ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி, ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள், காரைக்குடிதெய்வத்திரு அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பு என சொல்லிக்கொண்டே போகலாம். .
மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் அனுபவ பதிவை அப்படியே தருகின்றோம்.
அய்யா வணக்கம்.குருபிரான்ஶ்ரீஅகத்திய பெருமானுக்கும்.குருவின் ஆசியினை சுவடி மூலம் வெளிபடுத்தும் பாக்கியம் பெற்ற கணேசன் அய்யாவிற்க்கும் அநேக கோடி நமஸ்காரங்கள்..அடியவன் பரமசிவன்,மதுரை.
சுமார்12 ஆண்டுகள் முன் உங்கள் அறிமுகம் கிடைத்தது.இது குருவின் ஆசி.அன்று ஓலையில் குருபிரானிடம் வாழ்வியல் பிரச்சணை குறித்து வாக்கு கேட்கும் பொழுது மிக நல்ல முறையில் குடும்பத்தினர் அணைவரையும் தனிதனியாக சொல்லி ஆசி செய்தார்கள் (அதில் ஓரு Highlight என்னவென்றால் நாளை உன் குழந்தைகளுக்கு திருமணமாகி அவர்களுக்கு குழந்தை பிறக்கும் அல்லவா அவர்களுக்கு என் ஆசி என்றென்றும் உண்டப்பா என்பது)
அதிலிருந்து தொடந்து குருவின் திருவடிகளை இறுக பற்றிக்கொண்டேன் .அடிக்கடி குடில் வரும் பொழுது அங்கு நடக்கும் சேவைகளை பார்த்து மெதுவாக நாங்கள் சிறு குழுவாக இணைந்து அன்னசேவை மற்றும் சிறுஅளவில் மருத்துவம் கல்விசேவை என தொடர்தோம் அச்சமயம் சேவைக்கு ஆசி கூறும் பொழுது ததீசியகம் போன்று சித்தர்குடில் போன்று இன்னவனின் அந்த இறையருள் மன்றமும் சமுதாய சேவையில் சிறப்புறும் என ஆசி வழங்கினார்கள் அது போன்று இதுகாலம் வரை சிறப்பான முறையில் தொண்டு தொடர்கிறது.அந்த கால நேரத்தில் பொருளாதாரத்தில் மிக பின்னடைவு ஏற்பட்டது. அச்சமயம் குருபிரானிடம் ஆசி கேட்கும்பொழுது உன் ஜாதகத்தில் தொழில் தோஷம் உள்ளது. எனவேதான் உன்னை சேவை மார்கத்தில் இறைவனருளை கொண்டு திசை திருப்பினோம் இல்லையென்றால் இன்னமின்னும் நீ ஒரு மனச்சோர்வை சந்தித்து இருப்பாய் என"குறிப்பிட்டார்கள்.
பின் எனது குடும்பம் கூட்டு குடும்பம் இதில் இளைய அண்ணனின் மனைவியார் உடல் நலம் பாதிக்கபட்டார்கள் .குருபிரானும் தொடந்து சில மூலிகை வைத்தியங்களை குறிப்பிட்டு மருந்து சாப்பிட சொன்னார்கள் பின் பிரச்சணை பெரிதாகி மருத்துவமணையில் பல்வேறு மருந்துவங்கள் பார்த்து பல பல லட்சங்கள் செலவாகியது .ஆனால் பலன் இல்லை அண்ணியார் இறைவனடி சென்றுவிட்டார்கள் இதன் மூலம் சற்று தொழில் தொய்வு கடன் பிரச்சணை என கூடியது அச்சமயம் குடிலுக்கு எனது அண்ணாவின் மகளை அழைத்துவந்து ஆசி கேட்டோம் குருவின் ஆசியோடு சாந்தியோடு கூடிய மணவாழ்க்கை அமையும் என கூறி ஆசி வழங்கினார்கள் சில வழிபாடுகளை சொன்னார்கள் அதன்படி அண்ணாவின் மகளுக்கு சில மாதங்களில் நல்ல மணமகன் கிடைத்து திருமணம் ஆனது இதனால் மேலும் கடன் கூடியது.பின் தந்தை வழியில் குடியிருந்த வீட்டை விற்று பெரும்பகுதி கடன் தீர்வானது ஆனால் முழுமையாக தீரவில்லை.தற்பொழுது சுமார் 10 ஆண்டுக்கு மேலாக சேவைகள் சிறப்பாக நடைபெறுகிறது.சேவைக்கு பொருளாதார சிக்கல் வரும் பொழுது குருபிரான் முன் எனது வேண்டுக்கோள் வைக்கபடும் அன்றோ மறுநாளோ தக்க நபர்களை குருபிரான் அனுப்பி பொருளாதாரத்தை சரிசெய்துவிடுவார்.சேவைக்கு மிக நல்ல முறையில் உதவும் என் குரு நாதர் என்தேவை என்று"வரும் பொழுது கையை இறுக்கிவிடுவார் ஆனால் என் முயற்சியால் எனது தேவையை நிறைவு செய்ய முடியவில்லை"ஆனால் குருவின் பலமான கைபிடியானது என்னை பிடித்துக்கொண்டுள்ளது .
சுமார் 10 ஆண்டுகளாகவே குருவின் ஆசியால் எனது பிள்ளைகளுக்கான கல்வி கட்டணத்தை எனது நண்பர்கள் மூலம் ஶ்ரீஅகத்தியர் பெருமான் ஆசியால் நான் கேட்காமலே எனது மதுரை அன்பர்கள் பாங்க் கணக்கில் கட்டிவிடுகிறார்கள். எனது"கர்மா என்னவோ எனக்கு தெரியவில்லை உன் விதிபடி உனக்கு என்ன வேண்டுமா அது எப்படியாவது கிடைத்து விடும் என ஆசி கூறியது நடக்கிறது. இதுவரை ஐந்து முறை பொதிகைமலையில் குரு தரிசனம் அமைந்தது .அங்கு சென்றபிறகு உணர்ந்தது குருபிரான் அழைக்காமல் பொதிகை செல்ல முடியாது என்பது.லட்சம் கோடியெல்லாம் அங்கு"செல்ல பயனில்லை குருவினை தரிசிக்க வேண்டுமென்ற லட்சியமே ஜெயிக்கும் என்பது. என் வினை விதி எவ்வாறு என தெரியவில்லை ஆனால் குருபிரான் என் விதியில் பலமான மாற்றங்களை நடத்துவது பலமுறை உணரமுடிகிறது, குருவின் ஆசி என்னை பலமுறை காப்பாற்றி கைபிடித்து செல்வதை உணர்ந்தேன் .
ஒரு முறை சதுரகியில் கோரக்கர் குகை அருகே வழுக்கி விழுந்து சிறு அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டது.பின் 6 மாதங்களில் சரியானது. அது குறித்து குருபிரானிடம் கேட்டபொழுது கடும்விதியப்பா இறையருளை கொண்டு எளிமையக்கினோம். என்று வாக்குரைத்தார்கள்.மழையில் குடைபோல் வெயிலில் நிழல் போல் குருபிரான் இருப்பதால் விதியை பற்றி பெரிதாக நினைப்பதில்லை என் பிரச்சனை இது என அவரிடம் ஒப்பிவித்தபிறகு"அவர்தான் சரிசெய்யவேண்டும் அவர்தானே சரிசெய்வார் எனவே இறுதியாக குருவின் திருவடி பற்றிக்கொண்டு குரு காட்டிய தர்மத்தை பிரார்த்தணை வழிபாடு என வரும் பொழுது ,வினையின் தன்மை அழுத்தம் குறைவது நன்றாக தெரிகிறது .இப்பொழுது கடந்த கால சுழ்நிலை தொடர்ந்தால் எவ்வாறு இருக்கும் என்பதும் இப்ப நாம் இருக்கும் நிலை மென்மையாக உள்ளதை நன்றாக உணரமுடிகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரம்ம முகூர்த்த வாக்கினை போது குருபிரான் நமது அன்பர்களுக்கு பலருக்கு சொல்லியது போல் எனக்கும் 1108 சிவாயல தரிசனம் செய்ய அருளானை வழங்கினார்கள்.மீண்டும் சிலமாதங்கள் கழித்து சென்ற"போது முன்னர்"உரைத்த சிவாயல தரிசனத்தை நிறைவு செய்து வர மீண்டும் ஆசி வழங்கி அதன்பிறகு தான் உனக்கு மேல் வாக்கு வழங்கபடும் என"வலியுறுத்தியதால் குருவின் வாக்குகளை அறிய முடியவில்லை.அதில் பாதியை கடந்துள்ளநிலைதான் இதுவரை குருவின் ஆசி தொடர்கிறது தர்மம் தொடர்கிறது.இறையாசி கிடைக்கிறது..தொடர்ந்த கணேஷன் அய்யாவின் அற்புதங்கள் தொடரட்டும் நன்றி வணக்கம் குருவின் ஆசியை சுவடி மூலம் பெறுவதற்க்கு மீண்டும் மீண்டும் கணேசன் அய்யாவிற்க்கு எனது வணக்கத்தை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.🙏🏻🙏🏻🙏🏻
ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம் என்றே நாம் சொல்ல விரும்புகின்றோம். குருவடியைப் பின்பற்றி நடந்தால் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குருநாதரின் அன்பால் தான் நடக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாக புரியும்.இதற்கு முந்தைய பதிவில் ஒரு அன்பரின் நாடி அனுபவம் பற்றி பார்த்தோம்.
ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம் என்றே நாம் சொல்ல விரும்புகின்றோம். குருவடியைப் பின்பற்றி நடந்தால் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குருநாதரின் அன்பால் தான் நடக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாக புரியும்.இதற்கு முந்தைய பதிவில் ஒரு அன்பரின் நாடி அனுபவம் பற்றி பார்த்தோம்.
நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு ஜீவநாடி வாழ்க்கை
வழிகாட்டி. சென்ற பதிவில் இருந்து மீண்டும் தொடர்கின்றோம்.
நான்கு ஆண்டுகள் என்றால் 48 அமாவாசை பூஜையை அவர் பார்த்து விட்டதாலும், தீவிர வழிபாட்டை இவர் செய்து வந்ததாலும் முருகப் பெருமான் மனமிரங்கினார். தைப்பூச திருவிழாவில் சுமார் 700 பேர் கலந்து கொண்ட பூஜையில் இவருக்கு மட்டும் நாடி படிக்கப்பட்டது. கர்ம காண்டம் உரைக்கப்பட்டது. அதிர்ந்து போனார். ஆச்சரியத்தில் மூழ்கினர் வந்திருந்த அனைவரும்.
“கெட்டது வாழ்வு
தொட்டிடித்த ஆலயம்
இடிந்தது போலும்
சரியாக ஆலயம்
முறையாக நீ எழுப்பு
பின்னே பிரியம்
நந்தி சமாதி மீது
நலமாக மூன்று இரவு
முழுமையாக தங்கிவா – பின்
பிரச்சினை தீர வழி பிறக்கும்
சரியாக சதுரகிரிபோ
முறையாகும்”
என்று உரைத்தார். முருகப்பெருமான் நீண்ட நேரம் படித்தவற்றின் சுருக்கத்தையே இங்கு எழுதி இருக்கிறேன். இவர் வாழ்வு கெட்டதற்குக் காரணம் சிறிய வயதில் ஒரு கருப்பண்ண சுவாமியின் ஆலயத்தை சுவாமி சிலைகளை இடித்து உடைத்திருக்கிறார்.
அந்த ஆலயம் எப்படி இடிந்ததோ அதுபோல இவர் வீடும் சரிந்து வந்தது. இப்படி ஒரு வீட்டில் எப்படி குடியிருப்பீர்கள் என கேட்கத் தோன்றும். இவர் வீடு சரிந்து கொண்டே இருக்கிறது. இவர் வாழ்வும்தான். மீண்டும் அந்த கோவிலை புதுப்பிக்க வேண்டும். அதன் பின்புதான் இவர் வாழ்வு வளமாகும் என வந்தது. சில ஆலய தரிசனங்களும் உரைக்கப்பட்டது.இவர் இந்த ஆலயத்தை இடித்ததன் நோக்கம் வேறு. இவரது சகோதரர் கருப்பண்ணசாமிக்கு ஓர் ஆட்டை பலியிட ஆயத்தமானார். அந்த சமயத்தில் அங்கு சென்ற இவர் ஆடு பலியிடக்கூடாது, உயிர்க்கொலை பாவம், ஜீவகாருண்யமே கடவுளை அடைய வழி என்று வாக்குவாதம் செய்திருக்கிறார். பாரம்பரியமாக பலியிடும் வழக்கம் உடைய கோவில் என்பதால் நமது முன்னோர்கள் வகுத்த வழியில் நான் செல்கிறேன் என்று இவரது சகோதரர் ஆட்டை பலியிட ஆயத்தமானார்.
இவர்
ஆட்டை வெட்டினால் உன்னை வெட்டுவேன் என்றார். உன்னைப் பிடித்து இந்த
மரத்தில் கட்டிப்போட்டு உன் கண் முன்னே இந்த ஆட்டை கருப்பண்ண சுவாமிக்குப்
பலியிடுவேன் என்றார் இவர் சகோதரர். சுவாமி இருந்தால் தானே பலியிட முடியும்.
சுவாமியையே அடித்து நொறுக்கிவிட்டால் என்ன செய்வாய் என்றார் இவர்.
அதிர்ந்தார் அண்ணன். துணிந்தார் இவர். ஓங்கி அடித்து கருப்பண்ண சுவாமி
கோவிலை துவம்சம் செய்துவிட்டார்.
அது சிறிய வயது. ஆனாலும் இவ்வளவு ஞானம் நல்லதுதான். ஞானம் நலமாக இருந்தாலும் தேவதை சாபம் ஏற்பட்டுவிட்டது. இவரும் மறந்தார்.படித்தார்.
சில மாதம் கழித்து இவரது தந்தை தவறினார். பேரிடி இவருக்கு. கிராமத்தை
விட்டு சென்னை சென்றார். அப்புறம் தான் கதை தெரியுமே?
இவருடைய ஜீவகாருண்யம் சரியானதுதான். அதற்கு புண்ணியம் நிச்சயம் உண்டு. ஆனால் முறையாகப் பிரதிஷ்டை செய்து காலம் காலமாக பூஜை செய்து வந்த காவல் தெய்வமான கருப்பசாமியை உடைப்பது நியாயமா? வந்தது இந்த வடிவில் சோதனை. சென்ற ஜென்ம கர்ம வினைகளே இன்னும் தீராத நிலையில் மீண்டும் இந்த ஜென்மத்தில் கர்மவினையா? வாசகர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். முடிந்த அளவு பாவ காரியங்களைக் குறைத்து புண்ணிய காரியங்களைச் செய்ய பழகிக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும், தேவதைகள், தெய்வங்களோடு விளையாடக் கூடாது.
நான் கோவையில் தங்கியிருந்த சமயம் ஆவிகளோடு பேசுவதாக ஒருவர் அறிமுகமானார். அடிக்கடி எனது அறைக்கு வருவார். பூஜையில் கலந்து கொள்வார். திடீரென இந்த ஆவியுடன் பேசுகிறேன். அந்த ஆவியுடன் பேசுகிறேன் என்று சொல்வார். சொல்வது நூற்றுக்கு நூறு தவறாக இருக்கும். ஏன் இவர் இப்படி பொய் சொல்கிறார் என அடிக்கடி உறுத்தியது. இவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. அதை அடைக்க காப்பீடு
திட்டம் மூலம் முயற்சி செய்தார். தோல்வியில் முடிந்தது. சிகிச்சை முடிவு மரணம். அன்றே முருகன் உரைத்தார். இவருக்கு அற்ப ஆயுள் என்று ஆனாலும் பல தீய கர்மாவையும் சம்பாதித்ததால் விளைவு விபரீதம் ஆனது. பொய்சாமி சொல்வது எனச் சொல்வார்கள். அருள் வராமலேயே அருள் வந்தது போல் ஆடுவது வாய்க்கு வந்ததை வாக்கு எனச் சொல்வது போன்றவையும் வம்பை வெத்தலை பாக்கு வைத்து அழைப்பதுதான். சூட்சும தேவதைகள் சபித்துவிடும். அடுத்தவர் கர்மாவோடு விளையாடவே கூடாது. அதனால்தான் ஆன்மிகத்தை கண்டபடி கையாளக்கூடாது என எச்சரித்தார்கள் முன்னோர்கள்.
இன்னுமொரு நபர் எட்சனி வசியம் செய்கிறேன் என களமிறங்கி தனது தினசரி தூக்கத்தையே இழந்து தவித்து வருகிறார். இப்படி எமது வயது சிறியதாக இருந்தாலும் ஆயிரமாயிரம் அனுபவங்களை ஞானஸ்கந்தமூர்த்தி திருவிளையாடலாகச் செய்து வருகிறார்.இப்படி கருப்பசாமி கோவிலை இடித்தவர் மீது கருணை, ஜீவகாருண்யம் என்ற நியாயங்கள் இருந்ததால்தான் உனக்கு சொல்கின்ற பரிகாரம் பலிக்கும் என முருகன் சொன்னார். வேறு ஏதேனும் உள் நோக்கம் இருந்திருப்பின் விளைவு விபரீதம்தான். மேலும் நமது ஆலயத்திலேயே முருக தீட்சை பெற்று அடியாராகி மந்திர ஜெபம் செய்து வருவதால் கர்மவினை குறைய வழி ஏற்பட்டது எனலாம்.
திருவண்ணாமலையை ஒரு முறை கிரிவலம் வரவே பலர் சிரமப்படுகிறார்கள். இவர் மூன்று முறை கிரிவலம் வருவார். பல ஆஸ்ரமங்களில் அமர்ந்து தியானம் செய்வார். இதெல்லாம் இவரை காப்பாற்றும் செயல்கள். ஆனால் இத்துணை பரிகாரங்கள், பூஜைகள்,
வழிபாடுகள், செய்தும் எதுவுமே பலன் தராமல் போனதற்குக் காரணம் தேவதா சாபம். தேவதையின் சாபத்தை நீக்க அந்த தேவதையையே உபாசித்து ஆலயம் கட்டி அர்ச்சித்து ஆராதிக்க வேண்டும். அதற்குரிய ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சிறிது சிறிதாக, மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வாக்கு கேட்க நினைப்பவர்கள் கவனத்திற்கு ஜீவநாடியில் வந்த சில விதிமுறைகளைச் சொல்கிறேன். எவர் ஒருவர் மாதம் தவறாமல் ஞானஸ்கந்தமூர்த்தி ஆலயத்தை 27 முறை சுற்றி அமாவாசையில் வழிபாடு செய்கிறார்களோ அவர்களது கர்மவினை தீரும் என்பது ஜீவ நாடி அருள்வாக்கு.
கந்தர் சஷ்டிக் கவசம் அரங்கேறிய ஸ்தலம் சென்னிமலை. சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக என பாலதேவராய சுவாமிகளால் பாடப் பெற்ற ஸ்தலம். அந்த சென்னிமலையில் முருகப் பெருமான் பின்னாக்கு சித்தர் கோவிலுக்கு அருகில் அதிகாலை வேளையில்
மயில் மீது வந்து ஓய்வெடுக்கிறார். அந்த நேரத்தில் எவர் அங்கு அமர்ந்து தியானம் செய்கிறார்களோ அவர் முருகனது தரிசனத்தையே பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைகிறார்கள் இதுவும் ஜீவநாடி அருள்வாக்கு.
ஞானஸ்கந்தர் ஜீவநாடியை பக்தியில்லாதவர்க்குச் சொல்லக்கூடாது.சோதனை செய்ய வருபவர்களுக்கும் உரைக்கக் கூடாது. இதுவும் ஜீவ நாடி அருள்வாக்கு. அப்படி சோதனை செய்தால் சோதனைக்கும், வேதனைக்கும் ஆளாவார்கள்.
ஜீவநாடியை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு உரைக்கக் கூடாது.வியாபாரமாகவோ இதையே தொழிலாகவோ செய்யக்கூடாது.இதுவும் ஜீவநாடி அருள்வாக்கு.
ஜீவநாடியை காணிக்கை வாங்காமல் படிக்கக்கூடாது. அவ்விதம் படித்தால் தட்சிணா தேவியின் சாபம் ஏற்படும். இதுவும் ஜீவநாடி அருள்வாக்கு.
நாடி கேட்க வருபவர் வீடு, வாசல் சுத்தம் செய்து தனது குல தெய்வத்தை பூஜித்து வருதல் அவசியம். அப்போதுதான் முழுமையான பலன்வரும். இதுவும் ஜீவ நாடி அருள்வாக்கு.
நாடிப் பரிகாரங்களை அவர்களேதான் செய்து கொள்ள வேண்டும். பரிகாரம் செய்து தருவது கிடையாது.
நாடியில் வருகின்ற பரிகாரங்களை முழுமையாக்க கடைபிடிக்காமல் பிரச்சினை தீராது. ஆலய தரிசனம் அவசியம் சொன்னது சொன்னபடி செய்ய வேண்டும். பலன் வருவதும், வராமல் போவதும் அவரவர் செய்த கர்மவினைகளைப் பொறுத்து பலன் அமையும். ஆளைப் பார்த்தோ, பணத்தைப் பார்த்தோ பலன் உரைக்க முடியாது. உரைக்கவும் கூடாது.
நாடியில் வருவது அனைத்தும் முருகப்பெருமான், அகத்தியர், சுகர்,மகரிஷி, ஸ்ரீகாகபுஜண்டர் ஆகியோரின் அருள்வாக்கே. இதில் இடைச்செருகல் ஏதும் இருக்காது. இருக்கவும் கூடாது. இல்லவே இல்லை.
நாடி படிக்க எந்த திதியும், நட்சத்திரமும் தடை இல்லை. விசேஷமாக படிக்க வேண்டுமாயின் குரு, சுக்கிரன், சந்திரன் மற்றும் புதன் ஹோரையில் படிக்க வேண்டும்.
எந்த ஒரு குறிப்பும் ஜீவநாடிக்குத் தேவையில்லை. ஆனாலும் சில நேரங்களில் ரேகை, ஜாதகம் தேவைப்படும்.
பரிகாரங்கள் செய்து பலன் ஏற்படவில்லை என்றால் மீண்டும் அதே பரிகாரங்களைச் செய்ய வேண்டும். பலன் கிடைப்பதும், கிடைக்காமல் போவதும் அவரவர் கர்மவினைப் பொறுத்தே அமையும்.நாம் எதிர்பார்த்தது அனைத்தும் வரலாம் வராமலும் போகலாம்.
முருகன் என்ன உரைக்கின்றாரோ அதை மட்டும் கடைபிடித்தால் போதும்.
கர்மாவைக் குறைக்க ஜீவநாடி வழிகாட்டும். அவதூறு பேசினால் தீய கர்மா இரண்டு மடங்கு ஏற்படும். பொய் என்பது ஜீவ நாடியில் இல்லை. அதை புரிந்து கொள்ளும் பக்குவம் வேண்டும்.
நாடி படிக்க உத்தரவு வராமல் யாராக இருந்தாலும் பலன் வராது. படிக்கவும் முடியாது.இதைக் கடைபிடிப்பவர்கள் நாடியால் நலன் அடைவார்கள் என்பது நிச்சயம்.
அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம்.
இப்படி
பலரது வாழ்வில் ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி ஒரு மாபெரும் வழிகாட்டியாகத்
திகழ்ந்து வருகிறது. இன்று பல அதிசயங்கள், அற்புதங்கள் கண்கூடாக நாம் ஓம்
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருளால் கண்டும், கேட்டும் வருகின்றோம்.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாம் முருகப்பெருமான் ஜீவநாடியில் உரைத்த
செய்திகளை இங்கே நாம் குருவருளால் தந்துள்ளோம். மீண்டும் மீண்டும் படித்து
முருகப்பெருமானின் ஆசியும், சித்தர்களுக்கெல்லாம் தலையாய சித்தராய்
விளங்கும் ஸ்ரீ அகத்தியர் பெருமானின் ஆசி பெறுங்கள்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html
அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html
ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்) - https://tut-temples.blogspot.com/2019/11/10.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி! - https://tut-temples.blogspot.com/2019/11/9.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை! - https://tut-temples.blogspot.com/2019/09/6.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html
அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html
கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html
Thanks brother
ReplyDelete
Deleteஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.
ஓம் அகத்தீஸ்வராய நமஹ
நன்றி
வணக்கம்.