ஆடி மாத அமாவாசை மோட்ச தீப வழிபாடு, ஆயில்ய நட்சத்திர ஸ்ரீ அகத்தியர் வழிபாடு, ஆடி மாத சேவைகள் அனைத்தும் குருவருளால் நம் தளம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. இந்த இக்கட்டான சூழலிலும் பொருளுதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறி இன்றையப் பதிவை தொடர்கின்றோம்.
ஆனி மாத வழிபாடுகளில் ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு
பூசை பற்றி பார்த்தோம். எம் தமிழ்மொழியோடு தற்போது செய்துவரும் பயணத்தில்
தான் நமக்கு
கிடைத்தற்கரிய முத்துக்கள் கிடைத்து வருகின்றது. நாளொரு மேனியும், பொழுதொரு
வண்ணமும் நமக்கு கொண்டாட்டமாக இருக்கின்றது. இல்லத்தில் தான்
இருக்கின்றோம். ஆனால் இதயத்தில் எம் பெருமான் இருக்கின்றார் அல்லவா? எத்தனை
அருளாளர்கள் நமக்கு கிடைத்துளார்கள். நமக்கு வழிகாட்டியும்
வருகின்றார்கள்.
இந்த பாரத நாடு, பழம் பெரு நாடு
என்பது மட்டுமன்றி பல அருளாளர்களை தன்னகத்தே கொண்ட நாடு, ஆன்மிகத்தையும்,
ஆரோக்கியத்தையும் பாருக்கே சொன்ன நாடு. எண்ணிக்கையில் அடங்கா அருளாளர்களைக்
கொண்ட நாடு. "நான் யார் ?" என்று உலகிற்கே போதித்த ரமண மகரிஷி, வடக்கே
கங்கை ஆற்றின் பக்கத்தில் பிறந்து, தென்னகத்தில் வந்து ஞானம் பெற்ற
"யோகிராம் சூரத் குமார்" , சைவத்தில் நால்வர்கள் மட்டுமின்றி, அறுபத்து
மூன்று நாயன்மார்கள், வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்கள், கௌமாரத்தில்
அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வாரியார் சுவாமிகள், நவகோடி சித்தர்
பெருமக்கள், ரிஷிகள். முனிவர்கள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். எம்
பெருமான் தன் அறுபது நான்கு திருவிளையாடல் நடத்தி காட்டிய ஊர் என்று
ஒன்றா, இரண்டா அற்புதஙகள். எண்ணிலடங்கா அற்புதங்கள் கொண்ட நாடு நம் பாரத
நாடு.
இந்த பாரத நாட்டில் அவதரித்த மகான்கள்,
அருளாளர்களை கொண்டாட வேண்டியது நம் கடமை அல்லவா? எனவே தான் அருளார்களின்
குரு பூசை தகவல்களை கூடுமானவரை நம் தலத்தில் தொகுத்து தருகின்றோம்.
அருளார்களின் கால் பட்ட இடத்தில நம் மனம் பட வேண்டும். உதாரணமாக வடலூர்
சென்றால் நாம் வள்ளலாரின் புனிதம் அறிய முடிகின்றது. அந்த மண்ணை மிதிக்கும்
போது நம்மிலும் ஜீவ காருண்யம் கொஞ்சமாவது பெறுவதை நாம் உணர முடிகின்றது.
இது போன்ற தலங்களுக்கு நாம் சென்று அருளாளர்களின் அருளை நாம் பெற முடியும்
அல்லவா?
இந்த வரிசையில் ஆடி சுவாதி குருபூஜையாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் பற்றி இன்று காண இருக்கின்றோம்.
அந்தணர் குலத்திலே தோன்றி, அரச வாழ்விலே வளர்ந்து - ஒருமணத்தை சிதைவு செய்து ஆட்கொண்ட உவனைக் கொண்டே இருமணத்தை கொண்டருளிப் பணி செய்த வல்லாளன்
பதினெட்டு வயதில் பாடுகின்றார் - "வேறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டு ஒழிந்தேன்.
மனைவி மக்கள் சச்சரவா? சொத்து பிரச்னையா? நோய்த் தொல்லையா?
இதை எல்லாம் சிவனே அவருக்கு உடனிருந்து தீர்த்து வைத்தானே.
பின் ஏன் வெறுப்பு? வாழ்வு ஆவது மாயம் இது மண்ணாவது திண்ணம்
என உணர்ந்தமையால்
மண்ணிலே பிறந்து இறந்து மண்ணாவற்கு
ஒருப்படாமையால்
இதனாலே நொடித்தான் மலை உத்தமன் - வான் எனை வந்து எதிர் கொள்ள மத்தயானை அருள் புரிந்து ஊன் உயிர் வேறு செய்தான்
சுந்தரமூர்த்தி
நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் நால்வரில் ஒருவரும், அறுபத்து
மூன்று நாயன்மாரில் ஒருவரும் ஆவார். இவர் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது
சிவபெருமான் கிழவனாக சென்று தடுத்தார்.பின்பு சுந்தரரின் பிறவி நோக்கம்
சிவபெருமானை புகழ்ந்து பாடுவது என புரியவைத்தார். இதனை தடுத்தாட்கொள்ளுதல்
என சைவர்கள் கூறுகிறார்கள். இவர் இறைவன் மீது பல தலங்களுக்குச் சென்று
பாடியுள்ளார். இப்பாடல்களை திருப்பாட்டு என்று அழைக்கின்றனர்.
திருப்பாட்டினை சுந்தரர் தேவாரம் என்றும் அழைப்பர். [திருமணத்தினை தடுத்து
சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே பரவையார், சங்கிலியார் என்ற பெண்களை
திருமணம் செய்துவைத்தார்.
இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.இவர் பாடிய தேவாரங்கள் 7
ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை
என்னும் நூலில் 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும்
குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் எனும்
நூலை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றார்களான
சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து சிவதொண்டர்களின்
எண்ணிக்கையை 63 என கையாண்டார்.
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று
அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம்.
இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.
இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை
பண்களோடு அமைந்துள்ளன. அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர்.
இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள்
இடம்பெற்றுள்ளன.தேவாரங்களில் செந்துருத்திப் பண் கொண்டு பாடல்பாடியவர்
இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப்
பண்ணில் பாடல்களை பாடவில்லை.
சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர்
அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.
சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும்
ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி
சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரன்
என்பதாகும்.நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய
அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே
அறியப்படுகிறார்.
சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி
அரசர் நரசிங்கமுனையார் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச்
சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.
மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி
சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று
முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக்
கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர்
வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை
அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே
வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி"
என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக
இறைவனை தன்னுடைய நண்பனாக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று
தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த
பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது.
இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப்
பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப்
பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க
இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.
அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார்.
இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.சேரமான் பெருமானை
இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள்,ஆடைகள்
போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில்,
இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு
பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’
எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப்
பெற்றுக் கொண்டார்.திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி
அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன்
வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
சுந்தரர் தனது 18 ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட பதிகம் பாடினார்.
சிவபெருமான் வெள்ளை யானை சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார்.
அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.
இப்படி பாடிய வாறே கயிலை சென்ற நாள் இன்றைய ஆடி சுவாதி நன்னாள் - கி.பி.825இல் என்பர். அதன்படி நேற்றைக்கு 1195 வது குருபூசை.
இனி குருபூஜை தரிசனம் காண இருக்கின்றோம்.
நேற்று சைதை நடராஜர் சபை சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசை விழா
அடுத்து நாம் ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயிலுக்கு சென்று நால்வர் தரிசனம் பெற்றோம். நேற்று அங்கே சுந்தரர் குருபூஜை வழிபாடு நடைபெற்றது. சில நொடிகள் அங்கே இருந்த தருணத்தை இங்கே பதிவு செய்கின்றோம்.
இளநீர் அபிஷேகமும், விபூதி அபிஷேகமும் நாம் கண்டோம். அபிஷேகத்தில் ஒவ்வொரு அடியார்களும் பதிகம் பாடி நம்மை மெய் சிலிர்க்க வைத்தனர். சில பணிகள் காரணமாக நாம் அங்கிருந்து பாதியிலேயே விடை பெற்றோம். மனதில் ஒரு ஏக்கம் இருந்தது. நால்வரின் அலங்கார தரிசனம் பெற முடியவில்லையே என. என்ன ஒரு ஆச்சர்யம். இன்று அந்த தரிசனத்தை பெற்றோம். இதோ..நீங்களும் பெற இங்கே பகிர்கின்றோம்.
அட..இப்படியொரு தரிசனம் நம் அனைவருக்கும் கிடைத்துள்ளது என்றால் அது ஈசனின் கருணையால் அன்றோ !
நேற்று காலை சுமார் 9 மணி அளவில் சுந்தர் குரு பூஜை குன்றத்தூர் ஸ்ரீ கந்தழீஸ்வரர் திருக்கோயிலில் நம் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழு சார்பில் நடைபெற்றது. நேற்று காலை குருக்கள் நமக்கு அலைபேசியில் அழைத்து சங்கல்ப விபரங்களை கேட்க, நாம் வழக்கமாக உலக நன்மைக்கு சங்கல்பம் செய்ய வேண்டினோம். இந்த அசாதாரண சூழலிலும் நமக்கு இருந்த இடத்தில் இருந்து நால்வரின் தரிசனம் பெற்றுள்ளோம். அதுவும் சுந்தரரின் குருபூஜை அன்று பெற்றுள்ளோம் என்பது பெறற்கரிய பேறு தான். குன்றத்தூரில் இருந்து சுந்தரர் குருபூஜை அருள்நிலைகளை பகிர்கின்றோம்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html
ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html
அகத்தியர் தேவாரத் திரட்டு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_10.html
இந்திரகீழ ஷேத்திர இறைவா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post.html
அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html
ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html
கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html
குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html
ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html
வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html
நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html
சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html
வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html
அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html
No comments:
Post a Comment