"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 19, 2020

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆவணி மாத வழிபாடு மற்றும் சேவைகள் குருநாதர் ஆசிப்படி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஓதியப்பரின் திருஅவதாரமான ஆவணி பூசம், திரயோதசி திதி அன்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்து ஓதியப்பர் தரிசனம் பெற்றோம். ஆவணி அமாவாசை மோட்ச தீப வழிபாடும், ஆவணி ஆயில்ய ஆராதனையும் சிறப்பாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஆவணி அமாவாசை மோட்ச தீப வழிபாட்டில் ஸ்ரீ ரெட்டியபட்டி சுவாமிகளின் சீடர் கலந்து கொண்டார். திரு.ஸ்ரீநிவாஸ் ஐயா அவர்கள் தம் துணைவியாரோடு வந்து கலந்து கொண்டார்கள். வழிபாடு முடிந்ததும் தம் அனுபவத்தை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். முதன் முதலாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுக்கு வந்து, விநாயகரை தரிசித்ததுமே மனதுள் ஒரு மகிழ்ச்சி தந்ததாக கூறி மகிழ்ந்தார்கள். மோட்ச தீப வழிபாட்டிலும் தம் அனுபவம் பகிர்ந்தார்கள். வழக்கம் போல் நம் தளத்திற்கு உதவி செய்து வரும் அனைவருக்கும் நன்றி கூறி, இன்று கோபுர தரிசனம் பற்றி சில செய்திகள் உங்களோடு பகிர விரும்புகின்றோம். இன்றைய பதிவில் நீண்ட நாட்கள் கழித்து ஒரு கதை ஒன்றும் காண இருக்கின்றோம்.

'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பார்கள். ஒரு கோயிலில் பல்வேறு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருக்கும். கோயிலில் உள்ள மற்ற கோபுரங்களை விட ராஜ கோபுரம் மிக உயர்ந்து இருக்கும்.


கோயிலின் முகப்பில் உள்ள இக்கோபுரம் 'ஸ்தூல லிங்கம்' எனப்படும். இது தொலைவில் இருப்பவர்களும் கண்டு வழிபடும்படியாக அமைந்துள்ளது.

இந்த வகை ராஜ கோபுரங்கள் 3, 5, 7, 9, 11 என்னும் எண்ணிக்கையில் அமைந்த நிலைகள் உடையதாக அமையும்.

இக்கோபுரத்தில் பல்வேறு வகையான வடிவங்களும் சிற்பங்களாக இடம் பெற்றிருக்கும். ராஜ கோபுரம் நம் கண்ணில் பட்டதும் கைகூப்பி வணங்க வேண்டும்.ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கும் காண முடியும்.

“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பது பழமொழி என்பதை விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். 

கோபுரங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இணையானது என்ற நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது.

சிற்ப சாஸ்திரத்தின் படி கோவில்களின் அமைப்பானது மனித உடலின் வடிவத்தில் அமைய வேண்டுமென வரையறுத்திருக்கின்றனர். இதனை “ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம்” என்பர்.

இதனையே திருமூலரும்…

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

 வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”  என்று கூறுகிறார்.

எளிமையாய் விளக்குவதானால்



பாதங்கள் – முன்கோபுரம்

முழங்கால் – ஆஸ்தான மண்டபம்

தொடை – நிருத்த மண்டபம்.

தொப்புள் – பலி பீடம்

மார்பு – மகாமண்டபம் ( நடராஜர்)

கழுத்து – அர்த்த மண்டபம் (நந்தி)

சிரம் – கர்ப்பகிரகம்

வலது செவி – தக்ஷிணா மூர்த்தி

இடது செவி – சண்டேஸ்வரர்.

வாய் – ஸ்நபன மண்டப வாசல்

மூக்கு – ஸ்நபன மண்டபம்

புருவ மத்தி – லிங்கம்.

தலை உச்சி – விமானம்.

“தேஹா தேவாலய: ப்ரோக்தோ ஜீவோ தேவ: ஸனாதன:

த்யஜோத்: அஞ்ஞான நிர்மால்யம் ஷோகம் பாவேன பூஜயேத்” என்ற வேத வாக்காலும் இதனை அறியலாம்.

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்?  எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா... என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான். குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.

ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். "என்னப்பா... சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.

அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்? ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா...ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.

குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். 'ராஜா...நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்...மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான். இவனின் பதற்றத்தை படபடப்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். 'வா...இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் அழைத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார் 'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.

அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 'ஏனப்பா அழுகிறாய்?' என்று ராஜா கேட்க. "நான் இதுநாள் வரை  பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான். ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை  ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்.

நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும். 

சும்மாவா சொன்னார்கள் :: கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று.

சில கோபுர தரிசனங்களை இங்கே பகிர்கின்றோம்.


கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாபநாசநாதர் கோயில் கோபுரம் பார்க்கும் போது தோன்றுகின்றது. இன்னும் சற்று தொலைவில் இருந்து தரிசிப்போமா?




அடுத்து  சங்கடங்கள் தீர்க்கும் சின்னாளப்பட்டி சதுர்முகர் கோயில் கோபுர தரிசனம் காண இருக்கின்றோம்.









கோபுர தரிசனத்தில் நம் முருகப்பெருமானை கண்டதும் மனம் ஒன்றி லயத்தில் ஆழ்ந்தது.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது மேலே உள்ள படங்களை காணும் போது தெளிவாக புரிகின்றது அல்லவா?

அடுத்து அண்ணாமலையார் கோபுர தரிசனம் காணலாம்.




இதோ...அண்ணாமலையான் தரிசனம் கண்டோம்.



எங்கள் அன்பில் கலந்தோனின் தரிசனம் பெற்றோம் .




                                            அடுத்து ஸ்ரீ ரங்கம் செல்வோம்.

மீண்டும் ஒரு முறை பதிவின் தலைப்பை படித்து பாருங்கள்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

யார் உண்மையான பக்தன் ? - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_30.html

ஆறுவது சினமா? ஆறாதது சினமா? - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_10.html

கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2020/05/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - https://tut-temples.blogspot.com/2020/04/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - https://tut-temples.blogspot.com/2020/03/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_11.html
மகா பெரியவா அருள் வழியில் "மோட்ச தீபம்" வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post.html
ஆனி மாத இறைப்பணியும், மோட்ச தீப வழிபாடும் - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_21.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

மாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 23.02.2020  - https://tut-temples.blogspot.com/2020/02/23022020.html

தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020.html

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html
ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html
மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html
 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

வள்ளிமலை அற்புதங்கள் - (7) - https://tut-temples.blogspot.com/2019/12/7_26.html

வள்ளிமலை அற்புதங்கள் - (6) - https://tut-temples.blogspot.com/2019/12/6.html

வள்ளிமலை அற்புதங்கள் (5) - https://tut-temples.blogspot.com/2019/12/5_3.html

தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

 திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html



No comments:

Post a Comment