"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, June 25, 2021

ஆர்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - தானம் செய்ய பழகு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இந்த தொற்றுக்கிருமி காலத்தில் நம் குழு அன்பர்களின் உதவியால் வழக்கம் போல் நம் சேவைகள் தொடர்ந்து வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் தானம் செய்ய பழக வேண்டும்.திதிகளில் சிறந்தது துவாதசி திதி. மாதங்களில் சிறந்தது மார்கழி.  மந்திரங்களில் சிறந்தது காயத்ரி  அது போல் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள்.இதை எளிதாக சொல்லிவிடலாம் ,ஆனால் அனுபவித்து செய்யும் போது தான் இதன் உண்மை புரியும்.

தானம் என்றவுடன் அட.போப்பா...நாங்களே திண்டாடி வருகின்றோம் என்று நீங்கள் நினைப்பது நம் செவிகளில் விழுகின்றது. தவம் எப்படி பல நிலைகளில் உள்ளதோ, அதே போல் தானமும் பல வழிகளில் செய்யலாம். முதலில் நம் உடல்,மனம்   கொண்டு தானம் செய்ய பழகுங்கள். இந்த தானம் செய்ய செய்ய, பொருள் கொண்டு செய்யும் தானம் நமக்கு கிடைக்கும்.

கண்கள் - இரக்கத்துடன் பார்த்தல்

நாக்கு  - இனிய சொற்கள் பேசுதல் 

காது - பிறர் கூறும் வசைகள் பொறுமையுடன் கேட்டல், அடுத்தவரின் மனக்குமுறலை அக்கறையுடன் கேட்டல்

 கை,கால் - இவற்றைக்கொண்டு அடுத்தவருக்கு உதவுதல் 

மனம் - தினமும் உலகம் மேன்மைபெற வாழ்த்துதல் 

இவற்றை செய்வதற்கு பணம் வேண்டாம் அல்லவா? முதலில் சிறிது சிறிதாக முயற்சி பாருங்கள். நம்மில் பல மாற்றங்களை இந்த தானம் கொடுக்கும். இதனைத் தான் திருமூலர்  தெய்வம் பின்வருமாறு கூறுகின்றார்.


யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

திருமூலர் திருமந்திரம்

இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும்.

எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம் இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம்.பகவான் பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்னை கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை. சில பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார்.

இதை யாரும் செய்யலாம். ஒரு பிடி புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம். இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இதையும் யாரும் எளிதில் செய்யலாம்.

தான் சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கைப்பிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாரும் செய்யக் கூடிய எளிமையானதே.
இவைகளில் எதையும் செய்ய முடியவில்லையா பரவாயில்லை. அடுத்தவனோடு பேசும் போது கடுப்படிக்காதே. இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொன்னாலும் அதையும் இனிமையாகச் சொல். இதையாவது செய்யலாமே.

நாம் மூச்சடக்க வேண்டாம். பேச்சடக்க வேண்டாம். நம்மை கடைத்தேற்றக் கூடிய எளிமையான அறங்கள் இவைகளில் எந்த ஒன்றையாவது செய்து பார்க்கலாமே.ஒரு கை புல், ஒரு கை பொரி அன்போடு படைத்தால் விநாயகர் வசப்பட்டு விடுவார்.சில துளசி இலைகளில் மகா விஷ்ணு வசப்பட்டு விடுவார்.சில துளி கங்கா தீர்த்தம் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார்.சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகி விடுகிறாள்.
இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம். ஆன்மீகம் என்றால் அன்புதான்.



இந்த அன்பைப் பிடித்து தான் அன்பை படித்து தான் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவும் அன்பர்களின் பொருளுதவியோடு அன்னசேவை போன்ற பல சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றது.




ஆர்க்கும் இடுமின், அவர், இவர் என்னன்மின்,
பார்த்திருந்து உண்மின், பழம்பொருள் போற்றன்மின்,
வேட்கை உடையீர், விரைந்து ஒல்லை உண்ணன்மின்,
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே
நூல்: திருமந்திரம் 





எப்படிச் சாப்பிடவேண்டும் தெரியுமா?

முதலில், நாம் சமைத்த உணவை நாம்மட்டுமே சாப்பிடவேண்டும் என்று நினைக்கக்கூடாது. காக்கைகள் சாப்பிடுமுன் தன்னுடைய கூட்டத்தை அழைத்து, கிடைத்த உணவை அவற்றுடன் பகிர்ந்துகொள்கிறதல்லவா? அந்த குணத்தை நாமும் கற்கவேண்டும்.
ஆகவே, சமையல் தயாரானதும் சட்டென்று உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கிவிடக்கூடாது. யாராவது இரவலர்கள் வருகிறார்களா என்று பார்த்து, காத்திருந்து உண்ணவேண்டும்.

அப்படி இரவலர்கள் நம் வாசலில் வந்து நின்றால், பசி என்று வந்த அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உணவு இடவேண்டும். அவர் ஏழையா, பணக்காரரா, முதியவரா, இளையவரா, ஆணா, பெண்ணா, எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் உணவை வழங்கவேண்டும்.
அடுத்து, சாப்பாட்டைச் சரியானமுறையில் சமைத்து, அது கெட்டுப்போவதற்குள் சாப்பிடவேண்டும். பழைய, வீணானவற்றைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.



நாம் உணவு உண்ணுதல் என்பது நாமே நமக்கு செய்யும் தானம் ஆகும்.எனவே பொறுமையாக உணவை ரசித்து,ருசித்து சாப்பிட வேண்டும். உணவு உண்ணுதற்கே இப்படி என்றால் அன்னதானம் போன்றவற்றிலும் பிறர் மனம் மகிழும் பொருட்டு , இவர் யார், அவர் யார் என்று பார்க்காது, தேவைப்படும் அன்பர்களுக்கு உணவு கொடுங்கள். 




எனவே தான் மீண்டும், மீண்டும் சொல்கின்றோம். அன்னதானம் செய்வது அனைத்தையும் கொடுப்பது ஆகும். அனைத்தும் என்றால் நம்மிடம் உள்ள பொருள், மனம் போன்றவை. அன்னதானம் போன்ற தானம் செய்ய முதலில் நம்மிடம் உள்ள பொருளை கொடுக்க தயாராக வேண்டும். பொருளை கொடுக்க மனம் தடுக்குமே? இவருக்கா? இவர் நன்றாக தானே உள்ளார்? இவருக்கு கொடுப்பதால் நமக்கு என்ன கிடைக்கும்? என்று மனம் 1008 கேள்விகளை எழுப்பும். இந்த நிலையையும் தாண்ட வேண்டும். அடுத்து பெறுபவர்கள் வேண்டும் அல்லவா? எனவே தான் கொடுக்கும் பொருள், கொடுக்கும் மனம், தானம் செய்ய வாய்ப்பு என மூன்றும் வேண்டும். இவை அனைத்தும் அந்த பரம்பொருளால் தான் தீர்மானிக்கட்டு வருகின்றது.

நம் தளம் சார்பில் பலவழிகளில் தானம் செய்து வருகின்றோம். அவற்றில் சில தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.

1. ஊரப்பாக்கத்தில் எத்திராஜ் சுவாமிகள் சித்தர் கோயில் வழியாக சுமார் 10 பேருக்கு மூன்று வேலை அன்னதானம் 
2. கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயில் அன்னதானம் 
3. 1000 டன் அரிசி மூட்டைகள் வாங்கி அவற்றை கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயில், செங்கல்பட்டு ஸ்ரீ அகத்தியர் ஞானக்கோட்டம், திருவாரூர் ஓம்காரம் அமைப்பு, மதுரை திருச்சுனை ஸ்ரீ அகத்தியர் கோயில் என பகிர்ந்து கொடுத்துள்ளோம்.
4. கல்வி உதவி தொகை கொடுத்துள்ளோம்.
5. இது தவிர பல சேவை அமைப்புகளுக்கு பொருளுதவி செய்துள்ளோம். 
6. வள்ளிமலை அடிவார சாதுக்களுக்கு இனிப்பு வழங்கினோம்.( நேற்றைய ஸ்ரீமத் அருனகிநாதர் குருபூஜைக்காக)

இங்கு சிலவற்றை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காக கூறியுள்ளோம். இவை அனைத்தும் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் அருளால் மட்டுமே நடைபெற்று வருகின்றது. குருநாதரின் வாக்கை மீண்டும் தருகின்றோம்.



மீண்டும் சிந்திப்போம். 

மீள்பதிவாக:-

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post.html

TUT - ஆவணி மாத இறைப்பணி - https://tut-temples.blogspot.com/2020/10/tut_16.html

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் (1)  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_21.html

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_11.html

அறம் செய்ய விரும்பு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_57.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

 இன்றைய இறைப்பணியோடு கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_14.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

 தவமா? கூட்டுப்பிரார்த்தனையா? - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_14.html

  நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html

 TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

நல்வினையாற்ற 19 வழிகள் - தானம் செய்ய பழகு - https://tut-temples.blogspot.com/2020/09/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - எதிர்பார்ப்பினைத் தவிர் - https://tut-temples.blogspot.com/2020/03/19_31.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

Wednesday, June 23, 2021

ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - 24.06.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இந்த பெருந்தொற்று காலத்தில் நாம் அனைவரும் போராடித்தான் ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றோம். இந்த சூழலில் நாம் ஒவ்வொருவரும் அறம் சார்ந்து இறை பக்தி கொண்டு வாழ வேண்டும். நமக்கு ஏன் இப்படி ஒரு கஷ்ட காலம் என்று கூட யோசிப்பதுண்டு. ஒரு வீட்டில் உள்ள பிரச்சினைக்கு வீட்டில் உள்ளவர்களின் எண்ணங்களே காரணம் ஆகும். உண்ணும் உணவு உடல் முழுதும் பாயும் என்றால் எண்ணும் எண்ணம் எங்கும் பாயும். எங்கும் பாய்கின்ற எண்ணங்களின் தொகுப்பு காலத்திற்கேற்ப விளைவிற்கு தற்போது வந்துள்ளது. எனவே எண்ணும் எண்ணத்தை இனியாவது சரி செய்து சீர் தூக்கி வாழ்வோம். நாம் மட்டுமா? பல அருளாளர்களும் இந்த நிலை தாண்டி வந்துள்ளாரகள். அப்படிப்பட்ட ஒரு அருளாளர் இறையுடன் கலந்த தினம்  இன்று. 

வேதம் வேண்டாம், சகல வித்தை வேண்டாம்,கீத 
நாதம் வேண்டாம், ஞான நூல் வேண்டாம் , ஆதி 
குரு புகழை மேவுகின்ற கொற்றவன்தாள் 
போற்றும் திருப்புகழைக் கேளீர் தினம் 

என்று சொன்னாலே நமக்கு புரிந்து விடும்.ஆம்.வாக்கிற்கு அருணகிரி என்று போற்றப்படும் நம் வாழ்க்கைக்கு திருப்புகழ் தந்த ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 

 இன்றைய பதிவில் ஸ்ரீமத் அருணகிரிநாதர் சுவாமிகள் பற்றி கொஞ்சம் சிந்திக்க உள்ளோம்.




திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.

என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.

 திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.




பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ??

கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.

 அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.

மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.

சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.

தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காட்சி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.

அருணகிரிநாதர் கைகளில் ஆறு விரல் இருந்தன. அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும், அவருக்குரிய "சரவணபவ" எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருப்பதாகக் கூறுவர்.

அருணகிரிநாதர் சுவாமிகள் பாடிய பாடல்களின் தொகுப்பு கீழே.

கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
கந்தரனுபூதி (52 பாடல்கள்)
திருப்புகழ் (1307 பாடல்கள்)
திருவகுப்பு (25 பாடல்கள்)
சேவல் விருத்தம் (11 பாடல்கள்)
மயில் விருத்தம் (11 பாடல்கள்)
வேல் விருத்தம் (11 பாடல்கள்)
திருவெழுகூற்றிருக்கை

திருப்புகழ் இன்றி பதிவை நிறைவு செய்ய மனம் மறுக்கின்றது, அனைவரும் கீழ்கண்ட திருப்புகழை ஓதுங்கள். திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும். இதோ..இந்த அற்புத திருநாளில் நம் வாழ்க்கை மணக்க அருளாளர் அருணகிரிநாதர் அருள் புரியட்டும்.


விநாயகர் துதி (இராகம் - நாட்டை; தாளம் - ஆதி)

        தத்தன தனதன தத்தன தனதன
        தத்தன தனதன ...... தனதான

        கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
        கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்

        கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
        கற்பகம் எனவினை ...... கடிதேகும்

        மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
        மற்பொரு திரள்புய ...... மதயானை

        மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
        மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

        முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
        முற்பட எழுதிய ...... முதல்வோனே

        முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
        அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

        அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
        அப்புன மதனிடை ...... இபமாகி

        அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
        அக்கண மணமருள் ...... பெருமாளே.


திருப்புகழ் 218 செகமாயை உற்று  (சுவாமிமலை)

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
     திருமாது கெர்ப்ப ...... முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
     திரமாய ளித்த ...... பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
     மலைநேர்பு யத்தி ...... லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
     மணிவாயின் முத்தி ...... தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
     முலைமேல ணைக்க ...... வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
     மொழியேயு ரைத்த ...... குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
     தனியேர கத்தின் ...... முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
     சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.

திருப்புகழ் 62 தண்டை அணி  (திருச்செந்தூர்)

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
     தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
     சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
     கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
     கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
     பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
     புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
     கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
     கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.


"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் "


        "முத்தைத்தரு"


        இராகம்: கௌளை
        தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு

        தத்தத்தன தத்தத் தனதன
        தத்தத்தன தத்தத் தனதன
        தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான


        முத்தைத்தரு பத்தித் திருநகை
        அத்திக்கிறை சத்திச் சரவண
        முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

        முக்கட்பர மற்குச் சுருதியின்
        முற்பட்டது கற்பித் திருவரும்
        முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

        பத்துத்தலை தத்தக் கணைதொடு
        ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
        பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

        பத்தற்கிர தத்தைக் கடவிய
        பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
        பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே

        தித்தித்தெய ஒத்தப் பரிபுர
        நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
        திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

        திக்குப்பரி அட்டப் பயிரவர்
        தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
        சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

        கொத்துப்பறை கொட்டக் களமிசை
        குக்குக்குகு குக்குக் குகுகுகு
        குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

        கொட்புற்றெழ நட்புற் றவுணரை
        வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
        குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.

திருத்தணியில் பாடப்பட்ட ’இருமல் உரோகம்..’ எனத்தொடங்கும் திருப்புகழ் ’மந்திரத் திருப்புகழ்’ எனப்படுகிறது. இத்திருப்புகழ் நோய் தீர்க்கும் என்று கூறப்படுகிறது.



        இருமல் உரோகம் முயலகன் வாதம்

                எரிகுண நாசி விடமே நீர்

        இழிவு விடாத தலைவலி சோகை

                எழுகள மாலை இவையோடே


        பெருவயிறு ஈளை எரிகுலை சூலை

                பெருவலி வேறும் உளநோய்கள்

        பிறவிகள் தோறும் எனை நலியாத

                படிஉன் தாள்கள் அருள்வாயே


        வரும் ஒரு கோடி அசுரர் பதாதி

                மடிய அநேக இசைபாடி

        வரும் ஒரு கால வயிரவர் ஆட

                வடிசுடர் வேலை விடுவோனே


        தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி

                தரு திரு மாதின் மணவாளா

        ஜலமிடை பூவின் நடுவினில் வீறு

                தணிமலை மேவு பெருமாளே

"இருமல், ரோகம், முடக்கு வாதம், எரிவாயு, விஷநோய்கள், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை, எழுகள மாலை மற்றும் வேறு நோய்கள் எதுவும் இப்பிறவியிலும், இனி வரும் பிறவிகளிலும் என்னை வாட்டாத வகையில் முருகா, உனது திருவடிகளை தந்து அருள வேண்டும்.கோடிக்கணக்கான அசுரர்கள் அழியவும் அதனால் கால பைரவர் மகிழ்ந்து ஆடவும் வடிவேலை விடும் வேலாயுதக் கடவுளே! மேகத்தை வாகனமாக கொண்ட தேவேந்திரனின் மகளான தெய்வயானை மணவாளனே! திருத்தணிகை மலையில் வாழும் பெருமானே!"




ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி

அருவம் ஒரு நான்காகி உருவம் ஒரு நான்காகி அவைஇரண்டும்

மறுவியுள உருவருவம் ஒன்றாகி முத்திறமும் வழுத்தவொண்ணாப் 

பெருவெளிக்கும் அப்பாலாய் உள்ள பொருள் ஈதெனவே பெரிதும் சேயோன் 

ஒருவனையே புகழ்ந்த அருள்அருணகிரி சேவடிப்போது உளத்துள் வைப்பாம்!!!


திருமுருக வாரியார் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி

விருப்புடன் உபய சரணமென் மலரை வேண்டுவார் வேண்டுவதளிக்கும்

பொருப்புகள் தோறும் நின்றருள் ஒருவன் புகழினை அகநெகப் புகன்று

கருப்புகுதாத கதிதனைக் காட்டும் கலையுணர் புலவர்கள் திலகம்

திருப்புகழ் அருணகிரி எமதடிகள் திருவடி குருவடிவாமே.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

திருத்தணிகை முருகனுக்கு அரோகரா!!
முருகா! முருகா!! முருகா !!!




அருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய விநாயகர் துதி பாடலில் ஒரு சிறப்பு உள்ளது. என்ன என்று சொல்லுங்கள் பாப்போம்.அடுத்த பதிவில் அதனைப் பற்றி பேசுவோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக:-

அருணகிரிநாதர் குரு பூஜை - பௌர்ணமி திதியோடு கூடிய ஆனி மூலம் - 04.07 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/0407-2020.html

திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_4.html

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_4.html

வைகாசி விசாகத்தை வரவேற்போம் - 04.06.2020  - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு  - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

வள்ளலாரும் அகத்தியரும்! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post.html

குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_13.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

Sunday, June 20, 2021

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 44 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. 2021 ஆம் ஆண்டில் 108 தீபமேற்றி செய்த வழிபாடு மற்றும் ஜனவரி 2ஆம் நாள் நடைபெற்ற கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு என ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம்.இவையனைத்தும் குருவருளாலே என்பது நிதர்சனமான உண்மை.

நமது ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில்  எழுந்தருளி உள்ள ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி பெருமான் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சிவ ஸ்ரீ ஜெகதீஸ்வர ஈசான கண சிவம் அவர்களை ஆட்கொண்டு ஜீவநாடி மூலமும், அருள்வாக்கின் மூலமும் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார். அந்த வகையில் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில் ஆதிசங்கரர் தோற்றுவித்த அறுசமய வழிபாடுகளையும் தோற்றுவிக்குமாறு ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருளாணை வழங்கியிருக்கிறார். திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளும் சுவாமிகளின் கனவில் தோன்றி இங்கு எழுந்தருளி ஆசி தருவதாகவும் வாக்கு உரைத்திருக்கிறார். மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளும் இங்கு எழுந்தருளி ஆசி வழங்குவதாகவும் நமது சுவாமிகளுக்கு கனவில் உரைத்திருக்கிறார். ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் அருளாணையின் படி ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி கௌமார பீடத்தில்  ஸ்ரீ அவிநாசியப்பர், ஸ்ரீ கருணாம்பிகை தாயார், ஸ்ரீ நந்தீஸ்வரர், திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், ஆகிய அனைத்து விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சேலம் பெரிய புத்தூர் ஆதீனம் ஸ்ரீ ராஜலிங்க சிவாச்சாரியர் அவர்கள் தலைமையில் கார்த்திகை மாதம் 16 ம் தேதி (4/12/2020) அன்று காலை கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.

 




இறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் ஜீவநாடி சொல்வதும், கேட்பதும்,நடைமுறையில் பலன்களைத் தருவதில்லை. நம்பிக்கைதான் முக்கியம்.

நம்பிக்கைதான் வாழ்க்கையின் தும்பிக்கை. ஆராய்ச்சி மனத்தோடு அணுகி இவர் எப்படி இதைச் சொல்கிறார்? எப்படி எழுத்துக்கள் தோன்றுகிறது?

என்று அலைபாயும் மனதுடனும், ஆதங்கத்துடனும், அங்கலாய்ப்புடனும் வருகின்றவர்களுக்கு ஜீவநாடி பாடம் புகட்டி விடுகிறது என்றே சொல்ல வேண்டும். கலியுகத்தில் யாரையும் நல்லவர் என்று நம்ப முடிவதில்லை.

நாடியை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் அணுகுவதும், அதில் என்ன மர்மம் உள்ளது என்பதை அறிந்துக் கொள்ள வருவதும் நடைமுறையில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில் என்னிடம் இருக்கும் ஜீவநாடி மந்திர நாடி அல்ல. சாட்சாத் முருகப்பெருமானின் ஆசியோடு சொல்கின்ற அருள்வாக்கு நாடி. தம்மை உண்மையோடும், பக்தியோடும், பக்குவத்தோடும் நாடி வருபவர்களுக்கு தேடிச் சென்று திருவிளையாடல்களை நடத்துகின்ற நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் வாக்கு இதுவரை பொய்த்தது கிடையாது.

இந்த தொடரை எழுதுவது கூட சுய விளம்பரமாகப் போய்விடுமோ என்று எழுதும் முன்பு யோசித்தேன். பொய்யைச் சொன்னால் தானே விளம்பரமாகப் போகும். உண்மையை, உணர்ந்ததை ஊரரியச் சொல்லுவதில் எந்த வித தவறும் இல்லை என்று அறிவுறுத்தியது. எனது குரு சக்திவேல் அடிகளாரும், ஆசிரியர் ஸ்ரீராஜு ஐயா அவர்களிடமும் ஆரம்பம் முதலே பல இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் கொடுத்த ஊக்கம் தான் இதை எழுதத் துடிக்கும் தாக்கம் எனக்கு ஏற்பட்டது. இந்த தாக்கம் தான் அனைவருக்கும் ஒளிவு மறைவுமின்றி வெளிப்படுத்திடும் வாய்ப்பு கிட்டியது. அனுபவித்தவர்களின் ஆர்ப்பரிப்பான ஆதங்க வெளிப்பாடுகள் ஏராளம், ஏராளம். இந்த தொடரை ஆவலோடுஎதிர்பார்க்கும் வாசகர்கள் ஏராளம் விரும்பிப் படிக்கின்றவர்களும் தாராளம்.

இதைப் படித்த பின்பு உடனடியாக என்னைச் சந்திக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தற்போது அதற்கான கால அவகாசம் இல்லை என்பது தான். வாய்ப்பு கிடைக்கும் போது முறையாக அறிவிப்பு செய்கிறேன். அதன்பின்பு தடையில்லாமல் சந்தித்துவிடை காணலாம். வாழ்வின் வெற்றிக்கு தடையில்லா நிலை காணலாம். தடம் மாறாமல் வாழ்வில் வளம் பெறலாம்.






சரி..இனி இன்றைய அற்புதம் காண செல்வோமா?





ஒரு மிகப் பெரிய நகைக்கடையின் அதிபர் தனது மகள் திருமணம் பற்றி கேட்க வேண்டும் என்று என்னிடம் அனுமதி வாங்கி ஒரு நாள் வந்து
சந்தித்தார். பெரிய கோடீஸ்வரன் என்றே சொல்லும்படியான தோற்றம் தெரிந்தது. பலவரன் பார்த்தும் படியவில்லை ஐயா தாங்கள் தான் இதற்கு
ஒரு தீர்வு சொல்ல வேண்டும் என்று வந்தார். சரி கந்தன் விட்ட வழி என்று சுவடியைப் பூஜித்து பிரித்து படித்தேன். பின்வரும் விஷயம் பாடலாக வந்தது.

“கச்சிதமாய் முடியும்

காலமது கனியும்

கந்தனது ஆசிகள்

கனிவாக உண்டுண்டு

கவலைகள் தேவையில்லை

கட்டழகு கொண்டவன்

கன்னியை விரும்பி வந்து

கைப்பிடிப்பான் அஞ்சேல்

கவலைகள் வந்ததுவும்

கஷ்டங்கள் வந்ததுவும்

காட்சிகளங்கே கண்டதும்

காணுகின்ற அக்னி ஸ்தலம்

கச்சிதமாக ஏகியங்கு

கந்தனின் தந்தை நாமம்

கொண்டதன் அடியார்கள்

காவி பூஜை செய்து பின்

கச்சிதமாய் வில்வமொன்றை

கந்தனை தொழுது நட்டுவா

நலம் என்றோம் நலம்!

ஆசி! ஆசி! ஆசி!”

 ஸ்ரீஞானஸ்கந்தர் நாடியில் வாக்கு தந்தது ஸ்ரீஅகத்தியர்.


முருகப் பெருமானது வாக்கு வராமல் அகத்திய மகரிஷி வாக்கு தந்தார்.எந்த நேரத்தில் யாருக்கு யார் சொல்ல வேண்டும் என்ற விதி இருக்கிறது என்பதால் யார் வாக்கு தந்தாலும் அதை உரைப்பது மட்டுமே எமது பணி. சித்தர்கள் ஆசி இருப்பதால் பணத்தின் மீது ஆசை எனும் பேய் என்னைப்
பிடிக்காததால் தூய்மை இருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பதால் வாய்மை இருக்கிறது. வாக்கு பலிக்கிறது. கேட்பவர்கள் வாழ்வு சிறக்கிறது. அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை சென்று சிவனடியார்களுக்கு மகேஸ்வர பூஜை செய்து பின்பு வில்வமொன்றை பிரதிஷ்டை செய்து
வந்தால் கந்தனது ஆசியால் விரைவில் திருமணம் நடக்கும் என்று வாழ்த்தி முருகனது ஆசி இருப்பதாகவும் கூறி ஆசி கொடுத்தார் அகத்தியர்.

முகமலர்ச்சியோடு ஆசி வாங்கிச் சென்றார்கள்.


திருவண்ணாமலையைப் பொறுத்தவரை அடியார்கள் அதிகம். யாருக்கு தானம் செய்தாலும் சிறப்புதான். ஆனாலும் சிவனை சிந்தையில் வைத்து சிவ நாமத்தை உச்சரித்து சிவவேடம் பூண்டு இருக்கும் உண்மையான சிவனடியார்களுக்கு பூஜை செய்து, போஜனம் செய்து ஆசி வாங்குவது
முடிகின்ற காரியமா? என்ற யோசனை வரும். உண்மைதான் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது பழமொழி. ஆசி வாங்குவதும் அப்படித்தான்

இதற்கு ஒரு விடை கொடுக்கும் வகையில் திருவண்ணாமலையில் ஓர் ஆசிரமம் சிறப்பான சேவை செய்து வருகிறது. எனது குருநாதர் ஸ்ரீவகாப் ஜோதி அக்பர் சுவாமிகளின் ஆசியோடு அவர் அறிவுறுத்தலின் பேரில் ஸ்ரீசரவணபவா சுவாமிகளின் தொடர்பு கிடைத்தது. மீனாட்சி நாடியின்
அற்புதங்களையும், நமது ஞானஸ்கந்தர் நாடியின் அற்புதங்களையும் பல ஆண்டு எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. ஸ்ரீ ஜோதி அக்பர் சுவாமிகள் யாரையும் அவ்வளவு எளிதில் நெருங்க விட மாட்டார்


அவரிடம் முருகப் பெருமானும், மீனாட்சியும் உரையாடி வருவது என் அனுபவத்தில் கண்டுக் கொண்ட உண்மை. ஜோதி அக்பரின் ஆசியால் அன்னை வாராஹி தேவியே எனக்கு காட்சி கொடுத்து என்னிடம் உரையாடி இருக்கிறாள் என்றால் சுவாமியிடம் இன்னும் எத்தனை அதிசயம் உண்டோ அறியேன். என்னைப் பொறுத்த வரையில் எனது முன் ஜென்ம பலனால் கிடைத்த பொக்கிஷம் ஸ்ரீ ஜோதி அக்பர் சுவாமிகள் அவர்கள்.


ஸ்ரீ வகாப் ஜோதி அக்பர் சுவாமிகள் ஸ்ரீ சரவணன் சுவாமிகளை அறிமுகம் செய்து வைத்தார். பொள்ளாச்சியில் இருந்து அண்ணாமலைக்கு இளமை காலம் முதலே வந்து சரணாகதியடைந்தவர். சரவணன் சுவாமி வள்ளலார் பேரில் அன்பு பூண்டு அவர் மார்க்கத்தில் நிற்பவர். பல
சித்தர்களுக்கு அன்னம் படைத்து அவர்களின் ஆசியையும், அன்பையும் பெற்றவர். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட இவர் செய்யும் மகேஸ்வர பூஜையை கண்ணால் கண்டு தொழும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்.



எத்தனை அடியார்களுக்கு அன்னதானம் செய்து பூஜை செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே சொல்லி விட்டால் அத்துணை அடியார்களுக்கும் தகவல் கொடுத்து பூஜைக்குத் தயார் செய்து விடுவார். அவர் அழைக்கும் அடியார்கள் உண்மையான சிவனடியார்களாக இருப்பார்கள். அவர்களை வரிசையாக அமர வைத்து இலை போட்டு அறுசுவை உணவு படைத்து அடியார்கள் நமசிவயா வாழ்க... நாதன் தாள்
வாழ்க... என்று சிவபுராணம் ஓதி பூஜை செய்பவர்களுக்கு ஆசி வழங்கி பின்பு அன்னம் உண்டு செல்வார்கள். இது போன்ற பூஜை சாதாரணமாக யாரும் செய்து விட முடியாது. பிராப்தம் உள்ளவர்கள் தான் செய்ய முடியும்.



இன்றைய பதிவில் இத்துடன் முழுமை செய்கின்றோம். அன்பர்கள் அனைவரும் அருள் பெரும்பொருட்டு ஸ்ரீ  ஞானஸ்கந்த பீடத்தின் தரிசன காட்சிகளை பதிவின் இடையும், இனியும் தருகின்றோம்.





ஒவ்வொரு முறை நாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை முருகப் பெருமான் அருள் பெற்று ஜீவ நாடி அற்புதத்தை இங்கே பெற்று வருவோம். இங்கே நாம் மனம் பதித்து முருகப்பெருமான் தரிசனம் பெறும் போது நம் மனம் மத்தாப்பாய் சிரிக்கும். குருநாதர் தரிசனம் நேரில் இங்கே பெற்று வரும் போது உள்ளம் உவகையுறும்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் தொற்றுக்கிருமி கட்டுப்பாட்டில் இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி, பல தடைகளோடு அன்றாட வாழ்க்கையில் இருந்து வருகின்றோம். இப்படி ஒரு அசாதாரண சூழலை நாம் சந்திக்க போகின்றோம் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் இந்தப் பதிவின் மூலம் அனைவரும் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருள் பெற வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 43 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22] - https://tut-temples.blogspot.com/2021/04/43-2021-22.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 42 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/01/42.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 41 - ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடி சரணம்!  - https://tut-temples.blogspot.com/2020/12/41.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 40 - குருவே சரணம்... திருவே சரணம்.... - https://tut-temples.blogspot.com/2020/11/40.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39 - https://tut-temples.blogspot.com/2020/09/39.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html 

Monday, June 14, 2021

குரு உபதேசம் - ஓம் அகத்தீசாய நம!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய ஆனி மாத ஆயில்ய நட்சத்திரம் இன்றும் முழுதும் உள்ளது. வாய்ப்பு இருக்கும் அன்பர்கள்  அருகில் உள்ள ஆலயம் சென்று தத்தம் ஆன்மா லயத்துடன் குருவின் மந்திரம் ஓதி மனதை திரப்படுத்துங்கள். இது தான் ஆலய வழிபாட்டின் நோக்கம் ஆகும்.ஆனால் நாம் மனதொன்றி வழிபாடு செய்வது இல்லை. இன்றைய ஆயில்ய நட்சத்திரத்தில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு வழிபாடு செய்து கொண்டிருக்கின்றோம். 


நாம் இப்புவியில் பிறந்து வாழ்ந்து இறக்கும் வரை நம் வாழ்க்கை ஒரு பரம பத விளையாட்டே! இந்த விளையாட்டில் ஏணி போன்று குருவும், நாம் பண்ணும் பக்தியும் பரமபதத்தை இறைவனை அடைய உதவும். ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் அருகில் பாம்பும் இருக்கும்? பந்தபாசமும், மனத்தை நம்பும் மனமும் தான் இராஜநாகம்! இறையை அடைய உச்சிக்கு சென்றாலும் அங்கும் இறை இறுதிவரை சோதித்துதான் தானாக ஆக்கும், அதுவும் இறையருளே! மீண்டும் மனத்தை நம்பி, பந்தபாசங்களில் விழுங்கப்பட்டு( பாம்பால்) கீழே வந்தாலும் அருகில் ஏணி உண்டு, அது குருவருளே! எந்நிலையிலும் , பிறவி பிறவியாகவும் குரு ஏணியாக இருந்து நம்மை இறையாக்க பரமபதத்தை அடைய நம்முடன் எப்பொழுதுமே உள்ளார்! நாம் ஏணியில் ஏறுகிறோமா இல்லை யா என்பதுதான் இறையருள்!!! குருவருள் சித்திக்க இறையருள் சத்தியமாகும்!!! சற்குருநாதர் திருவடிகளே சரணம்!!!

இந்தப் பிறப்பில் குரு கிடைப்பது தான் மிக மிக சிறப்பான நிலை ஆகும். தந்தையின் புண்ணியத்தில் நாம் பிறக்கின்றோம். தாயின் புண்ணியத்தில் நம் ஆயுள் நிலைக்கின்றது . குருவின் ஆசியால் மட்டுமே இப்பிறவியின் நோக்கம் அறிந்து வாழ்கின்றோம்.இந்த சிந்தனையோடு குருநாதரின் தாள் போற்றுவோம். 

குரு என்பது வார்த்தை என்ற நிலையில் இருந்து குரு என்பது வாழ்க்கை என்று நிலைக்கு நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இது நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவிற்கும் பொருந்தும்.இந்த பயணத்தில் குருவின் நாமத்தை நாம் சொல்ல நமக்கு புண்ணியம் வேண்டும். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் ஆசியினால் நம் தளத்திற்கு சித்தர்களின் ஆசி கிடைத்து வருகின்றது. இன்றைய நன்னாளில் சென்ற ஆண்டில் தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலில் நமக்கு 17/04/2020 (zoom meeting) அன்று  கிடைத்த ஜீவ வாக்கு ஆகும்.

திருவண்ணாமலை கிரிவலம் முறையாக சுற்றி வர ஆசிகள், அஷ்ட லிங்க தரிசனம், இடுக்கு பிள்ளையார் பற்றி கூறுங்கள் : 

தேகத்தை நன்றாக பராமரிக்க வேண்டும் என்று எத்தனை வழிமுறைகளைக் கூறினாலும் அதனை காலகாலம் மனிதன் ஏற்பதில்லை. புறம் தள்ளி விடுகிறான். எனவேதான் இறை வழிபாட்டோடு தேக ஆரோக்கியத்தையும் சேர்க்க வேண்டியிருக்கிறது . அந்த வகையிலே பிரகார வலம், கிரிவலம் இவையெல்லாம் அவசியம். பதட்டமின்றி, நிதானமாக அடிமேல் அடியெடுத்து வேறு லௌகீக விஷயங்களை, உலகியல் விஷயங்களை பேசாமல் மௌனமாக மனதிற்குள் இறை நாமத்தை மட்டும் உருவேற்றிக் கொண்டு வலம் வருவதே சிறப்பு. அடுத்ததாக எந்த கிரிவலமாக இருந்தாலும் ஆங்காங்கே உள்ள சிறு ஆலயமோ, உப சன்னிதிகளோ தென்பட்டால் அங்கும் சென்று அமைதியாக பிரார்த்தனை செய்ய நன்மை உண்டாம். இஃதொப்ப நிலையிலே, முறை என்றால் மனம் வேறு சிந்தனைக்குள் ஆட்படாமல் மனம் முழுக்க இறை நாமத்தை மட்டும் மனதிற்குள் சொல்லிக் கொண்டே பிரகார வலமோ, ஆலய வலமோ, கிரி வலமோ ஒரு மனிதன் செய்வது மிகவும் சிறப்பு. எனவே இதை மட்டும் கடைபிடித்தால் போதும். 

திருவிடைக்கழி முருகப் பெருமான் தலம் பற்றி : 

எத்தனை தலங்கள் இருந்தாலும் எல்லா தலங்களுமே சிறப்புதான். எந்தெந்த மனிதர்களுக்கு எந்தெந்த தலங்கள் சென்றால், நட்சத்திர ரீதியாக, ஜாதக ரீதியாக, கர்ம வினை ரீதியாக, சில நன்மைகள் உண்டு என்ற கணக்கு இருந்தாலும் அதற்காக அதனையே பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. எல்லா ஸ்தலங்களும் சிறப்புதான். எப்பொழுது சிறப்பு ? அந்த மனிதன் அந்த ஸ்தலத்தில் அந்த ஆலயத்தில் நின்று கொண்டு, வேறு எந்த எண்ணங்களும் இல்லாமல் இறை சிந்தனையோடு அமைதியான முறையில் பிரார்த்தனையை தொடர்ந்தால் அவனுடைய பாவங்கள் நீங்கும். இருந்தாலும் இஃதொப்ப இன்னவன் வினவுகின்ற திருவிடைக்கழியில் மனிதர்கள் கருதுவது போன்ற தோஷங்களுக்கு மட்டுமல்லாது செவ்வாய் தோஷம் குறைவதற்கும், குருதி தொடர்பான பிணிகள் நீங்குவதற்கும் அங்கு பிரார்த்தனை செய்வதோடு சத்ரு சம்ஹார திரிசதி பூஜைகளை செய்ய ஏற்ற ஸ்தலங்களில் அஃதும் ஒன்று. 

ஸ்தல யாத்திரை, மலை யாத்திரை செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சூட்சும நுணுக்க வழிபாடுகள் பற்றி : 

அமைதி, அமைதி, அமைதி. மனதிற்குள் இறை நாமம், இறை நாமம், இறை நாமம். அவ்வளவே. 

ஓதி மலை உழவாரப்பணி, வள்ளி மலை வழிபாடு, கோடகநல்லூர் யாத்திரை, சதுரகிரி வழிபாடு பற்றி ஆசிகள் : 

அனைத்திற்கும் நல்லாசிகள், மென்மேலும் தொண்டு தொடர நல்லாசிகள் . 

பௌர்ணமி, அமாவாசை, சஷ்டி நாட்களில் அன்ன சேவை செய்கிறோம். இதில் குறையிருந்தால் எங்களை வழி நடத்தி ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்

தேனியின் நாமகரணத்தை சூட்டியிருக்கிறார்கள். தேனீக்களைப் பற்றி தெரியுமா ? தேனீக்கள் கடுமையாக போராடி நுணுக்கமாக தேனையெல்லாம் சேர்த்து வைக்கும். அப்போது அந்த தேனை மனிதன் ஒருவகையில் களவாடி விடுகிறான். எனவே இது குறித்து ஒரு மரபு சொல் கூட மனிதர்களிடையே வழங்கிக் கொண்டிருக்கிறது. அதனை நினைவூட்டுகிறோம். ஒரு மனிதன் தேனீக்களிடம் சென்று “ இத்தனை கடினப்பட்டு நீங்கள் எல்லோரும் தேனை சேகரிக்கிறீர்கள். ஒரு தினம் வந்து மனிதன் அல்லது மனிதர்கள் களவாடி விடுகிறார்களே, எடுத்து விடுகிறார்களே, உங்களுக்கு வருத்தமாக இல்லையா ? “ என்று கேட்டால் “ ஒரு வகையில் வருத்தம்தான். இருந்தாலும் நாங்கள் வருத்தப்படவில்லை “. “ ஏன் வருத்தப்படவில்லை ? “ என மீண்டும் அந்த மனிதன் வினவுகிறான். அதற்கு தேனீக்கள் கூறுகின்றன “ எங்கள் உழைப்பாகிய தேனைதான் மனிதனால் திருட முடியுமே தவிர நாங்கள் தேனை எடுக்கின்ற அந்தக் கலையை எங்களிடமிருந்து மனிதர்களால் ஒருபொழுதும் திருட முடியாது “ என்று சொல்கிறது இதுதான் மனிதர்களுக்கும் பாடம். மனிதன் சேர்த்து வைத்த செல்வத்தை ஒருவன் திருடலாம். ஆனால் அவன் செல்வம் தேடுகின்ற கலையை திருட முடியுமா? முடியாது.

எனவே, விளைவை ஒருவன் எடுத்து கையாளலாம். அந்த விளைவை கொண்டு வந்து சேர்க்கும் அந்த ஒரு கலையை, யுக்தியை யாராலும் திருட முடியாது என்பதை இவர்களும் புரிந்துகொள்ளட்டும். 

திருக்கோஷ்டியூர் தலத்தின் மகிமையை பற்றி : 

நம்பியாண்டார் நம்பியை நினைவூட்டுகிறது .அஃதொப்ப ஸ்தலம். எனவே சுக்கிர தோஷம் நீக்கும் ஸ்தலம். திருமண தோஷம் நீக்கும் ஸ்தலம். பலவிதமான புண்ணியங்களும், பாவங்களும் கலந்து வாழ்கின்ற மனிதர்களுக்கு, இஃதொப்ப கடை பிறவி வேண்டும் என ஆசைப்படுகின்ற மனிதர்களுக்கும் ஏற்ற ஸ்தலம் அப்பா. 

மீண்டும் மீண்டும் படிக்கும் போது குருநாதரின் ஆசி நன்கு நமக்கு புரிகின்றது. அப்படியென்றால் குருவின் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? போற்றினால் உமது வினை அகலுமப்பா!  ஆம்! சித்தர் பெருமக்கள், மகான்களின் நாமத்தை போற்ற வேண்டும். நமக்கு கிடைத்த குருவின் நாமத்தை நாம் 
                                                                    
                                                             "ஓம் அகத்தீசாய நம "




என்று கூறி போற்ற வேண்டும்.இதற்கு சில அடிப்படை தகுதிகள் வேண்டும். முதலாவது நாம் சைவ உணர்வில் ( உணவிற்காக பிற உயிர் கொல்லாமை ) வாழ வேண்டும். அடுத்து நாம் நம்மால் இயன்ற அளவில் அன்னதானம் போன்ற தான, தர்மங்களில் ஈடுபட வேண்டும். இது போன்ற சேவையில் ஈடுபடும் போது முதலில் நம் குடும்பத்திற்கு செய்து பின்னர் மற்றவர்களுக்கு செய்ய வேண்டும். பெற்றோரை பட்டினி போட்டு , 1000 பேருக்கு அன்னதானம் செய்வதால் என்ன பயன் உண்டு?  இந்த இரண்டையும் (அதாவது புலால் உண்ணாமை , தான தர்மம் செய்தல் ) கைக்கொண்டு குருவின் நாமத்தை  வந்தால் குருவின் அருள் நம்மை எப்போதும் காக்கும்.

இந்த நிலையில் முருகன் அருள்  நடத்த, குருவின் உபதேசம் குருவருளால் இங்கே தரப்படுகின்றது.சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் மூலம் இன்றைய குரு உபதேசமாக முருக மந்திரங்களை இங்கே தருகின்றோம்.  அதற்கு முன்பாக ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் பூஜை, யாக காட்சிகளை இங்கே பகிர்கின்றோம்.












சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் கடந்த பல ஆண்டுகளாக, குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் வழிபாட்டில் பல அன்பர்களை வழி நடத்தி வருகின்றார்கள். இங்கு நித்திய பூஜைகளாக காலை, மாலை குருநாதருக்கு அபிஷேகம், பிரத்யங்கரா தேவி வழிபாடும், மாதந்தோறும் பௌர்ணமி, அமாவாசை யாகம் நடைபெற்று வருகின்றது. மேலும் கடந்த 9 ஆண்டுகளாக பாபநாசத்தில் மாசி மக கும்ப பௌர்ணமி ஹோமத்திருவிழா நடத்தி வருகின்றார்கள். மாசி மக கும்ப பௌர்ணமி ஹோமத்திருவிழா பற்றி தனிப்பதிவுகள் ஏற்கனவே தந்துள்ளோம். நித்திய அன்னசேவை போன்று பற்பல சேவைகளை ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் செய்து வருகின்றார்கள். 







குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வாக்கிற்கிணங்க, ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் மூலம் இங்கே இரண்டு முருகர் மந்திரங்களை தருகின்றோம். அடியார்கள் அனைவரும் காலை பிரம்ம முகூர்த்தம் முன்னர் இந்த இரண்டு மந்திரங்களை 108 முறை என்ற அளவில், பின்னர் 18 ன் மடங்காக அதிகப்படுத்தி உச்சரித்து எல்லா உயிர்களிலும் இன்புற்று வாழ பிரார்த்தனை செய்து வாருங்கள். இவற்றை நித்திய வழிபாட்டிலும் இணைத்துக் கொள்ளலாம்.






ஓம் குருவே சரணம்! ஓம் குருமார்களின் பதம் போற்றி!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

வள்ளலாரும் அகத்தியரும்! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post.html

குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_13.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html