"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, July 19, 2020

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு அறிவிப்பு - 20.07.2020

 அடியார் பெருமக்களே...

அனைவருக்கும் வணக்கம். இப்போது ஆடிக் கிருத்திகை வழிபாடு முடித்தோம். இதோ அடுத்து ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு பற்றிய அறிவிப்பை இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். ஆடி மாதம் முழுதும் பற்பல விசேங்கள் அடங்கி உள்ளது. ஆடி அமாவாசை ,ஆடிப்பூரம்  , நாக சதுர்த்தி,கருட பஞ்சமி என சிறப்பு வழிபாடு நாட்கள் நமக்கு உள்ளது. இதில் நாம் ஆடி அமாவாசை (20.07.2020) அன்று சிறப்பு வழிபாடு செய்ய இருக்கின்றோம்.

பதிவின் தலைப்பைப் பார்க்கும் போது, தீபங்கள்  என்றாலே கார்த்திகை மாதம் என்று தான் எண்ணத் தொடங்கும்.ஆனால் நாம் தினசரி தீப வழிபாட்டை மேற்கொள்ளும் போது, நமக்கு தீபங்கள் தினமும் பேசத் தொடங்கும்.இது தான் அருட்பெருஞ்சோதி நிலை. இந்த அருட்பெருஞ்சோதி நம்மை தனிப்பெருங்கருணை என்ற நிலையைக் காட்டி, நம்மை அது நோக்கி  பயணிக்க செய்யும்.இது ஒருபுறம் இருக்கட்டும். வரும் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு  என்று நாம் என்ன வழிபாடு செய்ய இருக்கின்றோம். தீபங்கள் என்று வேறு கூறி உள்ளோம். கண்டு பிடித்து விடீர்களா? ஆம்..அது தான் வழிபாட்டில் மிக மிக உயர்ந்த வழிபாடான "மோட்ச தீப வழிபாடு" ஆகும்.

இருளைப் பழிப்பதை விட, ஒரு விளக்கை ஏற்றுவது நலம் என்பதை அறிந்தவர்கள் நம் முன்னோர்கள். அதனால் தான் நம் வாழ்வில், ஒளி தரும் விளக்குக்கு தனி இடமுண்டு. குத்து விளக்கு ஏற்றாமல், நல்ல காரியங்கள் நம்மில் நடப்பதில்லை. தீப ஒளித் திருநாளுக்குப் பின், தீபத்தைக் கொண்டு மாதமாக வரும் கார்த்திகை, ஒளியின் காலம்.வாழ்வின் இருளை விளக்கி ஒளிரச் செய்வதனால் என்னவோ, இதற்கு விளக்கு எனும் பெயர் வந்ததாக கூறப்படுவதுண்டு. இருளை விலக்கி, ஒளியை விளக்குவது தான் விளக்கு.

தீபமேற்றிய உடன் நமக்கு என்ன தோன்றுகின்றது. மகிழ்ச்சி தானே..
தீபமேற்றுவதன் தாத்பரியமே நாம் மகிழ்வோடு வாழ்தல் என்பதற்காகத் தான். தீபமேற்றியவுடன் அந்த இடத்தில் உள்ள இருள் விலகி, ஒளி பெறுகின்றது. இது புறத்தில் நடைபெறும் நிகழ்வு. நீங்கள் இது போன்று தீபமேற்றி பிரார்த்தனை செய்ய செய்ய, அந்த புற நிகழ்வு, உங்கள் அகத்தில் நிகழ்வும். மாசற்ற ஜோதி மனதில் ஒளிர்ந்து, மலர்ந்த மலரை நாம் நம்முள் உணரலாம். நாம் ஒவ்வொருவரும் எத்துணையோ விதமான துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். சொல்லொணா துயரில் இருப்பவர்கள் தினமும் அகல் விளக்கில் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி சிறிய அளவில் பிரார்த்தனை செய்து வாருங்கள். சுமார் மூன்று மாதங்களுக்கு உள்ளாக நீங்கள் மாற்றம் பெறுவது உறுதி.

இந்த உலகம் எதனால் இயங்குகின்றது? சூரியனால் தான். சூரியன் இல்லையென்றால் நம் கதி அதோகதி தான். ஆதியில் நம் வழிபாடாக இருந்ததும் சூரிய வழிபாடு தான். ஞாயிற்றுக் கிழமை வாரத்தின் முதல் நாள், சூரியனை வழிபட்டு நம் நாட்களை தொடங்க வேண்டிய நாள். ஆனால் மாறாக அன்று தான் நாம் கேளிக்கை, கூத்து என்று திண்டாடி வருகின்றோம். ஆதி வழிபாட்டை மறந்து விட்டோம். தற்போது ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாக நம் கையில் சீரழிந்து வருகின்றது. இதற்கு மாற்றாக நாம் என்ன செய்ய முடியும்? ஞாயிற்றுக் கிழமை அன்றாவது விடியல் கண்டு சூரியன் தரிசனம் பெறுங்கள், சூரியக் குளியல் போடுங்கள். சரி வாருங்கள்..விளக்கின் மூலம்  விளக்கம் பெறுவோம்.

உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா மறுபிறவி இல்லாமல் மோட்சம் அடைவதற்காக திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுவது ஐதீகம்.குறிப்பாக அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி அருளிய திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு என்றும் கூறுகின்றார்கள். குறிப்பாக இந்த தீபத்தை மருத்துவ துறையில் இருப்பவர்கள், கோவிலில் ஏற்ற வேண்டும். நம்மைப் பொறுத்த வரையில் பதிவின் ஆரம்பத்திலேயே வழிபாட்டில் மிக மிக உயர்ந்த வழிபாடு என்று இந்த வழிபாட்டை சொல்லி தான் ஆரம்பித்தோம். நாம் யாருக்காக பிரார்த்திக்கின்றோம்/ வழிபாடு செய்கின்றோம்? நமக்கு, நம் குடும்பத்திற்கு, நம் உற்றார் உறவினர்களுக்கு என்று அடுத்த தான் செல்கின்றோம். கண்ணனுக்கு தெரிந்து உடல் பெற்று வாழும் உயிர்களுக்கு வழிபாடு/பிரார்த்தனை/ அன்னசேவை என செய்கின்றோம். ஆனால் கண்ணுக்கு தெரியாமல் உடல் இன்றி வெறும் ஆத்மா மட்டும் வாழுகின்றார்களே..அவர்களுக்கு யார் உணவிடுவது? பிரார்த்திப்பது? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையாக இருப்பதே இந்த  மோட்ச தீபம்  வழிபாடு ஆகும். அப்படியானால் இது மிகவும் உயர்ந்த வழிபாடு தானே? ஐயம் ஏதும் இல்லையே....

உடல் அற்ற உயிர்களுக்காக, நம் முன்னோர்களுக்காக, அவர்கள் அடுத்த நிலையில் முன்னேறும் பொருட்டு வேண்டுவதே இந்த வழிபாட்டின் சூட்சுமம் ஆகும். யோசித்துப் பாருங்கள், நாம் எப்படி இங்கே பிறந்தோம், நம் பெற்றோரால் தானே. அவர்கள்...நம் தாத்தா,பாட்டி போன்ற முன்னோர்களால் தான். இப்போது அவர்கள் இங்கே நம்முடன் இல்லை. ஆனால் அவர்களின் ஆன்மா இந்த நிலவுலகில் இருக்கலாம், அல்லது வேறேனும் உலகில் இருக்கலாம். இது போன்ற உடலேனும் சட்டை இல்லாத உயிர்களுக்கு உணவிட்டு, அவர்களை திருப்தி படுத்தினால் தான் நம் வாழ்க்கை மேன்மையுறும். இதற்காகத் தான் தர்ப்பணம், தானம்,திலா ஹோமம் என உண்டு. அதிலும் குறிப்பாக கருப்பு எள்ளை பயன்படுத்துவோம். இந்த கருப்பு எள் தான் முன்னோர்களுக்கு உணவாக கொடுக்கப்படும் என்பது ஐதீகம். அதனால் தான் மோட்ச தீபத்திலும் கருப்பு எள் சேர்க்கின்றோம்.

நம் குழுவின் சேவையில் குருநாதர்களின் வழிகாட்டலில் மோட்ச தீப வழிபாடு செய்து வருகின்றோம். தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலில் நாம் குருவின் வாக்குப்படி ஆத்ம தீபமாகவும் சில மாதங்களில் மோட்ச தீப வழிபாடு செய்து வருகின்றோம். கடந்த நான்கு மாதங்களாக நாம் அனைவரும் கொரோனா என்ற கிருமியால் அனுபவித்து வரும் இன்னல்கள் ஏராளம். இந்த காலகட்டத்தில் எத்தனை மனிதர்கள்  எப்படியெல்லாம் தம் உயிரை விட்டிருக்கிறார்கள். அந்த குடும்பங்கள் எவ்வளவு கஷ்டம் அனுபவித்து இருப்பார்கள். மருத்துவனையில் இறந்தவரின் உடலை கூட பார்க்க முடியாது தவித்தவர்கள் ஏராளம். இந்த அசாதாரண சூழலால் யாரும் இந்த இறுதிக்கால காரியங்கள் கூட செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எத்தனை துன்பம் இது? பார்ப்பதற்கு மிக எளிதாக இருக்கலாம். நாம் அந்த நிலையில் இருந்து பார்க்கும் போது தான் அதன் வலியும், வேதனையும் புரியும். இந்த கால கட்டத்தில் தன உயிர் நீத்த ஆத்மாக்களுக்கு மோட்சம் அடைய பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காகவும் சிறப்பு வழிபாடாக செய்ய இருக்கின்றோம்.

.

ஆனி மாத மோட்ச தீப வழிபாடானது ஆத்ம தீப வழிபாடாக குருநாதர் ஸ்ரீ அகத்தியர் ஆசியால் நடைபெற்றது.இதோ உங்கள் பார்வைக்கும் சமர்ப்பிக்கின்றோம்.

இனி ஆனி  மாத ஆத்ம தீப வழிபாடு பற்றிய அனுபவம் காண்போம். ஆத்ம தீப வழிபாடு என்றதும் நமக்கும் புதிதாக இருந்தது. ஸ்ரீ அகத்தியர் ஞானக் குடில் திரு. பாலா ஐயாவிடம் இதற்கு ஆசி கேட்டு அன்றைய தினம் மாலை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுக்கு சென்றோம்.




முதலில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானை வழிபட்டோம்.



பின்னர் ஆத்ம தீப வழிபாட்டிற்கு தீபம் தயார் செய்த போது 



                                        இதோ...ஆத்ம தீபம் ஏற்றப்பட்ட நிலையில்.
                      


பின்னர் அப்படியே தீபத்தின் முன் அமர்ந்து நாம் வழக்கமாக பிரார்த்தனை செய்தோம். ஒவ்வொரு முறையும் தீபத்தின் அழகு, அருள் கண்டு ரசித்தோம். நீங்களும் இதனை உள்வாங்கும் பொருட்டு பகிர்கின்றோம். மிக மிக மெதுவாக தீபத்தின் அருளை அப்படியே பெற்றுக் கொள்ளுங்கள்.













மோட்ச தீப மந்திரம்,  பீஜ மந்திரம் ஜெபம் செய்தோம். மீண்டும் தீப தரிசனம் பெற்றுக் கொள்ளுங்கள். 






குருநாதர் ஸ்ரீ அகத்தியரின் முன்னர் போன்று தீபமேற்றி வழிபாடு செய்தது நம்மை இன்புற செய்தது.  இந்த மோட்ச தீப வழிபாடு நம்மை புது அனுபவத்திற்கு இட்டு சென்றது. நேரம் ஆக, ஆக தீபம் காற்றில் அங்கும் ,இங்குமாக பல சொரூபங்களில் கண்டோம்.  







சுமார் 1 மணி நேரம் அங்கேயே இருந்தோம். காற்றில் தீப சொரூபம் மாறிக்கொண்டு இருந்தது நமக்கு ஆச்சர்யம் தான். ஏனெனில் பலத்த காற்று அவ்வப்போது வீசிக்கொண்டிருந்தது. பின்னர் குருநாதரிடம் விண்ணப்பம் வைத்து விட்டு, அங்கிருந்து விடை பெற்றோம்.  இங்கே நாம் ஒரு செய்தியை கூற விரும்புகின்றோம். அன்றைய தினம் நம்மால் வழக்கமான வழிபாடு செய்ய வாய்ப்பு இருந்தது. ஆனால் குருநாதர் சொல்லிய வண்ணம் ஆத்ம தீப வழிபாட்டை செய்தோம். 



மீண்டும் பல முறை நம் குருநாதரை தரிசனம் செய்தோம். 

ஆடி மாத மோட்ச தீப வழிபாடு அறிவிப்பு 

சார்வரி வருட ஆடி  மாத மோட்ச தீப வழிபாடு நாளை  20.07.2020 திங்கட்கிழமை மாலை நடைபெற உள்ளது. தற்போது நிலவி வரும் சூழலில் அரசாங்க உத்தரவால் அனைத்து கோவில் விழாக்களும்,வழிபாடுகளும்   நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.எனவே அடியார் பெருமக்கள்  திங்கட்கிழமை  (20.07.2020) அன்று  மாலை 5 மணி அளவில் குருமார்களின் நாமம் ஓதி, விளக்கேற்றி  இல்லத்திலே முன்னோர்களின் ஆசி வேண்டி வழிபாடு செய்ய வேண்டுகின்றோம்.

இறைவா! பூலோகத்தை பிரிந்து , சாந்தி அடையாத நிலையிலுள்ள அனைத்து ஆத்மாக்களும் மோட்சம் கிட்டிட அருள்புரிய வேண்டுகின்றோம்.

நன்றி 
வணக்கம்.

மீள்பதிவாக:-

மகா பெரியவா அருள் வழியில் "மோட்ச தீபம்" வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post.html

ஆனி மாத இறைப்பணியும், மோட்ச தீப வழிபாடும் - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_21.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

மாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 23.02.2020  - https://tut-temples.blogspot.com/2020/02/23022020.html

தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020.html

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html

ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html

 மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.htm

2 comments:

  1. ungal erai sevai mahathanathu ayya

    ReplyDelete
    Replies

    1. ஐயா
      வணக்கம்,

      தங்களின் கருத்திற்கு தலைவணங்குகின்றோம்.

      Delete