"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, April 20, 2020

ஆதிசிவத்துள் ஐக்கியமான சித்தர்காடு சித்தர்கள் - ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் பதமே போற்றி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சில பதிவுகளுக்கு முன்னர் ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் பற்றிய பதிவை என்ற தலைப்பில்  சிறப்பான வாழ்வு தரும் சித்தர்காடு - ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் பதமே போற்றி கண்டோம். அந்தப் பதிவிற்கு ஒரு பின்னூட்டமாக அன்பர் ஒருவர் நம் பதிவைக் கண்டு மீண்டும் ஒரு முறை சித்தர்காடு தரிசனம் பெற இருப்பதாக சொல்லி இருந்தார். நாமும் அன்றைய பதிவில் கோவில் வரலாறு மட்டுமே பேசி இருந்தோம். இனிவரும் பதிவுகளில் சித்தர்காடு தரிசனம் பற்றி காண்போம் என்று சொல்லி இருந்தோம். அதோ. அந்த பின்னூட்டமே இன்றைய பதிவிற்கு காரணமாக அமைகின்றது. இல்லையென்றால் நமக்கு சித்தர்காடு தரிசனம் பற்றி இன்று பேச மாட்டோம். மாறாக வேறு பதிவுகள் தான் காண இருப்போம். முகமறியா அந்த நண்பருக்கு நன்றி சொல்லி இந்தப் பதிவை ஆரம்பிக்கின்றோம்.

பழமையான ஆலயங்களில் சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி அமைந்திருப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் அழகர்மலையில் ராமதேவர், திருவனந்தபுரத்தில் கும்பமுனி, திருவண்ணாமலையில் இடைக்காடர், விருத்தாசலத்தில் பாம்பாட்டிச் சித்தர், மயிலாடுதுறையில் குதம்பைச் சித்தர், திருவாரூரில் கமலமுனி, வைத்தீஸ்வரன் கோவிலில் தன்வந்திரி, பழனியில் போகர், திருப்பரங்குன்றத்தில் மச்சமுனி, திருப்பதியில் கொங்கணவர், ராமேஸ்வரத்தில் பதஞ்சலி,  என ஒவ்வொரு தலத்திலும், ஒவ்வொரு மகான்கள் குடியிருக்கின்றனர். ஆனால், சித்தர் ஒருவர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலமாக விளங்குவது, மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயமாகும்.

மயிலாடுதுறை கும்பகோணம் பாதையில் மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும் சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோரத்திலேயே கோயிலுக்கான வளைவிற்குள் நுழைந்து சென்றால் கோயிலை அடையலாம்.




 நம்மை வரவேற்கும் நுழைவாயிலோடு நாம் செல்ல இருக்கின்றோம். சிறிய பயண குறிப்பாக கும்பகோணத்திலிருந்து மயிலாதுறை செல்லும் போது நாம் சித்தர்காடு கோயில் என்ற நிறுத்தத்தில் இறங்கினால் நாம் இந்த வரவேற்பு நுழைவாயில் காணலாம்.

இந்த பாதை வழியே சிறிது தூரம் நடந்து சென்றால் நாம் ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் திருக்கோயிலை அடையலாம். நடந்து செல்லும் தூரத்தில் தான் கோயில் உள்ளது.


இதோ. கோயிலினுள் செல்ல இருக்கின்றோம்... நாம் கொஞ்சம் தாமதாமாக சுமார் 10:30 மணி அளவில் சென்றோம் என்பதால் மனம் சற்று ஓடியது. இருப்பினும் கோயிலை அடைந்ததும் சற்று நிம்மதி அடைந்தோம்.


கோயில்  குருக்களிடம் சற்று பேசிவிட்டு பிரகாரம் பார்த்து தரிசனம் செய்துவிட்டு வருவதாக சொன்னோம்.

கிழக்கு நோக்கிய எளிய நுழைவாசலைக் கொண்டு ஆலயம் அமைந்துள்ளது. 



கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன.





அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் எப்படி இருக்கும் என்ற பரவசத்தோடு அடுத்து நாம் சென்றோம். நீங்களும் தரிசனம் பெற்றுக் கொள்ளுங்கள்.




கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் ஐக்கியமானதைக் குறிக்கும் விதமாக அறுபத்துமூன்று சிவலிங்கத் திருமேனிகள், நேர்த்தியாக ஒரே வரிசையில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. 




ஒரு ஞானியின் சந்நதியே ஜீவனை கரை சேர்க்கும் வல்லமை கொண்டது. ஆனால், இங்கோ அறுபத்து மூவரல்லவா என்று எண்ணும்போது திகைப்பு மேலிடுகிறது.





பின்னர் அங்கிருந்த தியான மண்டபம் நோக்கி சென்றோம்.





அடடா..சொல்ல வார்த்தைகள் இல்லை. குருவின் தரிசனத்தை இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்.அங்கு பிரவகித்து ஓடும் சிவப் பிரவாகத்தில் நம் மனம் காற்றில் அலையும் தூசாக பறக்கிறது. இதற்கு முன் வேறொன்றும் நில்லாது. நிற்பின் அது நிலைக்காது. நின்றிடின் அது நெருப்பாய் நீறாக்கிவிடும். நானெனும் அகங்காரம் மெல்ல சுருண்டு அடங்கி நிற்கும் மாயம் நிகழ்கிறது. ‘சிவகுருநாதா, என்னிலும் இன்னும் உலகளவு ருசியுண்டு.







.

                 

                 



அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த மனம் இங்கே ஒரு முகப்பட்டது. இதனை வார்த்தையில் நம்மால் சொல்ல இயலாது. அனுபவித்து பெற வேண்டிய பேரானந்தம் இது. சுமார் 30 நிமிடம் இங்கே அமர்ந்து இருந்தோம். வெளி சிந்தனைகள் ஏதுமின்றி ,மனதை உள்முகமாக திருப்ப முடிந்தது. சில இடங்களில் மட்டுமே ஆற்றல் களத்தை உணர முடியும். உள்வாங்கவும் முடியும். அது போன்ற ஒரு தலமே இந்த தலம் ஆகும்.







இப்போது கோயிலின் சன்னதி உள்ளே செல்ல உள்ளோம். அங்கே கண்ட தரிசனம் நம்மை இன்னும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. ஆம்! பாடகச்சேரி ராமலிங்க ஸ்வாமிகள் தரிசனமும் பெற்றோம்.


கருவறை முன்மண்டபத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், கருவறைக்குள் தலத்தின் நாயகரான சீகாழி சிற்றம்பல நாடிகள் ஜீவ சமாதியும், அதன்மீது சிவலிங்கத் திருமேனியும் ஒளி வீசும் பொலிவோடு நமக்குக் காட்சி தருகிறது. அவரை வணங்கும் போது இனம் புரியாத பரவசம் நம்மைப் பற்றுகின்றது. இவரே முக்காலத்து வினைகளையும் போக்க உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.









கண்ணப்பனாய் நின்று இங்கு யாசிக்கிறேன் கருணை கொள் நாடிச் சிற்றம்பலவா’ என்று வேண்டிக் கொண்டு பிராகாரத்தை நோக்கி நகர்கிறோம். அதற்கு முன்பாக உலகில் உள்ள யாவரும் இன்பமாக வாழ வேண்டி தீபமேற்றி வழிபாடு செய்தோம்.





இந்த தீப வழிபாடு நமக்குள் இயல்பிலேயே வர தொடங்கி விட்டது. இப்போது எந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் தீப விளக்குகள், நெய் இருக்கின்றதா என்று முதலில் பார்த்து விட்டு செல்கின்றோம். குருவின் அருளாலே குருவின் தாள் வணங்கி அடுத்து ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் தரிசனம் பெற்றோம். அழகிய பச்சை வண்ண வஸ்திரம் அணிந்து இன்னும் நம்முள் அந்த பசுமை எண்ணத்தை அவர் புகுத்திக்கொண்டு உள்ளார்.




அருகேயே அம்பாளுக்கு ஸ்ரீ யோக நாயகி என்கிற திருப்பெயரில் தனிச் சந்நதி உள்ளது. மெல்ல கோயிலை வலம் வந்து நமஸ்கரிக்க, நம்முள்ளும் சிற்றம்பல வாயில் மெல்ல திறக்கத் தொடங்குவதை உணர முடிகிறது.

சீர்காழி சிற்றம்பல நாடிகளின் முக்கிய சீடர்களாக சம்பந்த முனிவர், தத்துவப் பிரகாசர், தத்துவநாதர், ஞானப் பிரகாசர், கண்ணப்பர் போன்றோர் விளங்குகின்றனர். சீர்காழி சிற்றம்பல நாடிகள் மிக நுட்பம் பொருந்திய சிவஞான போதத்தை விளக்கிடும் நூலை அருளியிருக்கிறார்கள்.

அதில் துகளறு போதம், செல்காலத்திரங்கல், நிகழ்காலத்திரங்கல், வருகாலத்திரங்கல், திருப்புன்முறுவல் போன்றவை மிக உயர்ந்தவை. இதுதவிர இவரது சீடர்களும், சிற்றம்பல நாடிகள் கலித்துறை, வெண்பா, தாலாட்டு, அநுபூதி விளக்கம் என்றும் இயற்றியிருக்கின்றனர்.


ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில் சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு வெகு விமரிசையாக குருபூஜை நடத்தப்படுகிறது. இதேபோல, மாதந்தோறும் திருவோணத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர, பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் செய்து வருகிறது. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும். இந்த சமயத்தில் பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம்.








எப்படி செல்வது?

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும், சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோர வளைவும் தென்படும். அதில் நுழைந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.


மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

சிறப்பான வாழ்வு தரும் சித்தர்காடு - ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் பதமே போற்றி -  https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_16.html


சித்தர்கள் அறிவோம்! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_13.html
 பாண்டிச்சேரி சித்தர்களின் பாதம் பற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_53.html


கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி... - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_14.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

No comments:

Post a Comment