"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, July 21, 2020

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.     

நம் தளத்தின் மூலம் மாதந்தோறும் அமாவாசை அன்று மோட்ச தீப வழிபாடு, ஆயில்ய நட்சத்திரம் அன்று ஸ்ரீ அகத்தியர் வழிபாடு, உழவாரப் பணி மற்றும் அன்னசேவை செய்து வருகின்றோம். இது அனைவருக்கும் தெரிந்த செய்தி ஆகும். ஆடி மாத மோட்ச தீப வழிபாடு சுமார் 10 பேர் அளவிலே நடைபெற்றது. ஆனி மாத மோட்ச தீப வழிபாடு வழக்கமான   வழிபாடாக குருவருளால் நேற்று குருவருளால் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை அதிக அன்பர்கள் ஆடி அமாவாசைக்காக பொருளுதவி செய்தார்கள். வழக்கம் போல் கூடுவாஞ்சேரியில் நேற்று காலை அமாவாசை அன்னதானம் சுமார் 20 அன்பர்களுக்கு வழங்கினோம். இது தவிர ராமேஸ்வரத்தில் அன்னதானம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அடுத்து தென்காசி சாய்பாபா கோயில், திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமம் என நமக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆடி அமாவாசை மோட்ச தீப வழிபாட்டில் அனைவருக்கும் பிரார்த்தனை செய்தோம். இம்முறை பொது பிரார்த்தனை வெகு சிறப்பாக அமைந்தது.சரி..நாளை நடை பெற உள்ள ஆயில்ய ஆராதனைக்கு செல்வோமா?

இன்று இரவு  10:00 மணி முதல் நாளை இரவு 9 மணி   வரை ஆயில்யம் நட்சத்திரம் வருகின்றது. வழக்கமான பூசை இம்முறை நடைபெறும். கூடுவாஞ்சேரி அருகில் உள்ள அன்பர்கள் நேரில் வந்து கலந்து கொள்ளவும்.தற்போது நிலவி வரும் சூழலில் அரசாங்க உத்தரவால் அனைத்து கோவில் விழாக்களும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.எனவே அடியார் பெருமக்கள் இன்று நாம் குறிப்பிட்ட ஆயில்ய நேரத்தில் உங்களுக்கு தெரிந்த சித்தர்களின், குருமார்களின் நாமம் ஓதி, விளக்கேற்றி  இல்லத்திலே வழிபாடு செய்ய வேண்டுகின்றோம்.

 மிகப் பெரும் மகான் நமக்கு குருவாக கிடைத்துள்ளார். ஆம். குருநாதர் அகத்தியர் காட்டும் வழியில் தான் நாம் பயணம் செய்து வருகின்றோம். சித்த மார்க்கத்தை நமக்கு தொட்டுக்காட்டி, நம்மை வழிநடத்தி வரும் நம் ஐயனின் பொற்பாதத்தை நாம் நம் தலையில் சுமக்க வேண்டும். ஒவ்வொரு மாத ஆயில்ய பூசை நம் மனதை பண்படுத்துகின்றது. நம்மை இன்னும் உயிர்ப்பிக்க செய்கின்றது. குருவைப் பற்றிய ஒரு பாடல் கிடைத்தது. கீழே பதிக்கின்றோம்.


மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு
             வித்தை தந்த சற்குருவை நிதமும் போற்று
கையார மனமாற ஞானஞ் சொல்லு
             காரணமாங் குருபதத்தைக் கருதிப்பாரு
வையமெல்லாம் கொண்டாட கருவைச் சொல்வேன்
            பொய்யாதவுபதேச குருவைப்போற்றி
புகழாக பனிரெண்டு வருஷங்காரே


குரு கிடைப்பதெல்லாம் சும்மா அல்ல. ஏதேனும் நம்மிடம் கொஞ்சம் புண்ணியக்கணக்கு இருந்தால் தான் குருவைப் பற்றி,பேச, எழுத முடியும். குறு கிடைப்பதற்கே இப்படி என்றால் குருஉபதேசம் பெற,12 ஆண்டுகள் குரு பதம் பற்ற வேண்டும். இத்தகு குருவிற்கு நாம் மாதம் தோறும் ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம் என்றால் நாமெல்லாம் குருவைப் பற்றியவர்களே.



கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் தரிசனம் இன்று 





திருச்செந்தூர் ஸ்ரீ அகத்தியர் தரிசனமும் பெற்றுக் கொள்ளுங்கள். பதிவின் இறுதியில் நாம் நாளை வழிபாட்டில் செய்ய வேண்டிய சில செய்திகள் உண்டு.






குருவின் தரிசனமும், குருவின் குருவாம் ஸ்ரீ முருகப்பெருமான் தரிசனமும் ஒரு சேர இந்தப் பதிவில் பெற்றுள்ளோம்.


தோரண மலை அடிவாரத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில் யாம் பெற்ற தரிசனம். 

சென்ற ஆனி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை வழக்கம் போல் நடைபெற்றது. நேரில் சென்று நம்மால் தரிசனம் பெற இயலவில்லை. இதோ சில அருள் காட்சிகளை இங்கே பகிர்கின்றோம்.





மேலும் சில செய்திகள் இங்கே அகத்தியர் அடியவர்களுக்கு தருகின்றோம்.வாய்ப்புள்ள அன்பர்கள் வழிபாடு செய்து இறையருள் பெறும்படி வேண்டுகின்றோம்.

நற்பவி நற்பவி நற்பவி

அன்புடையீர்
 
ஜூலை 22, ஆடி 7 புதன் கிழமை அன்று  மாலை 6.00 மணி அளவில் ஆயில்யம் நட்சத்திரம் சிறப்பு ஆராதனையானது  அன்னை ஸ்ரீ லோபமுத்ரா சமேதராம் நமது குருநாதர் அகத்திய பெருமானுக்கும்
அவரது பரம குருநாதராம்  ஸ்ரீ முருகப் பெருமானுக்கும் நடைபெறவுள்ளது.

அன்பர்கள் அனைவரும் அவரது இல்லத்தில் இருந்தே தங்களது ஆத்மார்த்தமான பிரார்த்தனைகளை செய்து கொள்ள வேண்டுகிறோம் பிரார்த்தனையோடு அகல் தீபம் 6 ஏற்றி ஓம் சரஹணபவ
எனும் நாம பாராயணம் எண்ணிக்கை யாக இல்லாமல் ஆத்மார்த்தமாக ஜபம் செய்து கொள்ள வேண்டுகிறோம்

இறை பணியில்
செந்தூர் அகத்தியர் கோட்டம்

இது போன்று நாளை கிளார் ஸ்ரீ அகத்தியர் கோயிலில் 22.07.2020 மாலை அகத்தியர் ஆயில்யம் பூஜை நடைபெற இருக்கிறது



                                               



அகத்தியம். பேச பேச திகட்டாதது. கேட்க கேட்க இனிமையானது. உண்ண உண்ண அமிர்தமானது. அகத்தியம் தருவது ஜீவ அமிர்தமே ஆகும். இந்தப் பதிவில் குருநாதர் தரிசனம் பெற்று ஜீவஅமிர்தம் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

 மீண்டும் ஒரு முறை. நினைவூட்டுகின்றோம்....

ஆடி  மாத ஆயில்ய நட்சத்திரத்தில் கூட்டு வழிபாடு மேற்கொள்ளுங்கள். ஓம் அகத்தீஸ்வராய நமஹ என்று 108 முறை ஓதி வழிபாடு செய்து குருவின் பாதம் பற்றுங்கள்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

No comments:

Post a Comment