"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, March 6, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். நம் குருநாதர் அகத்தியரின் அருளாசியினால் லிகித ஜெபம் பற்றி  கண்டோம். இது ஒரு துளி மட்டுமே. 

காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பும் நமக்கு ஜீவ நாடி அற்புதங்களே. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. சில பதிவுகளுக்கு முன்னர்  பதிவில் ஜீவ நாடி என்றால் என்ன என்று பார்த்தோம். அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி கேட்டு பதிவு சமர்பித்தோம். மேலும் இரு அன்பர்களின் ஜீவ நாடி அற்புதங்களைப் பார்த்தோம். சில பதிவுகளுக்கு முன்னர்  மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழை பகிர்ந்தோம்.

ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம் என்றே நாம் சொல்ல விரும்புகின்றோம். குருவடியைப் பின்பற்றி நடந்தால் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குருநாதரின் அன்பால் தான் நடக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாக புரியும்.இதற்கு முந்தைய பதிவில் மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா பற்றிய ஜீவ நாடி அற்புதம் கண்டோம். ஏற்கனவே சொன்னது போல் ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம். சுருக்கமாக இன்னொரு அற்புதம் இங்கே குருவருளால் பகிர்கின்றோம்.

எம் நண்பர் ஒருவருக்கு சுமார் 6 ஆண்டுகளாக பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை. நாம் அந்தியூர் முருக நாடி பற்றி எடுத்துக் கூறி சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்று முருகன் அருள் பெற்றோம். முருகப் பெருமான் அவருடைய பிறந்த நட்சத்திரத்தில் வள்ளிமலை சென்று பைரவருக்கு தயிர் சாதம் வைத்து மூன்று முறை சென்று வர சொன்னார். முதல் முறை செல்லும் போதே ஓதியப்பரின் பிறந்த நாள் வந்தது. தனிப்பதிவில் தருகின்றோம். அன்றைய தினம் நண்பரோடு வள்ளிமலை சென்று பைரவருக்கு தயிர் சாதம் தந்து தரிசனம் பெற்றோம். மீதம் இரண்டு முறை நண்பரே சென்று வந்தார். இன்னும் பெண் பார்க்கும் படலம் சென்று கொண்டே இருந்தது. இதோ..இன்று காலை நண்பர் தமக்கு மணப்பெண் கிடைத்து விட்டதாக செய்தி கூறினார். எங்கெங்கோ பெண் தேடியும், இறுதியில் சொந்த ஊரிலே பெண் கிடைத்தது நமக்கும் ஆச்சர்யமாக இருந்தது. இது தான் முன்னின்று நடத்தும் முருகன் அருள் ஆகும்.

மீண்டும் ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 பகுதியில் இருந்து இங்கே தொடர்வோம்.


ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு லாரி சென்றது. அதை பெற்றுக் கொண்டவர் சரக்கு வரவே இல்லை என்று சொல்லி விட்டார். எங்களுக்கு
ஒரு கோடியும் நஷ்டம். தற்கொலை செய்துக்கொள்ள நினைத்தோம்.தங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிட்டியது. ஒரு நபர்
தங்களைப் பற்றிச் சொன்னார். தாங்கள் நாடியில் சொல்லும் பதிலைவைத்து வாழ்வதா? சாவதா? என முடிவு செய்யலாம் என வந்துள்ளோம்.


தக்க தீர்வு வழங்கவும்” என எழுதப்பட்டதை கண்டு அதிர்ச்சி. நமக்கும்ஒரு சோதனையை முருகன் வைத்து வேடிக்கை பார்க்கிறான் போலத்
தெரிகிறது. சரி முருகன் உரைப்பதை உரைப்பதே நமது பணி என மனதை ஒருநிலைப்படுத்தி ஜீவநாடியைப் பிரித்தேன். மடை திறந்த வெள்ளம் போலபாடல் வடிவில் வாக்கு வந்தது. வாக்கு தந்தவர் ஸ்ரீ அகத்தியர்.

முருகனைப் போற்றி பலன் சொல்ல ஆரம்பித்து பலரும் அதிரும் படி பல இரகசியங்களை உரைத்து பரிகாரமும் சொன்னார்.
பஞ்ச நதீஸ்வரர் என்றும் ஐயாரப்பர் என்றும் அழைக்கப்படும் ஸ்தலம்
திருவையாறு அங்கு சென்று ஏகாதச ருத்ராபிசேகம் செய்ய வேண்டும்.
அதாவது பதினோறு ருத்ர மூர்த்திகளை அம்மை அப்பன் கலசத்தையும் சுற்றி கலசம் மூலம் ஆவாஹனம் செய்து சங்கல்பம் செய்து, 11 அந்தணர்களால் பாராயணம் செய்து ஹோமம் செய்ய வேண்டும். பின்பு அந்த 11 சிவாச்சாரியார்களையும் ருத்திரர்களாக பாவித்து அவர்களுக்கு
தட்சினை தாம்பூலம் தந்து ஆசி வாங்க வேண்டும். இவ்விதம் செய்.நடப்பதைப் பார் என்றார் அகத்தியர்.


வழக்கமாக வருகின்ற முருகனின் வாக்கு வராமல் அகத்தியரின்வாக்கு வருகிறதே என நான் சிந்திப்பதை புரிந்து கொண்ட அகத்தியர்,





வந்திருப்பவர்கள் அகத்தியர் ஆலய பிரதிஷ்டை செய்தவர்கள் என்றும்,அடிக்கடி அகத்தியரை பூஜிப்பவர்கள் என்றும், உன்னை வழிபாடு
செய்பவர்களுக்கு நீயே சென்று உரிய வழி சொல் என்ற முருகனின்உத்தரவால் அகத்தியர் வந்து வாக்கு சொன்னதாகவும் தெரிவித்தார்.
எவ்வளவு அதிசயம் பாருங்கள். வந்தவர்களுக்கு ஒரே ஆனந்தம், அந்த ஒரு கோடி ரூபாயும் கிடைத்த மாதிரி மகிழ்ச்சி.


இதை உரைத்த பின்பு அவர்கள் சொன்ன செய்தி என்னை மேலும் மெய் சிலிர்க்க வைத்தது. மேலே அகத்தியர் சொன்ன ஆலயத்தில் விபூதி
பிரசாதம் வாங்கும்போது அங்கு ஒரு பெரியவர் “திருவருள் சக்தி” இதழைப் படித்துக் கொண்டு இருந்ததாகவும் இவர்கள் அவரைப் பார்த்தவுடன்
இவர்களிடம் அந்த பத்திரிக்கையைக் கொடுத்துவிட்டு வேகமாகச் சென்றதாகவும் சொன்னார்கள். சரி இது எதேச்சையாக நடக்கிறது என சுமார் ஒரு மாத காலம் அதை புரட்டிக் கூடப் பார்க்காமல் மேஜையின் மீது போட்டுவிட்டார்கள். இந்தப் பிரச்சினை வந்தவுடன் இந்த “திருவருள்
சக்தி” இதழை புரட்டிப் பார்த்திருக்கிறார்கள்.


அதில் ஜீவ நாடியைப் பற்றிய தொடர் என்னமோ செய்திருக்கிறது பல முறை படித்தவர்கள் கனவில் இங்கே போ வழி கிடைக்கும் என
உத்தரவு வந்தவுடன் பலமுறை தொடர்புக் கொண்டு சிரமத்தின் பேரில் வந்து சேர்ந்தார்கள். அதற்குள் அகத்தியர் கோவில் பற்றிய செய்தி
வந்தவுடன் அதிசயப்பட்டு, அந்த அகத்தியரே வந்து வாக்கு சொன்னதால் ஆச்சரியப்பட்டு, அதிர்ச்சியடைந்து, ஆனந்தமடைந்து பிரிய மனமில்லாமல் சென்றார்கள். சரி இறைவனின் கட்டளை எதுவோ அது நடக்கும் என நான் விட்டு விட்டேன். இரண்டு மாதம் கழித்து இவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. ஒரு குறிப்பிட்ட நாள் சொன்னேன் அந்த நாளில் மீண்டும் வந்தார்கள்.




ஐயா, பலன் கேட்க வரவில்லை, நடந்த நிகழ்ச்சிகளையும், அதிசயங்களையும் சொல்லலாம் என்று வந்திருக்கிறோம் என்றார்கள்.
சரி உரைத்தப்படி ஏகாதச ருத்ராபிஷேகம் திருவையாறில் செய்தோம். ஸ்ரீ ஐயாரப்பரை ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கிறார்கள்
எனத் தெரிந்து அந்த அபிஷேகத்தை கண்ணாரக் கண்டோம். அதே போல் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் அறம் வளர்த்த நாயகி அம்மையையும் அபிஷேகம் செய்து அற்புத அலங்காரத்தைத் தரிசனம் செய்தோம். சொன்னது சொன்னபடி செய்து முடிந்த உடனே எனது அலைபேசிக்கு ஒரு அழைப்பு மணி வந்தது. இது சத்தியமான உண்மை. அந்த சரக்கு லாரி வந்து சேர்ந்திருக்கிறது. ஒரு சிறு பிழை காரணமாக உரிய பதில் கிட்டாததால் வரவில்லை என்று சொன்னோம். இப்போது வந்து விட்டது என்ற தகவல் கிடைத்தவுடன் ஒரு கோடியில் பாதியை 50 லட்சத்தை உங்களது வங்கிக் கணக்கில் போட்டுவிட்டேன். மீதியை இன்னும் ஒரு மாதத்தில் தந்து விடுகிறேன் என்று அந்த நபரிடம் இருந்து பதில் வந்தது.

என்னால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. மயக்கமே வந்து விடும் போல் இருக்கும் நிலையில் ஆலய ஊழியர் ஒருவர் பன்னீர் சோடா ஒன்றைக்
கொண்டு வந்து கொடுத்தார். அமிர்தம் போன்று இருந்தது. அந்த அழைப்பு துண்டிக்கப்பட்ட உடனேயே எனது அலைப்பேசியில் குறுஞ்செய்தி வந்தது. 50 லட்சம் உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டது என்று. என்னே முருகனின் கருணை. ஜீவ நாடியைப் பற்றி தற்போதுதான் முழுமையாகப் புரிந்து கொண்டோம் என்று சொல்லி இது பல பேருக்கும் தெரியட்டும் என தனது கைப்பட 6 பக்கம் எழுதி கையொப்பம் இட்டு மாலை, மரியாதை செய்தார்கள். ஆசிர்வதிக்க சொன்னார்கள். முருகா கருணை காட்டு என ஆசிர்வதித்தேன். இது சத்திய உண்மை ஆதாரம் இருக்கிறது.

எப்படி நடக்கிறது பாருங்கள் இது தான் இறைவனின் திருவிளையாடல். சரிஅந்த அகத்தியர் ஆலயத்தில் “திருவருள் சக்தி” புத்தகத்தைக் கொடுத்தது யார்? தெரியவில்லை பின்பு அது அகத்தியரின் திருவிளையாடல் எனத் தெரிந்து கொண்டோம். “திருவருள் சக்தி” புத்தகமும் அகத்தியரின் கைபட்டு ஆசிர்வதிக்கப்பட்டதால் இந்த இதழ் யார் வீட்டில் இருந்தாலும் அந்த

சித்தர்கள் ஆசி கிட்டுவது திண்ணம். அதில் ஏதும் மாற்றம் இல்லை.

இப்போது அவர்கள் தொடர்ந்து நாடியைக் கடைபிடித்து வருகிறார்கள். பல அதிசய மாற்றங்கள் இன்னும் நடந்து கொண்டு வருகின்றன. எப்போதோ செய்த திருப்பணியின் பலன் வாழ்வில் ஒரு கஷ்டம் என்று வரும் போது எப்படி கை கொடுத்து காப்பாற்றும் என்பதற்கு இந்த கட்டுரையே சாட்சி.

இன்னும் பல இரகசியங்கள் வரும்.



மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html



மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment