"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, June 14, 2023

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அகத்தியர் - சித்தருக்கெலாம் தலைமை சித்தர், அகத்தின் ஈசனாய் விளங்குபவர். முன்பெல்லாம் சித்தர் என்ற வார்த்தை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் கேட்கும். ஆனால் இன்று திரும்பும் பக்கமெல்லாம் சித்தர்கள் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆம்..இது காலத்தின் கட்டாயமும் கூட. திரும்பும் பக்கமெல்லாம் சித்தர்கள்,மகான்கள் என்று நம் தமிழ்நாட்டில் இருக்கும் போது, சித்தர்கள்,அவர்களின் வழிபாடுகள் ஒவ்வொரு நாளும் செய்து வருவது போற்றுதலுக்குரியது. அந்த வகையில் நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" தளம் சித்தர்களின் ஆசி பெற்று வருகின்றது என்பது தெள்ளத் தெளிவே.

நம் தளம் சார்பில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கூடுவாஞ்சேரி அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம்.  இப்படியான பயணத்தில் நாம் தீர்த்த மலை சென்று வந்தோம். அப்போது அங்கே ஒரு அகத்தியர் ஆசிரமம் இருப்பதாக கேள்விப்பட்டோம். அகத்தியர் அருள் பெற காத்துக் கொண்டு இருந்தோம். இதோ.அவரது அழைப்பும் வந்தது. இந்த ஆசிரமம் சுவாமி வீரமணி தாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது. சுவாமி வீரமணி தாசன் அவர்கள் பக்திப் பாடல் எழுதி பாடுவதில் வல்லவர். அவருடைய ஆன்மிக பயணத்தில் சுவாமி அவர்கள் திருஅண்ணாமலையில் அகஸ்தியர் ஆசிரமம் கட்ட உத்தரவானது. ஆனால் சில காலங்களுக்கு பின் அது மீண்டும் தீர்த்தமலையில் அமையும் என்று அருளாணை பிறப்பிக்கட்டு இன்று பல அடியார்களுக்கு அருள் வழங்கி வருகின்றது.

ஓம் அகஸ்திய நாதனே என சுவாமி வீரமணி தாசன் குரலில் பாடலைக் கேட்ட போது, உள்ளம் மகிழ்ந்தது, உச்சி திறந்தது. இதோ பாடலின் வரிகள் 


ஏன் நமஸ்கரிக்க வேண்டும்? முதலில் நமஸ்காரம்/ சரணம் சொல்லி பழக்க வேண்டும். பின்னர் தான் சரணத்தின் வாயிலாக சரணாகதி தத்துவம் புலப்படும்.

ஓம் அகஸ்திய நாதனே
ஸ்ரீ சற்குரு நாதனே
ஓம் குருமுனி தேவனே
ஸ்ரீ குருமண்டல தெய்வமே

பொதிகாசலமோ நின் நாமம்
தணிகாசலமோ குரு நாதம்
குருவே குமரா என்றோதும்
குருமுனி பாதம் நமஸ்காரம்

சாய்ந்த லிங்கமோ சதுரகிரி
ஆய்ந்து வந்ததோ தீர்த்தகிரி
தீர்த்தமலையின் அடிவாரம் எழுந்த
உமக்கு நமஸ்காரம்

பொதிகை உமக்கு தலைமையகம்
அம்பாசமுத்திரம் துறைமுகமாம்
என்பால் வந்தாய் குருமண்டலம்
அகஸ்திய சுவாமிக்கு நமஸ்காரம்

சின்மய முத்திரை பிடித்தபடி
அன்புடன் புகுந்தாய் தீர்த்தகிரி
தீர்த்தமலையின் அடிவாரம்
உறையும் குருவே நமஸ்காரம்

சீடன் புலஸ்தியன் செவி மடுக்க
பாடம் நடத்திய குரல் தொனிக்க
வந்தாய் இந்த  குருமண்டலம்
எந்தாய் உமக்கு நமஸ்காரம்

குற்றாலத்துறை நாதரப்பா
கற்றாய் அவரிடம்  ஞானமப்பா
கற்றதை எமக்கும் எடுத்துரைக்க
வந்தாய் அன்பாய் நமஸ்காரம்

திருநீர் கடலில் மூழ்கி நின்று
திருப்பாற் கடலை கண்டவரே
அறப்பால் ஊட்ட அன்னையுடன்
எழுந்தாய் எந்தை நமஸ்காரம்

போகர் தொடங்கி கோரக்கர்
சேனை சூழ  இப்பக்கம்
லோகம் வாழ எழுந்தருளும்
சித்தர்கள் தலைவா நமஸ்காரம்

சாமி சிவனிடம் கையேந்தி
தாமிரபரணி நதி வாங்கி
தென்னக தாகம் தீர்த்த  முனி
என்னகம் இருந்து அருள்க இனி

செந்தமிழ் இலக்கணம் படைத்தவரே
விந்திய தலைக்கனம் முடித்தவரே
விந்தை நின் வருகை இவ்விடமே
எந்தையை விடுமோ எம் கரமே

அப்பஞ் சாமி  சுப்பனிடம்
அருந்தி வந்தீர் ஞான ரசம்
ரசத்தின் சாரம் உரைக்க வந்த
குருவை  விடுமோ எம் கரமே

ஆண்டவன் தர்மம் எதுவென்று
ஆண்டியின் தர்மம் இதுவென்று
இலக்கணம் வகுத்த தவமுனியே
இருப்பாய் எங்கள் நா நுனியே

நீரின் மேல் ஒரு மாமாங்கம்
நிஷ்டையில்  மிதந்த உனது அங்கம்
யாரார் கண்டார் யாரறிவார்
அறிவேனோ நான் குருநாதா

அகஸ்த்திய பெருங்கடல் அதிசயங்கள்
அகப்படுமோ வெறும் அற்பருக்கு
நகத்தளவேனும் அறிவதற்கு
அருள்வாய் மாதவ முனிநாதா

சோமன் உனக்கு தவச்சோலை
ராமனுக்கு உரைத்தீர் சிவகீதை
பாமரர் யாமும் வேண்டுகின்றோம்
பகர்வீர் ஐயா ஒரு பாதை

அஞ்சனம் மை அதை வடித்தெடுத்து
கோசலை மகனுக்கு அதை கொடுத்து
அஞ்சேல் என்று அருளியவா
தஞ்சம் என்பாய் தாங்கிடவா

பாடும் வண்டாய் உருமாறி
காடுகள் தோறும் தேன் தேடி
செய்தாய் சிவனுக்கு அபிஷேகம்
தேன் போல் காண்பீர் என் பாசம்

எண்ணாயிரம் பா வியாசர் சொல்ல
பன்னி ராயிரம் நீங்கள் சொல்ல
காண முடியுமோ அதன் ஆழம்
காண துடிக்குதே உ(ய)யிர் யாவும்

வனமதில் பத்ரகாளி உலா
வனப்புடன் சொன்னது நின் தமிழா
கொற்றவை அவளின் சிறு குழந்தாய்
நற்றமிழ் அறிவை தா விருந்தாய்

கல்லால மரத்தின் கீழ் இருந்து
மல்லார் வாதுக்கு பதில் உரைத்து
தென்முகக் கடவுள் போல் இருந்தாய்
தேனெனும் ஞானம் நா விருந்தாய்

குடித்தது ஏழு பெருங்கடலை
முடித்தது சூது அரக்கர்களை
எமை படுத்தது சாமி பல கவலை
நடத்திடு மீண்டும் சித்துக்களை

அத்திரி மலையில் இசை வார்த்து
அசுரன் ராவணன் தலை கவிழ்த்து
ஆணவம் வென்ற அரு முனியே
கானத்தில் உறைவதும் உன் பணியே

பாலாம்பிகையை தியானிக்கும்
பாதை தன்னை அறிவிக்கும்
வேலாயுதனின் சீடா வா
காலன் பயத்தை கரைத்திட வா


மான் தோல் புலித் தோல் ஆசனங்கள்
பெருமானைத் தேடும் யோகங்கள்
வகுத்தாய் உரைத்தாய் வர முனியே
அகத்தில் அமைதியைத் தா குருவே

சித்தர் பெருமக்கள் பாடி வைத்த
சத்துள்ள நூல்களின் மதிப்புரைத்த
அத்தனின் குழந்தாய் அகஸ்தியரே
சித்தத்தில் தெளிவை நீ அருள்வாய்

குகையின் உள்ளே தவயோகம்
சிவ சிவ என்றே ஒலி கூட்டும்
பஞ்சாட்சரத்தின் பாலகனே
பஞ்சம் முடிக்க வா உடனே

குருந்த மரத்தில் சூட்சுமமாய்
இருந்து அருளும் கும்பமுனி
வருந்தி அழைக்கும் மானிடருக்கு
மருந்தாய் வருக மூத்த முனி

கற்பம் தாது செந்தூரம்
கற்பித்த மருந்தோ கடலாகும்
ஆயுள் வேத ஆண்டவனே
தாயாய் இருந்து நோய் நீக்கு

ஜீவ நாடியில் படரும் நிகழ்வுகளை
பாடலில் பதியும் குருநாதா
கோடி கோடி மாந்தருக்கும்
நலமே சொல்வாய் குணசீலா

நர சிங்கம் உறையும் ஸ்தல முரைத்து
அவர் அங்கம் புரியும் நல முரைத்து
துரை சிங்கம் ஆன தூய முனி
உன் அரங்கம் இனிமேல் இவன் மேனி

சிவனை மெத்தப் படித்த முனி
அவனில் ஒருமுகம் ஆன முனி
இவனில் இறங்கி வர வேண்டும்
அவனியில் நாத மழை வேண்டும்

அண்ணாமலையான் அருட்சுடரை
கண்ணில் ஏந்தும் பெருமானே
அன்னாய் ஆர்த்த அருந்தமிழை
உன் முன்னால் கிடக்கும் எமக்கருள்வாய்

கார்த்திகை தீபம் இவன்தானோ
கேட்ட பின்னாலே கனி வீசி
வார்த்தனையே  நல் அருளாசி
மறப்பேனோ அந்த திருக்காட்சி

எங்களின் குருவை தெண்டனிட்டால்
தென்படுமே அந்த மாமேரு
கொங்கணர் உரைத்த வாக்கு இது
நான் மேருவை காண்பது எப்போது?

அஷ்டமா சித்தி அளந்து வைத்து
இஷ்டமானவரை அறிய வைத்து
சித்து விளையாடும் மாமுனியே
உத்தமர் தமக்கு அருள் முனியே

நியாயமானதொரு கோரிக்கை  
சுவாமி உன் மீது நம்பிக்கை
வைத்தவர் தம்மை காப்பவரே
அப்பா என்றதும் வா உடனே

தீர்த்த மலை கண்ட உன் கோவில்
எத்தனை எத்தனை சித்தாடல்
அத்தனையும் சொல்ல ஆற்றலுண்டோ
ஐயா! எனக்கருள் அகஸ்த்தியரே!

காட்டில் தொலைந்த கால்நடையை
கூட்டி வந்துவிட்ட  அற்புதத்தை
எப்படி உரைப்பேன் குருநாதா
சொன்னால் உலகம் உருகாதா!

அகஸ்தியர் ஆலய திருநீறு
அகற்றிய ரோக ரணம்  நூறு
வாராது வந்த வைத்தியனே
ஊரோடு உரைப்பேன் உன் திறனே

பாலகன் பாலகி வேண்டுமென்று
காலை பிடித்தவர் கதைகளுண்டு
அகப்பை நிரப்பி மகப்பேறு
தந்தது ஐயா! உன் வரலாறு

யாக சாலை சுடர் கொழுந்தாட்டம்
நாக தேவதையின் நடமாட்டம்
நடத்தும் கும்பமுனி அருள்வீச்சம்
நாளை உலகுக்கு வழிகாட்டும்

நேரம் தோறும் மாறி வரும்
லோபாமுத்ரையின் முகபாவம்
பேசும் அம்மா அவள் என்று
உணர்ந்தோர் விழியில் தீர்த்தம் வரும்

குணங்குடி பல ரிஷி தேடி வரும்
குருமண்டலத்தின் திருப்பாதம்
கண்டால் தமக்கு வரும் யோகம்
இது சத்தியம்  சத்திய வாக்காகும்

வாழ்க அகஸ்தியரின் திருநாமம்
வாழ்க அகஸ்தியன்  திருப்பாதம்
வாழ்க நின் ஸ்ரீ குருமண்டலம்
வாழ்க வளமுடன் வையகமே

ஓம் அகஸ்திய நாதனே
ஸ்ரீ சற்குரு நாதனே
ஓம் குருமுனி தேவனே
ஸ்ரீ குருமண்டல தெய்வமே

ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே

ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே

ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே

ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே

ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே

ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே

ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே

ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே

ஓம் அகஸ்தியாயை வித்மஹே  பொதிகைவாசாய தீமஹி
தந்நோ; மஹா குரு பிரசோதயாத்;

ஓம் லோபாமுத்ராயை வித்மஹே பொதிகைவாசாய தீமஹி
தந்நோ; மஹா மாதா பிரசோதயாத்;

ஸ்ரீகுருமண்டலம் அகஸ்தியர் ஆஸ்ரமம் தரிசனக் காட்சிகள் இங்கே பெற உள்ளோம்.



இனி நாம் சித்ரா பௌர்ணமி நாளின் தரிசனம் காண இருக்கின்றோம். 





குருநாதரின் தரிசனம் காண கண் இரண்டும் போதாது? பார்க்க பார்க்க நம்முள் பரவசம் ஏற்படுகின்றது அல்லவா? மீண்டும் மீண்டும் குருவின் திருவுரு சிந்திக்க தோன்றுகின்றது அல்லவா !




ஓம் குருநாதா அகஸ்தியரே
குருமுனி நாதா அகஸ்தியரே

ஓம் அகஸ்தியாயை வித்மஹே  பொதிகைவாசாய தீமஹி
தந்நோ; மஹா குரு பிரசோதயாத்;

ஓம் லோபாமுத்ராயை வித்மஹே பொதிகைவாசாய தீமஹி
தந்நோ; மஹா மாதா பிரசோதயாத்;

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.



மீள்பதிவாக:-

தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்! - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

 அன்னதானப் பெருஞானம் அத்தனையும் தந்திடுமே என்றுரைத்த ஏகாந்த என்றுமொளிர் குருஜோதி! - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post.html

அக்னிதீர்த்தக்கரை - மாசி மகம் 10,008 தீப பூஜை - 16.02.2022  - https://tut-temples.blogspot.com/2022/02/10008-16022022.html

பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html

 மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 17.02.2022  - https://tut-temples.blogspot.com/2022/02/17022022.html

கல்யாண தீர்த்தம் அகத்தியர் தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_7.html

 ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - மாதாந்திர பௌர்ணமி பூசை - 38 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/09/38.html


அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர்  - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

வேண்டத் தக்க தறிவோய்நீ - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_13.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

கற்போம். கடைப்பிடிப்போம்.. காப்போம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_26.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சிந்தனைக்கு சில - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_8.html

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_4.html

No comments:

Post a Comment