"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, April 3, 2020

பங்குனி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தின் மூலம் மாதந்தோறும் அமாவாசை அன்று மோட்ச தீப வழிபாடு, ஆயில்ய நட்சத்திரம் அன்று ஸ்ரீ அகத்தியர் வழிபாடு, உழவாரப் பணி மற்றும் அன்னசேவை செய்து வருகின்றோம். இது அனைவருக்கும் தெரிந்த செய்தி ஆகும். பங்குனி மாத மோட்ச தீப வழிபாடு சுமார் 5 பேர் அளவிலே நடைபெற்றது. இன்று மதியம் 2 மணி முதல் நாளை பிற்பகல் 12 மணி வரை ஆயில்யம் நட்சத்திரம் வருகின்றது. வழக்கமான பூசை இந்த முறை கிடையாது.

தற்போது நிலவி வரும் சூழலில் அரசாங்க உத்தரவால் அனைத்து கோவில் விழாக்களும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.எனவே அடியார் பெருமக்கள் இன்று நாம் குறிப்பிட்ட ஆயில்ய நேரத்தில் உங்களுக்கு தெரிந்த சித்தர்களின், குருமார்களின் நாமம் ஓதி, விளக்கேற்றி  இல்லத்திலே வழிபாடு செய்ய வேண்டுகின்றோம்.

கத்தியர் பூசையின் போது இந்த பாடல் கேட்டிருக்கின்றோம். நம் தளத்திலும் பதிவிட வேண்டும் என்று விரும்பி மீண்டும் ஒரு முறை உத்திரவு பெற்று இங்கே தருகின்றோம். இணைய வெளியில் தேடிய போது நமக்கு கிடைத்தது. கொங்கணர் கடைக்காண்டத்தில் இந்தப் பாடல் வருகின்றது. இதோ அந்தப் பாடல்...

அகத்திய மாரஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேடமீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக்கொள்வார்கள்
அகத்தியரைத் தொண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியார் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.

-கொங்கணார் கடைக்காண்டம்.

ஆனால் உச்சரிக்கும் போது அகத்திய மகரிஷி நம என்றென்றோது  என்று கூறுவதாக கேட்டுள்ளோம். சித்தர் பாடல் கிடைத்தால் நாம் எந்த செய்தி சரி என்று பின்வரும் நாட்களில் உறுதி செய்கின்றோம்.சரி...மகான்களை பூசித்தால் மனம் மகிழும், ஒடுங்கும்,ஓங்கும். ஒன்பது கோடி ஞானிகளுக்கு தலைவரும் கும்பமுனி என்றும் குருமுனி என்றும் பட்டம் பெற்ற ஆசான் அகத்தீசர் அவர்களின் திருவடியை பூசித்துதான் ஒன்பது கோடி மனிதர்களும் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு பெற்று ஞானிகள் ஆகியுள்ளார்கள். அகத்தியர் என்ற பெயரை உச்சரிக்கவே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எந்த பிறப்பில் நாம் செய்த புண்ணியமோ நம்மை சித்தர் மார்க்கத்தில் ஈடுபட வைத்துள்ளது. ஞாலம் சிறக்க ஞானிகளை போற்றுங்கள். போற்றினால் நமது வினை அகலுமப்பா..இந்த காலகட்டத்தில் குருமார்களிடம் தஞ்சம் அடைவதைத் தவிர வேறு வழி இல்லை.

இனி ஆயில்ய நாயகரின் தரிசனம் பெற இருக்கின்றோம். இதற்கு முன்னர் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில்  நடைபெற்ற ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய தரிசனங்களை தொகுத்து தருகின்றோம்.

குமரனின் சீடனை, ராஜாதி ராஜாவாக இங்கே காணுங்கள் 





















வாழ வழி காட்டும் குருவினை போற்றினோம், ஆராதனை செய்தோம். வேண்டினோம், கொண்டாடினோம்.



வேண்டுதல் எப்படி இருக்க வேண்டும்? இதோ..நீங்களே பாருங்கள். 


இதோ..நீங்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நம் ஐயனின் அற்புத தரிசனம்.






கண்களைத் திறந்து கொள்ளுங்கள்.புறக் கண்ணை மட்டுமல்ல: அகக் கண்களையும் தான். அப்போது தான் அகத்தியம் தங்களினுள் சென்று கிடைக்கும்.





சிவப்பு வண்ண மலர்களில் நம் அகத்தினுள் வாழும் அந்த ஈசன், அகத்தீசனாய் அருள் தரும் காட்சி..அப்பப்பா..இரு கண்கள் போதவில்லை நமக்கு.

இதோ நீங்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் அருள் வெளிப்பாடு...









குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..என்று மனதில் பிடித்தோம். கண்களில் ஒற்றினோம். உயிரில் உணர்த்தப்பட்டோம். 

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் அருள் வெளிப்பாடு.




















அகத்தியர் அலங்காரம் முடிந்ததும்,ஆர்த்தி காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.











கருணை விழியால் பதமலர் தருவாய் 
சற்குரு நாதனே 

ஞானத்தின் வடிவே அருட்பெருஞ்  சுடரே 


கருணா அருணா யோகத்தை வென்றாய் 


உனைப்போல் தெய்வம் வேறொன்று யார் சொல்லப்பா  



ஆசை கொண்டேன் அருகினில் நீ வா வா 


அருவாய் உருவாய் வருவாய் அருள்வாய் 

உன் பதமே பரமே 

தாள்பணிந்து நின்றேன் 

சரண் அடைந்து கொண்டேன் 

ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்
விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு
பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு;
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே;








சித்தருக்கெலாம் சித்தனே. அகத்தின் ஈசனே. அறியா பயணம் மேற்கொள்ளும் எங்களை வழிநடத்தும் உம்மை போற்றுவதே எங்களின் பாக்கியம். அபிஷேகப் பிரியனாக கண்ட ஈசனை, அலங்கார பிரியனாக கண்டோம். 

 கற்பூர ஆரத்தி எடுத்துக் கொள்ளுங்கள். 








இந்த பூசையின் வழியே  நம்மை அகத்தியர் வழி நடத்தி வருகின்றார். ஐயாவோடு சேர்ந்து பல மகான்களும் நம்மை உயிர்ப்பித்து வருகின்றார்கள். சும்மா..எடுத்தோம். கவிழ்த்தோம் என்று சித்த மார்க்கத்திற்கு வந்து விட முடியாது. புல்லாகி, பூடாகி, புழுவாகி மரமாகி என்று மாணிக்கவாசகர் சொன்னது போல் பல பிறவி எடுத்து புண்ணியம் செய்தால் தான் அகத்தீசா! அகத்தீசா !! என்று நாம் குருவின் நாமம் சொல்ல முடியும்.

  ஓம் அகத்தீசாய நம என்று 108 முறை ஓதிய போது ..பிறவியின் நோக்கம் குருவை அடைவது. அதுவும் சித்தர்களை நாம் குருவாக அடைய எத்துனை பிறப்பெடுத்தோம். அகத்தியரின் நாமம் சொல்வது அவ்வளவு எளிதல்ல. மனிதனாக இருப்பதில் கொஞ்சம் புண்ணியம் செய்து இருந்தால் தான் அகத்தியரின் நாமம் சொல்ல முடியும்.


பராக்கிரமம் இகபரமும் சொல்வார் கும்பன்
                                            பாடிட்டால் மாற்றம் சொல்ல எவனும் இல்லை
                                            பராக்கிரமும் வாளையைப் போல் அளிப்பார் கும்பன்
                                            பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்...



ோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நம் குருநாதரின் அருள் தரிசனம்.





அப்பனே..அகத்தீசா என்று வேண்டிக் கொண்டே இருந்தோம்.
சென்ற ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை காணொளி கீழே 


மீண்டும் ஒரு முறை. நினைவூட்டுகின்றோம்....

பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் கூட்டு வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-


பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

No comments:

Post a Comment