"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, July 2, 2020

அருணகிரிநாதர் குரு பூஜை - பௌர்ணமி திதியோடு கூடிய ஆனி மூலம் - 04.07 2020

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆனி மாத வழிபாடுகளில் ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பற்றி பார்த்தோம். எம் தமிழ்மொழியோடு  தற்போது செய்துவரும் பயணத்தில் தான் நமக்கு கிடைத்தற்கரிய முத்துக்கள் கிடைத்து வருகின்றது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நமக்கு கொண்டாட்டமாக இருக்கின்றது. இல்லத்தில் தான் இருக்கின்றோம். ஆனால் இதயத்தில் எம் பெருமான் இருக்கின்றார் அல்லவா? எத்தனை அருளாளர்கள் நமக்கு கிடைத்துளார்கள். நமக்கு வழிகாட்டியும் வருகின்றார்கள்.

இந்த பாரத நாடு, பழம் பெரு நாடு என்பது மட்டுமன்றி பல அருளாளர்களை தன்னகத்தே கொண்ட நாடு, ஆன்மிகத்தையும், ஆரோக்கியத்தையும் பாருக்கே சொன்ன நாடு. எண்ணிக்கையில் அடங்கா அருளாளர்களைக் கொண்ட நாடு. "நான் யார் ?" என்று உலகிற்கே போதித்த ரமண மகரிஷி, வடக்கே கங்கை ஆற்றின் பக்கத்தில் பிறந்து, தென்னகத்தில் வந்து ஞானம் பெற்ற "யோகிராம் சூரத் குமார்" , சைவத்தில் நால்வர்கள் மட்டுமின்றி, அறுபத்து மூன்று நாயன்மார்கள், வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்கள், கௌமாரத்தில் அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வாரியார் சுவாமிகள், நவகோடி சித்தர் பெருமக்கள், ரிஷிகள். முனிவர்கள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். எம் பெருமான் தன் அறுபது நான்கு  திருவிளையாடல்  நடத்தி காட்டிய ஊர் என்று ஒன்றா, இரண்டா அற்புதஙகள். எண்ணிலடங்கா அற்புதங்கள் கொண்ட நாடு நம் பாரத நாடு.

இந்த பாரத நாட்டில் அவதரித்த மகான்கள், அருளாளர்களை கொண்டாட வேண்டியது நம் கடமை அல்லவா? எனவே தான் அருளார்களின்  குரு பூசை தகவல்களை கூடுமானவரை நம் தலத்தில் தொகுத்து தருகின்றோம். அருளார்களின் கால் பட்ட இடத்தில நம் மனம் பட வேண்டும். உதாரணமாக வடலூர் சென்றால் நாம் வள்ளலாரின் புனிதம் அறிய முடிகின்றது. அந்த மண்ணை மிதிக்கும் போது நம்மிலும் ஜீவ காருண்யம் கொஞ்சமாவது பெறுவதை நாம் உணர முடிகின்றது. இது போன்ற தலங்களுக்கு நாம் சென்று அருளாளர்களின் அருளை நாம் பெற முடியும் அல்லவா?

சரி. இனி அருணகிரிநாதர் குரு பூஜை பற்றிய தகவல் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.



அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.
இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்.

ருணகிரிநாதர் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் முதலிய அற்புத பிரபந்தங்கள் கருத்தில் வரும். அவற்றின் வழியாகப் பிரவாகிக்கும் திருமுருகன் திருவருள் கருத்தை நிறைவிக்கும். 

அருளாளர் அருணகிரிநாதர் சுவாமிகளின் குருபூஜை நாளை கொண்டாடப்பட உள்ளது. பாம்பன் சுவாமிகள்  இப்புண்ணியத் திருநாளைச் சிறப்புறக் கொண்டாடுமாறு அடியவர்களை முறைப்படுத்தினார். 

இம்முறை  ஜூலை 4ஆம் தேதி காலை 11:34 மணி முதல் பௌர்ணமி திதி துவங்குகின்றது, மூல நட்சத்திரம் அதே நாள் மிகவும் அதிகாலையில் துவங்கி இரவு 11:22 மணிக்கு நிறைவு பெறுகின்றது எனவே  ஜூலை 4ஆம் தேதி சனிக்கிழமையே அருணகிரிநாதர் குருபூஜை தினமாகும்




ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி

அருவம் ஒரு நான்காகி உருவம் ஒரு நான்காகி அவைஇரண்டும்

மறுவியுள உருவருவம் ஒன்றாகி முத்திறமும் வழுத்தவொண்ணாப் 

பெருவெளிக்கும் அப்பாலாய் உள்ள பொருள் ஈதெனவே பெரிதும் சேயோன் 

ஒருவனையே புகழ்ந்த அருள்அருணகிரி சேவடிப்போது உளத்துள் வைப்பாம்!!!


திருமுருக வாரியார் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி

விருப்புடன் உபய சரணமென் மலரை வேண்டுவார் வேண்டுவதளிக்கும்

பொருப்புகள் தோறும் நின்றருள் ஒருவன் புகழினை அகநெகப் புகன்று

கருப்புகுதாத கதிதனைக் காட்டும் கலையுணர் புலவர்கள் திலகம்

திருப்புகழ் அருணகிரி எமதடிகள் திருவடி குருவடிவாமே.

அனைத்து அடியார் பெருமக்களும் அருகில் உள்ள தலத்தில் சென்று தங்களுக்கு தெரிந்த திருப்புகழைப்  பாடி முருகப் பெருமான் முன் வேண்டவும். 

திருப்புகழ் இன்றி பதிவை நிறைவு செய்ய மனம் மறுக்கின்றது, கோயிலுக்கு செல்ல இயலாதவர்கள்கீழ்கண்ட திருப்புகழை ஓதுங்கள். திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும். இதோ..இந்த அற்புத திருநாளில் நம் வாழ்க்கை மணக்க அருளாளர் அருணகிரிநாதர் அருள் புரியட்டும்.


விநாயகர் துதி (இராகம் - நாட்டை; தாளம் - ஆதி)

        தத்தன தனதன தத்தன தனதன
        தத்தன தனதன ...... தனதான

        கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
        கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்

        கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
        கற்பகம் எனவினை ...... கடிதேகும்

        மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
        மற்பொரு திரள்புய ...... மதயானை

        மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
        மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

        முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
        முற்பட எழுதிய ...... முதல்வோனே

        முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
        அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

        அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
        அப்புன மதனிடை ...... இபமாகி

        அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
        அக்கண மணமருள் ...... பெருமாளே.


"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 3"


        "முத்தைத்தரு"


        இராகம்: கௌளை
        தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு

        தத்தத்தன தத்தத் தனதன
        தத்தத்தன தத்தத் தனதன
        தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான


        முத்தைத்தரு பத்தித் திருநகை
        அத்திக்கிறை சத்திச் சரவண
        முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

        முக்கட்பர மற்குச் சுருதியின்
        முற்பட்டது கற்பித் திருவரும்
        முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

        பத்துத்தலை தத்தக் கணைதொடு
        ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
        பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

        பத்தற்கிர தத்தைக் கடவிய
        பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
        பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே

        தித்தித்தெய ஒத்தப் பரிபுர
        நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
        திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

        திக்குப்பரி அட்டப் பயிரவர்
        தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
        சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

        கொத்துப்பறை கொட்டக் களமிசை
        குக்குக்குகு குக்குக் குகுகுகு
        குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

        கொட்புற்றெழ நட்புற் றவுணரை
        வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
        குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.

திருத்தணியில் பாடப்பட்ட ’இருமல் உரோகம்..’ எனத்தொடங்கும் திருப்புகழ் ’மந்திரத் திருப்புகழ்’ எனப்படுகிறது. இத்திருப்புகழ் நோய் தீர்க்கும் என்று கூறப்படுகிறது.



        இருமல் உரோகம் முயலகன் வாதம்

                எரிகுண நாசி விடமே நீர்

        இழிவு விடாத தலைவலி சோகை

                எழுகள மாலை இவையோடே


        பெருவயிறு ஈளை எரிகுலை சூலை

                பெருவலி வேறும் உளநோய்கள்

        பிறவிகள் தோறும் எனை நலியாத

                படிஉன் தாள்கள் அருள்வாயே


        வரும் ஒரு கோடி அசுரர் பதாதி

                மடிய அநேக இசைபாடி

        வரும் ஒரு கால வயிரவர் ஆட

                வடிசுடர் வேலை விடுவோனே


        தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி

                தரு திரு மாதின் மணவாளா

        ஜலமிடை பூவின் நடுவினில் வீறு

                தணிமலை மேவு பெருமாளே

"இருமல், ரோகம், முடக்கு வாதம், எரிவாயு, விஷநோய்கள், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை, எழுகள மாலை மற்றும் வேறு நோய்கள் எதுவும் இப்பிறவியிலும், இனி வரும் பிறவிகளிலும் என்னை வாட்டாத வகையில் முருகா, உனது திருவடிகளை தந்து அருள வேண்டும்.கோடிக்கணக்கான அசுரர்கள் அழியவும் அதனால் கால பைரவர் மகிழ்ந்து ஆடவும் வடிவேலை விடும் வேலாயுதக் கடவுளே! மேகத்தை வாகனமாக கொண்ட தேவேந்திரனின் மகளான தெய்வயானை மணவாளனே! திருத்தணிகை மலையில் வாழும் பெருமானே!"

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
திருத்தணிகை முருகனுக்கு அரோகரா!!
முருகா! முருகா!! முருகா !!!

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.


மீள்பதிவாக:-

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_4.html

வைகாசி விசாகத்தை வரவேற்போம் - 04.06.2020  - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு  - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html


சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

No comments:

Post a Comment