"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, April 8, 2020

தாலாட்டு வேண்டுமா? தேசிய கீதம் வேண்டுமா?

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

21 நாள் ஊரடங்கு நிலையில் அனைவரும் இருக்கின்றோம். சற்று கடினமாகத் தான் இருக்கின்றது.ஆம். 21 நாள் வீட்டுக்காவலில் அல்லவா இருக்கின்றோம். செவ்வாய்க்கிரகத்தில் காலடி எடுத்து வைக்க நினைத்த நமக்கு நம் வீட்டின் வெளியே காலடி எடுத்து வைக்க முடியவில்லை. நாம் பயப்படுவது ஆஜானுபாகுவான தோற்றத்திற்கும் அல்ல..கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய நுண் கிருமி. என்ன செய்ய? எல்லாம் விதிப்பயன். கர்மா நம்மை துரத்துகின்றது அல்லவா? ஏன் இது போன்ற ஒரு சூழ்நிலை ? நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது இயற்கையின் மதிப்பறிந்து, சமுதாயத்தோடு இணைந்து உழைத்து பொருளீட்டி, இயற்கை இன்பங்களைத் துய்த்து இப்பூவுலகில் மகிழ்ச்சியாக வாழப் பிறந்தவனே  மனிதன். ஆனால் அப்படி வாழ்கின்றோமா என்பது பெரும் கேள்விக்குறியே? இந்த சூழலில் இருந்து நாம் நம் வாழ்வியலை சிறிதாவது மாற்ற வேண்டும். இல்லையேல் இதே கதை தான் மீண்டும் மீண்டும் உருவாகும் என்பதில் ஐயமில்லை. யாரையும் பயமுறுத்துவது நம் நோக்கம் அல்ல. 

இதற்கு என்ன தான் தீர்வு என்று யோசிக்கும் போது இயற்கையே தெய்வம் என்பதையும்,
பஞ்சபூதங்களும் அனைத்து உயிர்களும், எல்லா மனிதர்களும் இயற்கையின் அங்கம் என்பதையும் உழைக்கும் வயதை அடைந்த அனைவரும் சிந்தித்து அறிய வேண்டும்.யாருக்கும் துன்பம் தராமல் அறவழியில் உழைத்து பொருளீட்டி , பிறர் துன்பம் போக்கி இயற்கையை மதித்து வாழ்வோம் என்று உள்மனதில் எண்ணி அதை உறுதிமொழியாக கடவுளிடம் கூற வேண்டும். இதனை நன்கு சிந்தித்து உங்கள் தினசரி பிரார்த்தனையில் வைத்து வாருங்கள். தனிமனித மாற்றமே உலக மாற்றத்திற்கு விதை ஆகும். இதே மனதுடன் அனைவரும் தேசிய கீதம் பாடுவோமா?


இன்றைய பதிவில் ஒரு தன்னம்பிக்கை  ஊட்டும் கதை ஒன்றை பார்க்க இருக்கின்றோம்.பதிவின் இறுதியில் சில டிப்ஸ் கொடுத்துள்ளோம். அனைவரும் படித்து, பயன் பெறவும்.

இந்த கதையை படித்துப் பாருங்கள். விதி, மதி, நம்பிக்கை என நாம் சொல்லும் காரணங்களின்  மற்றோரு பரிமாணம் புரியும்.தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடவும்.




ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில்  சில தவறுகளால்  நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய்விட்டார். பின்பு   அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில்  அமர்ந்தார். அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு ஏன் சோகமாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார்.

 அதற்கு

இவர் "எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார். என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கையை பிசைந்து கொண்டே பேசினார்.

எவ்வளவு ரூபாய் நஷ்டம்?" என்றார் அந்த பெரிய மனிதர்.





உடனே அவர் "50 கோடி ரூபாய்" என்றார்

அப்படியா, நான் யார் தெரியுமா? என்று கேட்டார் அந்த பெரிய மனிதர். பின்பு அவரே
அந்த ஊரின் பிரபல செல்வந்தரின் பெயரை சொன்னார்.

 அசந்து போனார் அந்த நிறுவனத்தின் தலைவர்,

சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா?" என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும்" என்றார்.

 பின் அந்த செல்வந்தர் ஒரு  வங்கி காசோலை புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி

"இந்தா இதில் 500 கோடிக்கு காசோலை, நீ கேட்டதைவிட 10 மடங்கு  அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒரு வருடம்  கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த  வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு செக்கை  இவர் கைகளில் திணித்து விட்டு சென்றார் அவர்.

500 கோடி காசோலை  தன்  கையில் வந்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.அப்படியே காசோலையை  தன் பையில் வைத்து விட்டு நேரே அலுவலகம் சென்றார். அலுவலகம் செல்லும் வழியில் மனதிற்குள் சில பல திட்டங்களை தீட்டினார்.




 அந்த  நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று  அந்த காசோலையை  தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது  உதவியாளரை  அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர  ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

  இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். "நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500  கோடி ரூபாய் உள்ளது, ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி  ஏற்பட்டது? எதனால் எதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது  நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேலைகள் வேகமாக  நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து  ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு,மூச்சு,செயல் சிந்தனை,தூக்கம் என அனைத்தும் அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

 மிக சரியாக  ஒரு  வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியாக  550 கோடி ரூபாய்கள்  லாபம் ஈட்டி இருந்தது அந்த  நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த  செல்வந்தர் கொடுத்த  500 கோடிக்கான காசோலையை  எடுத்துக் கொண்டு அந்த  பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே பெஞ்சில்  அமர்ந்தார்.

காலை நேரம். ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம்  கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும்  அவருக்கு அருகில் அவரை கைகளால்  பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது.  சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த  செல்வந்தரை காணவில்லை.

 இவர் சென்று அந்த பெண்மணியிடம் "

எங்கே அம்மா தங்கள் கூட வந்தவர்?" என்றார்

 அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் "

உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?" என்றார்

இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?" என்றார். அவர்.

அந்த பெண்மணி "இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி  இல்லாதவர், காசோலை தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய  காசோலையை  கிழித்து கையெழுத்திட்டு கொடுத்து விடுவார்" என்றார்.

  ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. தூக்கி வாரிப்போட்டது போன்ற உணர்வு. பின்பு அப்படியே யோசிக்க ஆரம்பித்தார்.அப்போ நம்மால்  முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி  இருக்கிறது என்று நினைத்தார்.





எதையும்  நம்மால் செய்ய முடியும் என்று முதலில் நாம் நம்பவேண்டும். அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

என்ன நட்புக்களே? சரிதானே ! அவர் தம்மால் முடியும் சென்று நினைத்தார்.அதனால் அவரால் வெற்றி பெற முடிந்தது.துவண்டு கிடக்கும் போது அவர் கொண்ட தன்னம்பிக்கை அவரை உயர்த்தியது.இங்கே காசோலை ஒரு தூண்டுகோலாக அமைந்தது. ஒரே கதையில் ஏகப்பட்ட நீதிகள்.

நமக்கு தாலாட்டு வேண்டுமா? இல்லை தேசிய கீதம் வேண்டுமா? நீங்களே முடிவு செய்து தேசிய கீதம் இயற்றுங்கள்.

தன்னம்பிக்கை வளர்க்க சில டிப்ஸ்.

விடாமுயற்சி, கடின உழைப்பு, திட்டமிடல் போன்ற பல குணநலன்கள் கூறப்படலாம். ஆனால் அவை எல்லாமே 'தன்னம்பிக்கை' என்ற அடித்தளத்திலிருந்து தான் உருவாகி வெளி வருகின்றன என்கிறார்கள் அறிஞர்கள். தன்னம்பிக்கை என்பது ஓர் உந்து சக்தி வாழ்வதற்கும், வாழ்வில் உயர்வதற்கும், எல்லோருக்கும் தன்னம்பிக்கை இருக்கிறதா என்றால் இருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் அது போதுமான அளவு இருக்கிறதா என்றால் இல்லை. நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் தன்னம்பிக்கை நிரம்பப்பெற்றவர்கள் சோர்வு அடைவதில்லை.

துவண்டு போவதில்லை. தோல்வியானது நம்மைத் துவண்டு போகச் செய்கிறது என்றால், நம்முடைய தன்னம்பிக்கையின் அளவு குறைவாக இருக்கிறது என்று பொருள். தாழ்வு மனப்பான்மை, தம்முடைய முயற்சியின் மீது நம்பிக்கையின்மை, மற்றவர்களுடைய வெற்றியைக் கண்டு வெதும்புதல், சோம்பேறித்தனம், மற்றவர்களோடு கலகலப்பாக இல்லாமல் இருத்தல் போன்றவை தன்னம்பிக்கை குறைவாக இருப்பதின் வெளிப்பாடு ஆகும்.

உங்கள் பலம், பலவீனம் இவைகளைச் சரியாகப் பட்டியலிடுங்கள். உங்கள் வாய்ப்பு களையும் அவைகளைப் பயன்படுத்துவதில் உள்ள தடைகளையும் பட்டியலிடுங்கள். நீங்கள் பட்டியலிட்டுள்ள பலவீனங்களில் சிலவும், தடைகளில் சிலவும் உண்மையிலேயே பலவீனமோ அல்லது தடையோ அல்ல என்பதை உணரலாம். எஞ்சியுள்ள பலவீனங்களையும், தடைகளையும் வெல்வதற்குண்டான முயற்சியில் முழுமூச்சுடன் இறங்குங்கள். இதற்கு உங்கள் பலங்களையும், வாய்ப்புகளையும் ஏற்கனவே உங்களிடம் இருக்கும் தன்னம்பிக்கையையும் பயன் படுத்துங்கள்.

இவ்வாறு உங்கள் பலத்தைக் கூட்டி, பலவீனத்தைக் கழித்து, வாய்ப்பினைப் பெருக்கி, தடைகளை வகுத்தால் தன்னம்பிக்கை தானாக வளரும். பலவீனங்களைக் குறைத்துத் தடைகளைத் தகர்க்கும் போது உங்கள் பலங்களும், வாய்ப்புகளும் தன்னம்பிக்கையை பலமடங்கு அதிகப்படுத்தும். இந்த தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கைத் தேர்விலும் ஜொலிக்க முடியும்.

எங்கோ படித்த கதை தான். சிற்சில மாற்றங்கள் செய்து இங்கே பதிவிட்டிருக்கின்றோம்.

- நன்றி

மீள்பதிவாக:-

கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html

பங்குனி உத்திரம் - கந்த குரு கவசம் சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_41.html

முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_23.html

பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் தரிசனம் பெறுங்கள் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_5.html

நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_22.html

பங்குனி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_3.html

கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை முருகா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_15.html

கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை தோழா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_5.html

குகைக்குள் வாழும் குகனே- தோரணமலை முருகா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_28.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

 திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html


TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html


சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

No comments:

Post a Comment