"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, August 22, 2020

ஓம் கம் கணபதயே நமஹ - விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

அடியார் பெருமக்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முதலில் அனைவருக்கும் நம் தளம் சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் திருக்கோயிலில் சென்ற ஆண்டு நாம் உழவாரப் பணி செய்தோம். ஒரு நாள் அல்ல..இரண்டு நாட்கள் செய்தோம். அந்த அனுபவத்தை இன்றைய பதிவில் தருகின்றோம். 



கூடுவாஞ்சேரி மாமரத்து ஸ்ரீ சுயம்பு சித்தி விநாயகர் கோயில் தான் தேடல் உள்ள தேனீக்களாய் குழு தன் வேரை ஊன்றி கிளைகள் மூலம் தொண்டினை பரப்ப பிள்ளையார் சுழி போட்டது. ஆம். அன்னசேவை ஆரம்பித்த நாம், ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு, அமாவாசை மோட்ச தீபம் என இங்கே தான் செய்து வருகின்றோம். சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக குரு வழிபாடு, குரு காட்டிய மோட்ச தீப வழிபாடும் நம் குழுவின் சார்பில் செய்து வருகின்றோம் என்றால் அது கூடுவாஞ்சேரி விநாயகர் அருளால் தான். அப்படியே நாம் அங்கே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு மற்றும் இன்னும் பிற சேவைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

சரி..சென்ற ஆண்டில் நம் தளம் சார்பில் நடைபெற்ற உழவாரப் பணிக்கு செல்வோமா?






இதற்கு முந்தைய பதிவில் முதல் நாள் உழவாரப்பணி அனுபவத்தோடு நிறைவு செய்திருந்தோம். அனுபவத்திற்கு செல்லும் முன்னர் கூடுவாஞ்சேரி மாமர சுயம்பு சித்தி விநாயகர் திருக்கோயில் பற்றி சில செய்திகள் உங்களோடு பகிர விரும்புகின்றோம்.

1. கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள கோயில் 
2. இங்கு விநாயகர் இடம்புரி கணபதி, வலம்புரி கணபதி என்று அருளாசி தருகின்றார்.
3. இவர் சுயம்பு விநாயகர் ஆவார் 
4. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் 
4. நவகிரக நாயகர்கள் தம்பதி சகிதமாக அருளாசி தரும் தலம் 
5. குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் அருளாசி தரும் தலம் 
6. சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதியில்குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் வழிநடத்தும் அமாவாசை மோட்ச தீப வழிபாடு நடைபெற்று வரும் தலம்
7. முருகப் பெருமான் ஜீவ நாடியில் அகத்தியர் சூட்சுமத்தில் பூஜிக்கும் கணபதி என வாக்கு கொடுத்துள்ளார்

இது போன்று இத்திருத்தலம் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். 

சரி..இரண்டாம் நாள் உழவாரப் பணி அனுபவத்திற்கு சொல்லலாம்.
 

ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணிக்கு அதிக அன்பர்கள் வந்து இணைந்தார்கள். இதோ. தம்பி பாலமுருகன் வந்த உடன் சன்னிதி உள்ளே சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள்.


அடுத்து நண்பர் சத்யராஜும் தன் பங்கிற்கு அம்பாள் சன்னிதி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.



மேலும் நங்கநல்லூர் விஜய் ஆதித்தன் தம்பதியும் சன்னிதி உள்ளே சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள்.இவர் முருகப் பெருமான் சன்னிதி சுத்தம் செய்தார்.


அடுத்து தாம்பரம் அனந்த கிருஷ்ணன் தம்பதியினரும் இணைந்தார்கள். இவர்கள் மாமரத்து ஈஸ்வர் சன்னிதி எடுத்துக்கொண்டார்கள். திருமதி விஜய சுந்தரி அம்மா அவர்கள் சன்னிதி வெளியே சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். மகளிர் அணியினர் சன்னிதி வெளியே உள்ள எண்ணெய் பிசுக்குக்கள் சுத்தம் செய்வது போன்ற பணியில் ஈடுபட்டனர். சுமார் 9 மணி அளவில் ஆரம்பித்த பணி, நேரம் ஆகஆக சூடு பிடித்தது.





அடுத்து  ஒவ்வொரு சன்னிதியில் முழு வீச்சில் சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதை கீழே நீங்கள் காணலாம்.






சுமார் 11:30 மணி இருக்கும். தகிக்கும் சூடு ஆரம்பித்து விட்டது. முந்தைய நாள் நாம் எடுத்து வைத்த பாத்திரங்களை துலக்கும் பணியில் மகளிர் அணியினர் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள். அன்றைய தினம் ஒவ்வொரு சன்னிதியில் இருந்து மேலும் பிரபைகள் சேர்ந்து விட்டது.





மகளிர் அணியினர் கை வண்ணத்தில் மிளிரும் பாத்திரங்கள்.





தம்பி பாலமுருகன் சிவன் சன்னிதி மேலே ஏறி அங்கே இருந்த பொருட்களை சுத்தம் செய்ய ஆரம்பித்த காட்சி 



இறை அழகு காக்கும் பிரபைகள் ஒவ்வொன்றாக சுத்தம் செய்வதற்கு தயாரான நிலை நீங்கள் காணலாம்.








மகளிரின் கைவண்ணத்தில் மீண்டும் விளக்குகள் 






சுமார்  1மணி அளவில் நாங்கள் குருதரிசனம் பெற மகளிரோடு கிளம்பினோம். ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திரர் 
சுவாமிகளின் 348 ஆவது வருட ஆராதனை ஆதனுரில் நடைபெறுவது பற்றி நமக்கு அழைப்பிதழ் மூலம் 
தெரிவித்து இருந்தார்கள். மகளிரை மட்டும் அழைத்துக்கொண்டு குரு தரிசனம் பெற நாம் சென்றோம்.





குருவே சரணம்..திருவே சரணம் ...


உழவாரப்பணிக்கு நம்மை ஆட்படுத்தி, குரு தரிசனம் பெற வைக்கின்றார்கள் எனும் போது இறையின் கருணைக்கு எல்லை ஏது என்று நமக்கு தோன்றியது. அடுத்து மீண்டும் உழவாரப்பணி ஆரம்பம் 



அன்றைய தினம் கோயிலில் தண்ணீர் வசதி மின் பற்றாக்குறையால் இல்லை. உடனே தண்ணீர் கேன் கொண்டு பணியை மீண்டும் தொடர்ந்தோம்.


மதிய வேளையில் திரு.ஆதித்யா அவர்களும் நம்முடன் இறைசேவை ஆற்ற இணைந்தார்கள்.










மேலே உள்ள இடம் பணிக்கு முன்னர். கீழே உள்ள படம் சுத்தம் செய்த பின்னர்...





ஒவ்வொரு சன்னிதி உள்ளும் தூய்மை செய்தாகி விட்டது. நம் அகமும் ஏறக்குறைய தூய்மையாகி விட்டது.


அடுத்து பித்தளை பூஜை பொருட்களை குருக்களின் வழிகாட்டல் படி, திருநீறு கொண்டு துடைத்தோம்.




ஒவ்வொரு பூஜை பொருளும் திருநீறு கொண்டு துடைத்த பின்னர் பளபளப்பாக ஜொலித்தது.






நீங்கள் இங்கே நம் குழுவின் கைங்கர்ய பணியை காணலாம்.


சுமார் 4 மணி அளவில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, இதோ இறை தரிசனத்திற்காக நாம் பணிந்த காட்சி 




குருக்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள் 


ஒவ்வொரு அன்பருக்கும் பிரசாதம் கோயில் சார்பில் வழங்கப்பட்டது.



ஒவ்வொரு உழவாரப் பணியும் ஒவ்வொரு விதமாக மனதிற்கு நெருக்கமாக அமையும். அந்தவகையில் இந்த உழவாரப் பணி நம் மனதில் இன்னும் தொண்டு செய்ய தூண்டியது.




நண்பர் சத்யராஜ் அவர்கள் பிரசாதம் பெற்ற போது




                                  திரு. விஜய் ஆதித்தன் தம்பதியர் பிரசாதம் பெற்ற போது 







திருச்சியில் இருந்து வந்த எம் உறவினர் பிரசாதம் பெற்ற போது 

24.08.2019 மற்றும் 25.08.2019 ஆகிய இரண்டு நாட்களிலும் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுக்கு நம் தளம் சார்பில் சிறிய கைங்கரியமாக இந்த உழவாரப்பணி அமைந்தது. உள்ளம் மகிழ்ந்தது. மனம் மகிழ்ச்சியுற்றது . இரண்டு நாட்களிலும் சிரமம் பாராது இணைந்து தொண்டாற்றிய அணைத்து அன்பர்களுக்கும் நம் தளம் சார்பில் இந்தப் பதிவின் மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக:-

வித்தக விநாயக! விரை கழல் சரணே! - உழவாரப்பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_22.html

மகான்களின் வி(வ)ழியில்...- ஆதனூரில் இராகவேந்திர சுவாமிகள் ஆராதனை - 25.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/25082019.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

திருஊரகப் பெருமாளுக்கு செய்த உழவாரப் பணியும் ; அது அள்ளித் தந்த உற்சாகமும் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_3.html

ஒரே கல்லுல மூணு மாங்கா : குன்றத்தூர் கோவிந்தனுக்கு உழவாரப் பணி செய்ய வாங்க! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post.html


தேனியில் ஞானப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - 05.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/05012020.html

2020 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/12/2020.html

தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT - 2020 வருட வாழ்த்துக்களுடன் .....! - https://tut-temples.blogspot.com/2019/12/tut-2020.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4)  - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

No comments:

Post a Comment