அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
கோயில்கள் நமக்குத் தெரியும்.அதென்ன உயிர்நிலை கோயில்கள் ? என்று கேட்பது
நம் செவிகளுக்கு விழுகின்றது.இந்த கலியுகத்தில் எங்கு பார்த்தாலும்
சித்தர்கள் என்ற சொல்லை மிக எளிதில் கேட்க முடிகின்றது.சுமார் ஐந்தாறு
வருடங்களுக்கு முன்பு, சித்தர்கள் என்ற சொல்லைக் கேட்பதே அபூர்வம்.ஆனால்
இன்று சர்வ சாதாரணமாக கேட்க முடிகின்றது. இந்த சித்தர்கள் என்பவர்கள் யார்?
அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றெல்லாம் நாம் பிறிதொரு பதிவில்
பார்ப்போம். இங்கே சித்தர்களைத் தாண்டி மற்றுமொரு வார்த்தை அதிகமாக சொல்லப்
படுகின்றது. இது சித்தர்களோடு இணைந்த சொல்லே..
கண்டுபிடித்து விட்டிர்களா ? ஆம். ஜீவ சமாதி என்ற உயிர்நிலை கோயில்களே.
சித்தர்களையும், ஜீவ சமாதியையும் பிரித்துப் பார்க்க இயலாது. வெகு நீண்ட
இடைவெளிக்கு பின்பு,நமக்கு சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் உழவாரப் பணி
செய்ய வாய்ப்பு கிடைத்தது.அங்கே சுமார் ஏழெட்டு சமாதிகள் உள்ளன.
ஒவ்வொன்றிலும் அப்படியொரு அருள்நிலை உணர முடிந்தது.
ஜீவ சமாதிகள் என்று சொல்வதை விட உயிர்நிலை கோயில்கள் என்று சொல்வது நன்றாக உள்ளதல்லவா? எனவே தான் உயிர்நிலை கோயில்கள் என்று தலைப்பிட்டோம்.
ஜீவ சமாதிகள் என்று சொல்வதை விட உயிர்நிலை கோயில்கள் என்று சொல்வது நன்றாக உள்ளதல்லவா? எனவே தான் உயிர்நிலை கோயில்கள் என்று தலைப்பிட்டோம்.
ஜீவனை அங்கத்திலேயே சமாதி நிலையில் ஆழ்த்தி நிறுத்தி விடுவது ஜீவ சமாதி
ஆகும். அதாவது நம்முடலில் உள்ள உயிரை அப்படியே ஆதிக்கு சமமாக வைத்தாலே
சமாதி என்று அழைக்கப் பெறும்.ஜீவ சமாதியில் எத்தனை வருடங்கள் ஆனாலும்
திருமேனி அழியாது.ஜீவனை தாங்கி நிற்கும் திருமேனியே சிவ சொரூபமாக உள்ளது
.நமது பாரத தேசத்தில் ஜீவ சமாதிகள் இல்லாத இடமே இல்லை.ஆம்.அப்படியொரு
புண்ணிய பூமி தான் நம் நாடு. அதுவும் தமிழ் நாட்டிலே...சொல்லவே வேண்டாம்.
இந்தியாவில் பிறப்பது சிறப்பென்றால்..தமிழ்நாட்டில் பிறப்பது மிகச்
சிறப்பே.
ஜீவ சமாதியில் மகான்களின் ஜீவ ஆத்மா முழுமையாக ஜீவ சமாதியில் ஒடுங்கி இருந்தாலும் அதில் ஆற்றல் மட்டும் எங்கும் வியாபித்து இருக்கும். அந்த தெய்வீக ஆற்றலே வரும் பக்தருக்கும், சீடர்களுக்கும் அருள் மழை பொழிந்து கொண்டிருக்கும்.ஜீவ சமாதியில் தவம் புரியும் அன்பர்கள் அந்த தெய்வீக ஆற்றலைப் பற்றிய விழிப்புணர்வுடன் தவம் புரியும் போது அந்த தெய்வீக ஆற்றல் அவர்கள் உடல் முழுவதும் வியாபிக்கும். இதனை நாம் நன்கு உணரலாம்.
அவ்வாறு மகானின் தெய்வீக ஆற்றல் நம்மை ஊடுருவும் போது நாம் விழிப்புணர்வுடன் இருந்து அப்போது நமது பிரார்த்தனைகளை சமர்ப்பிக்க வேண்டும்.அவ்வாறு சமர்பிக்கப்படும் அனைத்து பிரார்த்தனைகளும் மகானின் திருவருளால் நிறைவேற்றப்படும்.பல நேரங்களில் மகானின் தெய்வீகஆற்றல், ஜீவ சமாதி ஆலயத்தை பராமரிக்கும் குருக்களின் மேல் பிரசன்னமாகி நமக்கு தேவையான உபாயங்களை உரைத்திடும்.

ஜீவ சமாதி அடைந்து உள்ள மகானின் திருவுள்ளத்தில் நம்மை நினைத்தால் நாம்
எங்கு எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அப்போது மகானின் தெய்வீக
ஆற்றல் நம்மை தேடி வந்து ஆசீர்வதிக்கும். அவ்வாறு நாம் ஆசீர்வதிக்க படும்
போது அதனை நன்கு உணரலாம்.அப்போது நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அதனை
விடுத்து வேறு ஒரு தெய்வீக சூழ்நிலைக்கு உந்தப்படுவோம்.
ஜீவ சமாதிக்கு திருப்பணி செய்வது புண்ணியத்திலும் புண்ணியம் ஆகும்.ஜீவ சமாதியில் ஆழ்ந்திருக்கும் ஒவ்வொரு மகானும் அவருக்கென்று தனித்தன்மையான நறுமணத்தை பிரயோகம் செய்வார்கள்.இந்த நறுமணத்தை கொண்டே நாம் எப்போதெல்லாம் மகானின் தெய்வீக ஆற்றல் நம்மை ஆசீர்வதிக்க வருகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

மகான்கள் ஜீவ சமாதியில் அமர்ந்த பிறகு அங்கு சமாதி பீடம் அல்லது ஆலயம் கட்டப்படும்.
இந்த வரிசையில் இன்று மண் உண்ட மகான் தரிசனம் காண இருக்கின்றோம்.
மண் உண்ட மகான்
என்ற பெயரைக் கேட்டதுமே நமக்கு சற்று ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இப்போது தான் சில சித்தரின் உயிர்நிலை கோயில்களை தரிசித்து வருகின்றோம். அந்த வகையில் இந்த சித்தர் நமக்கு புதுமையாய் தோன்றுகிறார். ஆம். மண் உண்ட மகான். மண்ணை உண்ணுவாராம் இந்த மகான். ஒவ்வொரு சித்தர் பெருமக்களும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக அருள் செய்து வருகின்றார்கள். இவரின் கோயில் பற்றி அறிந்து, நாம் எப்போது அங்கு செல்ல போகின்றோம்? நம்மை அவர் எப்போது அழைப்பாரோ? என்று ஏங்கி தவித்துக் காத்துக் கொண்டிருந்தோம்.
அந்த நாளும் வந்தது. அவரை தரிசிக்கும் முன்னர் அவரைப் பற்றி சில செய்திகளை இங்கே தொகுத்து தருகின்றோம். இனி அந்த அற்புத அருள் உணர்த்தும் சம்பவம் தொடர்கின்றோம்.

நடுரோட்டுல ஒரே கூட்டம்..
அப்படின்னு சொல்லிட்டு சாமியார் ,எதுவுமே நடக்காத மாதிரி படுத்திட்டு இருக்க, ஜெயராமனுக்கு அடுத்து என்ன செய்யறதுன்னு ஒன்னுமே புரியல..
1998 டிசம்பர்ல,
இன்னும் 9 நாள்ல நான் இருக்கமாட்டேன்னு சொல்லிட்டு சமாதி அடைஞ்சிருக்காரு மல்லய்ய சுவாமிகள்..,அதுக்கப்புறமா, நாங்க என்ன செய்யறதுன்னு, எல்லாரும் கேட்டதற்கு, ஒரு வடநாட்டு பையன கை காட்டியிருக்காரு..
இப்ப அந்த இடத்துல மண் உண்ட மகான் ஸ்ரீ மல்லய்ய சுவாமிக்கு ஒரு கோயில் அமைச்சு, முறையா வழிபாடுகள் இன்னையவரைக்கும் நடந்துட்டு வருது.
ஒருகட்டத்துல 2005ல அந்த பையனும் இறந்துபோக..அடுத்ததா..ஜெயராமனோட மனைவி மாலா மூலமா, தன் பக்தர்களுக்கான வழிகாட்டுதல்கள் இப்பவரைக்கும் தொடர்ந்துகிட்டுருக்கு..
வண்டிங்கல்லாம் அப்படியே ஸ்தம்பிச்சு நின்னுடுச்சு..
அக்கம்பக்கம் கடைக்காரங்களுக்கு, யாரையோ வண்டிக்காரன் அடிச்சிட்டு போயிட்டான்னு புரிஞ்சிடுச்சு..
ஆனா, அடி பட்டது யாருன்னுதான் புரியல.
நம்ம ஏரியா ஆளுங்கதாம்பா யாராவது அடிபட்டிருப்பாங்க..அப்படின்னு, ஆதங்கத்தோட அந்த எடத்துக்கு ஓடினாரு லாரி டிரைவர் ஜெயராமன்.
கூட்டத்த விலக்கிட்டு உள்ள பாத்தவரு பதறிபோயிட்டாரு.
"..ஏய்…என்னய்யா, இது எல்லாரும் வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க.."
"...என்ன பண்ண சொல்றீங்க.."
"...அடிபட்டு ரத்தம் போயிட்டு இருக்கு..அவர தூக்குங்கய்யா, ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போவோம்.."
"ஜெயராமா..இங்கத்து ஆளுங்கன்னாலே, ஆக்சிடெண்ட் கேசுல நாம தூக்கிட்டு போகமுடியாது..இந்த ஆளு ஒரு பைத்தியம்..ஒட்டுதுணியில்லாம..இங்க சுத்திகிட்டு இருந்த ஆளு..இதுக்கு போய் நாம என்ன செய்ய முடியும்..?"
"யோவ்…ஒத்துங்கய்யா..டேய் நீ இந்த பக்கம் புடி..இந்தா நீ இங்க புடி..தூக்கு…அப்படி முதல்ல..ஓரமா..தூக்கி வைப்போம்.."
அப்படின்னு சொல்லிட்டே..அந்த விபத்துக்குள்ளான நிர்வாண ஆசாமிய தூக்கி கடைகளோரமா படுக்க வச்சாங்க.
அவரோட கால் மேல லாரி ஏறி, காலே நசுங்கி போயிருந்தது..எலும்பு தூள்,தூளா உடைஞ்சிருக்கும், ஏராளமான ரத்தம் போயிட்டு இருந்தது.
விபத்துக்குள்ளான அவரப்பத்தி யாருக்கும் எந்த விவரமும் தெரியாது.
கொஞ்சநாள இந்த பகுதியில நிர்வாணமா, தாடியோட சுத்திட்டு இருக்குற ஒரு ஆசாமி..யார் எத கொடுத்தாலும் சாப்பிடறதில்ல..கீழே கிடக்குற மண்ண அள்ளி திம்பாரு..
கொஞ்சநாள இந்த பகுதியில நிர்வாணமா, தாடியோட சுத்திட்டு இருக்குற ஒரு ஆசாமி..யார் எத கொடுத்தாலும் சாப்பிடறதில்ல..கீழே கிடக்குற மண்ண அள்ளி திம்பாரு..
இவரு சாமியாரா..பைத்தியமா..இப்படி அந்தப்பகுதி ஜனங்களுக்கே ஒரு குழப்பமான நிலைதான்..
இதுல அந்தப்பகுதியில வசிக்கிற ஜெயராமன் மட்டும்தான் அவருகிட்ட போய் பேசுவாரு..அவருக்கு சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பாரு..அதனாலதான், இந்த விபத்த பார்த்ததுமே ஜெயராமன் பதறிப்போயிட்டாரு..
அடிபட்டு படுத்துட்டு இருந்த சாமியார் கிட்ட ,"..என்ன சாமி இப்படி போய் ஆக்சிடெண்ட்டுல மாட்டிக்கிட்டீங்களே.."அப்படின்னு கேட்க,
அந்த நிலையிலயும்,உடம்போட வலிய கொஞ்சமும் பொருட்படுத்தாம,
"... கிருஷ்ணன் விளையாடிட்டு இருந்தான்..அவங்க அம்மா காலை உடைச்சிட்டா" அப்படின்னு சொல்லி சிரிக்கிறாரு.
என்னடா இந்த ஆளு..என்னென்னமோ பேசறாரே அப்படின்னு, ஜெயராமன்
அவர பக்கத்துல இருந்த ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயி முதலுதவி எல்லாம்
செஞ்சு கொண்டாந்து திரும்பவும் அத எடத்துல விட்டிருக்காரு.
கால்ல எலும்புங்க எல்லாம் நொறுங்கி போயிருந்ததால, உடனடியா, எலும்புக்கு வைத்தியம் செஞ்சு கட்டு கட்டியாகணும்..
மத்தவங்கள மாதிரி, அந்த சாமியார் என்னவானா, நமக்கு என்னன்னு, ஜெயராமனால விடமுடியல..
அக்கம்பக்கத்துல இருக்கறவங்க கிட்ட இருந்து 5, 10ன்னு வசூல் பண்ணி துணைக்கு சிலர அழைச்சிகிட்டு, பக்கத்து கிராமத்துக்கு வண்டி வச்சு காலு ஒடைஞ்ச சாமிய தூக்கிட்டு போயிருக்காங்க.
அங்க, சாமிக்கு பச்சிலை மருந்து போட்டு, மூங்கில் குச்சி வச்சு பலமா, கட்டு போட்டு அனுப்பிவச்சிருக்காங்க..
திரும்பவும், அவர கொண்டுவந்து, கூட்டுரோடுல, அவரு வழக்கமா, தங்கிட்டு இருக்குற கடைகள் முன்னால கொண்டுவந்து இறக்கிவிட்டுட்டு, ஜெயராமன் தன்னோட வீட்டுக்கு போயிருக்காரு..
அவரு வீட்டுக்கு போன கொஞ்சநேரத்துலயே..அவரோட கட்டுகட்ட சாமியார தூக்கிட்டுபோக கூட வந்த ஒருத்தர் ஓடிவந்து,"..அந்த ஆள் என்ன காரியம் செஞ்சிட்டு இருக்கான் தெரியுமா.., நாம எல்லாம் எவ்ளோ கஷ்டப்பட்டு, அங்க,இங்க பணத்த வாங்கி, வண்டி வச்சு அவ்ளோதூரம் தூக்கிட்டுபோயி கட்டுகட்டு கூட்டிட்டு வந்தோம்..அந்த ஆளு அத எல்லாத்தையும் பிச்சு போட்டுட்டு இருக்கான்..அவன் ஒரு பைத்தியக்காரன்..நீ தான் அவன சாமியார்னு சொல்லிட்டு இருக்க.." என்று வந்தவர் தன் ஆதங்கத்தை சொல்லிமுடிப்பதற்குள் விடுவிடுவென,ஜெயராமன் சாமியார் இருக்கும் இடம் நோக்கி ஓடத்தொடங்கினார்.
ஜெயராமன் சென்று சேர்வதற்குள்..ஏறக்குறைய..கட்டு முழுவதையும் பிரித்து வீசி விட்டிருந்தார் சாமியார்
"..என்ன சாமி இப்படி பண்ணீட்டீங்களே.."ஜெயராமன் குழைய,
"…டேய்... ஒடச்சவனே..கூட்டுவான்டா..போடா..போடா.."
"..என்ன சாமி இப்படி பண்ணீட்டீங்களே.."ஜெயராமன் குழைய,
"…டேய்... ஒடச்சவனே..கூட்டுவான்டா..போடா..போடா.."
அப்படின்னு சொல்லிட்டு சாமியார் ,எதுவுமே நடக்காத மாதிரி படுத்திட்டு இருக்க, ஜெயராமனுக்கு அடுத்து என்ன செய்யறதுன்னு ஒன்னுமே புரியல..
அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு வேண்டிகிட்டே, அங்கேயிருந்து வீட்டுக்கு போயிட்டாரு
தினமும் சாமியார வந்து பாத்துட்டு போயிட்டு இருந்தாரு..
விபத்து நடந்து 16 நாள் முடிஞ்சு 17 வது நாள்..,
பழையபடி எழுந்து நடமாட தொடங்கியிருக்காரு சாமியாரு..,
எல்லாருக்கும் ஆச்சரியம்..கால்ல எலும்பெல்லாம் தூள்,தூளா ஒடைஞ்சிருந்தது. கட்டு போட்டு இருந்தாலே ஆறுமாசத்துக்கு குணமாகிறது கஷ்டம்..
இந்த ஆள் பதினாறே நாள்ல டிங்குனு எழுந்து நடக்கிறாரே..,
இவரு சாதாரணமான ஆளில்ல…அப்படின்னு அப்பதான் எல்லாருக்கும் புரிய ஆரம்பிச்சது..அப்ப இருந்து எல்லாரும் அவர பரிபூரணமா நம்பத்தொடங்கிட்டாங்க..

அவர்தான் மண் உண்ட மகான் ஸ்ரீ மல்லய்ய சுவாமிகள்..அவருடைய சீடர்தான் ஜெயராமன்.
இவர பாக்க வர்றவங்களுக்கெல்லாம் விதவிதமான அற்புதங்கள் நடக்க, இவரோட புகழ் இந்த பகுதி முழுக்க பரவியிருக்கு..
1998 டிசம்பர்ல,
இன்னும் 9 நாள்ல நான் இருக்கமாட்டேன்னு சொல்லிட்டு சமாதி அடைஞ்சிருக்காரு மல்லய்ய சுவாமிகள்..,அதுக்கப்புறமா, நாங்க என்ன செய்யறதுன்னு, எல்லாரும் கேட்டதற்கு, ஒரு வடநாட்டு பையன கை காட்டியிருக்காரு..
அதுல இருந்து ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சாமி அடையாளம் காட்டின அந்த வடநாட்டு பையன் மூலமா, தன்னோட சமாதிக்கு வர்ற ஒவ்வொருத்தருக்கும் பிரச்னை தீர அருள்வாக்கு மூலமா வழி கிடைச்சிருக்கு..,
ஒருகட்டத்துல 2005ல அந்த பையனும் இறந்துபோக..அடுத்ததா..ஜெயராமனோட மனைவி மாலா மூலமா, தன் பக்தர்களுக்கான வழிகாட்டுதல்கள் இப்பவரைக்கும் தொடர்ந்துகிட்டுருக்கு..
இப்பவும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும், ராத்திரி முழுக்க, மல்லய்யா சுவாமி, மாலா மூலமா எல்லாருக்கும் அருள்வாக்கு சொல்றத கேட்க, வெவ்வேற இடங்கள்ல இருந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் இங்க வந்துட்டுதான இருக்காங்க...
இடம் ; அருள்மிகு ஸ்ரீ மண் உண்ட மகான் ஸ்ரீ மல்லய்ய சுவாமிகள் ஆலயம், ஜனப்பன் சத்திரம் கூட்டு ரோடு, சென்னை 67
இடம் ; அருள்மிகு ஸ்ரீ மண் உண்ட மகான் ஸ்ரீ மல்லய்ய சுவாமிகள் ஆலயம், ஜனப்பன் சத்திரம் கூட்டு ரோடு, சென்னை 67
வாய்ப்பிருக்கறவங்க..அந்த மகானின் அருளாசியை பரிபூரணமாக பெற்று மகிழுங்கள்..!
- எதிர்வரும் பதிவுகளில் ஆன்ம தரிசனம் பெறுவோம்.
- எதிர்வரும் பதிவுகளில் ஆன்ம தரிசனம் பெறுவோம்.
மீள்பதிவாக:-
மண்ணே மருந்து; மலையே மருந்து - சித்தர்கள் வாழும் திருக்கச்சூர் கிரிவலம் - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_3.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே! - இன்று பட்டினத்தார் குருபூசை - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_1.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
நீள நினைந்து அடியேன் - ஸ்ரீ சுந்தரர் குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_28.html
திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html
TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html
சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html
சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html
சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html
சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html
சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html
வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html
உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html
கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html
ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html
பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3) - https://tut-temples.blogspot.com/2019/09/3.html
பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html
சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html
மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html
ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html
ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html
அற்புதமான பதிவு அண்ணா 🙏
ReplyDelete
Deleteநன்றி சகோதரி. தொடர்ந்து நம் தளத்தை பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகின்றோம்.
அனைத்தும் நன்மைக்கே.
அனைத்திற்கும் நன்றி
வாழ்க வளமுடன்.
ரா.ராகேஷ்
கூடுவாஞ்சேரி