அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவின் அருளாலே இன்றைய பதிவு வழங்கப்படுகின்றது. அருணாச்சலத்திலிருந்து வருகின்றேன் என்று சொல்லும் போதே அனைவரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். ஆம். பகவான் ரமணரைப் பற்றி சில செய்திகளை இங்கே பகிர உள்ளோம்.
குருவின் அருளாலே இன்றைய பதிவு வழங்கப்படுகின்றது. அருணாச்சலத்திலிருந்து வருகின்றேன் என்று சொல்லும் போதே அனைவரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். ஆம். பகவான் ரமணரைப் பற்றி சில செய்திகளை இங்கே பகிர உள்ளோம்.
ரமணரின் வழியிலேயே பதிவை ஆரம்பிப்போம்.
பக்தர் : ஒரு ஞானியின் நினைவைக் கொண்டாடுவது எப்படி?"
பகவான்
ரமணர் : பிறப்பும் இறப்பும் கடந்த ஒரு ஞானியின் பிறந்த தினத்தையோ
(ஜயந்தி), மறைந்த தினத்தையோ (ஆராதனை) கொண்டாடுவது எப்படியென்றால் அவரது
உபதேசங்களை நினைவு கூர்வதுதான். அவர் எப்படி வாழ்ந்தார், என்னென்ன
உபதேசித்தார் என்பனவற்றை நினைவு கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான
கொண்டாட்டம்.
இன்று பகவான் ரமணர் பரம்பொருளில் ஒன்றிய நாள். நாமும் அவரது நினைவைக் கொண்டாடுவோமா?.
ரமணர்
பற்றி எழுத நினைப்பதும் பேச நினைப்பதும் கோலம் போடுவது போன்றது தான்.
கோலம் தானே அது எளிதாக தரையில் போடலாம் அல்லவா? இது தரையில் போடும் கோலம்
அல்ல. பின்னே? நீரில் போடும் கோலமும் அல்ல..அத்தனையும் தாண்டி காற்றில்
போடும் கோலம் தான். இது எப்படி முடியும்? அது தான் பகவான். எத்தனையோ
மகான்கள் இந்த புனித பூமியில் அவதாரம் செய்து வருகின்றார்கள்.அவற்றுள்
சிலரே பகவான் என்று அழைக்கப்படுவர். ஒருவர் ரமணர், மற்றொருவர் ராமகிருஷ்ண
பரமஹம்சர். இன்று பகவான் தரிசனம். அதுவும் ரமண ஜெயந்தியான இந்த நாளில் பெற இருக்கின்றோம்.
ரமணர் சொல்லும் செய்திகள் பார்ப்பதற்கு எளிமையாக தோன்றும். ரமணர் படித்து
விட்டு செல்லும் விஷயங்களை சொல்லவே இல்லை. படித்து மனதில் இருத்த வேண்டிய
செய்திகளை மட்டுமே சொல்லி இருக்கின்றார். ரமணாத்மியம் மீண்டும் மீண்டும்
படிக்க வேண்டியது ஆகும். இது ஆழ்ந்து செல்லக் கூடியது, ஆழ்ந்து
சொல்லக்கூடியது, ஆழ்ந்து சிந்திக்க கூடியது; இது தான் பகவானின்
சிறப்பு.இவர் மாய மந்திரம் எதுவும் செய்தவர் வல்லவர். மாயா பற்றி ஆத்ம
விசாரம் பற்றி அனுதினமும் ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் பேசியவர்.
அருணையிலே இருந்து கொண்டு மக்களைத் தன்பால் தற்போது வரை வரவழைத்துக்
கொண்டிருப்பவர். ரமணரை நேரில் நாங்கள் கண்டதில்லை, ஆனால் மீண்டும் மீண்டும்
அருணைக்கு அழைக்கப்படுவது ரமணரால் தான். ஒரு சாதாரண மனிதனாக அவதரித்து,
பின் தன் முயற்சியால் தெய்வ நிலை அடைந்தவர். அமைதியை ஆராதனை செய்தவர்.
ஆனந்தத்தை பரிபூரணமாக கொடுத்துக்கொண்டு வருபவர்.எளிமையாய் வாழ்ந்தவர்.
சுருக்கமாக சொன்னால் ஞான வள்ளல் ரமணர்.
பகவான் ரமணர் யார்?
------------------------------------------
அம்ருதநாத யதீந்திரர் என்பவர் பகவான் ரமணரின் அத்யந்த பக்தர். அவருக்கு பகவான் உண்மையிலேயே யார் என்று அறிய ஆவல் ஏற்பட்டது.
தன் ஆவலை ஒரு வெண்பாக எழுதி பகவானிடம் சமர்ப்பித்தார்.
“அருணாசல பரிசோபித பரமாத்புத குகையில்
கருணாநிதி ரமதேயநி பகவான் முனி ரமணன்
ஹரியோ சிவகுருவோ முனிவரனோ யதிபதியோ
அறிவான் தனியதுவோ மமகுருமா முனி மஹிமா”
- என்பது அந்தப் பாடல்.
“மிக அழகானதாக உள்ள இந்த அற்புதமான அண்ணாமலையின் குகையில் கருணாநிதியாக விளங்கும் முனிவரான பகவான் ரமணர் என்பவர் யார்? ஹரியா, சிவனா, முனிவர்களின் தலைவனா, யதீந்திரனா? என் குரு முனிவரின் மஹிமையைப் பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்பது இதன் பொருள்.
இதற்குப் பதிலாக பகவான்,
“அரியாதியி தரசீவர தகவாரிச குகையில்
அறிவாய்ரமி பரமாத்தும னருணாசல ரமணன்
பரிவாலுள முருகாநல பரனார்ந்திடு குகையார்ந்
தறிவாம்விழி திறவாநிச மறிவாயது வெளியாம்”
என்பதாக, “ஹரியிலிருந்து தொடங்கி எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும் ஞானமாய் விளையாடும் பரமாத்மாவே அருணாசல ரமணன். இதயக் குகையில் வீற்றிருக்கும் அவனை அறிய, விழிப்பு என்னும் ஞானக் கண்ணைத் திறந்து பார்த்தால் உண்மை தெளிவாகும்” என்ற ஸ்ரீ அருணாசல ஸ்துதிப் பஞ்சகத்தில் தான் கூறியிருக்கும் பாடலை எழுதிக் காண்பித்தார்.
எங்கும், எல்லா உயிரிடத்தும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவே பகவான் ரமணர் என்பதை யதீந்திரர் உணர்ந்தார். பணிந்தார்.
நாமும் உணர்வோம். பணிவோம். உயர்வோம். ஓம்.
ஏன் எப்படி என்று தெரியவில்லை? நம் தலத்தில் சென்ற வாரம் அருணா! கருணா ! என உருக்கும் அருணாசல அக்ஷரமணமாலை பற்றி பதிவு செய்து இருந்தோம். இதோ. இன்றைய தமிழ் புத்தாண்டு தினத்தில் நம் தளம் சார்பில் ஏதேனும் புது முயற்சியாக ஏதேனும் செய்ய வேண்டுமே என்ற உள்ளக்கிடக்கை இருந்தது. அதனை தினமும் அருணாசல அக்ஷரமணமாலை பற்றி சில வரிகளை படக்காட்சியாக தரலாம் என்று எண்ணி திட்டமிட்டோம்.இதோ. இன்று முதல் நாள் அருணாசல அக்ஷரமணமாலை பாடலின் வரிகள்.
இந்த செய்தியை நாம் வெளியிட்ட பின்னர் தான் தெரிந்தது. இன்று பகவானின் அருள் பூரண தினம் என்று. அட..நமக்குள் எப்படி இது போன்ற செய்தி தர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது? தோன்றிய எண்ணம் எப்படி செயலுக்கு வந்தது? இதோ. தற்போது பதிவாக உங்களுடன் பகவான் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம் என்றால் மீண்டும் காரணமின்றி காரியமில்லை என்று உணர்த்தப்படுகின்றோம்.
அருணாசலம் என அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய் அருணாசலா
அருணாசலா! தம் மனத்தில், அருணாசலமே நான் என்று அபேதமாகக் கருதும் அன்பர்தம் அகங்காரத்தை வேரோடு அறுப்பாய்.
நாமும் உணர்வோம். பணிவோம். உயர்வோம். ஓம்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!
மீண்டும் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
அருணா! கருணா ! என உருக்கும் அருணாசல அக்ஷரமணமாலை - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_17.html
குரு தரிசனம் : அருணாச்சலத்திலிருந்து வருகின்றேன் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_64.html
பாலகுமாரனின் பார்வையில் பகவான் ஸ்ரீரமண மகரிஷி - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_4.html
பங்குனி உத்திரம் - கந்த குரு கவசம் சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_41.html
மார்கழி சிறப்பு பதிவு : திருப்பாவையும், திருவெம்பாவையும் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_17.html
தைத் திருநாள் வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_15.html
No comments:
Post a Comment