"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, June 16, 2023

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

எங்கெங்கு காணினும் சிவமாய் தெரிகிறதே.அன்பே சிவமாய் கொள்ளும் போது,  நம்மோடு சேர்ந்து துள்ளலை கொடுத்துக் கொண்டு வருகின்றது. நாமும் இங்கே திருஅண்ணாமலை, கிரிவலம் என்று  பல பதிவுகளில் கண்டு வருகின்றோம். பதிவின் தலைப்பை பார்த்தாலே மீண்டும் திருஅண்ணாமலை பற்றி சில செய்திகள் அறிய இருக்கின்றோம். 

சென்ற ஆண்டில் மே மாதம் திருஅண்ணாமலையார் தரிசனம் பெற்று வந்தோம். மீண்டும் சென்ற ஆண்டில் தீபாவளி பண்டிகையின் போதும் சாதுக்களுக்கு நம் தளம் சார்பில் உணவுத் தட்டு கொடுத்து திருஅண்ணாமலையார் தரிசனம் பெற்று வந்தோம். இவ்வாண்டில் தரிசனம் பெற எப்போ அழைப்பாரோ என்று வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றோம். 

தீபாவளி ஒட்டிய தரிசனத்தில் நம் குழு சார்பில் சில அன்பர்கள் கலந்து கொண்டார்கள். கிரிவலம், உணவுத் தட்டு சேவை, திருஅண்ணாமலையார் தரிசனம் என அனைத்தும் குருவருளால் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. விரைவில் தனிப்பதிவில் இவற்றைக் காண்போம்.



அறுசுவையும் அளவிற்கு மீறினால் துன்பம் தரும். ஆனால் இறையின் சுவை இந்த அறுசுவை தாண்டியது. ஐம்புலனும் இறை சுவை அறியவே படைக்கப்பட்டது. காதால் அந்த இறையின் நாமம் கேட்க வேண்டும், கண்ணால் அந்த இறையின் சொரூபத்தை காண வேண்டும். மூக்கால் இறையின் வாசம் நுகர வேண்டும். வாயால் அந்த இறையை போற்ற வேண்டும். மொத்தத்தில் அந்த இறையை நம் மெய் கொண்டு பற்ற வேண்டும். 

எப்போதாவது சில உருவங்கள் போல திருவண்ணாமலை மலை மீது பார்க்க நேரிடும்.அவைகள் பல்வேறு வடிவங்களில் நம் கண்களுக்கு தெரியும்.இதெல்லாம் ஏதேச்சையாக அமைவதா அல்லது சூட்சம ரீதியாக சித்தர்களின் வழிபாடுகளா யாருக்கு தெரியும்.பல தடவை  பார்க்கும் போது யாரோ ஒளி வடிவில் மலையை வணங்குவது போல தெரிகிறது.இதெல்லாம் நமக்கு மட்டும் தெரிகிறதா?அல்லது பிரமையா?எதுவும் புரியாமல் கடந்து செல்வோம்.ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்த மலை இந்த அண்ணாமலை.

திருவண்ணாமலை அன்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் திருஅண்ணாமலை என்று அழைப்பது நமக்கும் நன்று, நம் தமிழ் மொழிக்கும் நன்றாகும்.  அண்ணமுடியாத அதாவது நெருங்க முடியாத மலை என்று பொருள் கொள்ள வேண்டும்.திருஅண்ணாமலை பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். பார்த்துக் கொண்டே இருக்கலாம். திருஅண்ணாமலையார் கோயில், அஷ்ட லிங்கங்கள், சித்தர்களின் அருள், மகானகள், கிரிவலம்  சொல்ல இனிக்கின்றது அல்லவா?

நமது புண்ணிய பாரத தேசத்தில் - எண்ணற்ற தெய்வங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆலயங்கள் உள்ளது. பல ஆலயங்கள் வனங்களில், நதியோரம், கடலோரம், ஏரிக்கரை மீது, மலைகள், குன்றுகள் மீதும், மலை அடிவாரம் என்று பல இடங்களிலும், புராதன சிறப்புகளுடன் அமைந்துள்ளன.அப்படி அமைந்துள்ள ஆலயங்களில் நமது தமிழகத்தில் பல ஆலயங்கள் புகழும், மகிமையும் பெற்று அருள்கின்றன. இவற்றில் பாடல் பெற்றதும், பஞ்ச பூத தலங்களில் ஒன்று என அக்னி தலமாக போற்றப்படுவதும் திருஅண்ணாமலை ஆகும். நம் தளத்தில் சிறிய அளவில் திருஅண்ணாமலை பற்றி தொட்டுக் காட்டியுள்ளோம். கிரிவலம் பற்றியும் சிறிய அளவிலே பதிவுகள் உள்ளது. இந்த தலம் மூர்த்தி,தலம் ,தீர்த்தம் என்றளவில் பெருமை உடையது. ஏன் இங்கு கிரிவலம் பிரசித்தம்..அந்த அண்ணாமலையார் இங்கே மலை ரூபத்தில் அல்லவா காட்சி தருகின்றார். சிவனாகநினைத்தால் அவர் சிவனாக இருப்பார். மலையாக நினைத்தால் அவர் அங்கே மலையாக இருப்பார். பார்ப்பவரின் கண்களுக்குத் தான் இவை புலப்படும். கிரிவலம் முடித்து கண்ணார் அமுதக் கடலை அன்னையுடன் காண ஒன்பது ராஜ கோபுரங்களுடன், ஆறு பிரகாரங்கள் அங்கே உள.

திருவாரூரில் பிறந்தால் முக்தி 
காசியில் இறந்தால் முக்தி 
சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி 
திருஅண்ணாமலையை நினைத்தாலே முக்தி 

என்று நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலையை நாம் கண்ணால் கண்டு, மனத்தால் நடந்து, கிடந்து அருள் பெற வேண்டும். நம் மானிடப் பிறப்பின் நிலை அறிய கிரிவலம் ஒன்றே மாமருந்து என்பதில் துளி அளவும் ஐயமில்லை. இது மட்டுமா? பகவான் ரமணர், சேஷாத்திரி.விசிறி ஸ்வாமிகள் என அருள் ததும்பும் மலையாக திருஅண்ணாமலை இருக்கின்றது.

கிரிவலப் பாதையில் இருபுறமும் பலவிதமான மடங்களும், ஆலயங்களும், அன்னதான அருட்கூடங்களும்,சித்தர்களின் மகான்களின் ஆசிரமங்களும் உள்ளன. உதாரணமாக ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆலயம், விசிறி சுவாமிகள்  ஆசிரமம் என்று குறிப்பாக சொல்லலாம். இன்றைய காலகட்டத்தில் மழைக்கு முன் தோன்றும் காளான்களாக புதுப்புது ஆலயங்கள், மடங்கள் உருவாக்கி வருகின்றது. இது போன்ற புது மடங்கள்,ஆலயங்களின் சேவை கண்டு உங்கள் ஆன்மிகப்பணியை அவர்களோடு இயைந்து செய்யவும்.

இங்கு நம்பிக்கையுடன் கிரிவலம் வந்தால் நம் பிறவிகடன்கள் தீரும் என்பது உறுதி. கிரிவலத்துடன் அஷ்ட லிங்க தரிசனம், நாம் ஏற்கனவே சொல்வது போல் ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆலயம், விசிறி சுவாமிகள்  ஆசிரமம், வள்ளலார், ஸ்ரீ ராகவேந்திரர் நேர் அண்ணாமலை, ஆதி அண்ணாமலை, மாணிக்கவாசகர் கோயில், இடுக்குப் பிள்ளையார், பஞ்சமுக தரிசனம் என ஒரு நாளில் அடங்கா தித்திக்கும் தரிசனம் நமக்கு கிடைக்கும்.


திரு அறையணிநல்லூரை வழிபட்ட பிள்ளையாருக்கு, அன்பர்கள் அண்ணாமலையைக் காட்டினார்கள். அண்ணாமலை, இறைவன் திருவுருவாகவே காட்சியளித்தது. அதனைக் கண்ணாற்பருகிக் கைதொழுது கலந்து போற்றுங்காதலினால் இப்பதிகத்தை அருளிக்கொண்டே தலத்தையடைகின்றார்கள். இப்பதிகமும் சேய்மையில் அண்ணாமலையை அன்பர் காட்டக் கண்டு தொழுது பாடியதாகவே சேக்கிழார் தெரிவிக்கின்றார். (பெரிய. திருஞா. 969, 970.)

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருஅண்ணாமலை பதிக விளக்கத்தை முதலில் கண்டு தெளிவோம் 

உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.

கிளைகளை வளைத்து இனிய மாங்கனிகளை உண்ட ஆண் குரங்குகள் விடுத்த அக்கொம்புகள் வேகமாகத் தீண்டப்படுதலால் தூய மழை மேகங்கள் மலைப் பாறைகளில் சிறிய நுண்ணியவான மழைத்துளிகளைச் சிதறுவதால் காட்டுப்பசுக்கள் மழை எனக்கருதி மர நிழலை அடையும் பொழில்களை உடைய அண்ணாமலை இறைவனின், அழகிய மலர் போன்றனவும் வீரக்கழல் அணிந்தனவுமான சிவந்த திருவடிகளை நினைவார் வினை இலராவர்.

தோகைகளோடு கூடிய ஆண் மயில்கள் பெண் மயில்களோடு உறையும் பொழில் சூழ்ந்ததும், மூங்கில்கள் சூல் கொண்டு உதிர்க்கும் முத்துக்கள் நிறைந்து சொரிவதும், விரிந்த மலைப் பகுதிகளில் நீர்த் துளிகளோடு கூடிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடையதுமாகிய அண்ணாமலை, இறைவனின், காலனது வலிமையைத் தகர்த்த சிவந்த திருவடிகளைத் தொழுவார் மேலன புகழ்.(தொழுவார் புகழ் பெறுவர் என்பதாம்).

உடலிலிருந்து பிரிக்கப்பட்ட மயிர் நீங்கிய பிரமனது வெண்மையான தலையோட்டை உண்கலனாக் கொண்டு, உலகெலாம் திரிந்து ஏற்கும் பலியை உணவாகக் கொள்ளுதற்கு எருது ஏறி வருவதோடு, முதிர்ந்த சடைமுடியின் மீது வெண்பிறையைச் சூடித்திருவடிகளில் அதிரும் வீரக்கழல்களோடு விளங்கும் சிவபிரானுக்குரிய இடம் திருவண்ணாமலையாகும்.

வெண் கடம்பமரம், சிலை, முத்து, மிக்க மணிகள் ஆகியவற்றை உந்திவரும் வெண்மையான அருவிகள் பறைபோல ஆரவாரம் செய்யும் திருவண்ணாமலையில் விளங்கும் அண்ணலாகிய சிவபிரான், சடையில் பாம்பும் கங்கையும் உடனாயிருந்து உலவுவதை ஓராமல், குராமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய உமையம்மையாரைத் தழுவுதல் நன்றோ?

பெருகிவரும் அருவி நீரை உடைய திருவண்ணாமலையில் பிறைமதி தோன்றிய பாற்கடலிடைத்தோன்றிய நஞ்சை உட் கொள்ளும் அளவிற்குத்துணிபுடையவரும், அந்நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவரும், திருவெண்ணீற்றை அணிந்தவரும், மணம் கமழும் சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தி உருகும் மனம் உடையவர்கட்கு மிக்க நோய்கள் எவையும் வாரா.

கரிந்த கால்களை உடையனவும், குடரைப் பிடுங்கி உண்பனவும் ஆகிய பேய்கள் ஆடும் இடுகாட்டில், நரிகள் உருட்டி விளையாடும் சிரிக்கும் வெண்டலை ஓடுகள் உதைக்கப்பட்டு உருள, கையில் எரி ஏந்தி ஆடும் சிவபெருமான், வண்டுக் கூட்டங்கள் இசை பாடச் செவ்வரிபரந்த கண்களை உடைய உமையம்மையோடு எழுந்தருளிய இடம், திருவண்ணாமலை.

ஒளி செய்யும் புலித்தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.

விளமரத்தின் கனியை உகுப்பது போல அம் மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும் குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு.

உடலில் வியர்வை தோன்றவும் அழுக்கேறவும் வெயிலில் நின்று உழல்வதைத் தவமாகக் கொள்வோராகிய சமணரும், மரவுரியால் மார்பை மிகவும் மறைத்து வருபவர் ஆகிய புத்தரும் போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர்கள் ஆதலின், அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர். திருவண்ணாமலையில் உறையும் தலைவனும் கூரிய வெண்மையான மழுவாயுதத்தைக் கைக்கொண்டவனும் ஆகிய சிவபெருமானது நன்மைதரும் திருவடிகளை அடைதலே மேலான குணம்.

வெம்மை மிக்க கதிரவன் ஒளி புகாதவாறு தடுக்கும் விரிந்த சாரலை உடையதும், அம்பைச் செலுத்தி முப்புரங்களை அழித்த சிவபிரான் எழுந்தருளியதுமான அண்ணாமலையைக் கொம்பு என்னும் வாத்தியங்களின் ஒலியைக் கேட்டு, குயில்கள் எதிர் ஒலிக்கும் குளிர்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதவல்லவர்களின் திருவடிகளை வணங்குதல் சிறந்த தவமாம்.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருஅண்ணாமலை பதிகத்தை  பாடி மகிழ்வோம்.

திருச்சிற்றம்பலம்!

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.

உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள வடிமேல்
அதிருங்கழ லடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.

பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே.


கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய விறைவர்க்கிட மினவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.

ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரன் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட வடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.

விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே

வேர்வந்துற மாசூர்தர வெயினின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்த முரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையானல்ல கழல்சேர்வது குணமே.

வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.

திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!! திருச்சிற்றம்பலம்!!!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.



மீள்பதிவாக:-

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! அரோகரா!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_27.html

தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

தெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4) - https://tut-temples.blogspot.com/2019/12/4.html

தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html

பொக்கிஷமாக உலக பக்தர்கள் தினம் 12 ஆம் ஆண்டு மலர்! - https://tut-temples.blogspot.com/2021/11/12.html

10 ஆம் ஆண்டில்...உலக பக்தர்கள் தினம்! கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்!! - https://tut-temples.blogspot.com/2019/11/10_16.html

 வருடமொருமுறை பூக்கும் பூந்தோட்டம் - உலக பக்தர்கள் தினம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_17.html
தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்! - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

 அன்னதானப் பெருஞானம் அத்தனையும் தந்திடுமே என்றுரைத்த ஏகாந்த என்றுமொளிர் குருஜோதி! - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post.html

அக்னிதீர்த்தக்கரை - மாசி மகம் 10,008 தீப பூஜை - 16.02.2022  - https://tut-temples.blogspot.com/2022/02/10008-16022022.html

பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html

 மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 17.02.2022  - https://tut-temples.blogspot.com/2022/02/17022022.html

கல்யாண தீர்த்தம் அகத்தியர் தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_7.html

 ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - மாதாந்திர பௌர்ணமி பூசை - 38 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/09/38.html


அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர்  - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

வேண்டத் தக்க தறிவோய்நீ - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_13.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

கற்போம். கடைப்பிடிப்போம்.. காப்போம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_26.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சிந்தனைக்கு சில - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_8.html

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_4.html

No comments:

Post a Comment