"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, October 22, 2020

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாம் ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் இணைந்த பிறகு, சித்தன் அருள் வாசிக்க தொடங்கினோம். இந்த வாசிப்பு நம்மை அகத்தியத்தை நோக்கி நம்மை நேசிக்க செய்தது. சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம்  தொகுப்பில் சில கோயில்களுக்கு சென்று வர தொடங்கினோம்.சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பு நம்மை பொறுத்த வரை ஜீவ நாடி அற்புதங்களே ஆகும்.

இந்த அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பின் மூலம் நாம் ஓதிமலை, பாபநாசம் ஸ்நானம், அகத்தியர் மார்கழி குரு பூசை, கோடகநல்லூர் தரிசனம்  என தொடர்ந்து வருகின்றோம். இதில் நம்பிமலை தரிசனம் இன்னும் நாம் பெறாது இருந்தோம். அப்போது தான் சென்ற ஆண்டில் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் பின்வரும் செய்தி கிடைத்தது.

கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்)

10/11/2019 - ஞாயிற்று கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - ரேவதி நட்சத்திரம். 

                     

சரி. நம் TUT அன்பர்களோடு இரண்டு நாள் யாத்திரையாக கோடகநல்லூர் யாத்திரை மேற்கொள்ள வேண்டி குருவிடம் விண்ணப்பம் வைத்தோம். இதோ. நாம் சென்ற ஆண்டில் சென்று தரிசனம் செய்த கோடகநல்லூர் யாத்திரை அனுபவத்தை இங்கே தொடர்கின்றோம்.

இதற்கு முந்தைய தொகுப்பில் நம்பிமலை தரிசனம் பற்றி பேசி இருந்தோம். அடுத்து அங்கிருந்து திருப்பரிவட்டப்பாறை சென்று தரிசனம் செய்தோம். மீண்டும் அங்கிருந்து பதிவைத் தொடர விரும்புகின்றோம்.

திருப்பரிவட்டப்பாறை தரிசனம் குருவருள் பெற்றுத் தந்தது. இன்னும் அந்த தரிசனத்தை நெஞ்சில் இருத்திக்கொண்டு அடுத்த திருத்தலம் நோக்கி புறப்பட்டோம். 

அப்பப்பா..என்ன அழகு..எத்தனை அழகு..என்று இயற்கை நம்மை துள்ள வைத்தது. மலைகளும் பசுமையும் போர்த்தி உள்ளது கண்டு ரசித்தோம். 


வயல்வெளி..வரப்பு ..பசும் செடிகள். மலைத் தொடர். பசுமை என ஒவ்வொன்றாக ரசித்தோம். இந்த ரசிப்பிலேயே ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பற்றி சிறிது உணர்வோம்.

திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் உள்ள திருவாலி திருநகரிக்கு அருகில் இருக்கின்ற திருக்குறையலூரில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர். பெற்றோர்கள்  இவருக்கு நீலன் என்று பெயரிட்டனர். இவரது வீரத்தில் மகிழ்ந்த மன்னன், நீலனை தன் படைத்தளபதி ஆக்கியதுடன், திருவாலி நாட்டின் மன்னனாகவும் ஆக்கினான். அமங்கலை என்ற தேலோக கன்னி, கபில முனிவரின் சாபத்தால் பூமியில் குமுதவல்லி நாச்சியார் என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். இவளது புகழையும், அறிவையும் கேள்விப்பட்ட  திருமங்கைஆழ்வார் இவளைத்திருமணம் செய்ய விரும்பினார். 

விஷ்ணுவின் பக்தையான குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாள். நிபந்தனையின் பேரில்  அமுது படைத்தார்.  அமுது படைத்து
 அரண்மனையின் நிதி நிலை சரிந்தது. வழக்கமாக சோழமன்னனுக்கு கப்பம் கேட்டு வந்த ஏவலர்களிடம் தன் நிலையை கூறி அனுப்பி விட்டார். கோபமடைந்த மன்னன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரை பிடித்து வரும்படி கூறினான். ஆனால் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். எனவே மன்னனே பெரும் படையுடன் சென்றான். ஆனாலும் ஆழ்வார் அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தார். 

ஆழ்வாரின் வீரத்தில் மகிழ்ந்த மன்னன் அவரிடம் நேரில் சென்று பேச்சுப்படி கப்பம் கட்டுவதே சிறந்தது. அதுவரை என் கைதியாக கோயிலில் தங்கியிரு என்றார். மன்னன் கூறியபடி ஆழ்வாரும் மூன்றுநாட்கள் எதுவும் சாப்பிடாமல் கோயிலில் தங்கியிருந்தார். பசி மயக்கத்தில் தூங்கிய ஆழ்வாரின் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து பெருமாள். தன் சேவைக்கு வந்தால் அவரது கடன் தீர்க்கும் வகையில் பொருளுதவி செய்வதாக கூறினார். மன்னனின் அனுமதிபெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார், பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும், பெரும் புதையல் இருந்தது. அதை எடுத்து மன்னனுக்குரிய கடனை அடைத்து விட்டு மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார். இதையறிந்த மன்னன் ஆழ்வாரைப் பணிந்து, பணத்தை திருப்பிக்கொடுத்து அமுது படைக்கவைத்துக் கொள்ள கூறினார். 

இந்தப்பணமும் தீர்ந்து போகவே, ஆழ்வார் தன் அமைச்சர்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார். ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார். ஆழ்வார் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால் தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் நாராயணன் கழட்டவில்லை. ஆழ்வாரும் மோதிரத்தை கழட்டும்படி கூறியதற்கு, என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் நாராயணன். அதேபோல் ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது நாராயணன் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார்.

வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த ஆழ்வார் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஆழ்வார் திருடனாக இருந்தாலும் தன் உணவுக்கு கூட அதை எடுக்காமல் யாசித்து சாப்பிட்டார். 

பெருமாளின் 108 திருப்பதிகளில் இவர் தனியாக சென்று 46 கோயில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.  12 ஆழ்வார்களில் இவர்தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரலாற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும், தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  இவர் அருளியவை:

1.
பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்)
2.
திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்)
3.
திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)
4.
திரு எழு கூற்றிருக்கை ( 1 பாசுரம்)
5.
சிறிய திருமடல் (40 பாசுரங்கள்)
6.
பெரிய திருமடல் (78 பாசுரங்கள்)

ஆக ஆறு திவ்விய பிரபந்தங்களில் 1253 பாசுரங்கள் அருளியுள்ளார். 

நலம் தரும் சொல் நாராயணா என்ற நாமம் ஆகும். நாராயணாவென்னும் நாமம்!! திருமங்கையாழ்வார் கண்டு கொண்டது!! இன்பம், செல்வம், புகழ், மற்றும் இவற்றிற்கெல்லாம் மேலான மோக்ஷத்தையும் தரவல்லது.நாராயணா  என்னும் நாமத்தின் சிறப்பை எப்படிக் கண்டுகொண்டார் என்பதை திருமங்கை ஆழ்வார் விளக்கும்  விதமே தனி அழகு!  அவர் சொல்லுவதை பெரிய திருமொழியில்   படித்து ரசிக்க வேண்டும்.


 "குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்

   நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்

  வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்

  நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்"


ஆம்..இதோ நாம் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருக்கோயில் தரிசனம் பெற உள்ளோம்.


திருக்குறுங்குடி செல்பவர்கள் கண்டிப்பாக இங்கே ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தரிசனமும் பெறுங்கள். கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா? என்பது போன்றது தான் இந்தக் கோயில். எந்த ஒரு ஆரவாரம் இல்லாது ஆற்றலை அள்ளி அள்ளி இங்கே வழங்குகின்றார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார். 82 பெருமாள் கோயில் சென்று மங்களாசாசனம் செய்தவர் எனும் போது நாம் இங்கே நலம் தரும் சொல்லான நாராயணா ..நாராயணா என இங்கே ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி நாராயணா என்னும் நாமம் ஓத நமக்கு என்ன கிடைக்கும்.

நாராயணா என்னும் நாமத்தின் மூலம் என்ன கிடைக்கும்?

  உயர்ந்த மேன்மை (குலம்)

  செல்வம்

  துயர்களைத் துடைக்கும்

  நிலம் தரும்

  பகவானின் அருளைத் தரும்

  சுவர்கம்- வீடுபேறு தரும்

  பலம் தரும்

  தாயினும் மிஞ்சிய அன்பும் தரும்

  இவ்வளவு சிறப்புடைய சொல், நாமம் நாராயணா என்பதைக் கண்டுவிட்டேன். என்று ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் கூறுகின்றார்.

சுமார் அரை மணி நேரம் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தரிசனம் பெற்று அங்கிருந்து கோடகநல்லூர் நோக்கி புறப்பட்டோம். இரவு 6:00 மணி அளவில் நாம் கோடகநல்லூர் சென்று சேர்ந்தோம்.


நேரே சென்று நம் தாயான தாமிரபரணி தரிசனம் பெற்றோம். கோடகநல்லூரில் மூன்று கோயில்கள் உள்ளது. இங்கே நாம் தரிசனம் பெற குறைந்தது 1 நாளாவது வேண்டும்.

1. ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ அவிமுக்தீஸ்வரர் கோயில் 

2. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் 

3. ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் திருக்கோயில்  

அன்றைய தினம் பிரதோஷம் என்பதால் பிரதோஷ தரிசனம் செய்ய நம் அன்பர்கள் இரண்டு சிவன் கோயிலுக்கு சென்றார்கள். அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாம் ஸ்ரீ அவிமுக்தீஸ்வரர் கோயில் பிரதோஷ தரிசனம் செய்ய சென்றோம். மிக மிக சரியான நேரத்திற்கு நாம் பிரதோஷ தரிசனம் பெற்றோம்.





நம்மிடம் உள்ள தீய குணங்களான ஆணவம், கன்மம், மாயை ஓய நந்தியிடம் வழிபட்டோம்.












அங்கணன் கயிலைகாக்கும்
அகம்படித் தொழின்மை பூண்டு
நம்குரு மரபிற்கெல்லாம்
முதற்குரு நாதனாகி
பங்கயம் துலபநாடும் வேத்திரப்படை பொறுத்த செங்கயமும்
பெருமாள் நந்தி சீரடி கமலம் போற்றி 

என்று நந்தி தேவர் தரிசனம் பெற்றோம்.





நேரம் மிக மிக நெருங்கி கொண்டிருந்தது. உடனே அங்கிருந்து நாம் பெருமாள் கோயிலுக்கு சென்றோம்.




அடுத்த நாள் 10/11/2019 கோடகநல்லூர் பூசை. வழக்கம் போல் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி அமைதி நிலை கண்டோம். நாளைய வழிபாடு அகத்தியர் அடியார்கள் புடை சூழ பெருமாள் தரிசனம் நாங்கள் பெற வேண்டும் என்று அன்று பிரார்த்தனை செய்தோம். ஏனென்றால் 10/11/2019 அன்று வழக்கமான கோடகநல்லூர் பூசை இருக்குமா என்று தெரியவில்லை. அடுத்த வாரம் கும்பாபிஷேகம் என்று என கோயில் நிர்வாகத்தினர் கூறியிருந்தனர். கும்பாபிஷேகத்திற்கு கோயில் தயாராகும் போது , வழக்கமான பூசை,வழிபாடுகள் நடைபெறும் என்று நாம் சொல்ல இயலாது. இருப்பினும் குருநாதரின் பாதத்தில் நம் பிரார்த்தனையை சமர்ப்பித்து விட்டு மீண்டும் நாம் வி.கே புரம் திரு.செல்லப்பா வீட்டிற்கு சென்றோம்.

அடுத்து திரு.செல்லப்பா ஐயா வீட்டில் இரவு உணவு அருந்தினோம். சப்பாத்தி, குருமா என்று அன்றைய உணவு அருமையாக இருந்தது. சுமார் 15 பேருக்கு உணவு தயாரித்து கொடுத்து தங்கு இடம் ஏற்பாடு செய்து கொடுத்த திரு.செல்லப்பா ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவின் மூலம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். உணவு உண்ட பின்பு சற்று குழு நண்பர்களோடு அறிமுக அனுபவ உரை என்று பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது தான் மீண்டும் ஒரு முறை காரணமின்றி காரியமில்லை என்று உணர்த்தப்பட்டோம். கல்யாண தீர்த்தம் ஸ்ரீ அகத்தியர் கோயிலில் பௌர்ணமி தோறும் வழிபாடு செய்து வருகின்றார்கள் என்று கேள்விப்பட்டு, திரு.பாலச்சந்திரன்  ஐயா தொடர்பு ஏற்பட்டது. நம் தளம் சார்பில் அவ்வவ்போது சிறு தொகை பௌர்ணமி வழிபாட்டிற்கு கொடுத்து வந்தோம். திரு.பாலச்சந்திரன் ஐயா  அவர்கள் நேரில் கண்டிப்பாக வரவும் என்று நம்மை அழைப்பார்கள். நாமும் சந்திப்போம் ஐயா என்று கூறுவது வழக்கம். திரு.பாலச்சந்திரன் ஐயா அவர்களும் வி.கே. புரத்தில் தான் இருக்கின்றார்கள். ஆனால் நாம் இந்த யாத்திரையில் சந்திக்க எண்ணி பேசி இருந்தோம். ஆனால் குருவருளால் அன்றைய தினம் திரு.செல்லப்பா ஐயா வீட்டிற்கே திரு.பாலச்சந்திரன் ஐயாவும் வருகை தந்தார்கள்.

நமக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. நம் பையில் மரியாதை செய்ய துண்டும் , ஸ்ரீ அகத்தியர் பிரசாதமும் இருந்தது.






திரு.பாலச்சந்திரன் ஐயாவிற்கு  நம் தளம் சார்வில் சிறு மரியாதை செய்து பிரசாதம் கொடுத்தோம். இது தான் யாரை எங்கே எதற்காக நாம் சந்திப்போம்  நமக்குத் தெரியாது. இந்தக் கணக்கு நம் கையில் இல்லை. இது நம் குருநாதரின் அருளால் தான் நடந்தது.


பின்னர் அன்றைய தினம் அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து பேசி விட்டு, உறங்க சென்றோம். அடுத்த தாள் கோடகநல்லூர் வழிபாட்டிற்கு செல்ல வேண்டும். மனதுள் அடுத்த நாள் யாத்திரை எப்படி இருக்கும் என்று பலவித கேள்விகளோடு மனதுள் குருநாதர் ஸ்ரீ அகத்தியரை வேண்டிக்கொண்டோம்.

2018 ஆண்டில் கோடகநல்லூர் உழவாரப் பணி செய்த அனுபவமும் நம் கண் முன்னே வந்து செல்கின்றது. அடுத்த பதிவில் கோடகநல்லூர் உழவாரப் பணி பற்றியும் பேசுவோம்.

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html  

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html


No comments:

Post a Comment