"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, August 4, 2023

நெடார் கிராமம் , அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் கடந்த இரண்டு வாரங்களில் விடுமுறை நாட்களில் ஆலய தரிசனம் மிக அருமையாக நமக்கு கிடைத்தது. அனைத்து ஆலயங்களும் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் வாக்குரைத்த ஆலயங்கள். சோழர் காலத்தில் சம்பந்தப்பட்ட ஆலயங்கள். மேலும் தற்போது திருப்பணி நடைபெற்று வரும் ஆலயங்களாக அமைந்தது. இதனையொட்டியே இன்றைய பதிவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மானாங்கோரை வட்டத்தில் உள்ள நெடார் கிராமத்தில் அருள்பாலித்து வரும் 
அருள்மிகு ஸ்ரீ நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் தரிசனம் கண்டு, அனைத்து அடியார் பெருமக்களிடம் ஆலய திருப்பணிக்கு உதவி வேண்டி பணிகின்றோம். இதனையொட்டி நாளை நடைபெற உள்ள திருவாசக முற்றோதுதல் நிகழ்வில் அருள் பெற வேண்டி பணிந்து வேண்டுகின்றோம்.



தென்னாடுடைய சிவனே போற்றி என போற்றி போற்றி மகிழ்வோம். இனி சில குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் மொழிகளை இங்கே தருகின்றோம்.





பதிவின் உள்ளே செல்லும் முன்னர் அனைவரும் இந்த செய்தியை நன்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டுகின்றோம். ஆதி காலம் முதல் கோவில் என்றால் சிவாலயம் மட்டுமே குறிக்கப்படும். பராகிரம பாண்டியன் என்ற மாமன்னன் சொன்னது:பழுதுபட்ட புராதன சிவாலயங்களை புதுப்பிக்கும் பணியில் எப்படி ஒருவர் ஈடுபட்டாலும், அவர்களது திருவடிகளை இப்போதே வீழ்ந்து வணங்குகின்றேன் என்று


"ஆராரயினும் இந்த தென்காசி மேவு பொன்னாலயத்து
வாராததோர்  குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்ததனை
நேராகவே ஒழித்துப் புறப்பார்களை நீதியுடன்
பாரார் ஆரியப் பணிந்தேன் பிரகிரம பாண்டியனே"


சிவாலய பணிகளில் ஈடுபட்டால் நம தீவினைகள் முற்றிலுமாய் நீங்கப்பெறும்
கூடவே நல்வினைகள் சேரும் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடல், உடலுழைப்பு  தரல், இடம் அல்லது மனை தரல்,குளம் தூர்வாரல்,கல்,மண் அளித்தல் ஆகிய எல்லாம் மிகமிக சிவபுண்ணிய செயல்களாம்.

நம்பழம் பாடல் பகரும் இப்படி:

"புல்லினால் கோடியாண்டு,புதுமண்ணால் பத்துகோடி
செல்லுமா ஞாலந்தன்னில்  செங்கல்லால் நூறு கோடி 
அல்லியங்கோதைமின்னே ஆலயம்  மடங்கள் தம்மை 
கல்லினால் புதுக்கினோர்கள் கயிலை விட்டு அகலாரன்றே" 

"சிவன் கோவிலுக்கு ஒரு செங்கல் வழங்குதல், அந்த செங்கல் எத்தனை நாட்கள் கோவிலில் இருக்குமோ அத்தனை நாட்கள் நீங்கள் கைலாயத்திலோ அல்லது வைகுண்டத்திலோ வாசம் செய்யும் புண்ணியம்"!

-காஞ்சி மஹா பெரியவர்

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்கள் :

எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வார்கள்.

பெரிதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒருவன் மனத்தால் ஆலயம் எழுப்ப வேண்டும் என நினைத்தாலே அவன் ஏழு ஜன்மங்களில் செய்த பாபங்களினின்று விடுபடுவான். அவன் ஆலயம் கட்டி முடித்தானாகில் சகலமான போகங்களையும் அடைவான்.

கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புவானாகில், அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆயிரம் வருஷம் சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான்.

சிவலிங்கத்தைச் செய்விப்பவன் சிவலோகத்தில் அறுபதினாயிரம் வருஷம் இருப்பான். அவன் வமிசத்தவரும் சிவலோகத்தை அடையும் பலனைப் பெறுவார்கள்.

சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய எண்ணியவன் எட்டுத் தலைமுறைக்கு இறந்த தன் முன்னோர்களைத் தன்னுடன் சிவலோகத்தை அடையச் செய்வான்.

ஒருவனால் செய்ய முடியவில்லையென்றாலும், பிறர் செய்ததைக் கண்டு, நாமும் செய்திருந்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலே போதும், அவன் முக்தி அடைவானாம்.

பிரம்மதேவன், யமதர்மனுக்குப் பாசமும் தண்டமும் கொடுத்துப் பாபம் செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அளித்தபோது சிவபக்தர்களை அண்டக் கூடாது என எச்சரித்திருக்கிறார்.

எந்த நேரமும் சிவபெருமானையே மனத்தால் தியானித்து வருபவர்கள், பகவானை மலர்களால் அர்ச்சிப்பவர்கள்,  நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள்,

காலையும் மாலையும் ஆலயத்தைப் பெருக்கிக் சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் நெருங்கக் கூடாது என எச்சரித்துள்ளார். அவர்கள் வமிசத்தவர்கள் கூட யமதூதர்களால் நெருங்கப் படாதவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

 முக்கியமான விஷயம் சிதிலமாகிக்கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்வது, செய்பவர்களுக்கு உதவுவதும் 21 தலைமுறைகள் செய்த பாவம் தீரும்.

எந்த ஒரு சிவாலயம் சிதிலமாகி இருக்கிறதோ, அங்கு ஈசன் தியானத்தில் இருப்பார் என்றும் அங்கு அவ்வளவு எளிதில் சித்தர்கள் கூட நெருங்க முடியாது என்கிறார்கள்....

அப்படிப்பட்ட சிதிலமாகி இருக்கும் கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்பவருக்கு அந்த ஈசன்  தியானம் செய்த பலன்கள் அவர்களுக்கு கிடைக்குமாம்.... அவர்கள் இருக்கும் இடத்தில் ஏதேனும் ஒரு தெய்வம் அவர்கள் அருகில் இருந்து அவர்களை பாதுகாக்கும் என்கிறார்கள்... இவர்களுக்கு உதவி செய்வது அந்த ஈசனுக்கே செய்கின்ற உதவி என்றும் கூறப்படுகிறது.

இனி நாம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலய தரிசனம் காண இருக்கின்றோம்.  நாம் ஏற்கனவே கூறியது போல், இந்த ஆலயத்தின் தற்போதைய நிலையைக் கண்டதும் கண்களில் கண்ணீர் வந்தது.








நீங்களே கோயிலின் முகப்பை பாருங்கள். சிதிலம் அடைந்து, செடிகள் வளர்ந்து, கோயிலின் சுவர்கள் பெயர்ந்து என கோயிலின் வெளிப்புறம் பார்த்த போதே நமக்கு ஒரு கவலை தொற்றிக் கொண்டது. பின்னர் கோயிலினுள் சென்று பார்த்தோம். கோயிலினுள் சென்று நாம் பார்த்த காட்சி, நம்மை இன்னும் அழ வைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.


உள்ளே சென்றதும் நந்தியெம்பெருமான் தரிசனம் பெற்றோம்.

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே . 

என்று பாடினோம்.




நந்தி தரிசனம் பெற்று நேரே ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் தரிசனம் பார்த்தோம். அங்கே இடப்புறமாக விநாயகர் தரிசனம் பெற்று,சில விநாயகர் துதிப் பாடல்கள் பாடினோம். 








அப்படியே வலது புறம் மேல் நோக்கி பார்த்தால் , அழுகையே வந்து விட்டது. கோயிலின் மேற்புறத்தில் ஒரு பெரிய ஓட்டை..அப்படியே வானம் தெரிகின்றது. மழை பெய்தால் உள்ளே தண்ணீர் வந்துவிடும் நிலை. பின்னர் மனதை ஆசுவாசம் செய்து தரிசனம் பெற விரும்பினோம்.








இதோ..அன்பின் தரிசனம் பெற்ற பொழுது 






நம் குழு சார்பில் வஸ்திரம்,பூஜை பொருட்கள் கொடுத்து  மகிழ்ந்தோம்.


பின்னர் ஒவ்வொரு சந்நிதியிலும் பூ வைத்து, தீபமேற்றினோம்.


வலப்பக்கத்தில் முருகப் பெருமான் தரிசனம் பெற்றோம்.


அம்பாள் தரிசனம் பெற்று மகிழ்ந்தோம்.


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
    அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
    புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
    செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே 

என்று போற்றினோம்.


 இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்று வாயால் பாடினோம் தவிர, மனத்தால் இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம்.

 

இதோ மீண்டும் அந்த மேற்கூரை ஓட்டையை  பார்த்த போது, மனம்  அழுதது. அப்பா! ஏனப்பா இப்படி ஒரு நிலை என்று மனதுள் கதறினோம்.





அடுத்து தட்சிணாமூர்த்தி தரிசனம் பெற்றோம். அங்கே அவர் பாதத்தில் திருவாசகம் புத்தகம் கண்டு மகிழ்ந்தோம்.


 எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
 இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
 இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
 இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
 எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
 இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
 ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
 எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
 யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
 இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

என்று மாணிக்கவாசகர் பெருமான் கூறிய நிலையில் மெய் மறந்து வழிபட்டோம்.


அன்றைய திருவாசக அருள் நிலையில்நாளை நடைபெற உள்ள திருவாசக முற்றோதுதல் கண்டு சிவ இன்பம் பெற விழைகின்றோம்.



பின்னர் குருக்களுக்கு சிறு மரியாதை செய்து. பின்னர் கோயிலை வலம் வந்தோம்.



 நாம் எத்தனை பிறவியில் என்ன என்ன புண்ணியம் செய்தோமோ, இறைவனுக்கு ஆலயம் கட்டக்கூடிய ஓர் அரிய வாய்ப்பை சிவபெருமான் நமக்கு தந்து அருளியுள்ளார். ஒரு சிவாலயத் திருப்பணி நடக்கும் பொழுது அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யார் ஒருவர் இறை தொண்டு செய்கின்றாரோ அவர் பல பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும் என்ற சான்றோர்களின் வாக்கு சத்தியமே. ஆகையால் அனைவரும் திருப்பணியில் பங்கு கொண்டு சிவபெருமானுடைய பரிபூரண அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஆலய விபரங்கள் குறித்து அறிய தொடர்பு கொள்ள :

அருள்மிகு 
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
நித்யகல்யாணி அம்பாள். 
ஆலங்குடி நெடார்.கிராமம் மானாங்கோரை அஞ்சல் தஞ்சாவூர் மாவட்டம்.

திருமதி ராஜலக்ஷ்மி மொபைல் எண்:9790427107
ஆலய அர்ச்சகர்: 
திரு. சின்னதம்பி 
மொபைல் எண் :8940362042

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

திருவாசகம் முற்றோதுதல் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் கிராமம், தஞ்சாவூர் - 06.08.2023 - https://tut-temples.blogspot.com/2023/07/06082023.html வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

இறைப்பணியாக குருவருளால் நீர் மோர் சேவை! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_9.html
சத்தியத்தைப் பேசு, தர்மத்தை கடைப்பிடி! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post.html

மயிலேறி விளையாடு குகனே...புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே... - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_29.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

No comments:

Post a Comment