கஷ்டங்கள். அப்பனே யான் கொடுக்க மாட்டேன் என் சீடர்களே கொடுத்து விடுவார்கள் அவ்வளவுதான்.

அடியவர்:- அகத்தியர் என்று சொல்வதற்கே பெரும் புண்ணியம் ஐயா

குருநாதர்:- அப்பனே வாக்கு, வாக்கு என்று கேட்டுக் கொண்டிருந்தாயே இப்பொழுது கேள்.

அடியவர்:- ( அடியவர்கள் சிரிப்பு) என்ன சொல்றதுன்னு தெரியலங்க ஐயா.

குருநாதர்:- அப்பனே பின் வாயில் தெரியாது தெரியாது என்றுதான் வருகின்றது. தெரியும் என்ன தெரியும் கூறு?

அடியவர்:- தெரியும் என்பது எதுவும் இல்லை

குருநாதர்:- அப்படி இல்லை என்றால் அனைவரையுமே ஒன்று கேட்கின்றேன் அப்பனே. அனைத்தும் தெரியாது என்று கூறுகின்றான். இவன்தனக்கு யான் ஏதாவது கொடுத்தால் இவன் சரியாக பயன் படுத்துவானா என்ன? நீங்களே கூறுங்கள் அவன்தனக்கு.

அடியவர்:- …..

குருநாதர்:- அப்பனே துன்பங்கள் ஏன் என்று தெரிந்து கொண்டாயா? அப்பனே. உந்தனுக்கு கொடுக்கப் போகின்றேன். அதனால்தான் பக்குவங்கள் பட வேண்டும் என்பதற்கே இத்துன்பங்கள் அப்பனே.

அடியவர்:- ………..

குருநாதர்:- அப்பனே இவ் அகத்தியன் செய்வது உங்கள் நண்மைக்கே என்பேன் அப்பனே. ஆனால் நீங்கள் தீமை என்றால் அப்பனே உங்களுக்கு தெரியாது அப்பனே ஒர் முறையில் நீங்கள் என்னென்ன கஷ்டங்கள் அப்பனே விதியில் உள்ளதை முன்பே ஆராயந்து உங்களை யான் பக்குவப்படுத்திக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. ( உங்கள் அனைவரின் ) அகத்தின் உள்ளேயே இருந்து.

(அகத்தீசன் = அகத்தின் + ஈசன் = நம் அகத்தில் இருக்கும் ஈசன் )

அப்பனே சிறு நொடியில் உன் உள்ளே நுழைந்து வெளியே சென்று விட்டால் கர்மங்களை யான் அழித்து எங்கோ விட்டு விடுவேன். ஆனால் நீங்கள் தகுதியான ஆளாக இல்லையப்பா இல்லை, இல்லை.

அத்தகுதியை முதலில் வளரத்துக்கொள்ளுங்கள். அத்தகுதி எப்படி வரும் மனதில் எதுவுமே இருக்கக்கூடாதப்பா. முதலில் தான் யார்? முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. முதலில் இவ்வுலகத்திற்கு ஏன் வந்தோம்? எவை எவை செய்யவேண்டும்? எவை எவை செய்யக்கூடாது ? என்பதை எல்லாம் அப்பனே புரிந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே. அனைவருமே இதை புரிந்து கொளவதே இல்லையப்பா. அதனால்தான் கஷ்டங்கள் என்பேன் அப்பனே. அதை புரிந்து கொண்டால், சரியாகவே வாழ்ந்து வந்தாலே யாங்களே அதை புரிய வைப்போம். புரிந்து கொண்டு வாழ்ந்தாலே வெற்றி நிச்சயம். புரியாவிடில் தோல்வி நிச்சயம்.

அடியவர்:- ………

குருநாதர்:- அப்பனே அதனால் கவலைகள் இல்லை. ஒரு பொழுதும் என் பக்தர்களுக்கு யான் கஷ்டங்கள் தருவதே இல்லையப்பா! நீங்கள் தான் கஷ்டத்தை (கர்மாவை) நோக்கி செல்கின்றீர்கள் அப்பனே. கூறுங்கள் அப்பனே. என் மீது தவறா?

அடியவர்:- இல்லங்கய்யா

குருநாதர்:- அப்பனே உங்களை பக்குவப்படுத்தி பக்குவப்படுத்தி, ஆற்றி ஆற்றி இப்பிறவிக்கு என்னென்ன கஷ்டங்கள் படுவீர்கள் எல்லாம் வரும் காலத்தில் எடுத்துரைப்பேன். அதற்கு என்னென்ன தீர்வுகள் என்றெல்லாம் யான் எடுத்துரைப்பேன்.அதனால் எக்குறைகளும் கொள்ளத்தேவை இல்லை என்பேன். கேளுங்கள் இன்னும்.சொல்கின்றேன்.

அடியவர்:- ( நீன்ட அமைத்திக்குப்பின் ஓர் அடியவர்) ஐயா அடியார்கள் பூசுவதற்கு தென்காசி சுரண்டையில் இருந்து இப்போ விபூதி வாங்கி (மற்றவருக்கு) எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சு இருக்கோம் ஐயா. அதை சாணம் வாங்கி அதையே திரும்ப ஐயா கிட்ட…

குருநாதர்:- அப்பனே தாராளமாக கொடு. ஆனாலும் சில கர்மங்களை ஏற்பாய். அதை வரும் காலங்களில் பின் எப்படி அழிப்பது என்பதையும் சொல்லி விடுகின்றேன்.

அடியவர்:- குருநாதர்தான் வழி காட்டனும்.

குருநாதர்:- அப்பனே வழியும் காட்டி விட்டேன். மீண்டும் கேட்கின்றாய் என்பேன். இதுதான் மனிதர்களின் புத்தி. மட்ட புத்தி.

அடியவர்:- ஐயா ஒரு முறை ஜீவ சமாதி போகும்போது, மக்கள் எல்லாம் உட்காந்து (வாக்கு) கேட்கும்போது அந்த ஜீவ சமாதியிலிருந்த மகான் வந்து அருள் பாலிக்கும் விதம் ஒரு மந்திரம் சொல்ரேன்னு சொன்னீங்கல்ல.

குருநாதர்:- அப்பனே அதை நீ இப்பொழுது செப்பினாலும் வீணாகப்போய் விடும் என்பேன் அப்பனே . ஆனால் மீண்டும் கடன் தான் அதிகமப்பா. ஆனாலும் அதை வரும் காலங்களில், எப்பொழுது எதை செப்ப வேண்டுமோ என்பதை எல்லாம் யான் சொல்லி விட்டேன் அப்பனே. எப்பொழுது எதைத்தர வேண்டுமோ அப்பொழுது கொடுத்தால்தான் நல்லது என்பேன். இப்பொழுது சொன்னாயே ஜீவசமாதி என்று அது எப்படியப்பா? ( ஜீவ சமாதி என்றால் என்ன?)

அடியவர்:- இறைவனை நமக்குள் பார்த்து இறைவனுடன் ஒடுங்குதல்.

குருநாதர்:- அப்பனே. உயிரோடு இருப்பதப்பா அப்பனே இதில் உயிரோடு இருப்பதே எப்படி நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்றால் சிறிது தொலைவில் அமர்ந்து தியானங்கள் செய்தாலே அப்பனே உன் உடம்பு ஆடுமப்பா. ஆடும். அப்பொழுதே நீங்கள் புரிந்து கொள்ளலாம். இதற்கு பன்மடங்கு தியானங்கள் செய்யவேண்டும். அப்பொழுதுதான் உண்மை நிலை புரியும் என்பேன். (உங்களை) ஆட்டுவிப்பான் அவனை (ஜீவ சமாதியில் உள்ள சித்தர்களை) நினைத்து தியானங்கள் செய்து கொண்டிருந்தால் இங்கு உன் உடம்பு அப்படியே ஆடும் அப்பா. அதிர்வுகள் ( உன் உடம்பின் உள் ) தோன்றுமப்பா. பின் உடம்பே ஆடுமப்பா. அப்பொழுதுதான் (உனது) சில கர்மாக்கள் தொலையுமப்பா. அப்படி இல்லை என்றால் ஒரு நொடி போய் விடுகின்றது. பின் ஏதோ வணங்கி விடுகின்றீர்கள் என்றால் நிச்சயம் பின் கஷ்டங்கள் தான் வருமப்பா. பின் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் அப்பா. சொல்லிவிட்டேன் அப்பனே. ஜீவன் இப்பொழுது எல்லாம் அதை சொல்லக்கூடாது வரும் காலத்தில் அதை சொல்லிவிடுகின்றேன் அதைக்கூட.

அடியவர்:- …….

குருநாதர்:- அப்பனே செந்தூர் (திருச்செந்தூர்) ஏன் செல்கின்றோம் அப்பனே, கூறு?

அடியவர்:- முருகன் ஸ்தலம். சடாச்சரன் உள்ள இடம்

குருநாதர்:- அப்பனே, அது இல்லையப்பா.

அடியவர்:- (மனித பின் மூளையில் உள்ள) கர்மக்குடுவையை செந்தூரான் மட்டுமே அழிக்க முடியும்

குருநாதர்:- அப்பனே, அதை யான் (ஏற்கனவே) தெரிவித்து விட்டேன். பின் தெரியாததை கூறுங்கள்.

அடியவர்:- …….

குருநாதர்:- அப்பனே யான் சொன்னேனே பின் வரிசையாக ( நெற்றியில் ) செல்கள் இருக்கும் என்று. அப்பனே சில செல்கள் அங்கு சென்றால் புருவின் ( புருவத்தின் ) மத்தியில் வந்து விடும் அப்பா. ஆனால் சென்று கொண்டே இருக்க வேண்டும். இன்னும் தலங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. அங்கெல்லாம் சென்றால் (நெற்றியில் உள்ள) சிதறி கிடக்கின்றதே அதெல்லாம் ஒன்று சேரும் அப்பனே. இப்படி சேரந்தால்தான் அப்பனே பக்தியில் வெற்றி கிடைக்கும். ஆனாலும் அப்பனே பின் சில சில மனிதர்களுக்கு தானாகவே புண்ணியங்கள் சேர்ந்து விடும். இறை பலங்கள் வந்து விடும். தானாகவே ( அவ் செல்கள்) சேர்ந்துவிடும். (அப்படி) அவை சேர்ந்துவிட்டால் நீங்கள் நினைத்ததை எளிதில் அடைந்து விடலாம் என்பேன் அப்பனே. வரும் காலங்களில் அதனை பற்றியும் எடுத்துரைக்கின்றேன் அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 10 - https://tut-temples.blogspot.com/2024/03/04092023-10.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 9 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-9.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 8 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-8.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

Saturday, March 30, 2024

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 10

இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவாக நம் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கை காண உள்ளோம். காண்பதை விட கருத்தில் ஏற்றுவது பெரிதாக உள்ளது. பெரிதினும் பெரிது கேள் என்று சொல்ல கேட்டிருப்போம். ஆம். நம் குருநாதர் நமக்கு உரைக்கும் வார்த்தைகள் மிக மிக பெரியது.இவற்றை வெறும் வார்த்தைகளாக கொள்கின்றோமா? இல்லை. வாழ்க்கையாக கொள்கின்றோமா? என்பதில் தான் அர்த்தம் உள்ளது. மதுரைக்கு முன்பாக கோயம்பத்தூரில் குருநாதர் வாக்குகள் அருளியுள்ளார். இதில் யாருமே கூறாத தான, தருமம் பற்றி உரைத்துள்ளார். இவற்றையெல்லாம் நாம் கேட்டு, வாழ்வில் பின்பற்ற வேண்டும்.  குருநாதரின் வாக்கிற்கு அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் குருநாதரின் நேரடி வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்கும் வாய்ப்பு கிட்டிய நிகழ்வை இன்று காண இருக்கின்றோம். குருநாதரின் உபதேசம் எப்படி எல்லாம் இருக்கும் என்று யார் அறிவார்?ஆனால் நாம் தான் எதையெதையோ தேடிக்கொண்டு இருக்கின்றோம். குருவை இறுக இரு கை கொண்டு சிக்கென பிடித்தாலே போதும். நமக்கு வேண்டியது கிடைக்கும். வாழ்வு சிறக்கும்.

இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும். அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம் காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று வருகின்றோம் 

ஓம் குரு வழியே ஆதி ஆதி

           ஓம் குரு மொழியே வேதம் வேதம்

 ஓம் குரு விழியே தீபம் தீபம்

                                                                ஓம் குரு பதமே காப்பு காப்பு  

(இந்த வாக்கின் முந்தைய பதிவுகளை சித்தன் அருள்- 1444, 1474, 1475, 1477, 1480, 1481 ,1485,1488, 1494 பதிவுகளில் பார்க்கவும்)

குருநாதர்:- அப்பனே, துன்பங்கள் இல்லாமல் எதுவும் கொடுக்க முடியாதப்பா. அப்பனே இப்பொழுதே அப்பனே துன்பம் வேண்டுமா? இன்பம் வேண்டுமா?

அடியவர்:- (பல அடியவர்கள் சொல்லியது) துன்பம்.

குருநாதர்:- அப்பனே இங்கு துன்பம் என்றால் இறைவன். இன்பம் என்றால் கர்மா. அப்பொழுது நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். புரிகின்றதா?

அடியவர்:- புரிந்தது

குருநாதர்:- அப்பனே தெரிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். என்னிடத்திலே இருந்து கொண்டு அகத்தியா, அகத்தியா என்று சொல்லிக் கொண்டிருந்து அப்பனே வாழத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பா. அதனால்தான் அப்பனே இவை எல்லாம் யான் சொல்லிக்கொடுத்து, அப்பனே ஒரு சிறு பிள்ளைக்கு ஒரு தாய் தந்தையர் எப்படி சொல்லிக் கொடுக்கின்றார்களோ அவை எல்லாம் சொல்லிக் கொடுத்துத்தான் உன் விதிகளைக்கூட உள்ளதை யான் அனைத்தும் சொல்வேன் அப்பனே. அப்பொழுதுதான் அனைத்தும் மாறும் அப்பா. பின் யான் சொல்லிவிடலாம். ஓடு, அங்கு ஓடு, இங்கு ஒடு என்றெல்லாம். நீ ஓடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். அதனால் நம்பிக்கையோடு வாருங்கள். அவ்நம்பிக்கையே உங்களை உயர்த்தி வைக்கும். அப்பனே நம்பிக்கைத்தான் யான் என்று உணர்ந்து கொண்டீர்கள் நீங்கள்.

அடியவர்:- (ஆதி குருவின் ஞான ரசம் திருப்தியாக உண்ட அமைதி)

குருநாதர்:- அப்பனே யாருக்காவது பின் கேள்விகள் இருக்கின்றதா என்று கேட்டு எந்தனுக்கு தெரிவி.

அடியவர்:- ஐயா குருநாதர் அகஸ்தியப்பெருமான் (மீது உள்ள) நாட்டத்தில் நண்பர் வந்துள்ளார். அவர் நல்லா வந்து திருப்பி இப்போ தீய வழிக்கு போய்ட்டாங்க. இப்போ ( உயிருடன்) இல்ல. ஆனா குருநாதர் வந்து முதல்ல கெட்டவங்களா இருந்த அவங்கள நல்ல வழியில் மாத்தி உட்டாங்க. ஆனா இவரு நல்ல வழியில வந்துதுட்டு, கெட்டதா போனதுக்கு காரணம் என்ன?

குருநாதர்:- அப்பனே நீ பார்த்தாயா? நல்லதை செய்து கொண்டிருக்கின்றான் என்று? அப்பனே உன் வேலையை செய்யவே உந்தனுக்கு நேரம் இல்லை. அவன்தனை நீ பார்த்தாயா? சொல்.

அடியவர்:- அவர் அன்னதானம் பண்ணிக்கிட்டு இருந்தார்.

குருநாதர்:- அப்பனே அனைவருமே அன்னதானம் செய்கின்றார்கள் அப்பனே. யாருக்கு கஷ்டம் வரவில்லை கூறு.

அடியவர்:- அவர் அகத்தியர் குருநாதர் வாக்குகளுடன் வந்தாரு. அதுக்கப்புறம்…

குருநாதர்:- அப்பனே இதுவரை யான் சொல்லிக் கொண்டிருந்தது என்ன? மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. இவன்தனக்கு புத்தியில்லை. இப்பொழுதிலிருந்தே புரிகின்றது அப்பனே. இவன் பின் ஏற்கெனவே  யான் சொல்லிவிட்டேன். இறைவன் என்பவன் நெருப்பு என்று. அதை நெருங்க நெருங்க துன்பம் வரும். ஆனால் பாதியிலேயே திரும்பி வந்து விட்டால் அவ்வளவுதான் வாழ்க்கை என்று. இதை நீ அப்பனே மீண்டும் மீண்டும் செல்வதற்கு அகத்தியன் (நெருப்பு என்று உணர்க) அப்பனே புரிந்துகொள். மூளை இல்லாதவனே.

அடியவர்:- (திரு.ஜானகிராமன் அவர்கள் இந்த அடியவருக்கு விளக்கம் தந்தார்கள்)

குருநாதர்:- அப்பனே உன்னை அறிவாளி என்றே சொல்கின்றேன் (மீண்டும் என்னைக்கேள்வி) கேள்.

அடியவர்:- அதனாதலதான் அய்யா மனசுல…

குருநாதர்:- அப்பனே இதனால்தான் எங்கு வாய்யை விட வேண்டுமோ அங்கு வாயை விடவேண்டும் அப்பனே. எங்கு எப்படி நடக்க வேண்டுமோ அங்கு அப்படி நடந்து கொண்டால் சிறப்பு. அப்படி இல்லை என்றால் படைப்பு. அப்பனே எதைச் சொன்னேன் என்றால் மீண்டும் பிறவியப்பா. அதனால் உணருங்கள். தெளிவு பெறுங்கள். அப்பனே அப்படி இல்லை என்றால் யானே கஷ்டத்தை தருவேன் என்று கூட சொல்லிவிட்டேன். அதைக்கூட நீ கேட்கவில்லையா?

அடியவர்:- சரிங்க

குருநாதர்:- அப்பனே, எதற்காக அப்பா நீ வந்தாய் இங்கு?

அடியவர்:- குருநாதருடைய வாக்கை கேட்பதற்கு!

குருநாதர்:- அப்பனே அனைத்தும் சொல்லிக்கொண்டேதான் இருக்கின்றேன் நீ கேட்கவில்லையே. அதனால் என்ன சொன்னேன் என்று சில வாரத்தைகளை அனைவருக்கும் மீண்டும் கூறு?

அடியவர்:- ஐயா கஷ்டப்பட்டாதான் கர்மாவை போக்க முடியும்.

குருநாதர்:- அப்பனே இதை தெரிந்து கொண்டே என் நண்பன் கஷ்டப்படுகின்றான் என்று கூறி விட்டாயே அப்பனே. இவைதன் எப்படியப்பா நீ நான் சொன்னாய் அப்பனே அதனால்தான் அப்பனே. மூளை இருக்கின்றது. மனிதனுக்கு உபயோகப்படுத்த தெரியவில்லையப்பா. அப்பனே தெரிகின்றதா இப்பொழுது? அவன் எதற்காக கஷ்டப்படுகின்றான் என்று.

அடியவர்:- அவர் இப்ப இல்லங்க. புரியுதுங்க. அவர் மீண்டும் பிறவி எடுத்து (கஷ்டப்பட) வரப்போறார்.

குருநாதர்:- அப்பனே என்னை நம்பியவர்கள் கூட கஷ்டப்படுத்திக் கொண்டே அதாவது கஷ்டப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றார்கள். எதற்காக நீ கூற வேண்டும்.

அடியவர்:- அய்யா, கர்மாவை போக்கி அவங்களை புனிதப்படுத்தி அவர்களை சுத்தப்படுத்துவதற்காக.

குருநாதர்:- அப்பனே தெரிந்து கொண்டாயா?. அனைத்தும் தெரிந்து கொண்டே கேள்விகள் கேட்கின்றாயே? அப்பனே

அடியவர்:- மௌனம்

குருநாதர்:- இதனால் அப்பனே (மீண்டும்) கேள்.

அடியவர்:- அய்யா அதாவது உயர் தர புண்ணியம்னா என்ன? உணவு வழங்குதல் ஓரு புண்ணியம் அப்டின்னு சொல்றோம். கல்விக்கு வழி வகுத்தல் ஒரு புண்ணியம்ன்னு சொல்றோம். அப்புறம் வந்து இறை வழிபாட்டுக்கு அழைச்சு வர்ரது புண்ணயம்ங்குறோம். இதுல வந்து எது புண்ணியம் அதிகமானது மனிதனுக்கு புண்ணியம் அதிகம் சேரத்து அவனது கர்மாவை பலன்களை குறைக்கும்?

குருநாதர்:- அப்பனே, “அனைத்தும் இறைவா நீ” என்று சொல்லிவிடு முதலில். அதிலிருந்து அப்பனே இறைவனே உனக்கு அனைத்தும் கொடுப்பான் அப்பனே. வாங்கிக்கொள். அதை மீறி என்னால் முடியும் என்று சென்றால் அங்குதான் அப்பனே கஷ்டங்களப்பா ( கர்மாக்கள் ). அதனால் புரிந்து கொள்.

அதனால் அப்பனே பரமனே (மதுரை ஶ்ரீ அகஸ்தியர் இறைஅருள் மன்றம் அடியவர்) தெரிந்து கொள். ஏன் எதற்காக வந்து கொண்டிருந்தாய்? உன்னை கஷ்டங்கள் நெருங்கப் போகின்றது. ஏன் எதற்காக நீ கூறுவாய். அகத்தியனே உந்தனுக்கு சேவைகள் செய்து கொண்டிருந்தேனே இப்படி கஷ்டங்கள் ஆகி விட்டதே என்று. ஆனாலும் அப்பனே அனைத்தும் உந்தனுக்கு சொல்லிவிட்டேன் அப்பனே. இதையும் பரப்பு. எப்படி மனிதன் வாழவேண்டும்? எப்படி இருக்கவேண்டும்? என்பதை எல்லாம் அப்பனே. உன் கடமையை செய். மற்றவர்கள் கடை பிடிக்கின்றார்களோ இல்லையோ. நீ சொல்லிவிடு அப்பனே. அப்பனே அது கர்மா. அவனையே போய் சார்ந்துவிடும் என்பேன் சொல்லிவிட்டேன் அப்பனே. உந்தனுக்காக மட்டும் இங்கு வந்தேன் அப்பனே. ஆனால் மற்றவர்கள் எல்லாம் கர்மாவை சேகரித்து வந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வளவுதான்.

அடியவர்:- அமைதி

குருநாதர்:- அதனால் அப்பனே புரிகின்றதா? என் பக்த்தனை எப்பொழுதும் யான் விடமாட்டேன் அப்பனே. இப்பொழுதிலிருந்து அதனால் அப்பனே என் பக்தனை கஷ்டங்கள் வருகின்றதென்றால் யானே அவனிடத்திற்கு சென்று பாடங்களை கற்பிப்பேன் போதுமா?

அடியவர்:- அமைதி

குருநாதர்:- நீ கேட்டாய் அப்பனே, அவை, இவை, இப்படிச்செய்தால் புண்ணியம் புண்ணியம் என்று, செய்துகொண்டே இரு அப்பனே யான் வருவேன். அவ்வளவுதான் அப்பனே. அப்பனே அதனால் தான் அப்பனே புண்ணியங்கள் செய்பவர்களுக்கும் கர்மா ஏற்படுகின்றது என்பேன் அப்பனே. யான் புண்ணியங்கள் செய்தேனே என்றெல்லாம். அதனால் அப்பனே யானே வந்து காத்தருளுவேன் வருங்காலங்களில் கூட அப்பனே. அதனால்தான் அப்பனே முதலில் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூட தெரிந்து தெரிந்து செய்தால்தான் அப்பனே வெற்றி கிடைக்குமே தவிர இல்லை என்றால் தோல்விகள் தான் மிஞ்சும் என்பேன் அப்பனே. அப்பனே தோல்விகள், தோல்விகள் ஏற்பட, ஏற்பட ஒரு நாள் வெற்றியாகிவிடும் என்பேன் அப்பனே. துன்பங்கள் ஏற்பட ஏற்பட ஒர் நாள் இன்பமாகிவிடும் என்பேன் அப்பனே. பொய்கள் சொல்லச் சொல்ல ஓர் நாள் உண்மை ஆகிவிடும் என்பேன் அப்பனே. இவ்வாறு மனிதன் பொய் சொல்லிச் சொல்லி அப்பனே கடைசியில் கலியுகத்தில் உண்மை ஆக்கிவிட்டால் பாவி மனிதன் அப்பனே. அதை தடுக்கவே யாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம் அப்பனே. முதலில் அதை தடுத்துவிட்டு உங்கள் அனைவருக்குமே மோட்சகதியை யான் கொடுக்கின்றேன். நலங்கள். ஆசிகள்.

அடியவர்:- அமைதி. (அடியவர்கள் மோட்சகதி என்று கேட்டு ஆனந்தம்)

குருநாதர்:- அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. சித்தர்கள் ஏன் உங்களுக்காக வரவேண்டும்? அப்பனே உங்கள் மூளையில் உள்ள அனைத்து செல்களைக்கூட யான் ஆராயந்து விட்டேன். மனிதன் என்னென்ன வேலை செய்கின்றான் எங்கெல்லாம் (உடம்பில் உள்ள செல்களில்) சில தரித்திரங்கள் தங்கும். அவை எல்லாம் பின் அங்கங்கே நோய்கள் ஏற்படும் என்பதை எல்லாம் யான் நன்றாக தெரிந்திருக்கின்றேன் அப்பனே.

(சித்த ரகசியம்:- 100 ட்ரில்லியன்/Trillion cells அதாவது ஒரு கோடி கோடி செல்கள் 100,000,000,000,000 உள்ள மனித உடம்பில் - நன்கு கவனிக்க - ஒரு மனிதனின் உடலில் உள்ள இவ்வளவு செல்களை அகத்திய பிரம்ம ரிஷி அவர்களால் நொடிப்பொழுதில் ஆராய இயலும் இறை வல்லமை இது. மனிதனால் எந்நாளும் நினைத்தே பார்க்க இயலாத சித்தர்களின் மாபெரும் இறை வல்லமை இது. இது போல மனிதனால் உணர இயலாத பல இறை வல்லமைகள் சித்தர்கள் வசம் உண்டு. அதனை அவர்கள் கூறினால் மட்டுமே ஒரளவு தெரிந்து கொள்ள இயலும். புரியாதவற்றை சொன்னால் கர்மம் என்பதால் சித்தர்கள் இது போன்ற பல விசயங்களை மனிதர்களுக்கு உரைப்பதில்லை. கர்மங்கள் இத்துணை செல்களில் இருந்து நீக்கும் வல்லமை இருவருக்கு மட்டுமே உண்டு. உலகை ஆளும் ஆதி ஈசனாலும், அகத்தியப்  பெருமானால் மட்டுமே இயலும் என்பதை உணர்க.)

இதை எவரும் தெரிந்திருக்கவில்லையப்பா. அதனை முதலில் ஒழித்திட வேண்டும் என்பேன் அப்பனே. (ஒரு அடியவரின் வரப்போகும் நோய் குறித்து வாக்கு உரைத்தார் மாமுனிவர். அதற்கு குருநாதர் அந்த அடியவர்க்கு இயலாதவர்களுக்கு உணவளித்துவர அருளினார்). இவை எல்லாம் வரும் காலங்களில் எப்படி கட்டுப்படுத்துவது என்பதை எல்லாம் யான் தெரிவித்துக் கொண்டே இருப்பேன் அப்பனே. அனைத்து செல்களும் அதாவது நெற்றியில் வலது கண்ணில் இருந்து இடது கண் வரை கூட அப்பனே பின் வரிசையாக செல்கள் இருக்கின்றதப்பா. அவ்செல்கள் மாறக்கூடாது என்பேன். (அவை) மாறிவிட்டால்தான் நோய்களப்பா நோய்கள். அப்பனே நலன்களாகவே நீங்கள் செய்யும் வினைகளுக்கு ஏற்பவே அது அங்கு அங்கு தங்கிவிடும் அப்பா. உடம்பில் கூட. அதை மீண்டும் அப்பனே பின் எங்கு இருக்கின்றதோ அங்கு சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் சொல்கின்றேன் புண்ணியங்கள் செய். புண்ணியங்கள் செய் என்பேன் அப்பனே. ஆனால் அனைவருக்குமே அச்செல்கள் மாறிவிட்டதப்பா. அதை மாறக்கூடாது என்பதற்காகவே நீரைப்பூசுங்கள் என்று திருநீரு என்பது வந்துவிட்டது என்பேன். அப்பனே அதைப்பூசி அப்பனே பக்தியோடு இருந்தாலே பின் எண்ணங்கள் எங்கும் கர்மத்தையும் சேரக்க முடியாது. இறைவன் பாதத்தில் மனதை வைத்து அப்பனே அது போலவே பின் (அவ்செல்கள்) வரிசையாகவே நின்றால் அப்பனே புருவ மத்தியில் இறைவனை நிறுத்தி இறைவனையே காணலாம். அப்பனே இப்புவிதன்னில் அனைவருக்குமே (அவ்செல்கள்) சிதைந்தாகி விட்டது என்பேன். ஆனால் (அவ்செல்களை) ஒன்று சேரப்பது எவ்வளவு கடினம் அல்லவா அப்பனே. அதை யான்தான் ஒன்று சேர்க்க வேண்டும். ஆனாலும் அப்பனே அதற்கும் ஒரு ஒரு திருத்தலங்கள் இருக்கின்றது அப்பா. அங்கு சென்றால் மாறிவிடும். ஆனால் அங்கு செல்வதற்கும் அவ்செல்கள் விடாதப்பா. மேல்நோக்கி செல்கள் இதனை தடுக்கும் (ஆலயத்திறக்கு செல்வதை). இதுதானப்பா வினை. அப்பனே அதை சேர்க்கவே வரும் காலங்களில் எத்திருத்தலத்திற்கு எல்லாம் செல்ல வேண்டும். எங்கெல்லாம் அமர வேண்டும். எங்கெல்லாம் தூ(ங்கி) எழுதல் என்பதை எல்லாம் சொல்கின்றேன் கடைபிடியுங்கள் அப்பனே. வாழந்து கொள்ளலாம் அப்பனே. இல்லை என்றால் வாழத் தெரியாமல் அப்பனே இப்படித்தான் கஷ்டங்களோடு இருக்க வேண்டும் சொல்லி விட்டேன் அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 9 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-9.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 8 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-8.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நம் தளத்தின் சேவைகள் சிறப்பாக  நடைபெற்று வருகின்றது. கோடை  காலம் ஆரம்பித்து விட்டதால் நீர் மோர் சேவையில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டி பணிக்கப்பட்டுள்ளோம். இதன் பொருட்டு சின்னாளபட்டியில் நீர் மோர் சேவை தினமும் 50 நபர்களுக்கு நடைபெற்று வருகின்றது. மேலும் சென்ற பங்குனி பௌர்ணமி முந்தைய நாளில் சுமார் 200 அன்பர்களுக்கு திருஅண்ணாமலையில் நம் குழு சார்பில் மோர் சேவை நடைபெற்றது. இன்னும் இந்த மோர் சேவை சிறப்பாக செய்வதற்கு குருவிடம் வேண்டி பணிகின்றோம்.

இது ஒரு புறமிருக்க, வழக்கம் போல் தினசரி இரவு 7 மணி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டுப் பிரார்த்தனையில் நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக குருவருள், திருவருள் பெற்று வருகின்றோம். தற்போது வள்ளலார் பெருமான் அருளிய திருஅருட்பா ஐந்தாம் திருமுறை படித்து வருகின்றோம். திருஅருட்பா படிக்க, படிக்க திருஒற்றியூர் தரிசனம் எப்போது நமக்கு கிடைக்கும் என்று ஏங்கினோம். தற்போது தணிகைமலை தணிகைமலை என்று எப்போது முருகப்பெருமான் தரிசனம் என்று ஏங்கி வருகின்றோம். இந்த நிலையில் நமக்கு ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

இது போன்ற நூல்கள் நமக்கு கிடைக்க, படிக்க நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. ஏனென்றால் குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதியில் ஒரு பாடலை 27 முறை படிக்க வேண்டும் என்று நமக்கு கிடைத்த செய்தியை கொண்டு நாம் குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி நூலை தேட, குருவருளால் நமக்கு மிக சரியாக கிடைத்தது. இது அந்த கந்தக கடவுளின் கருணையால் தான் என்று நமக்கு நன்கு உணர்த்தப்பட்டது. அந்தப்பாடல் செய்தியை மற்றொரு நாள் பதிவு செய்கின்றோம். இது போன்று தான்  பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்!, ஸ்ரீமத் குமார சுவாமியம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய பதிவில் நாம் அனைவரும் பாராயணம் செய்வதற்கேற்ப குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி தொகுப்பை இங்கே பகிர்கின்றோம்.

அடியவர்கள் எப்படியெல்லாம் தம்மை அடிமையாகவும், இறைவனை ஆண்டானாகவும் பாவனை செய்து துதிப்பது என்பதை மிக நேர்த்தியாக சுவாமிகளே பாவனை செய்து துதித்திருக்கும் பதிகம்.

அறிவின் அகம்பாவம் நீங்கி,ஞானம் மிளிரவும், பேரானந்தம் மலரவும், எல்லா வினைகளும் அற்று, நன்மைகள் விளைய ஏற்றப் பதிகம்.

நன்றி: http://mscherweroyar.blogspot.com/2014/05/blog-post.html

PDF வடிவில் தரவிறக்க - https://drive.google.com/file/d/1O2dHUtv1jIP4uw9lDTUB9uSY1r6Oyn5N/view?usp=sharing

                                      எழும் போது வேலும் மயிலும் என்பேன் எழுந்தே மகிழ்ந்து  

                                         தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்

தொழுது உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்

அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன், செந்தில் வேலவனே!

ஓம் சரவணபவஓம் 

சிவ சிவ ஓம்

ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

Monday, March 18, 2024

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை!

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

கோடை காலம் துவங்கி விட்டது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் அளவை நம்மால் தாங்க முடியவில்லை. இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகி விடும். இந்த வெயில் காலத்தில் வெளியில்  உடல் உழைப்பில் இருக்கும் அன்பர்களை நினைத்து பார்க்கும் போது , எப்படி வெயிலின் தன்மை இருக்கும். மனிதர்களாகிய நமக்கு இப்படி என்றால் மற்ற ஜீவ ராசிகளான பறவைகள்,விலங்குகளுக்கு எப்படி இருக்கும்? தண்ணீர் மற்றும் உணவுகளுக்கு மற்ற ஜீவன்கள் என்ன செய்யும்? இந்த கோடைகாலத்தில் நாம் செய்ய வேண்டிய கடமைகளை நம் குருநாதர் அருளிய வாக்கில் இருந்து நாம் பெற உள்ளோம்.

கோடை காலம் தொடங்கி விட்டது சூரியனும் சுட்டெரிக்க தொடங்கி விட்டார்!!!

குருநாதர் உத்தரவுப்படி அதாவது என் பக்தர்கள் சகல ஜீவராசிகளின் மனம் குளிரும்படியும் அனைவரும் நீர் மோர் மூலிகை நீர் வழங்குதல் வேண்டும் என உத்தரவு கொடுத்துள்ளார்.

மனிதர்களுக்கு தாகம் எடுத்தால் ஏதாவது ஒரு கடையில் சென்று கேட்டால் வீட்டிற்கு சென்று கேட்டால் நீர் வழங்கி விடுவார்கள் ஆனால் வன பிராணிகளுக்கும் தெருவில் வாழும் பைரவர்களுக்கும் நீர் கிடைப்பது அரிதாக உள்ளது.

முடிந்தவரை பிளாஸ்டிக் தவிர்த்து மண்சட்டி மண் பானையில் பறவைகள் பைரவர்கள் வானர சேனைகள் முதலிய விலங்குகளுக்கு முடிந்தவரை நீர் தானம் செய்வோம்.

அகத்தியர் பக்தர்கள் முடிந்தவரை ஒரு குழுவாக சேர்ந்து மனிதர்களுக்கு எப்படி ஒவ்வொரு ஆலய வாசலிலும் வரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குகின்றோமோ அதே போல.... அருகில் இருக்கும் வன பகுதி மற்றும் தெருவில் ஒரு ஓரமாக மரத்தடியில் நீரையும் உணவையும் கனிந்த பழங்களையும் வழங்குவோம்!!!!

இயற்கையும் இறைவனும் ஒன்றே என்பது நம் வாழ வைக்கும் தெய்வம் அகத்தியர் பெருமான் வாக்கு.

இங்கு இயற்கையை மனிதன் பாழ் படுத்திக் கொண்டே வருகின்றான்!!!

ஆனால் இயற்கையை சமநிலைப்படுத்தி விதை பரவல் முதல் கொண்டு மழை வருவதற்கும் மரங்கள் வளர்ப்பதற்கும் மனிதனைத் தவிர மற்ற அனைத்து ஜீவராசிகளும் இயற்கையைப் பேணி இயற்கையை சார்ந்து வாழ்ந்து வருகின்றன.

மனிதன் நினைப்பதை விட இயற்கையை சமநிலை செய்வது மற்ற ஜீவராசிகள் தான்

அதனால் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரமான உணவு மற்றும் நீரை நம்மால் முடிந்த வரை வழங்குவோம்.

வேலூரைச் சேர்ந்த அகத்தியர் அடியவர்கள் இளைஞர் குழு குருநாதர் அகத்தியர் உத்தரவுப்படி அருகில் இருக்கும் திருப்பத்தூர் ஜவ்வாது மலை பிரதேசங்களில் ஒரு டிராக்டர் வாடகைக்கு எடுத்து வனப்பகுதிகளில் நீர் தொட்டி அமைத்து நீரையும் பழக்கடைகளில் சென்று நன்கு கனிந்த பழங்களை மொத்தமாக வாங்கி அதாவது ஒரு குழுவாக இணைந்து ஆளுக்கு சிறிது சிறிதாக நிதி உதவி இட்டு பங்களிப்பாக செய்து வனப்பிராணிகளுக்கு வழங்கி வருகின்றார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

இதேபோன்று இவர்கள் செய்யும் செயலை முன்னிறுத்தி அகத்தியர் அடியவர்கள் முடிந்தவரை விடுமுறை நாட்களில் ஆவது ஒன்று கூடி அருகில் இருக்கும் வனப்பகுதிகள் புறநகர் பகுதிகளில் இந்த சேவையை   செய்து வருவோம் 

அனைவருடைய வாழ்க்கையும் பணியும் சூழலும் கருத்தில் கொண்டு தன்னால் தனியாக செய்ய முடிந்ததை செய்யவும் குழுவாக இணைந்து விடுமுறை நாட்களில் செய்யவும் நாம் முடிவுகள் எடுப்போம்.

அப்பன் அகத்தியன் மனதில் இப்படிப்பட்ட புண்ணிய காரியங்கள் செய்தால் தான் இடம் பிடிக்க முடியும்.

நாம் அனைவரும் கலந்து ஆலோசித்து இந்த சேவையை திறன் பட செய்து நம் அப்பன் குருநாதர் அகத்தியர் பெருமானின் பேரருளை பெறுவோம்

இந்தப் பதிவை கண்ணுறும் அன்பர்கள் தங்களால் இயன்ற அளவில் கோடை கால சேவை செய்து, குருநாதரின் உள்ளத்தில் இடம்பிடிக்க வேண்டும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

குருநாதர் அருளால் நாம் நம் குழுவின் சார்பில் சின்னாளபட்டியில் பத்து நாட்களுக்கும் மேலாக நீர் மோர் சேவை செய்து வருகின்றோம். நாமும் சென்ற ஆண்டில் தொடங்கிய இந்த சேவை பற்றி மறந்து விட்டோம். ஆனால் மிக சரியாக சின்னாளபட்டியில் இருந்து நமக்கு அழைப்பை விடுத்து ,சேவையை ஆரம்பிக்க வைத்து விட்டார்கள். இந்த சேவையில் தொடர்ந்து அருளுதவி, பொருளுதவி செய்கின்ற அனைவர்க்கும் நன்றிகளை கூறி, பதிவை நிறைவு செய்கின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

நெடார் கிராமம் , அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/08/blog-post_4.html

 இன்றைய கும்பாபிஷேக அறிவிப்புகள் - 13.07.2022 - https://tut-temples.blogspot.com/2022/07/13072022_12.html

 பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html

அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்யநாயகி உடனுறை நந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/blog-post_9.html

பாக்கம் பாளையம், அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_29.html

 தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_15.html

 பொங்கலோ பொங்கல் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_81.html

 தைத் திருநாள் வாழ்த்துக்கள்  - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_15.html

 திருமூலர் பெருமான் அருளிய நந்தி மஹாத்மியம்! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_12.html

திருமந்திரம் 3000 முற்றோதுதலும்! மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனமும்!! - https://tut-temples.blogspot.com/2023/08/3000.html

திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023 - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் - 100 ஆம் ஆண்டு மயூரவாகன சேவை விழா - 11.1.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/100-1112024.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே! - https://tut-temples.blogspot.com/2022/10/blog-post_14.html

அண்ணாமலை எம் அண்ணா போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/10/blog-post_14.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html