அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
கருணையே, காந்தமே, சாந்தமே, காலத்தின் சாட்சியாய் நிலைப்பவன் என ஏக பரம்பொருளாய் கணபதி இங்கே நிலை பெற்று இருக்கின்றார். இந்த திருக்கோயில் முருகன் அருளால் உருவானது என்றால் கொஞ்சம் யோசிக்கின்றீர்கள் தானே? திருப்புகழ் அமிர்தம் ஊட்டிய வாரியார் சுவாமிகளின் கைங்கர்யத்தில் இந்த விநாயகர் கோயில் உருவாகி உள்ளது என்றால் முருகப் பெருமானே தானே இங்கே ஆதாரம். முருகன் அருள் முன்னிற்க இங்கே விநாயகர். விநாயகர் இங்கே சுயம்பு மூர்த்தியாக மாமரத்தில் வாசம் செய்து வருகின்றார்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
என்று பாடி ஸ்ரீ விநாயகர் பாதம் பற்றுவோம். போற்றுவோம்.
கிருபானந்த வாரியார் அவர்களால் இந்த கோயில் கைங்கர்யம் செய்யப்பட்டுள்ளது என்பதை பறை சாற்றும் காட்சிகள் இங்கே.
பூர்ணாஹூதி சங்கல்பம் செய்த போது
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்தை அடுத்து வண்டலூர்
உயிரியல் பூங்கா கடந்ததும் வரும் ஊர்
கூடுவாஞ்சேரி. திருநந்திவரம், திருநந்திகேஸ்வரம் என்றெல்லாம்
முன் காலத்தில் அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, தற்போது
நந்திவரம் (கூடுவாஞ்சேரி) என்று
வழங்கப்படுகிறது.
இத்தகு பாடல் வைப்புத் தலமான கூடுவாஞ்சேரியில் நந்தீஸ்வரர் கோவில்
மட்டுமின்றி, மேலும் பல கோயில்கள் அருள் தந்து கொண்டிருக்கின்றது. அந்த
வகையில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில், வேலி அம்மன் ஆலயம்,
வள்ளலார் கோயில் என கூற முடிகின்றது. ஒவ்வொரு கோயிலும் இங்கே தனிச்சிறப்பு
கொண்டு விளங்குகின்றது. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் பற்றி
விரிவான தனிப்பதிவை அடுத்து தருகின்றோம்.
கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர்
மூத்தோனை வணங்க வேண்டிய தலமாக இங்கே உள்ளார். உலகெலாம் படைத்த மூத்தோன்,
உயிரெலாம் வணங்கும் அருளோன், தன்னலமிலா தலைவன், நெற்றிப்பொட்டாய்
தகிப்பவன், ஒற்றைக்கால் தேரில் வருபவன், முற்றிய நோயை நீக்குபவன்,
வெற்றிக்கு துணைவன் ஆனவன், மதிஒளி வழங்கும் ஆசான் ,மனவொளி பரப்பும்
சுடரானவன், அதிதியின் அழகுப்புதல்வன்,
அகண்ட தீப செங்கதிரானவன், காரிருள் விலக்கும் கதிரவன், கர்ணன் போற்றும் தந்தையானவன்,கருணையே, காந்தமே, சாந்தமே, காலத்தின் சாட்சியாய் நிலைப்பவன் என ஏக பரம்பொருளாய் கணபதி இங்கே நிலை பெற்று இருக்கின்றார். இந்த திருக்கோயில் முருகன் அருளால் உருவானது என்றால் கொஞ்சம் யோசிக்கின்றீர்கள் தானே? திருப்புகழ் அமிர்தம் ஊட்டிய வாரியார் சுவாமிகளின் கைங்கர்யத்தில் இந்த விநாயகர் கோயில் உருவாகி உள்ளது என்றால் முருகப் பெருமானே தானே இங்கே ஆதாரம். முருகன் அருள் முன்னிற்க இங்கே விநாயகர். விநாயகர் இங்கே சுயம்பு மூர்த்தியாக மாமரத்தில் வாசம் செய்து வருகின்றார்.
மூத்தோனை வணங்குகின்றோம். தற்போது நாம் சந்தித்து வரும் பல பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட மூத்தோனை வணங்குவோம். கிரக ரீதியாகவும் பார்க்கும் போது ராகு,கேது கோள்களின் ஆதிக்கத்தினால் தான் வைரஸ் காய்யச்சல் பரவி வருகின்றது என்றும் சொல்கின்றார்கள். விநாயகர் கேதுவின் அம்சம் ஆவார்.நம் குருநாதர் அகத்திய பெருமானும் கேதுவும் அம்சம் ஆவார். எனவே குருவாகவும், திருவுமாகவும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ அகத்தியர் தரிசனமும், ஸ்ரீ விநாயகர் தரிசனமும் ஒருங்கே இங்கே பெற முடிகின்றது.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
என்று பாடி ஸ்ரீ விநாயகர் பாதம் பற்றுவோம். போற்றுவோம்.
சில
வருடங்களுக்கு முன்பு குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் விநாயகர் சதுர்த்தி
நன்னாள் அன்று மூத்தோன் குறித்து உரைத்த அற்புதமான வாக்கு.
இறைவனின்
கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நல்விதமாய் இஃதொப்ப எமது
வாக்கை கேட்க வேண்டும் என்று எண்ணி, அஃதும், முன்னர் கூறிய வாக்கினை
மீண்டும் கேட்க வேண்டும் என எண்ணி, அதனை பலருக்கும் பகிர வேண்டும் என
எண்ணி, இன்னவன் இதழ் ஓதுபவன் இஃதொப்ப ஓலை தன்னை எடுத்திட்டாலும் இஃதொப்ப
செயல் சிறப்பு என்று கூறுவதற்கு இல்லை. இல்லையப்பா, ஒரு முறை கூறிய வாக்கை
அதைப்போல மீண்டும் கூற ஜீவ அருள் ஓலையில் விதி. என்றாலும் சில சமயம்
கூறுகிறோம், சில காரணங்களுக்காக.
இருப்பினும்
அதனையே வலிமையாய் பிடித்துக் கொண்டு அடிக்கடி எமை நாடுவது சிறப்பல்ல.
என்றாலும் இதன் மேலும் பிரம்ம முகூர்த்த நாழிகை பூர்த்திக்கு பிறகும்
கேட்பது சிறப்பல்ல என்றாலும் இஃதொப்ப ஆர்வம் கொண்ட சேய்கள் அஃதொப்ப சேய்கள்
தன் மன வருத்தம் கொண்டிடாமல் இருக்க இஃதொப்ப நல்விதமாய் இன்று மட்டும்
இஃதொப்ப சில்வாக்கை கூறுகிறோம், இறையருளால்.
இறையருளால்
இத்தருணம் இதனை கூறுவதால் இதனையே அன்றாடம் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வது
சிறப்பல்ல என்பதை புரிந்து கொள்வது எம் சேய்களுக்கு அவசியம் ஆகும்.
ஆகுமப்பா, இஃதொப்ப நல்விதமாய் பரிபூரண சரணாகதி இறை வழிபாடும். தன்னலம்
கருதா தொண்டும், சாத்வீக எண்ணமும், வாழ்வும் அவசியம். இஃதொப்ப வழியில் எமை
நாடும் சேய்கள் நாளும் செல்ல இறைவன் அருளாலே நல்லாசிகளை இயம்புகிறோம்.
இயம்புகிறோம்,
சில்வாறாய் முன்னர் கூறிய மூத்தோன் குறித்த வாக்கு தன்னை, ஆனாலும், சற்றே
இத்தருண கிரக நிலைக்கு ஏற்ப மாற்றித்தான், மாற்றித்தான் கூறுவதால் அஃதொப்ப
வாக்கு வேறு, இஃதொப்ப வாக்கு வேறு என எண்ணாமல் அனைத்தும் இறையருள் என்று
எண்ணுவதே சிறப்பு அப்பா. இஃதொப்ப நன்றாய் எமது வாக்கை புரிந்துகொண்டு இறை
வழியில் வர நல்லாசிகள். எம் சேய்கள் அனைவருக்கும்.
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இம்மண்ணின் மூத்தோனை வணங்கு.
மூத்தோன் என்றால் வேழ முகத்தோன் என்ற பொருள் கொண்ட அஃதொப்ப மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
எதற்கும் முன்பாக, எச்செயலுக்கும் முன்பாக மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப தடைகள் வாராது செயல் நடக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு.
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு,
என்றென்றும், எதற்கும் முன்மாதிரியாக மூத்தோனை வணங்கு. நல்விதமாய் செயல் நடக்க மூத்தோனை வணங்கு.
நற்காரியம் தடையின்றி நடக்க மூத்தோனை வணங்கு.
நலம்தான் தொடர என்றென்றும் மூத்தோனை வணங்கு.
நன்மைகள் நாளும் பெருக நாள்நாளும் மூத்தோனை வணங்கு.
நாள் நாளும் பாவ வினைகள் குறைய நன்றாய் மூத்தோனை வணங்கு.
நவில்கின்றோம், விருக்ஷத்தின் அடியில், வன்னி விருக்ஷத்தின் அடியில் அமர்ந்திருக்கும் மூத்தோனை வணங்கு. தேக நலம் பெருகும்.
நவில்கின்றோம்
நன்றாய், விருக்ஷத்தின் அடியில், அரச விருக்ஷத்தின் அடியில் உள்ள மூத்தோனை
வணங்கு. அஃதும் தேக நலத்தோடு வம்ச விருத்தியையும் நல்கும்.
நவில்கின்றோம் மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
நன்றாய் இஃதொப்ப கிழக்கு திசை பார்த்த மூத்தோனை வணங்கு. நல்விதமாய் இஃதொப்ப லோகாய வெற்றிகள் கிட்ட வாய்ப்பை நல்கும்.
நவில்கின்றோம்,
மேல் திசை நோக்கிய மூத்தோனை வணங்கு. நன்றாய் புரிந்து கொள்ள, எதனையும்
நன்றாய் புரிந்துகொள்ள அஃது உதவுவதோடு தேகத்தையும் காக்கும்.
நவில்கின்றோம் மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
நன்றாய்,
தென் திசை பார்க்க உள்ள மூத்தோனை வணங்கு. நன்றாய் புரிந்துகொள்ளலாம்.
இஃதொப்ப அச்சங்கள் குறைய, எஃது குறித்தும் அச்சங்கள் குறைய இஃதொப்ப வழிபாடு
உதவும்.
நவில்கின்றோம், மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
வட
திசை நோக்கிய மூத்தோனை வணங்கு. இஃதொப்ப நன்றாய், வட திசை நோக்கிய மூத்தோனை
வணங்க நாள் நாளும் செல்வம் பெருகுவதோடு நன்றில்லா ருண குழப்பம் தீருமப்பா.
இஃதொப்ப கூறுகிறோம் மீண்டும், மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
நாள் நாளும் காரியங்கள் தடையின்றி நடக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
எஃதொப்ப செயல் துவங்கும் முன்னர் மூத்தோனை வணங்கு. எச்செயல் ஆனாலும் அதற்கு முன் மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப நன்றாய் பயணத்தின் முன் மூத்தோனை வணங்கு. இயம்புகிறோம், சுப மங்கள நிகழ்வுக்கு முன்னால் மூத்தோனை வணங்கு.
இயம்புகிறோம்
மேலும் நன்றாய், காரிய தடை கண்டு கலங்காமல் இருக்க மூத்தோனை வணங்கு,
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
மூத்தோன் என்னும் வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு.
கூறுகிறோம் நன்றாய், வாசியோகம் சித்திக்க மூத்தோனை வணங்கு.
நல்விதமாய்
வாழ்வு நிலை சித்திக்க மூத்தோனை வணங்கு. நவில்கின்றோம் நன்றாக காரியங்கள்
யாவும் வசப்பட்டு நிச்சயமாய் அனைத்தும் கிட்ட மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப கூறுகிறோம், உள்ளிருக்கும் ஆத்ம ஒளியை தரிசிக்க மூத்தோனை வணங்கு.
உள்ளே இருக்கும் அஃதொப்ப ஒளி தன்னை உணர மூத்தோனை வணங்கு.
கூறுகிறோம், அனைத்து கிரக தோஷம் குறைய மூத்தோனை வணங்கு.
குறிப்பாக,
சிகியின் தாக்கம் குறைய மூத்தோனை வணங்கு. கூறுகிறோம் மேலும், சர்ப்ப
தாக்கம் குறைய, முழுமையாய் சர்ப்ப தோஷம் நீங்க மூத்தோனை வணங்கு.
கூறுகிறோம், மங்கல தோஷம் நீங்க மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு.
நன்றாய், குண்டலினி சக்தியை உணர்ந்து, உணர்ந்து மேலேற்ற மூத்தோனை வணங்கு.
நவில்கின்றோம் இஃதொப்ப லோகாயம் தாண்டி மேலேற, மேலேற, ஆத்ம வழியில் மேலேற மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப
மூச்சடக்கி இஃதொப்ப முக்காலம் தவத்தில் இருக்கும் அஃதொப்ப பயிற்சி
சித்திக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப கிரகங்கள் மாறும் காலம் மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
அன்றாட
வாழ்வில் எதிர்படும் அனைத்து சிக்கலையும் குறைக்க அஃதொப்ப கர்ம வினை
தடுத்து, தடுத்து வாட்டும் நிலை மாற மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு,
மூத்தோனை வணங்கு.
வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு.
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. ஆசிகள்.
ஸ்ரீ அகத்திய பெருமானின் ஜீவ அருள்நாடி வாக்குகளை படித்து,பொருள் உணர்ந்து அதன் படி நடந்து அனைவரும் பயன் பெறுங்கள்.
தஞ்சை ஸ்ரீ அகத்தியர் ஜீவ அருள் நாடியில் படிக்கப்பட்ட வாக்குகள்.
சரி.இனி மூத்தோன் தரிசனம் பெறலாமா? மூத்தோன் மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் நாம் பெற்ற அருள்நிலைகளை கீழே தருகின்றோம்.
மூர்த்தியாக மாமரத்தில் வாசம் செய்து வருகின்றார்.
இந்த திருத்தல வரலாறு விரைவில் தருகின்றோம். இங்கு விநாயகரோடு,
முருகப்பெருமான், சிவன், பார்வதி, லலிதாம்பாள், துர்க்கை, குரு பகவான்,
பெருமாள், ஐயப்பன், ஆஞ்சநேயர், நவகிரக நாயகர்கள், அகத்தியர், வள்ளலார் என
அனைவரையும் ஒருங்கே காணலாம். இங்கு நித்ய பூசை அனைத்து மூர்த்திகளுக்கும்
நடைபெற்று வருகின்றது.
சிறப்பு பூசைகளும் இங்கே
அருளப்பட்டு வருகின்றது. சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு,பிரதோஷ சிவன்
வழிபாடு, அஷ்டமி பைரவர் வழிபாடு, மூலம் ஆஞ்சநேயர் வழிபாடு,
சஷ்டி,கிருத்திகை முருகன் வழிபாடு, பூசம் வள்ளலார் வழிபாடு, ஆயில்யம்
அகத்தியர் வழிபாடு என்று களை கட்டும் திருத்தலம் என்று சொன்னால் அது
மிகையில்லை. மேலும் இங்கு அமாவாசை தோறும் நம் TUT குழுவின் மூலம் மோட்ச தீப
வழிபாடும் நடைபெற்று வருகின்றது.
இனி 12.03.2020 வியாழக்கிழமை மாசி மாத மகா சங்கடஹர சதுர்த்தி அன்று நடைபெற்ற அகோர கணநாத ஹோமம் , 108 சங்கு பூஜை , மகாபிஷேகம் சந்தனக்காப்பு அலங்காரம், 1008 மோதக சகஸ்ரநாம அர்ச்சனை ,உற்சவர் பிரகார உற்சவம் நிகழ்வின் துளிகளை இங்கே காண உள்ளோம்.
கணபதி ஹோமம் கை மேல் பலன் என்று சொல்வார்கள். அப்படியொரு யாக நிகழ்வை தான் அனைவரும் இங்கே பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.
கிருபானந்த வாரியார் அவர்களால் இந்த கோயில் கைங்கர்யம் செய்யப்பட்டுள்ளது என்பதை பறை சாற்றும் காட்சிகள் இங்கே.
சங்காபிஷேகத்திற்கு தயார்.
பூர்ணாஹூதி சங்கல்பம் செய்த போது
அன்று மாலை சந்தனகாப்பு அலங்காரத்தில் நம் விநாயப் பெருமான் காட்சி தருகின்றார்.
இடர்களை நீக்கும் இடம்புரி கணபதியையும் ,வளங்களை அருளும் வலம்புரி
கணபதியையும் ஒரு சேர வணங்கி, வாழ்வில் வளம் பெற அனைவரையும் நம் தளத்தின்
சார்பில் அழைக்கின்றோம். மேலும் சென்ற வாரம் நடைபெற்ற மோட்ச தீப
வழிபாட்டின்போது, இத்திருக்கோயிலை காணொளியாக எடுத்து இணையத்தில்
வெளியிட்டுளோம். இதோ தங்களின் பார்வைக்கு.
இணையத்தில் இங்கே
பார்க்கலாம். மிக மிக அற்புதமான காணொளித் தொகுப்பை வெளியிட்ட திரு.யாணன்
ஐயா அவர்களுக்கும் நம் தளத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html
குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html
கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html
அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html
ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html
மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html
குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html
மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html
மகான்களின் வி(வ)ழியில்...- ஆதனூரில் இராகவேந்திர சுவாமிகள் ஆராதனை - 25.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/25082019.html
திருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_22.html
திரும்பி பார்க்கின்றோம் : சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_36.html
மகான்களின் வி(வ)ழியில்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_38.html
சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post.html
ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_27.html
சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html
வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html
அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html
அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html
பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html
No comments:
Post a Comment