"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, October 18, 2020

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

நமது தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவுகளை படித்து கொண்டு வருகின்றீர்கள்.சென்ற பதிவில் நம் உறவுகள் மற்றும் நட்புகள் இல்லத்தில் இருக்கும் கொலுப்படிகளின் சிறப்பு காட்சிகளை அளித்து இருந்தோம்.அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோவிலில் வீற்றிருக்கும் அன்னையின் தரிசனமும், வேலி அம்மன் திருக்கோயிலில் உள்ள அம்மன் தரிசனமும் காண இருக்கின்றோம். இவை சென்ற ஆண்டு பதிவுகள் ஆகும். இவ்வாண்டு தரிசனப் பதிவுகள் விரைவில் தொடர்பதிவில் தருகின்றோம்.

நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலை அடைந்தோம். அம்மன் சந்நிதியில் கூட்டம். குருக்கள் பூஜை செய்து கொண்டிருந்தார்கள். அம்மன் சந்நிதிக்கு எதிரே கொலுப்படிகள் இருந்தன.அவற்றை கண்டு ரசித்தோம்,சில காட்சிகள் அலைபேசியில் பதிவு செய்தோம்.இதோ நீங்களே பாருங்களேன்










பின்பு அப்படியே சென்று விநாயக பெருமானை வணங்கி விட்டு, முருகனை தரிசித்தோம். அருகில் இருந்த அகதியரையும் வணங்கினோம்.அப்படியே வந்தால் அம்மன் சந்நிதி தான். குருக்கள் மலர் தூவி சங்கல்பம் செய்து பூஜை செய்து கொண்டிருந்தார். சந்நிதி அருகில்தான் நின்று கொண்டிருந்தோம். அங்கே நமக்கு பெயரளவில் தெரிந்த ஒரு பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் நின்று கொண்டிருந்தார். நமக்கு சற்று தயக்கமாக இருந்தது. பூஜை முடித்து பார்க்கலாம் என்று நினைத்தோம். அம்மனை தரிசிக்க முடியவில்லை..சரியான கூட்டம். ஓரமாக நின்று கொண்டு கடைக்கண் பார்வையாவது கிடைக்குமா? என்று ஏங்கிக் கொண்டு அம்மனை மனதுள் நினைத்து வழிபட்டோம். மந்திரங்கள் ஓதி முடித்ததும், தீபாராதனை காட்டப் பட்டது. மனதுள் வேண்டினோம். வான்முகில் வழாது பெய்க என்ற தேவாரப் பாடலை குருக்களின் கணீர் குரலில் கேட்டோம்.

வான்முகில் வழாது பெய்க
        மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
        குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
        நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
        விளங்குக உலக மெல்லாம்.

தீபாராதனை காட்டிய பின்பு,சுவாமிநாதன் ஐயாவிடம் அறிமுகம் செய்து கொண்டோம். அவருடைய சொற்பொழிவை தவற விட்டது சற்று மன வருத்தமே. குருக்களோடு சேர்ந்து இருந்த காட்சி கீழே. அப்புறம் சற்று இடம் கிடைத்து. உடனே அம்மன் சந்நிதி சென்று தரிசனம் பெற்றோம். என்ன அழகு ! எத்தனை அழகு !! என்று தாயின் அன்பில் தோய்ந்தோம்.இதற்குத்தானே ஆசைப்படுகின்றோம் அம்மா ! என்று நெஞ்சுருக வேண்டினோம்.கோயிலை அடையும் முன்பு, மைக்கில் அமர்நாத்தில் இருந்து சிவ பெருமான் என்று சொல்ல கேட்டது நினைவிற்கு வந்தது.

தாயின் அருகிலே ..நம் அப்பன் தரிசனம் பெற்றோம்.


















அம்மன் அலங்காரம் செய்வதற்கே சுமார் 1 மணி நேரம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் சொன்னது உண்மை தானே? அம்மையப்பன் தரிசனம் ஒரு சேர பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். இங்கு தரிசனம் முடித்து விட்டு,அப்படியே வேலி அம்மன் கோயில் சென்றோம். அங்கே சென்ற உடன் வேம்பின் கீழே உள்ள நாக தேவதையை வணங்கினோம். பின்பு அம்மன் சன்னதி நோக்கி சென்றோம். அங்கே வலப்புறத்தில் கொலு வைத்து இருந்தார்கள்.





நாம் உள்ளே செல்ல முற்பட்டோம். உள்ளே இருந்த அன்பர்கள் வெளியே வந்த உடன் உள்ளே செல்லலாம் என்று நினைத்தோம். அனைவரும் வந்த பிறகு உள்ளே சென்றோம். நேரே அன்னையின் தரிசனம்..இரு கண்கள் போதவில்லை...அன்னையின் அருளில்,அழகில் மெய் மறந்தோம். சென்ற ஆண்டு நவராத்திரியின் போது என்ன செய்தோம் என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஆண்டு நமக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்தோம். 









நவராத்திரி முதல் நாள் அலங்காரம் அருமை தானே? நன்கு கவனித்தீர்களா? அம்மன் சிவபூஜை செய்யும் வண்ணம் இருக்கின்றார். இன்று அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம். ஆவலோடு இருக்கின்றோம். ஒரே நாளில் இரு கோயில்களில் அம்மன் தரிசனம்..சொல்ல வார்த்தைகள் இல்லை. மீண்டும் மீண்டும் அன்னையின் அன்பில் மனம் லயித்துக் கொண்டிருந்தது. வெளியே வந்து மீண்டும் கொலுப்படிகளை கண்டோம்.



























அருமையான கொலு தரிசனமும், நவராத்திரி முதல் நாள் அம்மன் அலங்காரமும் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.  இவ்வாண்டு தரிசனம் அடுத்த  பதிவில் அளிக்க இறையருளும்,குருவருளும் துணை செய்ய வேண்டுகின்றோம்.

முந்தைய பதிவுகளுக்கு:-

 நவராத்திரி 75 - முதல் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/75.html

 TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)  - https://tut-temples.blogspot.com/2019/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html
கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html

 நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html

 நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html

No comments:

Post a Comment