அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய புரட்டாசி மாத அமாவாசை மோட்ச தீப வழிபாடு கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கு முந்தைய பதிவில் இதற்கான அழைப்பிதழ் பகிர்ந்தோம். இன்று மீண்டும் நம் தளம் சார்பில் நடைபெற்ற ஆவணி மாத இறைப்பணி பற்றி தொடர விரும்புகின்றோம்.
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு குருவருளால் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் ஆவணி மாத அமாவாசை இரவு 8 மணிக்கு மேல் என்பதால் நம் அன்னதானம் அடுத்த நாள் மதியம் கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் செய்ய ஏற்பாடு செய்திருந்தோம். இது மட்டுமா? சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் ஆதி சிவன் அறக்கட்டளையினர் நம்மை அன்றைய ஆவணி அன்னதானத்தில் இணைக்க விரும்பினர். நாமும் அன்று காலை நம் அன்பர் திரு.சத்யராஜ் உடன் சோழிங்கநல்லூர் சென்று திரு. சிவ சண்முக சுவாமிகள் அவர்களை நேரில் சந்தித்து, ஆசி பெற்று சுமார் 50 உணவுப் பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு கூடுவாஞ்சேரி சென்றோம்.
நம் தளம் சார்பில் சிறு மரியாதை செய்த போது
அங்கிருந்து புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும் வழியில் அன்னதானம் செய்ய விழைந்தோம். ஏற்கனவே இது போன்று சில அன்பர்கள் ஒவ்வொரு பகுதியாக வாங்கி சென்று இருப்பதால் நாம் தாம்பரம் சென்று கொடுக்க எண்ணினோம். இந்த அன்னசேவையிலே நாம் இந்த ஆண்டு வழக்கமாக செய்த மகாளய பட்ச அன்னசேவையும் இணைத்து விட்டோம். உணவுப் பொட்டலங்களை பெறும்போது சுவாமியிடம் சிறு காணிக்கை கொடுத்து பெற்றோம்.. தாம்பரம் பேருந்து நிலையம் சென்று, அங்கிருக்கும் அன்பர்களுக்கு உணவு வழங்கினோம்.
தாம்பரத்தில் சுமார் 25 உணவுப் பொட்டலங்கள் வழங்கி விட்டோம். மீதம் இன்னொரு பெட்டியில் இன்னும் 25 உணவுப் பொட்டலங்கள் இருந்தன. அடுத்து கூடுவாஞ்சேரி நோக்கி புறப்பட்டோம்.
கூடுவாஞ்சேரி சென்று வழக்கமாக நாம் உணவு கொடுக்கும் அன்பர்களை காண சென்ற போது அவர்களிடம் ஏற்கனவே மற்றவர்கள் கொடுத்த உணவுப் பொட்டலங்கள் இருந்தது. அன்றைய தினம் மகாளய அமாவாசை என்பதால் அனைவரும் அன்னதானம், பசுவிற்கு அகத்திக்கீரை என அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனை நாம் கண்கூடாகவே கண்டோம். நமக்கு இதில் உடன்பாடில்லை. ஏற்கனவே உணவு வைத்திருக்கும் அன்பர்களிடம் நாமும் உணவு கொடுத்து அவர்கள் வீணாக்குவதை நாம் விரும்பவில்லை. எனவே அன்று பார்த்து பார்த்து சேவை செய்தோம்.
ஓரளவு கூடுவாஞ்சேரியில் உணவு கொடுத்தோம். வழக்கம் போல் துப்புரவு தொழிலாளர்கள் பெற்றுக் கொண்டார்கள். இன்னும் 10 உணவுப் பொட்டலங்கள் இருந்தது, நேரம் காலை 9:45 மணி இருக்கும். மீண்டும் கூடுவாஞ்சேரியிலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.
ஆம். மீதமிருந்த உணவு பொட்டலங்கள் சரியாக எஸ்டான்சியா பகுதியில் துப்புரவு செய்த அன்பர்களுக்கு வழங்கினோம்.அடுத்து நேரே கூடுவாஞ்சேரி சென்று ஸ்ரீ மாமரத்து விநாயகரை தரிசிக்க சென்றோம். சும்மா விடுவாரா ஸ்ரீ முருகப் பெருமான்? இதோ..நமக்கு அலங்கார தரிசனத்தை கொடுத்தருளினார்.
கருணைக்கடலாம் கந்தனை வழிபட்டு, நம் குருநாதர் தரிசனம் பெற்றோம்.
பதிவின் நீளம் கருதி, இறை தரிசனத்தோடு நிறைவு செய்கின்றோம். ஆவணி மாத இறைப்பணி அடுத்த பதிவில் மீண்டும் தொடரும்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக :-
No comments:
Post a Comment