"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, May 23, 2019

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி

அன்பின் நெஞ்சங்களே.

அனைவருக்கும் வணக்கம். இன்றைய திருநாளின் பாம்பன் சுவாமிகளின் குருபூசையும், குழுமியானந்த சுவாமிகளின் குரு பூசையும் நடைபெற்று வருகின்றது. மகான்களின் வரலாறு கேட்பது,படிப்பது நம்மை இன்னும் குருவை நிலை பெற செய்யும். இன்றைய நன்னாளில் பாம்பன் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய சித்திரக் கவியை தருகின்றோம். இது போன்ற சித்திரக்கவி வேறெந்த மொழியில் உள்ளதா என்பது நமக்குத் தெரியவில்லை. தமிழ் மொழி தரணியெங்கும் வாழும். இதற்கு சான்றாக திரு என்ற அடைமொழியுடன் உள்ள நூல்களான திருக்குறள், திருவாசகம்,திருப்பாவை,திருவெம்பாவை போன்ற நூற்கள் இன்னும் உயிர்ப்பில் இருக்கின்றது. தமிழ் மொழி இயற்கை மொழி, முருகன் மொழி, அகத்தியரின் மொழி...மொத்தத்தில் தமிழ் மொழி இறை மொழி. அந்த இறை மொழியை இன்னும் வலுவூட்ட இதோ சித்திரக்கவியை தருகின்றோம்.
 அதிசயமான மொழி தமிழ் !! அதனினும் அதிசயம் இந்த பந்தங்கள் !!! உண்மையில் தெய்வமே நமக்காக அருளியது போல் இருக்கிறது !!!!இதை இன்றைய குரு பிரசாதமாவாகவும், இறை அருளாகவும் எடுத்துக் கொள்ளவும்.

1. சதுரங்க பந்தம் 

எதிரிகளின் சூழ்ச்சிகளைவெல்ல,மனக்கவலைகள் நீங்க,இழந்த செல்வத்தை மீட்க,இடர் நீங்கி இன்பம் பெறவும் ஏற்றது.




வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா                        
வேளா மயிலோய் விமலர்கண் வந்தச மாதி ய ர் கோ                      
வாளா யெனுநாவுள் ளார்நா ரருந் தெங்க ளாரியற்கே            
யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே


இந்தப் பாடலில் முதல் அடியில் 18 எழுத்துக்களும் இரண்டாம் அடியில் 21 எழுத்துக்களும் மூன்றாம் அடியில் 21 எழுத்துக்களும் நான்காம் அடியில் 18 எழுத்துக்களும் ஆக மொத்தம் 78 எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்

சென்ற இரு அத்தியாயங்களில் மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பாடிய பாடல்களுக்காகக் கொடுக்கப்பட்ட துருவக் குறிப்பு மீண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


துருவக் குறிப்பு
{ 1-64 – 2+62 -- 3+50 – 4+44 – 5+36 -– 6+26 .— 7+22 –
15+78 – 17+77 – 29+76 – 35+75 – 43+74 --  53x73 – 57+72}
மொத்த எழுத்துக்கள் 78.

இந்த இலக்கணம் தவறாமல் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடலும் இருப்பதைக் காணலாம்.


வா
 1
ழ்
2
 வ
 3
 து
 4
 மா
 5
 ண
 6
ப்
 7
பெ
8
 கி
 9
ளா
10
யா
11
 கே
12
 ற்
13
 ய
 14
ரி
15
ளா
16
 ர்
17
நா
18
19
 ரு
20
 ந்
 21
 தெ
 22
ங்
23
24
ளா
25
ள்
26
வு
27
நா
28
 னு
 29
யெ
30
ளா
31
வா
32
 ந்
33
34
35
மா
36
 தி
 37
 ய
38
ர்
39
கோ
40
41
ண்
42
43
ர்
44
 ல
 45
46
வி
47
ய்
48
49
50
கா
51
வே
52
 ளா
 53
 ம
 54
யி
55
லோ
56
மே
57
58
59
ந் 60
 சு
 61
ஞ்
62
று
63
லே
64


பாடலில் ஒன்றாம் எழுத்தும் 64ஆம் எழுத்தும் வா
இரண்டாம் எழுத்தும் 62ஆம் எழுத்தும்  ளா
மூன்றாம் எழுத்தும் 50ஆம் எழுத்தும் ர
நான்காம் எழுத்தும் 44ஆம் எழுத்தும் நா
ஐந்தாம் எழுத்தும் 36ஆம் எழுத்தும் தி
ஆறாம் எழுத்தும் 26ஆம் எழுத்தும் ம
ஏழாம் எழுத்தும் 22ஆம் எழுத்தும் யி
பதினைந்தாம் எழுத்தும் 78ஆம் எழுத்தும் மே
பதினேழாம் எழுத்தும் 77ஆம் எழுத்தும் ம
இருபத்திஒன்பதாம் எழுத்தும் 76ஆம் எழுத்தும் க
முப்பத்தி ஐந்தாம் எழுத்தும் 75ஆம் எழுத்தும் மா
நாற்பத்தி மூன்றாம் எழுத்தும் 74ஆம் எழுத்தும் னு
ஐம்பத்தி மூன்றாம் எழுத்தும் 73ஆம் எழுத்தும் தெ
ஐம்பத்தி ஏழாம் எழுத்தும் 72ஆம் எழுத்தும் ரி
துருவக் குறிப்பின் அடிப்படையில் மேலே கண்டபடி சதுரங்க பந்த பாடலைப் பார்த்தால் மிகச் சரியாக அமைகிறது. அமைப்பு முறையைக் கண்டு வியக்கிறோம்.


இந்தப் பாடல் ஒரு மந்திரப் பாடலாக இருப்பதை பக்தர்கள் அனைவரும் அனுபவத்தால் உணர்கின்றனர். பல வித அற்புத பலன்களை இது அருளுகிறது.


இன்னொரு விந்தை! மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் சதுரங்கப் பாடல்களையும் இந்தப் பாடலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சில எழுத்துக்கள் அதே கட்டங்களில் அமையும் விந்தையையும் பார்க்கலாம்.சுவாமிகள் பாடி அருளிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 6666. இந்தப் பாடல்கள் அனைத்து நலன்களும் அருளும் மந்திரங்கள். குறிப்பிட்ட பாடல்கள் மூலம் குறிப்பிட்ட காரியம் சித்தியாகும் என்பது பக்தர்களின் அனுபவம். வடமொழியும் தமிழையும் நன்கு கற்றவர் சுவாமிகள். வடமொழி காழ்ப்புணர்ச்சி இன்றி வடமொழியையும் தேன் தமிழையும் கற்று வல்லவராக வேண்டும் என்று திருஞான சம்பந்தர் அருளியதை சுவாமிகளும் அப்படியே ஆமோதிக்கிறார். இரு மொழிகளிலும் வல்லவராக வேண்டும் என்பதையே சுவாமிகளின் வாழ்க்கை நமக்கு எடுத்து இயம்புகிறது.


 சுவாமிகள் இயற்றிய 6666 பாடல்களும் 6 மண்டலங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டாம் மண்டலம் (திருவலங்கற்றிரட்டு) பல்வேறு சித்திரக் கவிகளைக் கொண்டு விளங்குகிறது. இதே போல நான்காம் மண்டலத்தில் உள்ள பத்து பிரபந்தங்கள் அனைத்துமே சித்திரக்கவிகளாக உள்ளன. சித்திரக் கவிகளுக்குள்ளே பல சித்திரக் கவிகளை அமைத்தும் இவர் பாடியிருப்பது தமிழ் என்னும் விந்தையைப் பற்றி ஆராய விரும்புவோருக்கு ஒரு அரும் பொக்கிஷமாகும்.

சஸ்த்ர பந்தம், சதுரங்க பந்தம் மயூர பந்தம், கமல பந்தம் என பல்வேறு வகை சித்திரக் கவிகளை சுவாமிகள் அருளியுள்ளார்.



2.சஸ்திர பந்தம்

 வியாபாரம்,தொழில்,பதவி சிறக்கவும்,எதிர்மறை எண்ணங்கள் மறையவும் கவசமாக திகழ்வது.



3. கமல பந்தம்

தியான யோகமும்,சிந்தை வலுவும் பெறுவதோடு,இதய சம்பந்தமான நோயும்,பதற்றமும் நீங்கப் பெறலாம்.



4. இரத பந்தம்

வாகன விபத்துக்கள் ,விபத்துக்கள் பற்றிய பயம் தவிர்க்கவும்,பயணத்தின்போது பாராயணம் செய்யவும் ஏற்றது



5. மயூர பந்தம்

பகை விலக,மந்திர,தந்திர,பில்லி,சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது.




5. துவிதநாக பந்தம் 

சர்ப்பதோஷம், காலசர்ப்பதோஷம்,அடிக்கடி பாம்புகளின் தொல்லை, மாலை சுற்றிப் பிறந்த தோஷம் மகப்பேறுகால துன்பம், இராகு, கேது கிரக தோஷம் நீங்கப் பெறலாம்



சுவாமிகளின் சித்திரக்கவியை தினமும் ஓதி, நம் வாழ்வையும் சித்திரமாக்குவோம்.






இன்று சத்குரு பாம்பன் சுவாமி குரு பூஜை அலங்காரத்துடன் மேலே கண்டு அருள் பெறுங்கள்.

- மீண்டும் சந்திப்போம்

மீள்பதிவாக:-



 திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_23.html

இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 90 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2019/05/90.html 

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html


 அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

No comments:

Post a Comment