"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 3, 2020

மண்ணே மருந்து; மலையே மருந்து - சித்தர்கள் வாழும் திருக்கச்சூர் கிரிவலம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆடி மாத பௌர்ணமி இன்று. முழுமதி நாள் என்றும் சொல்லலாம் அல்லவா!  முழு நிலவு வழிபாடு என்று  என்னமோ ஏதோ என்று நினைக்க வேண்டாம். பௌர்ணமி வழிபாட்டைத் தான் இங்கே அறிய இருக்கின்றோம். வானத்தில் உள்ள மதியைப் பார்த்து இன்று அம்மாவாசையா? பௌர்ணமியா? என்று சொன்னவர்கள் நம் தாத்தாக்கள். இணைய யுகத்தில் வாழும் நாம், வானம் பார்த்து இது போல் சொல்ல முடியுமா என்றால் அது கேள்விக்குறியே ? நம் இயற்கை வழிபாட்டில் சில வழிபாடுகள் மிக மிக முக்கியமானவை. ஆனால் இவற்றையெல்லாம் நாம் தொலைத்து விட்டோம் என்பதே உண்மை.

நிலா/ நிலவு/ சந்திரன் என்று சொன்னால் தெரியாத குழந்தைகள் மூன் (moon ) என்று சொன்னால் விளங்கும் வகையில் இன்று வளர்கின்றன. இதில் பௌர்ணமி என்றால் என்ன? என்று கேட்கும் காலமும் வரும். அந்த வகையில் ஞாயிறு வழிபாடு, பௌர்ணமி வழிபாடு என்று சொல்லிக்கொண்டே செல்லலாம்.
 இயற்கை வழிபாட்டில் ஞாயிறு போற்றுதல் ஆதி வழிபாடாக இருந்திருக்க வேண்டும். ஆதிவாரத்தை ஓய்வு நாளாக இல்லாமல் ஆன்ம விழிப்பை தரும் பிராத்தனை நாளாக கொள்வோம். இனி இது போன்ற சிறப்பு நாட்கள் என்று பட்டியலிட்டால் நாளெல்லாம் நமக்கு திருநாளே என்று கொண்டாடத்தான் தோன்றுகின்றது.

பௌர்ணமி என்றாலே நம் மரபில் விரதம் இருந்து வேண்டியதை பெறும் நாள் ஆகும். இதனை மேலும் சிறப்பு செய்வதற்கு கிரிவலம் துணை செய்கின்றது. ஆம். இன்றைய பதிவில் சித்தர்கள் வாழும் திருக்கச்சூர் கிரிவலம் செல்ல இருக்கின்றோம்.

 கிரிவலம் என்று சொன்னாலே அது திருஅண்ணாமலை தான். திருஅண்ணாமலையோடு தற்போது பல மலைகளிலும் கிரிவலம் நடைபெற்று வருகின்றது. திருக்கழுக்குன்றம், திருப்பரங்குன்றம்,பர்வதமலை,பழனி மலை என்று. இவற்றுள் திருக்கழுக்குன்றம், பழனி மலைகளில் கிரிவலம் செல்ல குருவருள் நம்மை வழி நடத்தியமை நாம் செய்த புண்ணியமே.

அனைவருக்கும் தெரிந்த செய்தி தான். கிரி என்றால் மலை, வலம் என்றால் வலம் வருதல்,சுற்றி வருதல், அதாவது மலையை சுற்றி வருதல் என்று பொருள். முன்பெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர், கிரிவலம் செல்வது என்றாலே சாமியார்களும், ஆன்மிக அருளாளர்களும் மட்டுமே கிரிவலம் சென்று கொண்டு இருந்தார்கள். காலப் போக்கில் சில முக்கிய பிரபலங்கள்கிரிவலம் செல்ல ஆரம்பித்தார்கள். தற்போது அனைவரும் கிரிவலம் செல்லும் அளவிற்கு நாம் கண்டு வருகின்றோம். திருஅண்ணாமலையைப் பொறுத்த வரை, எப்போதும் யாராவது கிரிவலம் சென்று கொண்டே இருப்பார்கள்.

நமக்கு திருஅண்ணாமலை தொடர்பு பற்றி பார்த்தால், சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பே
திருஅண்ணாமலை கிரிவலம் செல்ல பலமுறை முயன்றோம். ஒவ்வொரு முறையும் வேறொரு பணியில் தள்ளப்பட்டோம்.பின் கூடுவாஞ்சேரி வந்த பின்னரும் பல முறை முயற்சித்தோம். இந்த பல முயற்சிகளும் துணை தேடி,வழிகாட்டி தேடி என்றே சென்றது. பின்னொரு நாளில் சுமார்  7 மணி அளவில் கூடுவாஞ்சேரியில் இருந்து கிளம்பி சென்று, உச்சி வெயிலில் கிரிவலம் சென்று கால் பாதம் வெயிலில் நனைந்து..அப்ப்பா..இன்னும் அந்த முதல் கிரிவலம் மனதுள் உள்ளது.அதன் பின்னர் சென்ற ஓராண்டுக்கும் மேலாக பௌர்ணமி தோறும் கிரிவலம் சென்று வருகின்றோம். முதல் முறை ஆரம்பிக்க தான் கடினமாக இருந்தது, இதோ. அவன் அருளால் மாதந்தோறும் அவன் தாள் வணங்கி சென்று வருகின்றோம். பௌர்ணமி செல்ல இயலாது போனால்,வேறொரு விடுமுறை நாள் பார்த்து எப்படியாவது கருணையாம் அருணையை தரிசித்து வருகின்றோம். தற்போது நாம் திருஅண்ணாமலை சென்று கிரிவலம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் நாம் சென்ற ஆண்டில் பிற்பகுதியில் திருக்கச்சூர் கிரிவலம் சென்று வந்தோம். திருஅண்ணாமலை செல்ல முடியாத பௌர்ணமி நாட்களில் திருக்கச்சூர் கிரிவலம்  என்று நம் கிரிவலம் தொடர்ந்தது. சுமார் 3 முறை சென்று வந்தோம். பின்னர் இந்த அசாதாரண சூழல் காரணமாக அங்கும் செல்ல இயலவில்லை. ஆனால் இன்று குருவருள் துணையுடன் மீண்டும் திருக்கச்சூர் கிரிவலம்  சென்று வந்தோம். அனைவரும் நம்முடன் திருக்கச்சூர் கிரிவலம் வர தயார் ஆகுங்கள்.

அதற்கு முன்பாக இன்றைய பௌர்ணமி இறைப்பணி பற்றி தங்களிடம் பகிர விரும்புகின்றோம்.


இன்று காலை சுமார் 30 பொங்கல், கேசரி, சாம்பார் என தயார் செய்து கூடுவாஞ்சேரி நோக்கி சென்றோம்.






கூடுவாஞ்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அன்பர்களுக்கு உணவு பொட்டலங்களை கொடுத்தோம். அப்போது ஒரு புதிய அன்பர் நம் அருகில் வந்து, நம் சேவையைப் பாராட்டினார். கீழே அந்த நிகழ்வை பதிவு செய்துள்ளோம்.


அடுத்து சென்ற சனிக்கிழமை பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயத்திற்கு இலுப்பெண்ணெய் நம் தளம் சார்பில் கொடுத்து அங்கே நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணிகள் பற்றி பார்த்து விட்டு வந்தோம்.







இங்கே நாம் நம் தளம் சார்பில் செய்து வரும் அறப்பணிகள் சிலவற்றை தான் கூறியுள்ளோம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தேடல் உள்ள தேனீக்களாய் குழு நம் குருநாதர்களின் ஆசியால் தன் அறப்பணிகளை விரித்துக் கொண்டே வருகின்றது. தொடர்ந்து அறப்பணிகளுக்கு பொருளுதவி செய்து வரும் அனைவருக்கும் நன்றி கூறி , கிரிவலம் செல்ல ஆயத்தமாவோம்.

முதலில் திருக்கச்சூர் மலைக்கோயில் அடிவாரம் சென்றோம். அங்கே நம்மை சிவனார் வெகுவாக ஈர்த்தார். அவரிடம் வேண்டுதல்களை சமர்பித்தோம்.



இதோ..நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது திருக்கச்சூர் மலைக்கோயில் ஆகும்.



கோயிலின் இடப்பக்கத்தில் ஒரு அறிவிப்பு பதாகை இருந்தது. அந்த வழியில் கிரிவலம் செல்ல ஆரம்பித்தோம்.


பொதுவாக திருக்கச்சூர் கிரிவலம் பௌர்ணமி இரவில் தான் அடியார் திருக்கூட்டத்தோடு நடைபெறும் என்று கூறினார்கள். நாம் நம் சூழலை கருத்தில் கொண்டு காலையில் சென்று கொண்டிருக்கின்றோம். மனதுள் 1008 கேள்விகள். கிரிவலம் எப்படி இருக்கும்? பாதை எப்படி இருக்கும். கற்கள் நிறைந்து இருக்குமோ? என்று.



 வழக்கமாக உள்ள பாதை தான்.எளிதாக நடந்து விடலாம் என்றே தோன்றியது.






பாதையின் இரு மருங்கிலும் பச்சைப் பட்டாடை போர்த்தி இருந்ததை கண்டோம். மனதுள் கொண்டாட்டம் தான். அட..இதற்கு தானே ஆசைப்பட்டோம் என்று மனதுள் துள்ளிக் குதித்தோம். அருளை அள்ளிக்கொண்டே நடந்தோம்.



                                                 காலைக் கதிரவன் அருள் பெற்ற காட்சி.




திருஅண்ணாமலையில் இருப்பது போல் இங்கே முதலில் நாம் வருண லிங்கம் தரிசனம் பெற்றோம்.


நாம் சென்ற போது முன்னிரவில் மழை பெய்து இருந்தமையால், நீரின் ஆற்றலை பாதம் வழியாக பெற்று நடந்து சென்று கொண்டிருந்தோம். கிரிவலத்தின் நோக்கமே பஞ்சபூத ஆற்றலை நாம் பெறுவதே ஆகும். இது மலை யாத்திரைக்கு பொருந்தும்.



அடுத்து நாம் மனதுள் சிவ மந்திரங்கள் ஓதி, கிரிவலம் தொடர்ந்து கொண்டே இருந்தோம். நாம் மட்டுமே சென்று கொண்டிருந்தோம் என்று நினைத்தோம். ஆனால் அடியார்கள் சிலரும் கிரிவலம் வந்தார்கள் என்று பார்த்தோம்.


 
3.5 கிலோ மீட்டர் தூரம் தான். ஆனால் மனம் 300 கிலோமீட்டர் தூரம் என்று ஏங்கியது.ஏனெனில் இங்கே உள்ள பசுமை தான் முதல் காரணம். இரண்டு எந்த தொந்தரவும் இல்லை. இயற்கையோடு எளிதாக இணைய முடிகின்றது. திருஅண்ணாமலை கிரிவலம் செல்லும் போது இருக்கின்ற கூச்சல், சப்தம் ,கடைகள் போன்ற எதுவும் இல்லை.




சற்று நேரத்தில் சிறிய கற்கள் கொண்ட பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்தோம்.




                             இங்கே நடக்கும் போது காலில் கொஞ்சம் வலி ஏற்பட்டது 














அடுத்து குபேர லிங்கம் தரிசனம் பெற்றோம்.குபேரனுக்கு உரிய வடக்கு திசையில் அமைந்திருப்பதால் சிவனார் குபேரலிங்கம் என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இந்த திசைக்கு அதிபதி குரு. குபேரலிங்க மூர்த்தியை வழிபட்டால், செல்வம் பெருகும். மனதில் சாந்தியும் சந்தோஷமும் நிலவும்.இங்கிருந்து கொண்டே திருஅண்ணாமலை குபேர லிங்க தரிசனம் பற்றி நினைத்து பார்த்தோம். எப்போதும் கூட்டமாக அல்லவா அங்கு இருக்கும். இங்கு கூட்டம் இல்லை. ஆனால் நம் கவனத்தை ஒன்றுபடுத்தி, குபேர லிங்கத்திடம் வேண்டினோம்.




சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு கடந்து விட்டோம். இன்னும் 1.5 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. இந்த பாதை அப்படியே ஒரு சிமெண்ட் பாதையில் சென்று இணைந்தது. அடுத்து சிமெண்ட் பாதையில் சென்று கொண்டிருந்தோம்.



இங்கும் இரண்டு புறங்களிலும் பசுமையை ரசிக்க முடிந்தது. ஆனால் போக்குவரத்து வசதிக்காக சாலையை மேம்பாடு செய்துள்ளார்கள். அதுவும் வலது புறம் பார்த்தால் நாவல் மரங்களை அதிகம் காண முடிகின்றது.








அந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது இந்திர லிங்கம் தரிசனம் பெற்றோம்.இவற்றை யார் வைத்தார்கள் என்பது பற்றி நமக்கு தெரியவில்லை. மலைவலம் என்று சொன்னால் திசைகளைப் பொருத்து இந்த அஷ்ட லிங்கங்களை நாம் தரிசனம் செய்ய முடியும்.




இதோ..கோயில் அருகில் சற்று நெருங்கி விட்டோம்.



பெரிய குளத்தை கண்டோம்.ஊர் என்று சொன்னாலே கோயில், குளம் எல்லாம் இருக்க வேண்டும். இன்று இவை கேள்விக்குறியாகி விட்டது. இதோ கோயிலின் அருகில் வந்து விட்டோம் என்றே தோன்றியது.



திருக்கோயிலை அடைந்ததும் உள்ளே சென்றோம். அருள்மிகு ஒளஷதீஸ்வரர் என்கிற மருந்தீஸ்வரர் தரிசனம் கிடைக்க உள்ளே சென்றோம்.


                             


கிரிவலத்தோடு இந்த பதிவை நிறைவு செய்கின்றோம், சித்தர்கள் தரிசனம் இங்கே நாம் பெற முடிகின்றது. கோயிலின் அருகிலேயே ஓம் ஸ்ரீ சற்குரு குழந்தைவேல் சுவாமிகள் ஜீவா சமாதி உள்ளது. அவருக்கு எதிரே அவருடைய சீடரின் ஜீவசமாதியும் உள்ளது.இந்த இரண்டு சித்தர்களின் தரிசனம் இங்கே நாம் பெற முடியும்.


எப்படி செல்வது:-

சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் திரும்பி ரயில்வே கேட் தாண்டி சுமாராக 1 கி.மி. தூரம் சென்ற பின் வலதுபுறம் பிரியும் சாலையில் மேலும் 1 கி.மி. தூரம் சென்றால் திருக்கச்சூர் ஆலயத்தை அடையலாம். ஊரின் நடுவே கோவில் உள்ளது. சிங்கப்பெருமாள்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது நல்லது. இல்லாவிடில் சுமார் 2 கி.மி. தொலைவு நடந்து செல்ல வேண்டும்.

 காலை  9:30 மணி முதல் நண்பகல் 11:00 மணிவரை ,மாலை 4:30 முதல் 7:30 மணிவரை கோவில் திறந்திருக்கும். 

இனிவரும் பதிவில் மீண்டும் திருக்கச்சூர் சென்று தரிசனம் பெறலாம்.

மீள்பதிவாக:-

 கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

 காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே! - இன்று பட்டினத்தார் குருபூசை - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_1.html

 ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

நீள நினைந்து அடியேன் - ஸ்ரீ சுந்தரர் குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_28.html

 திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

No comments:

Post a Comment