"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, April 24, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி, ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள், காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பு என சொல்லிக்கொண்டே போகலாம். .

மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. சில பதிவுகளுக்கு முன்னர்  பதிவில் ஜீவ நாடி என்றால் என்ன என்று பார்த்தோம். அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி கேட்டு பதிவு சமர்பித்தோம். மேலும் இரு அன்பர்களின் ஜீவ நாடி அற்புதங்களைப் பார்த்தோம். சில பதிவுகளுக்கு முன்னர்  மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழை பகிர்ந்தோம்.

ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம் என்றே நாம் சொல்ல விரும்புகின்றோம். குருவடியைப் பின்பற்றி நடந்தால் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குருநாதரின் அன்பால் தான் நடக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாக புரியும்.இதற்கு முந்தைய பதிவில் மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா பற்றிய ஜீவ நாடி அற்புதம் கண்டோம். ஏற்கனவே சொன்னது போல் ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம்.இதற்கு முந்தைய பதிவில் அகத்தியர் ஆசி....வாழ்க வளமுடன் என்று ஆசி கொடுக்கும் அகத்தியர் மைந்தன் தெய்வத்திரு அகத்தியர் திருமகன் ஐயா அவர்களைப் பற்றி கண்டோம். ஸ்ரீ அகத்தியர் திருமகன் ஐயாவின் திருவடியைப் பற்றி தீப வழிபாடு நம் தளம் சார்பில் செய்ய நம் குருநாதரிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.

 ஜீவநாடி மூலம் பலர் பயன் அடைந்து வருகின்றனர். சித்தர்களின் காலம் விரைவில் ஆரம்பமாகப் போகிறது கலியுகத்தின் கொடுமை இப்போதே தலை விரித்து ஆட ஆரம்பித்து விட்டது. இதனை  நாம் நன்கு உணர்ந்து வருகின்றோம். போட்டி, பொறாமை சூது,வஞ்சனை என திண்டாடுகின்ற நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சித்தர்களின் ஆட்சி காலம் விரைவில் வருகின்றதால் நிச்சயம் ஒரு நல்ல தீர்வு கிட்டும் மக்கள் நமது ஞானஸ்கந்தர் ஜீவநாடியை நாடி பலன்
அடைய வேண்டும் என்று அதிகமாக முயற்சி செய்கிறார்கள். அனைவரின் ஆவலையும் பூர்த்தி செய்கின்ற நிலைமை தற்போது இல்லை. உரிய காலம் வரும்போது அனைவருக்கும் கிட்டும். அது வரை வாசகர்கள் பொறுமை காப்பது அவசியம். ஆனால் தற்போது அனைவருக்கும்  
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த நாடி வாயிலாக  முருகன் அருள் கிடைத்து வருகின்றது.


ஸ்ரீ காக புஜண்டர் சித்தரை பூஜித்து ஜீவநாடியில் வாக்கு கேட்கும் சமயத்தில் ஒரு பெரிய காகம் ஒன்று எங்கிருந்தோ வந்து வாயிலில் அமர்ந்து கொண்டது. தியானம் முடித்து கண் விழித்து பார்த்தால் காக்கை. சரி வந்தது புஜண்டர் என்றால் அவரது துணைவியாரும் இதேபோல் காக்கை வடிவில் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கண்களைத் திறந்தால் அந்த காக்கையின் அருகில் மற்றும் ஒரு காக்கை அமர்ந்து இருந்தது. அப்போது என்னைச் சுற்றி சுமார் 10 நபர்கள் இருந்தார்கள். அனைவருக்கும் ஆச்சரியம். இந்த கலியுகத்தில் இப்படியும் நடக்குமா? என ஆச்சரியப்பட்டார்கள். 

அதிசயமாக இருந்தது என பேசினார்கள். இது மந்திர வித்தையோ அல்லது மாய வித்தையோ அல்ல. பக்திக்கு சித்தர்கள் காட்டும் கருணை இப்படி பல அதிசயங்கள் அடங்கி வெளி வந்ததே அந்த பெயர்ச்சி புத்தகம். அதில் சொல்லப்பட்டுள்ள ஆலயப் பரிகாரங்களும் 100% பலன் தரக் கூடியவை. பிராப்தம் உள்ளவர்கள் மட்டுமே வாங்கிப் படித்து பலன் அடையும் புத்தகம். முழுக்க முழுக்க சித்தர்களின் ஆசியையும், சித்தர்களுக்கெல்லாம் சித்தராய் இருக்கும் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியின் ஆசியையும் பெற்றுள்ள புத்தகம். வாங்கி படித்து, பாதுகாத்து பயன் அடைவது வாசகர்களின் பிராப்தப்படி நடக்கும். எதற்காக இதை, இங்கு, இப்படி சொல்கிறேன் என்றால் என்னிடம் நாடி கேட்டு பலன் அடைய அனைவராலும் முடியாது அதற்குரிய கால அவகாசமும் தற்போது இல்லை. இப்படிப்பட்ட சூழ் நிலையில் ஜீவநாடி மூலம் எழுதப்பட்ட பெயர்ச்சி பலன், பரிகாரங்களை அடிக்கடி கடைபிடித்தாலே நமது கர்ம வினைகள் கரைந்து விரைவில் ஜீவ நாடி படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

ஜீவநாடி படிப்பதை தொழிலாக யாம் கொள்வதில்லை. இருப்பினும் இறைவனது ஆசியும், சித்தர்களின் கருணையும் கைகூடி வரும்போது ஜீவ நாடி என்னிடம் கேட்கும் வாய்ப்பு கிட்டும். விரைவில் நமது அப்ஸரா பப்ளிகேசன்ஸ் மூலம், ஜீவநாடி மூலம் எழுதப்படும் சனிபெயர்ச்சி பலன்கள் வெளிவர இருக்கிறது. அது இதுவரை எவரும் வெளியிடாத, எவராலும் சொல்லப்படாத இரகசியங்களைத் தாங்கி வெளிவரும். அதற்கும் பிராப்தம் வேண்டும். எமது கட்டுரைகள் வாசகர்களால் விரும்பி படிக்கப்படுவதன் காரணம், சொன்ன விஷயங்களையே திரும்ப திரும்ப சொல்லப்படுவதில்லை. நம்பகமான விஷயங்கள் மட்டும் தான் தரப்படுகின்றன. அனுபவத்தில் அப்படியே ஒத்து வருகின்றன என்ற காரணங்கள் தான். இவை வாசகர்களால் சொல்லப்பட்டவை. எனவே எல்லா விஷயங்களும் இறைவன் விதிப்படியே நடக்கின்றன.

ஒரு பள்ளியின் உரிமையாளர் என்னிடம், நாடி பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு நாள் முருகப் பெருமான் உத்தரவு கொடுத்தார். சரி வாங்க என்று சொல்லி நாடியைப் பூஜித்து வாக்கு கேட்கப்பட்டது. வந்தவர் இளைஞர். திருமணம் ஆகாதவர். உயர்
பட்டப்படிப்பு படித்தவர். மிகவும் திறமைசாலி. அழகானவர். பள்ளிக்கூடம் வைத்து நடத்துவது என்பது சாதரணமான செயல் அல்ல. இவர் திறம்பட நடத்துகின்றவர். அவருக்கு நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் எடுத்த எடுப்பிலேயே பின் வருமாறு வந்தது.

 “வளமான வள்ளிமலை

வாட்டம் களைகின்ற தருணம்


வாகாகவே சென்று


வர வேண்டுமது


வந்தபின் வரிசையாய்


வசதிகள் கூடும் வாழ்வு மாறும்


வந்திடுவாள் உத்தமி பத்தினி


வடிவேலன் வகைதனிலே வருவாள்


வாகாகவே வளமது கூடும்


வசதிகள் பெருகும்


வல்லமையாகுமே!”



பெரிய பெரிய பலன்கள் வரும் என்று எதிர்பார்த்து வந்தவருக்கு சற்று ஏமாற்றம். என்ன இது வள்ளி மலை செல், எல்லாமே நடக்கும் என ஒரே வார்த்தையில் சொல்லி விட்டாரே. ஜோதிடம் கேட்க சென்றால் சுமார் ஒரு மணி நேரமாவது சொல்வார்கள். இது என்ன ஜீவநாடி
என்கிறார்கள் இவ்வளவுதான் பலனா? என நினைத்தார். நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன். இதில் என்ன வருகிறதோ அதை மட்டுமே படிக்கின்ற வேலை என்னுடையது அதில் கூட்டியோ குறைத்தோ சொல்ல முடியாது. எனவே இதைக் கடைபிடியுங்கள். இதில் சொன்னது எதுவுமே மாறாமல் அப்படியே நடக்கும் என்றேன். சரி வள்ளிமலை சென்று என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.

சரி, இவர் திருப்திக்காக மீண்டும் பிரார்த்தனை  செய்தேன். பின்வருமாறு வந்தது

“ பைரவ வாகனம்

பாங்காக வருமங்கு


பால்சாதமிட்டு வா


பல கர்மம் குறையுமே”


அடுத்து ஆச்சரியமான பலனைச் சொன்னார் முருகப் பெருமான். பைரவரின் வாகனமான நாய் ஒன்று அந்த வள்ளிமலையில் வரும். அதற்கு பால் சாதம் போடு. அதை அந்த நாய் சாப்பிட்டால் நீ பல ஜென்மமாக சேர்த்து வைத்த கர்ம வினைகள் தீரும் என்று தெளிவாக நாடியில் வந்ததை சொன்னேன். சரி என ஒப்புக் கொண்டு விபூதி வாங்கிவிட்டு, ஐயா வருகிறேன் என கிளம்பிவிட்டார். சில நாட்கள் கழித்து அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

ஐயா தாங்கள் பதிவு செய்து கொடுத்த ஜீவநாடி பாடல்களை அடிக்கடி கேட்டு வருகிறேன். நல்ல மாற்றம் தெரிகிறது. உங்களைச் சந்தித்த நாள் முதலே நல்ல நிலை தென்படுகிறது. உங்களிடம் ஒரு விண்ணப்பம், நீங்களும் என்னுடன் வள்ளி மலையை வந்து தரிசனம் செய்ய வேண்டும்
என்றார்.
       
எனக்கு இருக்கும் அலுவலில் நிச்சயமாக முடியாது என்றேன். நீங்கள் வராமல் நான் போக மாட்டேன் என்றார். சரி மிகவும் நல்லவராகவும் இருக்கிறார். சரி என ஒப்புக் கொண்டு வள்ளி மலை அடிவாரத்தை அடைந்தோம். 

வேலூருக்கு அருகில் உள்ளது வள்ளிமலை முருகப் பெருமான் ஸ்தலம். எனக்கு மிகவும் பிடித்த ஸ்தலம். உடல் சிலிர்த்தது உள்ளம் உவகை கொண்டது. வள்ளி பிராட்டியையும், வடிவேல் முருகனையும் பிரார்த்தித்து மலை ஏறினோம்.

ஐயா, பைரவர் வருவார், பால் சாதம் போட வேண்டும் என நாடியில் வந்தது. பைரவரின் வாகனம் வருமா? என்றார். சொன்னவர் முருகப் பெருமான், நிச்சயம் நடக்கும் என்றேன். உடன் பால் சாதத்தையும் எடுத்து வந்தார். வள்ளிமலை அடிவாரத்தில் உள்ள விநாயகப் பெருமானைப்
பிரார்த்தனை செய்து சிறிது தூரம் மலையை நோக்கி நடந்தோம். வந்தார் பைரவரின் வாகனம். உடன் வந்த பள்ளியின் உரிமையாளருக்கு ஒரே மகிழ்ச்சி. உடனே தனது கையில் இருந்த பால் சாதத்தை வைத்தார்.

பைரவ வாகனமும் அதை முழுவதுமான சாப்பிட்டு முடித்த பின் மலை ஏறினோம். அங்கு எட்டு தூண் பகுதி வந்தவுடன் எனது உடல் தாங்க இயலாத அளவிற்கு ஈர்ப்பு சக்தி ஈர்த்து விட்டது. இதற்கு காரணம் அந்த எட்டு தூண் பகுதியை திருப்பணி செய்கின்ற சமயம் புணரமைக்க
முற்பட்டு அங்குள்ள பாறைகளை அகற்றும்போது குபீரென சாம்பிராணிப் புகை வாசத்துடன் வந்தது. அதில் ஓர் உருவம் ஜடா முடியுடன் தவம் இருப்பதும் தெரிய வந்தது. உடனே எடுத்த கற்களை அப்படியே போட்டு மூடி விட்டு புணரமைக்காமல் விட்டு விட்டனர். இது வரலாறு. எட்டு
தூண் பகுதியில் சித்தர்கள் தவம் இருப்பதாக இன்னும் நம்பப் படுகிறது.





                    


                      



அதை இன்னும் உணர முடிகிறது. சற்று மேலே ஏறியவுடன் குடவரையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். அதை தரிசனம் செய்துவிட்டு சற்று மேலே சென்றவுடன் பொங்கி அம்மன் ஆலயம், ஸ்ரீ வள்ளி மலை சுவாமிகள் சமாதி பீடம், சூரியன் காணாத
அணை, வள்ளி மஞ்சள் குளித்த இடம், உச்சி லிங்கம், யானை வடிவில் ஒரே கல் என பல ஆச்சரியமான, அதிசயமாக வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன.









அத்துணையும் தரிசனம் செய்தோம்.

யாருடனும் இவ்வாறு செல்வதில்லை. இருப்பினும் இவர் என்னுடன் வந்ததை பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்றார். பைரவர் வந்ததை மிகவும் மகிழ்ச்சியாகக் கருதினர். வழிபாடு முடிந்த பின் வீடு திரும்பினோம்.

சில மாதங்கள் கழித்து அவர் மீண்டும் வந்து நாடி கேட்டார். ஐயா, ஒரு பெண் ஜாதகம் பொருந்தி வருவதாகச் சொல்கிறார்கள். இதை மணமுடிக்கலாமா? எனக் கேட்டார். நாடியில் செய் என வந்ததால் அவருக்கு ஒரே மகிழ்ச்சி. அதில் ஆச்சரியம் என்னவென்றால் பெண்ணின்
தந்தை பெயர் ஸ்ரீ முருகப் பெருமானின் பெயர், அவர்கள் நடத்துகின்ற தொழில் நிறுவனத்தின் பெயரும் முருகப்பெருமானின் பெயர். இவர்கள் காலம் காலமாக முருகனை வழிபடுகின்ற குடும்பம். இப்படி எல்லாமே முருகமயமாக இருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தார். ஐயா முதல் முறை
நாடி கேட்ட போது “வடிவேலன் வகை தனிலே வருவான்” எனப் படித்தீர்கள். அது அப்படியே 100% பலித்துவிட்டது. இதை எப்படி நன்றி சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை என்றார். 

எனது கையில் ஒன்றுமில்லை எல்லாம் சித்தர்கள் செயல் என்றேன். திருமணம் நடந்தது. திருமணத்துக்கு நானும் சென்றிருந்தேன். பல இலட்சங்கள் செலவு செய்து மிக அற்புதமாக திருமணம் நடத்தினார்.

மீண்டும் தம்பதி சமேதராக வந்து நமது ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியைத் தரிசனம் செய்தார்கள். முருகப் பெருமான் ஆசிர்வதித்தார். இப்படி சற்று நம்பிக்கைக் குறைவாக ஆரம்பத்தில் வந்து நாடி கேட்ட இவர் சின்ன விஷயமாக இருந்தாலும் நாடியில் உத்தரவு கேட்டே செய்து வருகிறார்.
 ஜீவ நாடியைப் பொறுத்தவரை ஜோதிடத்தில் 12 காண்டங்கள் சொல்வது போல் சொல்வதில்லை. எது எப்போது சொல்ல வேண்டுமோ அது அப்போது சொல்லப்படுகிறது. எது அவசரத்தேவையோ அதற்கு மட்டும் நாடியில் தீர்வு கேட்க வேண்டும். 

சாதாரண சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாடியில் பலன் கேட்க கூடாது. தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்க்க நாடலாம். பொது பலன் கேட்கலாம். நாம் எதிர்பார்த்தது அத்தனையும் வர வேண்டும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

இந்த பள்ளியின் உரிமையாளர் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தார். நாடி சொன்னபடி உரிய முறையில் திருமணம் நிச்சயமானது. நல்லபடியாக திருமணமும் முடிந்தது. அதே போல் என்ன முருகப் பெருமான் உரைக்கின்றாரோ அதை மட்டும் கடைபிடித்தால் போதுமானது.

சில மாதங்கள் ஓடின. புது மாப்பிள்ளையாக வலம் வந்தவர் மீண்டும் வந்தார். பூஜித்து நாடி படிக்கப்பட்டது.

“திருப்பமது ஆக திவ்யமதுகாக

திருச்செங்கோடு செல்லு


தித்திக்கும் வாய்ப்பு வரும்


திருமண இன்பம் கூடும்


மழலை வாய்க்கும்


மகிழ்ச்சி நிலையோங்கும்


தொழில் விருத்தி உண்டே”


திருமணமானவர்கள் அனைவரும் தரிசனம் செய்ய வேண்டிய ஸ்தலம், திருச்செங்கோடு.இந்த திருச்செங்கோட்டு ஸ்தலத்தில் எனக்கும் என்னுடன் வந்த சில அடியார்களுக்கும் 
ஸ்ரீலஸ்ரீ காசி சந்நியாசி நமசிவாய சுவாமிகள் ஸ்பரிச தீட்சை கொடுத்து பஞ்சாட்சர மந்திரம் உபதேசம் செய்தார்கள். அப்படி எனக்கும் அதிசயம் நடந்த ஸ்தலம். அம்மையும், அப்பனும் இரண்டறக் கலந்து அர்த்த நாரீஸ்வரராகக் காட்சி தரும் ஸ்தலம்.

எல்லாவற்றிற்கும் மேலாக அருணகிரி நாதரே நாலாயிரம் கண் வேண்டும் உனைக்கான என்று பாடிய செங்கோட்டு வேலவன் இருக்கின்ற ஸ்தலம்.

இப்படி பல்வேறு சிறப்புகளுடைய திருச்சேங்கோடு செல் அங்கு சென்று வழிபட்டு வந்தால் மழலைச் சொல் கேட்கும். தொழில் பெருகும் எனச் சொன்னார். முருகப்பெருமான். தம்பதி சமேதராக சென்று தரிசனம் செய்து வந்தார்கள். நாடி கேட்டார்கள் முருகன் அருளால் பிள்ளை பிறக்கும் என வந்தது ஆனால் சுகப்பிரசவம் அல்ல அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வந்தது அப்படியே நடந்தது. அறுவை சிகிச்சை மூலம் பூசம் நட்சத்திரம், கடக ராசியில் ஆண் குழந்தை ஜெனித்தது. தொழிலும் நல்ல மாற்றம். இன்னும் ஒரு பள்ளியைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்.


இப்படி பலரது வாழ்வில் ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி ஒரு மாபெரும் வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறது. இன்று பல அதிசயங்கள், அற்புதங்கள் கண்கூடாக நாம் ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருளால் கண்டும், கேட்டும் வருகின்றோம்.

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாம் முருகப்பெருமான் ஜீவநாடியில் உரைத்த செய்திகளை இங்கே நாம் குருவருளால் தந்துள்ளோம். மீண்டும் மீண்டும் படித்து முருகப்பெருமானின் ஆசியும், சித்தர்களுக்கெல்லாம் தலையாய சித்தராய் விளங்கும் ஸ்ரீ அகத்தியர்  பெருமானின் ஆசி பெறுங்கள். 

மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html
ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html
அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html
கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment