"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 17, 2020

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020

 அன்பார்ந்த மெய்யன்பர்களே.

சென்ற ஆண்டு ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் பகிர்ந்து அந்த வழிபாட்டை நாம் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்ற தலைப்பில் பதிவு செய்தோம். இந்த ஆண்டு நாளைய வழிபாடும் நமக்கு அப்படியே அமைகின்றது. ஆம். நாளை மாலை சுமார் 5 மணி அளவில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய வழிபாடும், அதனை தொடர்ந்து ஆவணி மாத மோட்ச தீப வழிபாடும் குருவருளால் நடைபெற உள்ளது.இதனைத் தான் நாம் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்று இன்றைய பதிவின் தலைப்பிலும் பேச விரும்புகின்றோம்.

ஆவணி மாத ஆயில்ய வழிபாடும், மோட்ச தீப வழிபாடும் இன்று - 18.08.2020 மாலை 5 மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் குருவருளால் நடைபெற உள்ளது. எனவே அடியார் பெருமக்கள் செவ்வாய் (18.08.2020) அன்று  மாலை 5 மணி அளவில் குருமார்களின் நாமம் ஓதி, விளக்கேற்றி  இல்லத்திலே முன்னோர்களின் ஆசி வேண்டி வழிபாடு செய்ய வேண்டுகின்றோம்.





சரி. சென்ற ஆண்டில் ஆவணி மாதத்தில் நடைபெற்ற ஆயில்ய பூசை பற்றி சிறிது காண்போமா?


அப்பனே ...குருநாதா..அகத்தீசா...முதலில் நேரே சென்று அகத்தியர் தரிசனம் பெற்றோம்.


அடுத்து பூசைக்கான முன்னேற்பாடுகள் ஒவ்வொன்றாக நடைபெற்றது. மூலிகைப் பொடிகள் ஒவ்வொன்றும் கலசத்தில் சேர்க்கப்பட்டது.



அடுத்து பஞ்சாமிர்தம் செய்யும் பணியை மகளிர் ஏற்றுக்கொண்டு செய்தனர்.


ஆயில்ய பூசைக்கு மகளிர் என்றால் மோட்ச தீபத்திற்கு ஆடவர். இதோ..நீங்களே பாருங்கள்,




மோட்ச தீபத்திற்கு திரி தயாரிக்கும் பணியும், ஏனைய முன்னேற்பாடுகளும் நடந்தது.



அட..மிக அழகான அலங்காரம். கையில் கிடைத்த பொருட்களை கொண்டு மிக நேர்த்தியாக இருந்தது.


ஆயில்ய பூசை ஏற்பாடுகள் முடித்து மகளிரும் இங்கு வந்து சேர்ந்து, பூஜைக்கு ஏற்பாடு செய்தனர். புதிதாக எழும்பூரில் இருந்து ( எக்மோர்) கோகுல் என்பவர் வந்தார். அவரையும் சேவையில் ஈடுபட சொன்னோம். ஹேமந்த் ஐயா, அனந்தகிருஷ்னன் ஐயா என அனைவரும் ஒருங்கே பூசைக்காக தத்தம் பணியை செய்தனர்.


பஞ்சாமிர்தம் சரியாக பிசையவில்லை. நங்கநல்லூர் ராதா அவர்கள் மீண்டும் தம் கைப்பக்குவத்தை காட்டிக்கொண்டு இருந்தார்கள்.




நேரம் 7 மணியைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. ஆவணி அமாவாசை இரவு 7 மணிக்கு தான் தொடங்கியது. எனவே நாம் குருக்களிடம் ஆயில்ய பூசை செய்ய வேண்டினோம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இரவில் நடைபெறும் பூசை என்பதால் நமக்கு ஆச்சர்யமாக இருந்தது.நீங்களே அபிஷேகம் பாருங்கள்.












அடுத்து மோட்ச தீபத்திற்கான ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.



அடுத்து மீண்டும் ஆயில்ய பூசை தரிசனம் காண்போமா?









இந்த வழிபாட்டில் உள்ள அருள் நிலைகளை பார்க்கும் போது தீபத்தின் ஒளி இருளில் புதுவிதமாக தெரிகின்றது அல்லவா? மீண்டும் ஒருமுறை அகத்தியரின் தரிசனத்தில் பாருங்கள். நமக்கு சூட்சுமமாக குருநாதரின் உத்தரவு கிடைக்கின்றது. ஏனென்றால் நாம் ஒவ்வொரு பூசையின் போதும்  ஒவ்வொரு விதமாக ஏற்பாடு செய்வோம். ஒருமுறை பூசைக்கு முன்னர் அன்னதானம் செய்தோம். ஒரு முறை பெரிய அகலில் அகண்ட தீபம் போல இலுப்பெண்ணையில் விளக்கேற்றினோம். இம்முறை நமக்கு இந்த ஜோதி தரிசனம் தீப வழிபாட்டை மேலும் உரக்க உரைத்ததாக உணர்கின்றோம்.

ஏனென்றால் அகத்தியரின் வாக்கினை பலமுறை படித்து இருக்கின்றோம். ஆனால் பிடிக்க மறந்து விட்டோம். இதனை பாண்டிச்சேரி சுவாமிநாதன் ஐயா அவர்களின் மூலம் மீண்டும் அறிந்தோம்.எனவே இனி வரும் அனைத்து பூசைகளிலும் 12 முகம் கொண்ட தீபம் ஏற்றி வழிபாடு தொடரும். இதற்கு குருவருள் நம்மை வழிநடத்த வேண்டுகின்றோம். இதோ..நம் குருநாதரின் அருள்மொழி 

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"தீபத்தின் முகங்கள் அதிகமாக, அதிகமாக தோஷங்கள் குறையும். தீபத்தின் முகங்களுக்கும், ஜாதக பாவங்களுக்கும் தொடர்பு உண்டு. "12" முக தீபத்தில் சகல வதனங்களும் அடங்கி இருப்பதால், அத்தருணம், பிரதானமாக ஒரு கோரிக்கையை வைத்து, ஒரு சஷ்டி திங்கள் (ஆறு மாதம்) மன ஈடுபாட்டோடு வழிபாடு செய்தால், அது இறைவன் அருளால் நிறைவேறும். வீட்டில் ஏற்றுவதைவிட, ஆலயத்தில் ஏற்றுவது சிறப்பு. ஒவ்வொரு முறையும் புதிய மண் அகல் விளக்கை பயன்படுத்த வேண்டும்."

நம் தளத்திற்கும் தீபத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. முதன்முதலில்  கூடுவாஞ்சேரியில் ஆயில்ய பூசை செய்தோம். அடுத்த ஓராண்டு நிறைவில் அகத்தியரின் ஆராதனை 108 தீபமேற்றி கொண்டாடினோம்.பின்னர் அகத்தியர் தபோவனம் மலேசியா குழுவோடு சேர்ந்து குறித்த நாளில் 108 தீபமேற்றி வழிபட்டோம். இந்த தீப வழிபாடு நம்மை மோட்ச தீபம் நோக்கி நகர்த்தியது. இதோ..2018 ஆண்டு  ஆடி மாதம் முதல் ஓராண்டு நிறைவில் மோட்ச தீப வழிபாடு செய்து வருகின்றோம்.இந்த நிலையில் தான் நம்மை நம் குருநாதர் 12 முக தீபமேற்றி வழிபட உத்திரவு கொடுத்துள்ளார். இனி இந்த தீப வழிபாடு நம் அனைத்து பூசையிலும் தொடரும்.

அடுத்து சென்ற ஆடி மாதம் ஸ்ரீ அகத்தியர் பெருமான் ஆயில்ய ஆராதனையில் கொடுத்த தரிசனம் காண்போமா?


இரண்டு கண்கள் போதவில்லை என்றே நமக்கு தோன்றுகின்றது.

பதிவின் நீளம் கருதி, நாம்அடுத்த பதிவில் ஆடி மாத மோட்ச தீப வழிபாடு பற்றி காண்போம்.

- மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
மகா பெரியவா அருள் வழியில் "மோட்ச தீபம்" வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post.html
ஆனி மாத இறைப்பணியும், மோட்ச தீப வழிபாடும் - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_21.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

மாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 23.02.2020  - https://tut-temples.blogspot.com/2020/02/23022020.html

தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020.html

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html
ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html
மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html
ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.htm

2 comments:

  1. OMSRI LOBAAMUTHTHIRAA SAMETHA AGATHEESAAYA NAMAHA!

    ReplyDelete
    Replies
    1. நன்றி குருஜி. என்றும் தங்களின் ஆசியும்,வழிகாட்டலும் வேண்டி பணிகின்றோம்.

      ஓம் அகத்தீஸ்வராய நமஹ

      Delete