"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, July 12, 2020

ஜூலை மாத இறைப்பணியோடு கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தேடல் உள்ள தேனீக்களை - TUT குழுவின் சேவைகள் அனைவரும் அறிந்ததே. எப்போதும் அன்னதானம் வழக்கம் போல் நடைபெறும். இம்மாதம் சென்ற வாரம் முதல் தான் இயல்பு நிலை லேசாக திரும்பி வருகின்றது. எனவே இம்மாதம் என்ன செய்யலாம் என்று யோசித்த போது, ஆலய வழிபாட்டிற்கு நம்மால் முடிந்த பொருளாதார உதவி செய்ய எண்ணினோம் அட..இப்படி ஒரு எண்ணம் உருவாக்கியது நம் குருநாதர் தான். உடனே நமக்குத் தெரிந்த சில கோயில்களுக்கு தொடர்பு கொண்டு நம் விருப்பத்தை கூறினோம். அதன்படி கீழே உள்ள கோயில்களுக்கு நம் தளம் சார்பில் சிறு உதவி செய்துள்ளோம்.

1. ஸ்ரீ வாலீஸ்வரர் ஆலயம் - நித்ய பூசை 
2. கும்பகோணம்  தோஷம் போக்கும் 108 சிவாலயம் - பிரதோஷ வழிபாடு  
3. திமிரி உழவாரப்பணி குழு 
4. சப்தரிஷிகளும் பூசித்த நாகப்பட்டினம் சுந்தர விடங்கர் - பௌர்ணமி பூசை 
5. பனப்பாக்கம் ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் - ஆயில்ய வழிபாடு 

1. ஸ்ரீ வாலீஸ்வரர் ஆலயம் 

சிவராத்திரி தரிசனத்தில் பஞ்சேஷ்டி நோக்கி சென்று, சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வாலீஸ்வரர் ஆலயம் சென்று அம்மையப்பனை தரிசித்து, பதிகங்கள் பாடி பக்தி பரவசம் பெற்றோம்.இங்கே நம் தளம் சார்பில் இலுப்பெண்ணை கொடுத்தோம்.இந்த ஆலயத்தை நாம் தரிசிக்க பெரும்பாடு பட்டோம் என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே குருக்களிடம் பேசி இருந்தாலும் நம்மால் சரியாக கோயிலின் இருப்பிடம் கண்டுபிடிக்க இயலவில்லை. இணையத்திலும் எந்த வழித்தட தகவல் இல்லை. நாம் செல்லும் நேரம் இரவு 11 மணி என்பதால் குருக்களுக்கு அழைத்து நாம் அவரை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. கோயில் சரியாக பஞ்சேஷ்டி அகத்தியர் கோயிலுக்கு எதிரே உள்ள வழியில் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது. நாம் அந்த பாதை தாண்டி சென்று விட்டோம். மீண்டும் இதே பாதைக்கு திரும்பி வந்து, கோயிலை நோக்கி சென்றோம். நாம் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை. அருளை அள்ளினோம். சிவ புராணம் படித்தோம், மேலும் சில பதிகங்கள் பாடினோம்.




                           




அடுத்து கும்பகோணம்  தோஷம் போக்கும் 108 சிவாலயம் - பிரதோஷ வழிபாடிற்காக நம் தளம் சார்பில் உபயம் நல்கினோம். ஒரு முறை நேரில் தரிசனம் பெற்று, நம் தலத்தில் பேசுவோம்.

அடுத்து பனப்பாக்கம் ஸ்ரீ மாயூரநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாட்டிற்கு பொருளுதவி செய்ய நம் குருநாதரால் உணர்த்தப்பட்டது.

அடுத்து சப்தரிஷிகளும் பூசித்த நாகப்பட்டினம் சுந்தர விடங்கர் - பௌர்ணமி பூசைக்காக நம் தளம் சார்பில் பொருளுதவி செய்தோம். நாமே இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆம்.சென்ற மாத ஆனி பௌர்ணமி குரு பூர்ணிமா ஆகும். சரியாக குரு பூர்ணிமா அன்று நம் தளம் சார்பில் உலக நன்மைக்காக சப்தரிஷி பூசித்த கோயிலில் பௌர்ணமி பூசை செய்துள்ளோம் என்றால் குருவின் கருணைக்குத்  தான் எல்லை உண்டோ! இதோ. அன்றைய தின அருட்காட்சிகள் உங்களுக்காக தருகின்றோம்.










இதுதவிர வேறு சில இறைப்பணியும் இந்த மாதம் செய்துள்ளோம். வழக்கம் போல் பொருளுதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறி, கூட்டுப் பிரார்த்தனை பற்றிய அறிவிப்பை தருகின்றோம்.

கூட்டுப் பிராத்தனைக்கு என்றுமே மகத்துவம் அதிகம். எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒரே பலனை எதிர்பார்த்து பிரார்த்தனை செய்யும்போது நிச்சயமாக அதற்கு கிடைக்கும் பலனின் பலமும் அதிகம் என்பார்கள்.

உதாரணமாக, பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் ஏதேனும் பிரச்சினைகளை சந்திக்கையில் கூட்டமாக இணைந்து  வெற்றி பெறுவதை பார்த்திருக்கின்றோம். இது எதார்த்தமான விடயம். இதே நம்பிக்கையே இறைவழிப்பாட்டிலும் கூட்டு பிராத்தனை மூலம் கையாளப்படுகிறது. 

பலரும் ஒன்றாக இணைந்து ஒருமித்த மனதோடு பிரார்த்தனை செய்கையில் மனிதர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுகின்றது.

கோவில்கள் என்பது மன கஷ்டத்தில் இருக்கும் மக்கள் கூடி பேசி தங்கள் பிரச்கைனைகளுக்கு தீர்வு காணும் இடமாகவே முன்பு பாவிக்கப்பட்டது, கூடி பேசும் இடத்தில் தனியாக உட்கார்ந்து சிந்தித்தால் முடிவு பிறக்குமா?. இதனால் தான் ஊருக்கு ஊர் கோவில்கள்  இருந்தன. மனிதர்களின் பிரச்சினைகளை மக்களுக்குள் மக்களாக பேசி தீர்வு காண்பதே கூட்டு வழிபாடு. காலப் போக்கில் இந்த முறையும் மாறிவிட்டது. வழக்கங்களும் மறைந்துவிட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் கூட்டு வழிபாடு வலுப்பெற்று வருகின்றது.

நாம் அது வேண்டும், இது வேண்டும் என்று தினமும் வேண்டுகின்றோம். வேண்டுவனவற்றிற்கு நம்மை நாம் தகுதியாக்கி உள்ளோமா? நம்முள் உள்ள தீமைகளை வேரறுத்து வருகின்றோமா ? ஹ்ம்ம்..ஏதும் இல்லை. பின்னர் எப்படி நாம் வேண்டுவது கிடைக்கும். வேண்டுவது கிடைக்க இறையோடு பேசுங்கள். நித்தம் வழிபாடு செய்யுங்கள். வழிபாட்டில் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள். நம் தளத்தில் கூட்டுப் பிரார்த்தனை பற்றிய அறிவிப்பு செய்து இருந்தோம். அருப்புக்கோட்டை திரு.சிவபெருமாள் ஐயா அவர்கள் உடல்நலம் பெற்று வீட்டிற்கு வந்து விட்டார்கள்.  அருப்புக்கோட்டை திரு.சிவபெருமாள் ஐயாவிற்கு கூட்டுப்பிரார்தனையோடு நம் தளம் சார்பில் பொருளுதவி செய்தோம். இங்கே அனைவருக்கும் நம் தளம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


இது தான் கூட்டுப் பிரார்த்தனையின் சக்தி. கூட்டுப் பிரார்த்தனை விதியையும் மாற்றக்கூடியது. அடுத்து மீண்டும் ஒரு அன்பருக்காக கூட்டுப்பிரார்த்தனை செய்தோம். 36 வயது அன்பர் திரு.பிரதீப் அவர்களும் பூரண உடல்நலம் பெற்று வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அவர்களின் நண்பர் திரு.குருசாமி நம்மைத் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்கள். அனைத்தும் குருவருளால் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.



பிரார்த்தனை 1:

திரு. ரமணய்யா அவர்களின் பேத்தி பிரியா அவர்கள் தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார்.  பிரியா அவர்கள் அவசர சிகிச்சை பிரிவு சம்பந்தமாக படித்து வருவதால், இந்த தொற்றுக்கிருமி உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் பிரியா அவர்கள் இந்த தொற்றுக்கிருமி பாதிப்பில் இருந்து மீண்டு வந்து, பரிபூரண உடல்நலம் பெற்று இல்லம் திரும்ப பிரார்த்திக்கின்றோம்.

பிரார்த்தனை 2:

திருமதி பிரியா அவர்களின் கணவர் திரு.சதீஸ்குமார் அவர்கள் 20 நாட்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பி விட்டார். மருத்துவர்களைப் பொறுத்த வரையில் அவரின் நலம் சரி என்று கூறுகின்றார்கள்.ஆனால் வீட்டில் அவர் படும் கஷ்டம் எங்களால் தாங்க முடியவில்லை. அந்த வலியை வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை. என்று கூறி நம் தள அன்பர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யும் படி வேண்டியுள்ளார்கள். திரு.சதீஸ்குமார் அவர்கள் வெகு விரைவில் பூரண நலம் பெற்று, வீட்டில் இயல்பு நிலைக்கு திரும்ப குருமார்களிடம் பிரார்த்தனை செய்வோம்.

பிரார்த்தனை 3:

சென்னை நங்கநல்லூரில் உள்ள குருசாமியாக நான், ஸ்ரீ ஐயப்பன் அருளால் கடந்த 40 வருடங்களாக 66 முறை சபரிமலை யாத்திரைக்கு சாமிமார்களை அழைத்து சென்று வந்துள்ளேன். மொத்தமாக சுமார் 140 ஐயப்ப சுவாமிகள் வரை சபரிமலை அழைத்து சென்று வந்தோம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஐயப்ப பக்தர்கள் முன்பு போல் வருவதில்லை. இது எனக்கு மிக கஷ்டமாக உள்ளது. இந்த ஆண்டு முதல் வழக்கம் போல் அனைத்து ஐயப்பா பக்தர்களும் நம்முடன் இணைந்து  ராணிப்பேட்டை BHEL  ரயிலடி விநாயகர் கோயிலில் இருந்து சபரிமலை யாத்திரை செல்ல வேண்டி அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகின்றோம்.

நன்றி 
வணக்கம் 
திரு. பாலச்சந்திரன் - குருசாமி

அதுபோல், குடும்பத்திற்காகவும், தேசத்தின் பாதுகாப்புக்காகவும் ஒட்டு மொத்தமாக கூடி பிரார்த்தனை செய்வோம்.

நம் கோரிக்கை இறைவனால் நிறைவேற்றப்படும்.


பிரார்த்தனைக்கென்று நேரம் ஒதுக்கி  பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள் நீங்களே காலை, மாலை ஒரு நேரத்தை எடுத்துக்கொண்டு , நெய் தீபமேற்றி தொடர்ந்து பிரார்த்தனை செய்து வரவும்.

இல்லையேல் இந்தப் பதிவை படிக்கும் அன்பர்கள், பதிவை படித்த பிறகு, அப்படியே ஒரு 15 நிமிடம் அமைதியாக குரு  வழிபாடு செய்து, அப்படியே பிரார்த்தனை கோரிக்கையை படித்து மனதுள் உள்வாங்கி பிரார்த்தனை செய்யும் படி வேண்டுகின்றோம்.

பதிவை மீண்டும் மீண்டும் படித்து உள்வாங்குங்கள். மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்

 மீள்பதிவாக:-

 இன்றைய இறைப்பணியோடு கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_14.html

 வாழ வழி காட்டும் குருவே வருக! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_5.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

 துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா மற்றும் சந்தனக்காப்பில் ஐப்பசி ஆயில்ய தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/10/108.html

 தவமா? கூட்டுப்பிரார்த்தனையா? - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_14.html

  நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html

No comments:

Post a Comment