"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, May 7, 2019

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய்

 அன்புள்ள நல்ல உள்ளங்களுக்கு வணக்கம்.

வாழ்க்கை படகில் ஓடிக் கொண்டிருந்தேன். இரு ஆண்டுக்கு முன்பு அகத்தியர் வனம் அறிமுகம் கிடைத்தது. பல்வேறாய் தொண்டு செய்பவர்களுடன் அறிமுகம் கிடைத்தது. அன்ன தர்மம் செய்வது பற்றி நினைத்தேன். அகத்தியர் வனம் மலேசியா குழு அன்னதானம் செய்வதை பார்த்தேன். 
ஜீவ அமிர்தம், rightmantra சுந்தர் என நட்பு வட்டத்தின் அனுபவம் உதவியுடன் என் அலுவலக நண்பர்கள் உதவியுடன் (தமிழ்மணி, அரவிந்த், மணிகண்டன் & மனோ) சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 10 உணவு பொட்டலங்கள் தயார் செய்து கூடுவாஞ்சேரி சுற்றி உள்ள பகுதிகளில் கொடுத்தோம். 

மார்ச் மாதம் மேலும் சில நண்பர்கள் கை கோர்த்தனர். அன்பு தொண்டு இல்லம், கூடுவாஞ்சேரி வள்ளலார் கோவில், திருப்போரூர் முருகன் கோவில் என மாதா மாதம் தொண்டு செய்தோம்.
இந்த பணி கோவில் சுத்தம் செய்தல், ஆசிரமத்திற்கு உதவுதல் என நீண்டது. இந்த மாதப் பணியானது மரம் நடு விழாவில் வந்து நிறைந்துள்ளது. தற்போது 50 உறுப்பினர்களுடன் "தேடல் உள்ள தேனீக்களாய்" என்ற பெயருடன் இயங்கி வருகின்றோம்.



எப்படி ஆரம்பித்தோம் என்று புரியவில்லை. ஆனால் ஓராண்டு நிறைவில் மன மகிழ்வுடன் வாழ்தலுக்கான புரிதல் கிடைத்துள்ளது.

எங்கள் சேவை விரிவடைய பொருளுதவி செய்யலாம். எங்களுடன் நேரிடையாக பங்கேற்றும் உதவலாம்.

R. RAKESH 
CHENNAI PARRYS CORNER BRANCH HDFC Bank
IFSC:-HDFC0000166

பொருள் உதவி  செய்த அன்பர்கள்  தவறாமல்  தங்கள்  பெயர் முகவரியுடன் கீழ்க்கண்ட அலைபேசியில் குறுந்தகவல் மூலம் உறுதி செய்திட வேண்டுகிறோம்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்  தாழ்

நாங்கள் விதைப்பது அன்பு மட்டுமே.

வழி நடத்தும் பேராற்றலுக்கு நன்றி,

அக மகிழ்கின்றேன் அவர் அருளாலேஅவர் தாள் வணங்கி !!!. 

நன்றி .

 Mr.Rakesh:7904612352,9940405629
தொலைபேசியில் வேண்டுவோர்க்கு வங்கிக்கணக்கு விபரங்கள் தருகின்றோம்.

2017 ம் ஆண்டு தொடங்கிய சேவைப்பணி, இந்தாண்டு மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

4/5/2019 அன்று நாம் தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழுவின் சார்பில் அன்று நாள் முழுதும் அன்னதானம் செய்தோம். அன்று காலையில் சுமார் 30 உணவு பொட்டலங்கள் தயார் செய்து கொடுத்தோம். 






அன்று மதியம் கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் சுமார் 50 பேருக்கு மேல் உணவு கொடுத்தோம். 








அன்று இரவு மோட்ச தீப வழிபாடு செய்து, கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர விநாயகர் கோயிலில் 100 பேருக்கு உணவளித்தோம். அனைத்தும் குருவருளால் மட்டுமே இது சாத்தியம்.







வழக்கம் போல் உறுதுணையாகவும் உற்ற துணையாகவும் இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களை இங்கே வணங்கி, வாழ்த்தி மகிழ்கின்றோம்.

- மீண்டும் சிந்திப்போம்.

2 comments:

  1. Great TUT Team, Always Welcome.

    ReplyDelete
    Replies

    1. தங்களின் கருத்திற்கு நன்றி

      ரா.ராகேஷ்
      கூடுவாஞ்சேரி

      Delete