"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, February 28, 2022

மகா சிவராத்திரியில் மகேசனை நினைப்போம் - 2022 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி அழைப்பிதழ்

அன்பார்ந்த மெய்யன்பர்களே.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் சிவ ராத்திரி நாளை அனைவரும் கொண்டாட உள்ளோம். சகல சிவாலயங்களிலும் சிறப்பு பூஜை தான் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். இருந்தாலும் நமக்கு கிடைத்த அழைப்பிதழ்களை இங்கே ஒரு சேர பகிர்கின்றோம். அனைவரும் அருகில் உள்ள தொன்மை வாய்ந்த சிவாலயம் சென்று, ஈசனை வழிபட்டு, வினைத் தூய்மை பெறவும்.சித்தன் அருளில் மாமகரிஷி அகத்தியர் பெருமான் அஷ்ட திக்குகளிலும் விளக்கு போடுங்கள் என்று வாக்கு உரைத்தார். அதனை நாம் திரு அண்ணாமலையிலும், கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலயத்தில் பைரவர் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட்டோம். இந்த அஷ்ட திக்கு விளக்கு வழிபாட்டை தொடரவும். முடிந்தவர்கள் வாரம் ஒருமுறையாவது  கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள். முடியாதவர்கள் மாதம் ஒருமுறையாவது விளக்கேற்றி வழிபடவும்.





இந்த அஷ்ட திக்கு விளக்கு வழிபாட்டை நாளை நாம் மேற்கொள்ள உள்ள சிவ ராத்திரி வழிபாட்டில் தயவு செய்து இணைக்கவும். நமக்கு முதன் முதலாக சிவராத்திரி அழைப்பு ஸ்ரீ துளஸீஸ்வரர் வழங்கி உள்ளார். இணைப்பைப் பார்த்து அருள் பெறவும்.




2. சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனுர்! - 19 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ் இங்கே பகிர உள்ளோம்.



3. அக்னி தீர்த்தக்கரை மஹா சிவராத்திரி 1008 சிவலிங்க பூஜை அழைப்பிதழ் 



4. அருள்மிகு மயிலாண்டவர் கோயில் - 15 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி திருவிழா அழைப்பிதழ் 


5. திருவள்ளூர் பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அழைப்பிதழ் 


6. வழுவதூர் கிராமம் மகா சிவராத்திரி பெருவிழா அழைப்பிதழ் 




7. கந்தர்வகோட்டை ஆதிநாதர் சிவராத்திரி அழைப்பிதழ் 


8. ஸ்ரீ பால்சுனை கண்ட சிவபெருமானின் 35 ஆம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ் 


9. ஓம் ஸ்ரீ சிவகுருமடம் - விருதுநகர்


 பைபாஸ் ரோடு வடமலைக்குறிச்சி ரோடு முக்கு-  கெளசிக மகாநதி அருகில்


சிவராத்திரி பெரு விழா அழைப்பிதழ்

ஸ்ரீ மகா அமிர்த பஞ்சலிங்கேஷ்வரர் ஆலயத்தில் வருகின்ற 1.3.2022 பிலவ வருட மாசி மாதம் 17 ம் தேதி செவ்வாய்கிழமை
இரவு 7.00 மணிமுதல் மறுநாள் புதன் கிழமை காலை 6.00 மணி வரை நடைபெறும்

சிவராத்திரி பூஜையில் ஐந்து சாம பூஜையும் இடையிடையே பக்தி இன்னிசை கச்சேரியும், மேலும் அதிருத்ரபாராயணம், ராமகாசி தீர்த்தத்தை இரைத்து அவரவர் கைகளால் அங்குள்ள* ராமலிங்க சாமிக்கு ருத்ர கோடீஸ்வர அபிஷேகம் செய்யலாம்.

சக நாமாவளி நான்கு வேதத்திற்கு பொருள், நான்கு தீட்சைக்கும் குருநாதர் பொருள் கூறுவார்.

1008 மூலிகை வேர்களால் தீர்த்த அபிஷேகம் நடைபெறும்.



குரு கடாட்ஷம் பரிபூரணம்.


10. தென்காசி கீழப்பாவூர் ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில் அழைப்பிதழ் 

மன்னர்கள் காலத்தில் க்ஷத்திரிய சிகாமணி நல்லூர் என்றழைக்கப்பட்ட கீழப்பாவூரில் ‌ வாலியால் பூஜை செய்யப்பட்ட திருவாலீஸ்வர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி திருநாள் ( 01 -03- 2022 ) பூஜைகள் நடைபெறவுள்ளது. பக்தர்கள் கலந்து கொண்டு சிவகாமி அம்பாள் ஸமேத திருவாலீஸ்வரரின் பேரருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டு கொள்கிறோம்.



11. பூந்தமல்லி கைலாசநாதர் ஆலய அழைப்பிதழ் 


12. விக்கிரமங்கலம் கோவில்பட்டியில் மதுரோதைய ஈஸ்வரமுடையார் ஆலய அழைப்பிதழ் 


13. பழைய தொண்டான் துளசி கிராமம் கிரி ஈஸ்வரர் ஆலய அழைப்பிதழ் 



14. திருஅண்ணாமலை பரிகார நந்தீஸ்வரர் மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ் 


15. ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நிகழ்த்தும் அழைப்பிதழ் 




16. திருஅண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ்ரமம் 

சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு 1/3/2022 மாலை 6 மணி முதல் 2/3/2022 அன்று காலை 6 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் ஆச்ரமத்தில் நடைபெறவுள்ளன. சிவராத்திரி பூஜைகள் முழுவதும் கண்டு பயன்பெற அன்பர்கள் அனுமதிக்கப்படுவர்.

In view of Maha sivaratri, Special abhishekams and pujas will be held at the Ashram from 6 pm on 1/3/2022 to 6 am on 2/3/2022.
Devotees will be allowed to take part in the pujas and receive the blessings throughout the Shivratri night.




17. தீர்த்தமலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் 

வருகிற 01-3-2022 அன்று நமது தீர்த்தமலை ஆஸ்ரமத்தில் மஹா சிவராத்திரி மஹோச்சவம்… நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடக்கவுள்ளன. அடியார்கள் , இந்த வைபவத்தில் கலந்து கொண்டு, ஶ்ரீ லோபாமுத்ரா சமேத ஶ்ரீ அகஸ்த்தியர் மற்றும் 18 சித்தர்களின் அருள்தனை பெற்றிட அன்போடழைக்கிறோம்… ஓம் ஶ்ரீ அகஸ்த்யாய நமோ நம:ஶ்ரீ


18. அருள்மிகு குலசேகர விநாயகர் அறநிலையம் அகஸ்தீஸ்வரம்



19. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் கோதை கிராமம் 






20. கணக்கம்பட்டி சிவராத்திரி வழிபாடு 





21. திருஆரூர் - மகா சிவராத்திரி விழா 



22. திருப்பத்தூர் மாவட்டம் கருமன் குட்டை கிராமம் மகா சிவராத்திரி அழைப்பிதழ் 

'

23.  அருள்மிகு திருநலமங்கை சமேத அருள்மிகு சொர்ணலிங்கேஸ்வரர் திருக்கோயில் அழைப்பிதழ் 




24.  கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து ஈஸ்வரர் ஆலய அழைப்பிதழ் 



இது தவிர கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலயம், நந்திவரம் நந்தீஸ்வரர் கோயில், ஆதனுர் ஸ்ரீ கைலாச நாதர் கோயில், ஊர்ப்பக்கம் ஊரணீஸ்வரர் கோயில் என உலகெங்கிலும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு நான்கு கால பூசைகள் நடைபெறும்.

குருவின் அருளாலே குருவின் தாள் வணங்கி,. இத்தனை அழைப்பிதழ்களையும் நமக்கு பகிர்ந்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனுர்! - 19 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2022/02/19.html

 ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலய 12 ஆம் ஆண்டு மஹா சிவராத்திரி அழைப்பிதழ் - 01.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/12-01032022.html

 ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலய 11ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி அழைப்பிதழ் - 11.03.2021 - https://tut-temples.blogspot.com/2021/03/11-11032021.html

 மகா சிவராத்திரியில் மகேசனை நினைப்போம் - 2020 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/2020.html

 சிவராத்திரி தரிசனம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_97.html

 TUT சிவராத்திரி தரிசனம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/02/tut_25.html

 உலக நன்மை வேண்டி மஹாவேள்வி - சிவராத்திரி சிறப்பு வழிபாட்டு அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2021/03/blog-post.html

சிவராத்திரி விரதம் - செய்ய வேண்டியது - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_82.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம் - மகா சிவராத்திரி 10 ஆம் ஆண்டு அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/10-21022020.html

TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/tut-19022020.html

ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_8.html

TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/tut-19022020.html

அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் - மகா சிவராத்திரி அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/21022020.html

Saturday, February 26, 2022

சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனுர்! - 19 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரும் சிவராத்திரி வழிபாட்டிற்கு தயாராகி வருவீர்கள் என்று நாம் விரும்புகின்றோம். ஒவ்வோராண்டும் சிவராத்திரி வழிபாடு குருவருளால் சிறப்பாக நம் தளம் சார்பில் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டும் சிவராத்திரி வழிபாட்டில் நம் தளத்தில் முதல் சேவையாக சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனுர் ஆலயத்திற்கு சிறு தொகை குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டோம். அடுத்து இறை மடம் அமைப்பின் மூலம் திருச்சி சுற்றியுள்ள ஆலயங்களுக்கு இலுப்பெண்ணை 2 டின் வாங்கி கொடுத்துள்ளோம். இப்படித் தான் ஒவ்வொரு வழிபாட்டிலும், சேவையிலும் குருவருள் கண்டு மெய் சிலிர்க்கின்றோம். இப்படி தான் செய்ய உள்ளோம் என்று எதனையும் நாம் யோசிப்பதில்லை. குருவருளால் இயல்பாக நம் சேவைகள் தொடர்ந்து வருகின்றது. இவை அனைத்தும் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி தான் என்று உணர்த்தப்பட்டு வருகின்றோம்.

இதன் பொருட்டு சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனுர்! - 19 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ் இங்கே பகிர உள்ளோம்.


ஒவ்வோராண்டும் சிவராத்திரி வழிபாட்டில் பல கோயில்கள் தரிசனம் செய்து வரும் பாக்கியத்தை சிவப் பரம்பொருள் வழங்கி வருகின்றது. அதே போல் தரிசனத்தில் நம் தளம் சார்பில் சிவபுராணம், ஆலய தீப எண்ணெய், சில கோயில்களில் அன்னசேவைக்கு காணிக்கை என தொடர்ந்து வருகின்றோம். இவற்றை விரைவில் தனிப்பதிவாக தர வேண்டி விண்ணப்பம் வைக்கின்றோம். அண்மையில் நம் குருநாதர் இந்த காவனுர் தலம் பற்றி கூறிய அருள் வாக்கை இங்கே தொடர உள்ளோம்.

6/02/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த ஆலய திருப்பணி குறித்து திருப்பணி குழுவினருக்கும் உலகத்திற்கும் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் ஓம் ஸ்ரீ சிவாகாமி தாயார் உடனுறை ஸ்ரீ சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனூர் கிராமம்.ஆற்காடு தாலுக்கா.இராணிப்பேட்டை மாவட்டம், காவனூர் அஞ்சல் 632507.

ஆதி சிவனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன்.

அப்பனே பின் நன்மைகள் உண்டாகும் என்பேன்.

அப்பனே யான் சொன்னேன் தைத்திங்களில் இங்கு வருவேன் என்று. ஆனாலும் தை பிறந்த உடனே அப்பனே யான் வந்துவிட்டேன் அப்பனே நல்விதமாக அப்பனே அனைத்தும் யார் யார் எதனை மூலம் உருவாக்க வேண்டுமோ அவையெல்லாம் யானே உருவாக்கி தருகின்றேன் அப்பனே. கவலைகள் இல்லை வந்துவிட்டேன் அப்பனே.

நல் விதமாக மாற்றங்கள் உண்டு என்பேன். ஆனாலும் அப்பனே ஈசன் கண்ணை எவ்வாறு?? மனிதனால் கட்ட முடியும் ??என்பேன் இவையெல்லாம் தவறு என்பேன். அப்பனே.(ஆலய திருப்பணி குழுவினர் பணிகளை மேற்கொள்ள ஈசனின்  லிங்கத்தை துணிகளால் கட்டி வைத்து மூடி விட்டு பணிகளை செய்து வந்துள்ளார்கள் அது குறித்து குருநாதர் இப்படியெல்லாம் யாரும் எந்த ஆலயத்திலும் செய்யகூடாது என்று உரைத்தார்) 

அப்பனே உங்கள் கண்களை கட்டினால் அப்பனே உங்களுக்கு கோபம் வருமா? வராதா? என்று கூட!! நீங்களே சிறிது சிந்தித்துக் கொள்ளுங்கள்!!! அப்பனே .

இவையெல்லாம் மனிதனின் பேச்சுக்கள் தரித்திர பேச்சுக்கள் என்பேன் அப்பனே .

அப்பனே இவைபோன்ற தவறுகள் வரும் நாட்களில்  யாரும் பின் செய்யக் கூடாது என்பேன் அப்பனே எவை என்று கூற.

ஆனாலும் சித்தர்களும் நல் விதமாகவே வந்து வந்து சென்றுள்ளார்கள் என்பேன் அப்பனே.

யானும் இங்கு தங்கி விட்டேன் அப்பனே.

இதன் நிச்சயமாக எவ்வாறு என்பதைக்கூட காலமும் வந்துவிட்டது என்பேன் இவையன்றி கூற போதாதற்கு பின் புசுண்டமுனியும் (காக புஜண்டர்) அருளும் பரிபூரணமாக இருக்க புசுண்ட முனியும் இங்கே தங்கி நல்விதமாகவே அனைத்தும் செய்விப்பான். செய்விப்பவனும் நல் விதமாகவே கந்தனும் நல் விதமாகவே இங்கே வந்து வணங்கிட்டு சென்றுள்ளான்.ஓர் முறை. இவையன்றி கூற ஆனாலும் இங்கே எதனை என்றும் அறியாமலும் கூட இன்னும் சில பின் இறைவனுடைய சிலைகள் எவை என்று கூற இங்கு புதைந்துள்ளது என்பேன்.

ஆனாலும் இதற்கும் காரணம் ஈசனே இவையன்றி கூற எதனையும் என்று கூற எப்பொழுது நிரூபிக்கும் எதனை என்ற அளவிற்கும் கூட முடியாத அளவிற்கு கூட இவந்தன் நிச்சயமாய் பின் நல் விதமாகவே தன்னை தான் உயர்த்திக் கொள்வான் என்பேன் அதனால் நீங்கள் கருவியாக செயல்படுங்கள் இதைத்தான் பல வாக்குகளிலும் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.

மனிதர்கள் நினைத்தால் ஈசனை நிச்சயமாய் எவ்வாறு என்பதையும் கூட அமைக்க முடியாது திருத்தலத்தை.

ஈசனே நினைக்க வேண்டும் என்பேன்.

அதனால்தான் யான் சொன்னேன் சிறிது காலம் பொறுத்திருக்க!! என்று. அதனால் ஈசன் எப்பொழுது நினைக்கின்றானோ அப்பொழுது தான் அமையும் என்பேன்.

ஆனாலும் சொல்லி விட்டேன் தைத்திங்களில் யான் வருகின்றேன் என்று கூட.

ஆனாலும் எவை என்று கூட பின் ஈசனவனும் நினைத்து விட்டான். எவை என்று கூற என்னையும் அழைத்து விட்டான் என்பேன். தைத்திங்களில் முதல் நாளிலே யான் வந்துவிட்டேன் இங்கு.

அப்பனே எவை என்று கூற சொல்லுகின்றேன் அப்பனே இவையன்றி கூற பின் எதனையும் என்று அறியாத அளவிற்கு கூட அனுதினமும் அப்பனே பூஜைகள் அப்பனே செய்து நல் விதமாக பின் எதனையும் என்றுகூட சில சில பிரசாதத்தையும் நல்விதமாக மனிதர்களுக்கு அப்பனே பின் உங்களால் முடிந்த அளவு கொடுக்க வேண்டும் என்பேன்.

இவ்வாறு அப்பனே கொடுத்துக் கொண்டே வந்தால் நல் ஆரோக்கியங்கள் எவை என்று கூறாத அளவிற்கும் கூட ஈசன் மகிழ்ந்து பின் அதி விரைவிலேயே ஏற்படுத்திக் கொள்வான் என்பது உண்மை.

அப்பனே இவையன்றி கூற இதனையும் என்று அறியாமல் வரும் சில நாட்களிலே புசுண்ட முனியும் வருவான் இங்கு.

எவை என்று கூற கொங்கணனும்(கொங்கணர்)வருவான். போகனும் (போகர்) வருவான். இவையன்றி கூற இன்னும் சில சித்தர்கள் ஞானியர்கள். வருவார்கள் அப்பனே. 

அப்பனே எவை என்று கூற ஈசனின் திருவிளையாடல்கள் எவ்வாறு என்பதையும் கூட எதனையும் என்று கூட நிரூபிக்கும் அளவிற்கும் கூட அன்று அன்று கூட இவையன்றி கூற இரவு நேரங்களில் அப்பனே மாசி மாதத்தில் வரும் இரவுதனில்(சிவராத்திரி) அப்பனே இவை என்று கூற புசுண்டமுனியும் இங்கு தங்கி வழிபட்டு சென்றுள்ளான் என்பேன் அப்பனே.

பின் இதனையும் என்று கூட பின் ஆனாலும் ஆலயம் சிறிது காலம் அழிந்துவிட்டது என்பேன் ஆனாலும் விடவில்லை இங்கு தங்கி விட்டு தான் சென்று இருக்கின்றான்.

ஆனாலும் இவையன்றி கூற கலியுகத்தில் பின் எதனையும் என்று கூட நிரூபிக்கும் அளவிற்கு கூட எழுந்து நிற்கின்றது அப்பனே ஈசனே எழுந்து நின்றான் என்பேன் .அதனால் மகிழ்ச்சி என்பேன் புசுண்ட முனிக்கும்.

திருப்பணி குழுவினர் கேள்வி

குருவே இந்த ஆலயம் யாரால் உருவாக்கப்பட்டது யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது?? 

அப்பனே இவை என்று கூற எதனையும் என்று கூற நினைப்பதற்கு அளவிற்கு கூட அப்பனே வருடங்கள் எதை என்று கூற அப்பனே இதனையும் என்று கூற பின் சோழர்கள் வந்தார்கள் அவற்றின் காலமே  என்பேன்.(சோழர்கள் கால கோயில்.) 

திருப்பணி குழுவினர் கேள்வி

குருவே இந்த ஆலயத்தின் இறைவன் திருநாமம் என்னவென்று கூறுங்கள்!!! 

அப்பனே இவையன்றி கூற இதனையும் என்று அறியாமல் அப்பனே சொல்கின்றேன் அப்பனே.

ஈசனின் பெயர்

இவையன்றி கூற இப்பொழுது எதை வைத்துள்ளீர்களா அப்பனே அதையே பின்பற்றி கொள்ளலாம் என்பேன். (சிவகாமேஸ்வரர் சிவகாமேஸ்வரி தாயார் ). 

அப்பனே எவை என்று கூற இறைவனுக்கு இட்ட பெயர் அப்பனே இவந்தனுக்கு அனைத்துப் பெயர்களும் உண்டு என்பேன் இவந்தனக்கு . அதனால் அப்பனே இப் பெயர் வைப்பதா?? அப் பெயர் வைப்பதா?? என்பதெல்லாம் மனிதனின் கணக்கு என்பேன் அப்பனே.

அப்பனே நலமாக நலமாக எவை என்று கூற பல பல வழிகளிலும் அப்பனே ஓர் எதை என்று கூற இத்தலத்திற்கு வருபவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் அகன்று கொண்டிருந்தது என்பேன் அப்பனே.

இவையன்றி கூற ஆனாலும் இங்கு வந்து வணங்கிச் செல்பவர்களுக்கு அப்பனே பல வெற்றிகளும் அப்பனே அளித்துள்ளான் ஈசன். 

அதனால் எவை என்று கூற இதை அறிந்த அப்பனே "ஆங்கிலேயன்"(பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரி) சொல்கின்றார்களே இப்பொழுதும் கூட அவந்தனை. இவையன்றி கூட இவந்தன் எதனை என்று கூட பின் இங்கே வழிபாட்டுமுறைகள் பின் சாதாரணமாக இல்லை அனைத்தும் வந்து கூடி பின் வழிபட்டு வழிபாடுகள் பலவிதங்களிலும் நடந்திருக்கின்றது.

இதனை எவ்வாறு அறிவது என்று கூட தெரியாமல் ஆனாலும் அவந்தன் தளபதியாக இருந்து கண்டுபிடித்து இதனை இதனை இங்கே சென்றால் தான் மக்கள் நன்மை பெறுகிறார்கள் என்று கூட அவந்தன் யூகித்து விட்டு பின் இவையன்றி கூற மக்களை அடித்துத் துரத்தினான். நெருங்காத முடியாத அளவிற்கு கூட இங்கு.

இவைதன் அறியாமல் இதனையுமென்று கூற ஆனாலும் பின் காவலாளிகள் யாரும் இங்கு வரக்கூடாது என்று கூட தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பல ஆண்டுகளாக இங்கே காவலாளிகள் தங்கி விட்டனர் .யாரும் வழிபட வில்லை என்பேன். 

ஆனாலும் இதை எதனை என்றும் கூற இதனையும் பின்பற்றும் அளவிற்கு கூட இதனை அறிந்து அறிந்து பின் ஈசனும் தன்னை மறைத்துக் கொண்டான். சில நாட்களில் .

ஆனாலும் இவையன்றி கூற ஆனாலும் நல் விதமாக ஈசன் மறக்கவில்லை அப்பனே.

இதையன்றி கூற ஆனாலும் மனிதர்களுக்கு செய்து கொண்டுதான் இருந்தான் என்பேன். காணக்கிடைக்காத அற்புதங்களை கூட.

ஆனாலும் இவையன்றி கூற சரி என்று கூற பின் ஈசனே மறந்துவிட்டான்.

ஆனாலும் புசுண்ட முனியும் மறக்கவில்லை. ஈசனிடத்தில் சென்று, ஈசா!! இவையெல்லாம் ஏன் இப்படி நடக்கின்றது??? உன்னுடையது எல்லாம் எதனையும் என்று கூற அனைத்தும் அறிந்தவன் நீயே!!! இவையெல்லாம் பின் மனிதனுக்கு சில எதனை என்றுகூட நிரூபிக்கும் அளவிற்கு கூட கஷ்டங்கள் என்றுகூட பல சிந்தனைகள் கூட புசுண்ட முனியின் பின் இவை என்று கூற பின் பார்வதி தேவியிடம் ஈசனிடத்திலும் உரையாடிக் கொண்டிருக்கையில் ஆனாலும் ,பொறுத்திரு 
புசுண்டனே!!! 

இவையன்றி கூற ஒரு காலம் வரும் அப்பொழுது யானே இதனை ஏற்படுத்திக் கொள்வேன் என்று கூட .

ஆனாலும் நன்று அதனையும் ஏற்படுத்திக் கொண்டான். இப்பொழுது மக்களை இனிமேலும் காப்பான் என்பேன்.

அதனால்தான் சொன்னேன் இவையெல்லாம் செய்யக் கூடாது என்பேன் மூடத்தனம் என்பேன். 

அப்பனே இவையன்றி கூற அதனால்தான் அப்பனே இன்னும் பல ஆலயங்களை இவ்வாறு தான் அழித்தார்கள் என்பேன் அப்பனே.

ஆனாலும் ,அவர்கள் ஓங்கி நின்றார்களா!!! என்ன??????

பேரும், புகழோடு நின்றார்களா!! என்ன ????

அழிந்தும் விட்டார்கள் அப்பனே.

ஆனாலும் கலியுகத்தில் இவைதன் நடைபெற்றிருக்கும் பொழுது சிறிது விட்டு விடுவான் ஈசன் என்பேன்.

ஆனால் நிச்சயம் அனைவரையும் அழித்து விடுவான் இருக்கும் இடம் தெரியாத வரை.

அப்பனே அவை அவை என்று கூற இதனையும் என்று கூற அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்.

அப்பனே அணையாத தீபத்தை இங்கு நிச்சயமாய் ஏற்றுதல் வேண்டும் அப்பனே. சில குறிப்பிட்ட தினங்களுக்கு.

அப்பனே இவையன்றி கூற? சர்ப்பங்களும் அப்பனே மிகுந்துள்ளது அடியில் கூட.

அப்பனே இவையன்றி கூற தேவ கன்னிகைகள் இவர்கள் தன் என்பேன். எதனையும் என்று கூற.

ஆனாலும் இதையன்றி கூற பல சிலைகளும் மறைத்து வைத்து அவர்கள்தன் பாதுகாப்பிலே இருக்கின்றது என்பேன். 

ஆலய திருப்பணி குழுவினர்

 கேள்வி 

குருவே!!  தற்சமயம் ஆலய திருப்பணி நடந்து கொண்டு இருக்கின்றது அந்த சிலைகள் கிடைக்குமா ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த பிரியப்படுகிறோம்!!! 

அப்பனே எவை என்று கூற ஆனாலும் சொல்லி விடுகின்றேன் எந்தனுக்கு தெரியும் என்பேன்.

ஆனால் ஈசனே இதற்கும் சாட்சி என்பேன்.

ஈசன் நினைத்தால் உடனே வர வைக்க முடியும் என்பேன். 

அப்பனே இவையன்றி கூற அப்பனே இவ்வாறெல்லாம் செய்தால் எப்படி ஈசன் சந்தோஷப்படுவான் ??என்பேன். 

முதலில் இதை அகற்றி விடுங்கள் என்பேன்.

அப்பனே இவையன்றி கூற ஆனாலும் யான் சொல்லிவிட்டேன் அப்பனே ஆனாலும் இங்கு அமர்ந்திருக்கும் அப்பனே அனைவருக்கும் ஒன்றை சொல்கின்றேன்.

அப்பனே யானும் இதை எவ்வாறு என்பதையும் கூட ஆகிப்போனது கூறவில்லை.

ஈசன் கனவிலே வந்து செப்புவான் என்பேன் அப்பனே உங்களுக்கே தெரிந்துவிடும் என்பேன்.

அப்பொழுது நீங்களே செய்து கொள்ளுங்கள் என்பேன்.

அப்பனே நலமாக நலமாக உண்டு. இதனையும் அறிந்து கூட சொல்லிவிட்டேன் வெற்றிகள் பல உண்டு என்பேன். இங்கு தரிசனம் செய்பவர்களுக்கும் வருங்காலத்தில் அப்பனே வெற்றிகளை சூடி பல துன்ப நிலைகளிலிருந்தும் அப்பனே அகற்றி நல்வழிப்படுத்துவான் ஈசன் என்பேன்.

அப்பனே இவ்வுலகத்திற்கு படியளந்தவன் ஈசன் என்பேன்.

இவையன்றி கூற இன்னும் பல திருத்தலங்கள் அழிந்து கொண்டே இருக்கின்றது என்பேன். பலப்பல யுகங்களிலும் ஆனாலும் அவ் நல் ஈசனே எவ்வாறு என்பதையும் கூட எழுந்து நிற்பான் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே நல்விதமாக அப்பனே இக்கலியுகத்திலும் மக்களை ஈசனே காப்பான் என்பேன்.

எங்கள் போன்ற நல் விதமாக சித்தர்களும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள் அப்பனே.

இவையன்றி கூற மக்களை எவ்வாறு காப்பது எவ்வாறு பேணி காப்பது என்பதை கூட .

ஆனாலும் அப்பனே பல திருத்தலங்களை அப்பனே அடியோடு அழித்து விட்டார்கள் என்பேன் அப்பனே. 

அவையெல்லாம் யாங்கள் மேலே பின் நல்விதமாக எழுப்பச் செய்வோம் அப்பனே.

புது புது விதமான திருத்தலங்களும் அப்பனே உருவாக்குகிறார்கள்!!! என்ன லாபம்??? அப்பனே!

அவற்றால் ஆனால் மனிதனுக்கு சம்பாதிப்பதற்கே உருவாக்குகிறார்கள் என்பது கூட யான் அறிந்து கொண்டேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே இவையன்றி கூற அப்பனே ஆனாலும் போராட்டங்கள் மிகுந்து மிகுந்து அடியில் பலகோடி திருத்தலங்கள் ஒளிந்து நிற்கின்றது. அவை எழுப்பினால் தான் அப்பனே பழைய நிலைக்கு வரும் என்பேன் அப்பனே.

இவற்றைத்தான்,  யாங்கள் சித்தர்கள் செய்யப் போகின்றோம். இனிமேலும் கூட.

அப்பனே இவையன்றி கூற முருகன் கூட அப்பனே இதனை என்று கூற அவன் தகப்பன் ஈசன் பாசத்தால் இங்கு வந்து கொண்டுதான் சென்று கொண்டிருக்கின்றான் என்பேன். திருத்தணிகை மலையில் இருந்து கூட.

திருபணிக்குழுவினர் கேள்வி

குருவே திருத்தணி முருகனுக்கு சொந்தமான இடமும் இங்கே  கோயில் நிலங்கள் இங்கே உள்ளது என்று என்று கேள்வி பட்டிருக்கின்றோம். அது உண்மையா?? 

அப்பனே இவையன்றி கூற அப்பனே உண்டு உண்டு என்பேன். அதனால் அப்பனே முருகனும் நல் ஆசிகளுடன் அதி விரைவிலே ஏற்படுத்துவான் என்பேன் அப்பனே.

இங்கு நல் விதமாக அப்பனே நீரோட்டமும் நல்விதமாகவே அமையும் என்பேன் .குளத்தையும் கூட அமைக்க வேண்டும் என்பேன்.

குருவே!! திருப்பணிகுழுவில் இடம் பெற்றிருக்கும் அடியவர்களுக்கும் இவ்வாலயத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா??? 

அப்பனே இவையன்றி கூற அப்பனே நீங்கள் கேட்காவிடிலும் யான் நிச்சயமாய் சொல்லியிருப்பேன் அப்பனே.

இவையன்றி கூற அப்பனே நீங்கள் எவ்வகையாக வந்தவர்கள் என்று கூட அப்பனே உங்களுக்குப் பின் எவை என்று ஒரு காலத்தில் பல கஷ்டங்கள் அப்பனே. வாழ்க்கையிலும் சரி அப்பனே பல பிரச்சனைகள் இருந்து விட்டது. ஆனாலும் சொல்லிவிட்டேன் அப்பனே அப்பொழுதே. நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பேன் அப்பனே ஆனாலும் அப்பனே எவை என்று கூற இங்கு வந்து வந்து அனைத்தும் பெற்றுள்ளீர்கள் நீங்கள் என்பேன்.

அதனால் என்று கூற பல வெற்றிகளையும் அப்பனே  ஆளும் ஆளும் எவை என்று கூற பின் நல் விதமாக கிராமிய தலைவராகவும் இருந்துள்ளீர்கள் என்பேன்.

இதனால் பின் இதை இங்கு காவலர்கள் எவை என்று கூற அனைவரையும் துரத்திவிட்டனர் அதில் நீங்களும் அப்பனே.

இவையன்றி கூற நீங்களும் ஈசனே!!! ஈசனே!! என்று கூட அழுது சென்று உள்ளீர்கள் என்பேன்.

ஆனாலும் இவையன்றி கூற  அப்பொழுதுகூட எவையென்று கூற அண்ணாமலைக்கு சென்று நீங்கள் அனைவரும் முறையிட்டுள்ளீர்கள் என்பேன். எதனையுமென்று கூற. 

அப்பனே இவையெல்லாம் இப்பொழுது எதை என்று கூட நிரூபிக்கும் அளவிற்கு கூட அழித்து விட்டார்களே எதனை? எங்கு செல்வது?? நாங்களெல்லாம்??

வெற்றிகளை நீதான் எங்களுக்கு பல பல வழிகளிலும் தந்தாய்.

ஆனாலும் இப்பொழுது எங்களால் உன்னையும் எங்களால் மறக்க முடியவில்லை எதை என்று கூற... அதனால் உன்னிடத்திலேயே நாங்கள் அனைவரும் சேர்ந்து பின் இதனையும் என்று அறியாமல் இங்கேயே இறந்து விடுகின்றோம் என்று கூட ... சிம்ம தீர்த்தத்தில் கூட பின் குதித்துள்ளீர்கள் நீங்கள் எதுவும் தேவையில்லை ஈசா ஈசா என்றுகூட..


அப்பனே அத் தீர்த்தத்தில் ஈசன் நல்விதமாக எழுந்து மகன்களே!!! உங்களுக்கும் கூட என்னுடைய ஆசிகள் பல சித்தர்களுடைய ஆசிகளோடு மீண்டும் கலியுகத்தில் பிறப்பெடுத்து எந்தனுக்கே சேவை செய்வீர்கள் என்று கூட உத்தரவிட்டு விட்டான். 

இதனால் அப்பனே புரிகிறதா இப்பொழுது கூட.

அப்பனே இன்றளவும் கூட நல் விதமாக இதைச் செய்திட்டு பின் கடை நாளில் ஈசன் தரிசனத்தையும் அண்ணா மலையிலேயே காணலாம் சிம்ம தீர்த்தத்திலே இப்பொழுது கூட.

அப்பனே இவையன்றி கூற ஆனால் அப்பனே ஒருமுறை நீங்கள் அண்ணாமலை சென்று அப்பனே நல் விதமாக அப்பனே தர்மத்தை ஏந்த வேண்டும் என்பேன்.

ஈசனே அப்பனே மனித ரூபத்தில் வந்து தானம் இடுவான் என்பேன் அப்பனே.

அப்பனே இதனால் அப்பனே மேலோங்கும் என்பேன். அப்பனே குறைகள் இல்லை அப்பனே. உங்கள் அனைவருக்கும் மோட்ச பிறவி என்பேன் அப்பனே ஈசனே கொடுத்துவிடுவான் அப்பனே.

அப்பனே கவலைகள் இல்லை அப்பனே எவை என்று கூற இனிமேலும் இத்தலம் நல் விதமாகவே அமையும் என்பேன் அப்பனே.

யானும் இங்கே தான் இருக்கின்றேன் கவலையை விடுங்கள்.

அப்பனே இவை எதனையுமென்றும் அப்பனே பல வழிகளிலும் பலப்பல பலப்பல திருத்தலங்கள் யான் தான் எழுப்ப வேண்டும் என்பது கூட மனிதனின் செயல்கள் ஆனால் மனிதனால் ஒன்றும் முடியாது அப்பனே.

ஈசனால் மட்டுமே முடியும் ஈசன் நினைத்தால்தான் உண்டு என்பேன்.

அதனால்தான் அப்பனே இவனருளாலே எதனையும் என்று கூற அனைத்தும் நடக்கும் என்பது விதியப்பா.

ஆனாலும் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான் அப்பனே ஆனாலும் அதை உருவாக்குவோம் இதை உருவாக்குவோம் என்று கூட.

ஆனாலும் ஈசன் அருள் இல்லாமல் எதனையும் உருவாக்க முடியாது என்பதுதான் திண்ணம் அப்பனே. அதற்கும் காலங்கள் வந்தால்தான் உண்டு என்பேன் அப்பனே.

காலம் வந்துவிட்டது அப்பனே அனைத்தும் போகப் போக முடியும் என்பேன்.

திருப்பணிக் குழுவினரின் கேள்வி

குருவே இவ்வாலயத்திற்கு அம்மன் சன்னதி இல்லாமல் இருக்கின்றது நாங்கள் என்ன செய்வது??

அப்பனே இவையன்றி கூற அப்பனே நல் விதமாக யான் சொல்லிவிட்டு சென்றாலும் அப்பனே எவை என்று கூற அதனால் யான் இங்கே தான் இருக்கின்றேன் அப்பனே அதனால் ஞானியவர்கள் அப்பனே ஏதாவது ஒரு ரூபத்தில் நிச்சயம் வந்து பின் காப்பார்கள் என்பேன் அதைப்பற்றி கவலையை விடுங்கள் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஈசனே அப்பனே அடிக்கடி தன் சொப்பனத்தில் காட்டுவான் என்பேன் சில வித்தைகளை கூட அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.

அப்பனே நலமாக நலமாக எவை என்று கூற அப்பனே கந்தனும் எவை என்று கூற இதனையும் என்று அறியாமல் நிச்சயமாய் அப்பனே பின் மாசி மாதத்தில் வரும் அப்பனே பின் எவை என்று கூற அன்று பின் தினத்தில் அப்பனே நீங்கள் கூட பல விசேஷங்களை செய்வீர்கள் இங்கே அன்றைய தினத்தில்(சிவராத்திரி) நிச்சயம் முருகன் இங்கு வருவான் என்பேன் அப்பனே.

அப்பனே நல் முறையாக நல் முறையாக கவலைகள் இல்லை அப்பனே நல் முறையாகவே சித்தர்களின் ஆசிகளும் பரிபூரணம் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.

இவற்றிலிருந்து நிச்சயமாய் மேலோங்கும் என்பேன் அப்பனே கவலைகள் இல்லை அப்பனே அது விரைவிலே யாங்கள் சித்தர்கள் சேர்ந்து இதை நிச்சயமாய் அப்பனே அமைத்து விடுவோம் அதனால் நீங்கள் வெறும் கருவி யாக இருங்கள் என்று யான் சொல்லி விட்டேன் அப்பனே.

அப்பனே!! இறைவனே !!யார் ?யாரை? எப்பொழுது? தேர்ந்தெடுக்க வேண்டும்?? என்பதைக் கூட தெரிந்ததே என்பேன்.

ஆனாலும் அப்பனே சில மனிதர்கள் அப்பனே எவை என்று கூற பல திருத்தலங்களிலும் அப்பனே ஒற்றுமையாக செயல்படுவது இல்லை அதனால்தான் அப்பன் ஈசன் கோபித்துக்கொண்டு எவை என்று கூற அவர்களுக்கு தண்டனையும் பல திருத்தலங்களை உருவாக்குபவர்களையும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றான் அதனால் அப்பனே  எவ்வித சுயநலமின்றி அப்பனே ஈசா நீயே என்று நீயே கதி என்று அனைத்தும் ஒன்றிணைந்தால் ஈசன் அனைத்தும் நல்குவான் என்பேன்.

அவரவர் இல்லத்திலும் சுப நிகழ்ச்சிகள் நல் விதமாக நடந்தேறும் என்பேன். கஷ்டங்கள் நீங்கும் என்பேன். பணி இல்லாதவர்களுக்கு பணியும் கிடைக்கும் என்பேன்.

அப்பனே நலமாக நலமாக உண்டு உண்டு என்பேன் அப்பனே.

அப்பனே கவலைகள் இல்லை திறமைப்பட அப்பனே நல்விதமாக உண்ணாமுலை இதில் பின் உண்ணாமுலை தேவியும் அப்பனே நிச்சயமாய் பின் பங்குனி உத்திரத்தில் இங்கு நிச்சயமாய் வருவாள் என்பேன்.

அதனால்தான் பெரியோர்கள் சொல்லியிருக்கின்றார்கள் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?? என்று கூட ..

அது அனைவரும் உணர்ந்ததே என்பேன்.

அப்பனே இவையன்றி கூற அதனால்தான் அப்பனே மேன்மைகள் உண்டு என்பேன்.

இத்தலம் அப்பனே இன்னும் மேன்மை பெறும் என்பேன் அப்பனே.

அப்பனே கவலைகள் இல்லை எவை எவை என்று கூறிவிட்டேன் .அப்பனே இன்னும் பலபல ரூபத்திலும் அப்பனே நிச்சயமாய் அப்பனே இவையன்றி கூற பின் ஈசனே வந்து வந்து அப்பனே சென்று விடுவான் அப்பனே.

குறைகள் இல்லை மென்மேலும் உயர்வுகள் உண்டு அப்பனே கவலைகள் இல்லை அப்பனே நல் முறையாக யாங்களே உருவாக்குவோம் என்போம். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்பேன்.

அப்பனே, நல்விதமாக இதை உருவாக்கி மீண்டும் இங்கு வந்து வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே அதி விரைவிலே.

திருப்பணி குழுவினரின் கேள்வி.

குருவே பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீ உண்ணாமுலை தேவி இங்கு வருவார் என்று கூறினீர்கள் அன்றைய தினத்தில் ஆலயத்தில் தேவிக்கு பூச்சொரிதல் விழா நடத்தலாமா???

அப்பனே இவையன்றி கூற தாராளமாகச் செய்யலாம் அப்பனே.

குருவே !!அம்மாள் சன்னதிக்காக பூமி பூஜை செய்வதற்காக காத்திருக்கிறோம் !!உத்தரவு கிடைக்குமா??

அப்பனே இதனையும் என்று அறியாமல் அப்பனே அதனால்தான் முதலிலேயே யான் சொல்லிவிட்டேன். யான் இருக்கும் பொழுது உங்கள் மனதிலே நுழைந்து சொல்லிவிடுவேன் அப்பனே.

குருவே இந்த ஆலயத்திற்கு சொந்தமான நிலபுலன்கள் சிறிதளவே இருக்கின்றது இவ்வளவுதான் இருக்கின்றதா?? அல்லது அதிகமாக இருக்கின்றதா?? ஏனென்றால் கோயிலை விரிவுபடுத்த நாங்கள் எண்ணி இருக்கின்றோம்.

அப்பனே எவை என்று கூற அப்பனே ஈசன் இடமே இவையெல்லாம். அப்பனே ஆனாலும் மனிதன் வரவர ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே.

ஆனாலும் அதை யாங்களே நிச்சயமாய் சரி செய்வோம் என்பேன் அப்பனே.

குருவே இந்த ஆலயத்தை மிகப்பெரிதாக ராஜகோபுரம் பிரகாரங்கள் தனித்தனி சன்னதிகள் என்று அமைக்க நாங்கள் விருப்பப் படுகின்றோம் ஒவ்வொன்றாக விதமாக நடைபெற வேண்டும்.

அப்பனே எவை என்று கூற அப்பனே ஒவ்வொன்றாக யான் சொல்லிக்கொண்டே வருவேன் அப்பனே இதனால்தான் இதனையும் சொல்லிவிட்டேன் அப்பனே அப்பனே அனைத்தும் ஈடேறும் என்பேன்.

யான் இங்கேயே இருக்கின்றேன் அப்பனே கவலையை விடுங்கள்.

குருவே தங்களுக்கும் இந்த ஆலயத்தில் தனி சன்னதி அமைத்து பூஜிக்க விரும்புகின்றோம்

அப்பனே எவை என்று கூற யான் எப்பொழுதும் கேட்டதில்லை அப்பனே எந்தனுக்கு பூஜைகள் செய் என்று கூட.

ஆனாலும் அன்பு செலுத்தினாலே போதுமானது அப்பனே.

எதற்காக யான் இப்புவியுலகிலத்தில் அப்பனே வந்தேனப்பா... மனிதர்களுக்கு புத்தி இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டு இருக்கின்றார்களே அவர்களை நல்வழிப் படுத்தவே நாங்கள் வந்துவிட்டோம்.

அதனால் அப்பனே நீங்கள் நன்றாக செல்லுங்கள் அப்பனே அன்பை செலுத்தினால் போதுமானது அப்பனே மற்றவைகள் எல்லாம் யாங்கள் விரும்புவதே இல்லை அப்பனே.

குருவே காகபுஜண்டர் முனி இங்கு இருக்கின்றார் என்று கூறியிருந்தீர்கள் அவரை நாங்கள் எவ்விதம் வணங்குவது??

அப்பனே இவையன்றி கூற இவைதன் கேள்விகள் எவ்வாறு இருப்பதென்றால் அப்பனே எதை என்று கூற இதனையும் இப்பொழுது யான் உரைத்து விடுகின்றேனா என்பதற்கிணங்க இதற்கு பின் மாறுபாடாக புசுண்ட முனியே  நல் விதமாக அமைத்துக் கொள்வான் என்பேன் வரும் வரும் காலங்களில் அப்பனே அவனே மனதில் நுழைந்து இங்கு அமைத்து விடலாம் என்று கூட அப்பனே உங்களுக்கே தெரியும் என்பேன்.

மீண்டும் இங்கு வந்து பலமாக வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே.

ஆலயதிருப்பணிகள் சேவைகள் குறித்த விபரங்கள் 

DHAKSHINAMURTHY K R
ACCOUNT NO:3011083927
MICR CODE:600016003
IFSC CODE: CBIN0280878
PHONE NUMBER:9042305799

ஓம் ஸ்ரீ சிவாகாமி தாயார் உடனுறை ஸ்ரீ சிவகாமேஸ்வரர் ஆலயம். காவனூர் கிராமம்.ஆற்காடு தாலுக்கா. இராணிப்பேட்டை மாவட்டம். காவனூர் அஞ்சல் 632507.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

 ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலய 12 ஆம் ஆண்டு மஹா சிவராத்திரி அழைப்பிதழ் - 01.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/12-01032022.html

 ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலய 11ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி அழைப்பிதழ் - 11.03.2021 - https://tut-temples.blogspot.com/2021/03/11-11032021.html

 மகா சிவராத்திரியில் மகேசனை நினைப்போம் - 2020 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/2020.html

 சிவராத்திரி தரிசனம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_97.html

 TUT சிவராத்திரி தரிசனம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/02/tut_25.html

 உலக நன்மை வேண்டி மஹாவேள்வி - சிவராத்திரி சிறப்பு வழிபாட்டு அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2021/03/blog-post.html

சிவராத்திரி விரதம் - செய்ய வேண்டியது - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_82.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம் - மகா சிவராத்திரி 10 ஆம் ஆண்டு அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/10-21022020.html

TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/tut-19022020.html

ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_8.html

TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/tut-19022020.html

அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் - மகா சிவராத்திரி அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/21022020.html

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை - 27.02.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சித்தர்கள் அறிவோம் என்ற தொடர் பதிவில் கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் பற்றி சில தொகுப்புகளுக்கு முன்னர் கண்டோம். இன்று மீண்டும் ஒரு மகான் பற்றி  தொடர விரும்புகின்றோம். ஆம். ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் 188 ஆம் ஆண்டு குரு பூசை 27.02.2022 அன்று கொண்டாடப் பட உள்ளது. ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் சுவாமிகள் பற்றி சிறிது உணர்வோம். நாம்  சென்ற ஆண்டு சிவராத்திரி தரிசனத்தில் சுவாமிகள் தரிசனம் பெற்றோம். ஓராண்டுக்கு பின்னர் இன்று நம் தலத்தில் சுவாமிகள் பற்றி பேசுகின்றோம் என்றால் காரணமின்றி காரியமில்லை தானே! குருவருள் முன்னின்று நடத்திட, ஜனவரி 1 ஆம் தேதி நமக்கு நம் தளம் சார்பில் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் வழிபாடு செய்தோம். பதிவின் இறுதியில் தரிசனம் காண உள்ளோம்.

முதலில் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை அழைப்பிதழ் பகிர்கின்றோம்.





“உற்றார் எனக்கில்லை உன்பதமே - மேவுகின்றேன் நற்றணையாம் - பொன்னம்பல நாத - சற்குருவே நின்னடியை நாடுகின்ற நாயேனை காத்தருள்வாய் துன்னுகின்ற துன்பத்தை தேய்த்து”




ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் திருஅவதாரம்:

காஞ்சிபுரம் மாவட்டம், தற்போதைய திருப்போரூர் வட்டம், செம்பாக்கம் எனும் கிராமத்தில் திருச்சீற்றம்பல முதலியார் - சொக்கம்மாள் ஆகிய இருவரும் இல்லறத்தில் நல்லறம் புரிந்து வாழ்ந்து வந்தனர். திருச்சிற்றம்பல முதலியார் வேளாண்மையோடு நெசவுத் தொழில் மேற்கொண்டு நித்யதவ ஒழுக்கத்தோடு சிவசிந்தனையுடன் வாழ்க்கை நடத்திவரும் காலத்தில் திருமணமாகி பல வருடங்கள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவருத்தத்துடன் இருந்தனர். தம்பதிகள் இருவரும் எல்லாம் வல்ல அழகாம்பிகை உடனமர் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலை வலம் வந்து ப்ரார்த்தனை செய்து வணங்கி வரும் காலத்தில், திருப்போரூர் திருகிருத்திகை தினத்தையட்டி பல்வேறு பகுதியில் இருந்து சந்நியாசிகளும், சித்தர்களும் பாதயாத்திரையாக நடந்து வந்து செம்பாக்கத்தில் வீடுதோறும் 'பவதி பிச்சாந்தேகி' என்று பிச்சை எடுத்து உண்டு திண்ணையில் படுத்துறங்கி செல்வது வழக்கம்.

அதுபோல ஒரு மாத கிருத்திகை தினத்தன்று ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் வலம் வந்து வணங்கிவரும்போது ஒரு அதி தீவிர சிவசந்தியாசி ஒருவர் கோயிலில் அமர்ந்து தியானத்தில் இருந்தார். அவரைப் பார்த்த சிற்றம்பல முதலியாருக்கு மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உண்டானது. அவர் தியானத்தில் இருந்து விழித்ததும் அவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு படைத்து அருள்பெற வேண்டும் என நினைத்து காத்திருந்தார். தியானத்தில் இருந்து விழித்த சந்நியாசியிடம் சாஷ்டாங்காக நமஸ்கரித்து தாங்கள் உணவு உண்ணவில்லை என நினைக்கிறேன். தாங்கள் என் வீட்டிற்கு எழுந்தருளினால் உணவு படைத்து தங்களின் பசியாற்றிய பெரும் சிவபுண்ணியம் செய்த பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் என வேண்டினார். அதற்கு அந்த சன்னியாசி அப்பா நான் தினம் உணவு அருந்தும் பழக்கம் அற்றவன். வாரத்தில் ஒருநாள் ஒருவேளை உணவு மட்டுமே அருந்துவேன். அதுவும் மற்றவர்கள் சமைத்து கொடுத்த உணவை உண்பது வழக்கமல்ல.

நானே சமைத்து உண்பதுதான் என் வழக்கம். ஆகையால் உனக்கு சிவ புண்ணிய பலனை அளிப்பது என்னால் முடியாது என்று கூறி எழுந்து புறப்பட, சிற்றம்பல முதலியார் காந்தத்திடடிம் ஈர்த்த ஈரும்பை போல மனம் அவரின் பின் தொடர்ந்தது. மறுமுறையும் அவரிடம் சென்று வணங்கி "சுவாமிகள்" தாங்களே சமைத்து சாப்பிடுங்கள், உங்களுக்கு வேண்டிய அரிசியை நானே தருகிறேன். இங்கேயே சமைத்து உண்ணுங்கள் என்று கெஞ்சினார். இதைக் கண்ட சிவ சந்நியாசி மனம் இறங்கி சரி என ஒப்புக் கொண்டு, தாங்கள் சிவாலயத்திலேயே இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு வீட்டிற்கு விரைந்தார். தன் மனைவி சொக்கம்மாளிடம் நடந்தவற்றை சொல்லி மகிழ்ந்து தன் வீட்டில் இருக்கும் அரிசியை தன் துண்டில் முடிந்து கொண்டு, தன் வீட்டில் இருந்த சிறிய மண்பானை ஒன்றையும் எடுத்துக் கொண்டு, ஒரு மணிநேரம் கழித்து கோவிலுக்கு வரும்படி கூறி கோயிலுக்கு விரைந்தார்.

சொக்கத்தங்கம்! உனக்கு "பொன்னம்பலம்" தருகிறேன்

கோவிலில் அமர்ந்திருந்த சிவசந்நியாசியிடம் அரிசியும் மண்பானையையும் கொடுத்து உணவு சமைத்து உண்ணும்படி கேட்டுக் கொள்ள, அகழி குளத்தில் பானையில் நீர் முகர்ந்து அரிசியை களைந்து கழுவி உலைநீர் விட்டு கல்லை அடுப்பாக்கி காய்ந்த சருகு கிளைகளை ஒடித்து சமையலுக்கு சிற்றம்பலம் முதலியார் உதவி செய்ய சிவசந்தியாசி சாதம் சமைத்து உப்பில்லாமல் சாப்பிடும் நேரத்தில் சொக்கம்மாள் அங்கு வர இருவரும் வணங்கி நிற்க, சிவசன்னியாசி மகிழ்ந்து உண்ணும் சாதத்தில் ஒரு பிடியை கொடுத்து "இதை சாப்பிடம்மா" என்று கூறி கிருத்திகைக்க நெல்குத்தி அரியாக்கி வைத்துள்ளதை தனக்கு என்று சிறிதும் எடுக்காமல் கணவன் கேட்டதும் எடுத்துக் கொடுத்த சொக்கத்தங்கம்! உனக்கு "பொன்னம்பலம்" தருகிறேன் பெற்றுக் கொள் என்று கூறி தர, அதை வாங்கிய சொக்கம்மாள் சிவபிரசாதமாக உண்டு மகிழ்ந்தாள். சிற்றம்பல முதலியாரின் ஆத்மபக்குவம் கருதி சிவசந்தியாசி சிவ தீட்சை செய்வித்து உயிர் உடலை விடும் மட்டும் சிவநாம ஜெபம் செய்து சிவபதம் அடைவாய் என்று அனுக்கிரஹம் செய்து பிரியாவிடைபெற்று திருப்போரூர் விரைந்தார் சிவசந்தியாசி. இந்நிகழ்ச்சி நடந்த சில மாதத்திலேயே சொக்கம்மாள் மணிவயிறு வாய்த்து 10வது மாதம் ஒரு நன்னாளில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிவசந்நியாசி குறிப்பிட்டதுபோல குழந்தைக்கு "பொன்னம்பலம்" என்று பெயர்சூட்டி அழைத்து மகிழ்ந்தனர்.

தீராத நோய்களையும், விபூதியால் தீர்த்த ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் :

இறக்கக் கிடந்தானை எழுப்பியதை அறிந்த ஊனமனம் கொண்ட ஈனர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பொன்னம்பல சுவாமிகளின் அருள் அனுபவத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாது, அவரின் மீது ஏதேனும் களங்கம் சுமத்த வேண்டி தன்னில் ஒருவனை இறந்தவனைப்போல மூச்சை அடக்க நடிக்க வைத்து, அவனை வேறொருவன் தோள் மீது சுமந்து வந்து பொன்னம்பல சுவாமிகளின் வீட்டில் கிடத்தி காப்பாற்றும்படி கதறி அழுது பாசாங்கு செய்தனர். அவர்கள் மீது மனமிறங்கி ஆறுதல் சொல்வதைப்போல் சுவாமிகள் திருநீற்றை அள்ளி எடுத்து இறந்தவனைப்போல் பாசாங்கு செய்யும் தீயவன் மீது தூவி இவனுக்கு இனி வரும்காலம் இறந்தகாலம், இவன் இனி பிரயோசனம் அற்றவன் இறந்துவிட்டான் என்று கூறினார்.

தீடீரென்று அழுவதுபோல பாசாங்கு செய்தவர்கள் ஆணவம் தலைக்கேறி சிரித்துக் கொண்டே அவனை எழுப்ப முயற்சி செய்தனர். அவன் கண்விழித்த பாடில்லை; அதில் ஒருவன் நாடி பிடித்துப் பார்த்தான்; வேறொருவன் இதயத்தின் மீது தன் காதை வைத்து இதயத்துடிப்பை அறிய முற்பட்டான். இதனால் கலக்கம் அடைந்த ஈனர்கள் சுவாமிகளின் காலில் விழுந்து கதறி அழுது, அறியாமையால் உங்கள் மீது பொறாமை கொண்டு இவ்வாறு செய்து விட்டோம் என மன்னிப்பு கேட்க, பொன்னம்பல சுவாமிகள் திருநீற்றை அள்ளித் தூவி "பிழைத்து போ" எனக்கூற இறந்தவன் அலறி எழுந்தான். இவர்கள் பின் நாளில் சுவாமிகளை தூஷித்த பாவத்தினால் தீரா வியாதியால் துன்பமுற்று அழிந்ததாக இப்போதும் அவ்வூரில் சொல்லப்படுகிறது.

சகல ஜீவராசிகளையும் விபூதியால் தீராத நோய் தீர்த்த சித்தபுருஷர் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் வைத்தியத்தால் தீராத நானாவித வியாதிகளுக்கு ஒரே மருந்தாக ஊரில் உள்ள அனைவருக்கும் விபூதியைக் கொடுத்து நோய்வாய்ப்பட்டவர்களின் உடலில் பூசியும் உள்ளுக்கு சாப்பிட சில நாட்களில் நோய் நீங்கி நலம் அடைந்தனர். கால்நடைகளும் பால் சுரந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சுற்றுவட்டார மக்கள் சுவாமிகளின் அருள்ஆற்றலை ஏற்று நன்றி தெரிவித்தனர்.

குறிப்பு : மெய்கண்ட சந்தான மரபு திருவண்ணாமலை துறையூர் திருமுதுகுன்றத்து வீர சைவ ஆதீனம் 24 ஆம் பட்டத்து சீர்வளர்சீர் இரத்தினவேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெறும்.



சென்ற ஆண்டு சிவராத்திரி நிகழ்வில் நாம் கண்ட அருள்நிலைகளை தந்துள்ளோம்.




ஜனவரி 1 ஆம் தேதி நமக்கு கிடைத்த அருள்நிலைகளை இங்கே பகிர உள்ளோம்.





அமைவிடம் : சென்னையிலிருந்து செம்பாக்கம் 55 கி.மீ. தூரத்திலும் மாமல்லபுரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் பொன்னம்பல சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது.

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html