"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, February 25, 2022

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் - 26.02.2022

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

இன்று மாசி மாத பூராடம்  நட்சத்திரம். இன்று காலை  9:30  மணி முதல் நாளை காலை   6 மணி வரை  மாசி மாத பூராடம்   நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் காரி நாயனார் குருபூஜை வருகின்றது. இதற்கு முந்தைய  அறுபத்து மூவர் குரு பூஜை பதிவுகளில் சாக்கிய நாயனார். வாயிலார் நாயனார், கண்ணப்ப நாயனார் , அரிவாட்டாய நாயனார், சண்டேஸ்வர நாயனார், திருநீலகண்ட நாயனார், அப்பூதியடிகள், கலிக்கம்ப நாயனார், எறிபத்த நாயனார் பற்றி அறிந்து கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று பெரிய புராணம் வழியில் அறிகின்றோம். 

இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார்.  மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார் நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர், இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து தம் கழுத்தை அறுக்க முற்பட்டு முக்தி அடைந்தவர் அரிவாட்டாய நாயனார், சிவபூஜைக்கு இடையூறு செய்த தம் தந்தையில் கால்களை மழுவால் அரிந்து , சிவ பூஜை செய்து சண்டேஸ்வரர் பதவி பெற்று சிவனோடு கலந்தவர் சண்டேஸ்வர நாயனார், இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்த திருநீலகண்ட நாயனார்,   திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்து ,தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்து பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்று, சிவானந்த அனுபவத்தில் முக்தி பெற்றவர் அப்பூதியடிகள். அதுபோல்  இன்று நாம் காரி  நாயனார் பற்றி அறிய உள்ளோம்.


காரி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.

மறையார் வாழும் திருக்கடவூரில் தோன்றியவர் காரி நாயனார்

திருக்கடவூர் என்னும் மறையோர்கள் வாழ்கின்ற வளமிகுந்த இப்பகுதியிலே காரி நாயனார் என்னும் செந்நாப்புலவர் அவதரித்தார்.புலமைமிக்க இச்சிவனடியார் தமிழை நன்கு ஆராய்ந்து அறிந்து கவிபாடும் திறத்தினைப் பெற்றிருந்தார்.இவர் சிந்தையிலே சங்கரர் இருக்க, நாவிலே சரஸ்வதி இருந்தாள். திருவெண்ணீற்றின் பெருமையை உணர்ந்து திருசடை அண்ணலையும், அவர் தம் அடியார்களையும் பேணி வந்தார். 

அவர் வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கிப் பொருள் மறையத் தமது பெயராற் காரிகோவை என்ற நூலினை இயற்றித் தமிழ் மூவேந்தர்களிடமும் (சேர, சோழ, பாண்டியர்) சென்று நட்பினைப் பெற்றனர். அவர்கல் மகிழும்படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார்.

தமிழ்த்துறைப் பயன் தெரிந்து அகத்திணை தழுவிய கோவைப் பிரபந்தமியற்றி அதன் முக்கியப் பொருளான வீட்டின்ப விளக்கம் இனிது புலப்பட மூவேந்தர் முன்னிலையில் அரங்கேற்றி அவர்களால் மகிழ்ந்துதவப் பெற்ற பெரும் பரிசுத்தொகை முழுவதும் சிவதலங்கள் நிருமாணித்தலினும் சிவனடியார்க்கு வெகுமதி செய்தலினும் விரயமாக்குஞ் சிவ தொண்டு நெறிநின்ற காரி நாயனார், தானே அகத்திணைக் கோவையின் முக்கியப் பொருளாகிய வீட்டின்பமளிப்பவனாகிய சிவன் பெருங் கருணைக்கு ஆளாதலும்  தமது பிராரப்த முடிவில் கூட்டோடே சிவன் மகிழ்ந்துறையும் திவ்விய உலகாகிய  திருக் கயிலையை அடைந்து இன்புற்றிருத்தலும் சொல்லாமே அமையுமாயினுஞ் சேக்கிழார் நாயனார் சொல்லி யின்புறுதல் கொண்டு அவர் பேற்றின் மகிமை நன் குணரப்படும்.

அது, "ஏய்ந்தகடல் சூழுலகி லெங்குந்தம் இசைநிறுத்தி ஆய்ந்தவுணர் விடையறா அன்பினராய் அணிகங்கை தோய்ந்த நெடுஞ் சடையார்தம் அருள்பெற்ற தொடர்பினால் வாய்ந்தமனம் போலுடம்பும் வடகயிலை மலைசேர்ந்தார்" என வரும்.

அவர்கள் தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு சிவனுக்குப் பல கோயில்கள் கட்டினார். எல்லாருக்கும் மன மகிழும் இன்ப மொழிப்பயனை இயம்பினார். சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை மிகுதியாக வழங்கினார். இறைவரது திருக்கயிலை மலையினை என்றும் மறவாதிருந்தார். தமது புகழ் விளங்கி இடையறாத அன்பினாலே சிவனருள் பெற்று உடம்புடன் வடகயிலை மலையினைச் சேர்ந்தார்.

ஆலயங்களுக்கு ஆண்டுதோறும் திருப்பணிகள் பல செய்தார்.ஒருமுறை காரி நாயனார், சொல் விளங்கப் பெருமான் மறைந்து நிற்கும் வண்ணம் தமது பெயரால் காரிக்கோவை என்னும் தமிழ் நூல் ஒன்றினை ஆக்கினார்.

மூவேந்தர்களுடைய உயர்ந்த நட்பினைப் பெற்றார். அவர்கட்கு, அந்நூலின் தெள்ளிய உரையை நயம்படக் கூறினார். இவருடைய தமிழ்ப் புலமையை எண்ணி வியப்படைந்த மூவேந்தர்களும் பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து சிறப்பித்தனர்.

பொற் குவியலோடு, திருக்கடவூர் திரும்பிய நாயனார், சிவன் கோயில்களைப் புதுப்பித்தார். சிவன் கோயில்கள் பல கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார். சிவனடியார்களுக்கு அன்போடு அமுதளித்து பெரு நிதிகளை அள்ளி அள்ளிக் கொடுத்து அகமகிழ்ந்தார்.

தமிழறிவால் நூல்கள் பல  இயற்றி பெரும் பொருள் பெற்று அப்பொருளை எல்லாம் சிவாலயத்துக்கும், சிவனடியார்களுக்குமே வழங்கி பேரின்பம் பூண்டார். 

இவ்வாறு கங்கை வேணியரின் கழலினைச் சிந்தையிலிருத்திய தொண்டர் திருக்கடவூரில் கோயில் கொண்டுள்ள அமிர்தகடேசுவரரையும், அபிராம வல்லியையும், பாமாலையாம் பூமாலையால் அல்லும் பகலும் சேவித்தார்.

எம்பெருமான் தொண்டர்க்குப் பேரருள் பாலித்தார். தமது புகழ் உடம்போடு கயிலைமலை சேர்ந்து பேரின்பம் கண்டார் காரி நாயனார்.

காரி நாயனார் புராணம்

இறைவன்: அமிர்தகடேஸ்வரர்

இறைவி: அபிராமியம்மை

அவதாரத் தலம்: திருக்கடவூர்

முக்தி தலம்: திருக்கடவூர்

குருபூசை நாள்: மாசி - பூராடம்

காரியார் நாயனாரின் குருபூஜை மாசி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

"வேரியார் மலர்க் கொன்றை வேணியார் அடிபேணும்
காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால்
வாரியார் மதயானை வழுதியர் தம் மதி மரபில்
சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம்."

பாடல் விளக்கம்:-

தேன் பொருந்திய மலர்க்கொன்றையை அணிந்த சடையையுடைய இறைவரின் திருவடியைப் பேணும் காரி நாயனாரின் அடிகளை வணங்கிக் கடல் போல் நிறைந்து வழியும் மதம் பொருந்திய யானைப் படையையுடைய பாண்டியர்களுக்குரிய சந்திர மரபில் தோன்றிய "நின்றசீர் நெடுமாற நாயனாரின்" திருத்தொண்டினைக் கூறுவாம்.

2019 ஆம் ஆண்டில்  காரி நாயனார்ஆசியுடன் சிவ ராத்திரி கொண்டாடிய பதிவை இங்கே அனைவருக்கும் அறிய தருகின்றோம்.

நம் தளம் சார்பில் இனி 63 நாயன்மார்களின் பூசையை நம்மால் முடிந்த அளவில் அர்ச்சனை செய்து கொண்டாட இருக்கின்றோம்.

இதோ தொடக்கமே காரி நாயனாரின் ஆசிகள் தான்.




அகத்திய பெருமானுக்கு பூ சாற்றினோம்.

அடுத்து 1000 பிரதிகள் சிவபுராணம் அச்சிட்டுள்ளோம். இந்த சிவராத்திரி முதல் விநியோகம் செய்ய உள்ளோம். காரி நாயனரின் போர் பாதத்தில் இன்று வைத்து வணங்கினோம். என்னப்பா? காரி நாயனார் என்று சொல்லிவிட்டு சிவபெருமானிடம் வைத்து உள்ளீர்கள் என்று சிந்திக்க வேண்டாம்.




சிவம் வேறு; அடியார்கள் வேறு அல்ல. இருவரும் ஒன்றே என்று உணர்த்துதலின் உந்துதலே ஆகும். நாம் ஏன் காரி நாயனார் பூசையுடன் இந்த வழிபாட்டை தொடங்கி உள்ளோம். அவர் காரிகோவை என்ற நூலினை இயற்றித் தமிழ் மூவேந்தர்களிடமும் (சேர, சோழ, பாண்டியர்) சென்று நட்பினைப் பெற்றனர். அவர்கல் மகிழும்படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார்.

அவர்கள் தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு சிவனுக்குப் பல கோயில்கள் கட்டினார். எல்லாருக்கும் மன மகிழும் இன்ப மொழிப்பயனை இயம்பினார். சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை மிகுதியாக வழங்கினார். அட. நாமும் நம்மால் முடிந்த அளவில் சிவத் தொண்டு செய்ய அவரின் பரிபூரண ஆசி கிடைத்திருக்கும் என்று நம்புகின்றோம். இது தாங்க அதிசயம் என்பது. இது போன்ற மெய்யுணர்தல் அவ்வப்போது நமக்கு கிடைத்து வருகின்றது.


நம் தல அன்பர்கள் அனைவருக்காக சங்கல்பம் செய்து விட்டு, அந்த பரம்பொருளின் பாதத்தில் சரண் அடைந்தோம்.







சரி. அன்றைய சிவராத்திரி எப்படி அமைந்தது என்று ன் நமக்கே ஆச்சர்யமாகத் தான் இருக்கின்றது.  வழக்கம் போல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் தரிசனம் பெற்றோம். சரியாக அன்று சிவபுராணத்தை ஒரு ஓதினார். அவர் ஓதிய போது நாமும் சில பிரதிகளை அங்கிருந்த அனைவருக்கும் கொடுத்தோம்.




அடுத்து அங்கிருந்து  வேலி அம்மன் கோயிலுக்கு சென்றோம். மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அம்மையப்பனுக்கு கொஞ்சம் மலர்கள் வாங்கி அங்கே கொடுத்து அனைவருக்கும் பிரார்த்தனை செய்தோம்.







அடுத்து அங்கிருந்து கிளம்பி காட்டாங்குளத்தூர் சிவன் கோயிலுக்கு சென்றோம். இந்த தளம் ராகு கேது பரிகார தலம் ஆகும். பலமுறை அந்த வழியே சென்று இருக்கின்றோம்.ஆனால் அன்று தான் நமக்கு அருள் கிடைத்தது. இதைத்தான் நாம் பல முறை உணர்ந்திருக்கின்றோம். ஒரு கோயிலுக்கு செல்வது என்றால் உடனே செல்ல முடியாது. அதற்கென்று நேரம் சூழல் அமைய வேண்டும்.





அடுத்து பிருகு மகரிஷி குடிலுக்கு செல்ல எண்ணி, அலைபேசியில் செய்தி சொன்னோம். அவர்களும் வாருங்கள் என்று நம்மை அழைத்தார்கள். அப்போது தான் மருதேரி செல்லும் வழியில் உள்ள மற்றொரு சிவன் கோயிலான தர்ப்பாரண்யேஸ்வரர் தரிசனம் பெற்றோம். அங்கு அபிஷேகம் கண்டு, சொர்ணாபிஷேகம் பெற்றோம். சிவபுராணம் படித்தோம். ( ஹி.ஹி ..படிப்பது வேறு, பாடுவது வேறு )







அடுத்து அங்கிருந்து அப்படியே வீரபத்திரர் கோயில் வழியாக திருஇடைச்சுரம் சென்றோம். அதாங்க திருவடிசூலம். பின்னர் செம்பாக்கம் சென்று செபுகேஸ்வரர் தரிசனம் பெற்று, வாலைத் தாயின் தரிசனம் பெற்று காலை 5 மணி அளவில் மீண்டும் கூடுவாஞ்சேரி அடைந்தோம். மிக மிக அருமையான யாத்திரையாக சிவராத்திரி அமைந்தது. ஒவ்வொரு கோயிலையும், பெற்ற  அனுபவத்தையும் தனிப் பதிவாக கொடுக்க ஆசை. குருவிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.'



அன்றைய தினம் நாம் அகத்தியரின் அருளையும் இங்கே தருகின்றோம். அகத்தியர் தபோவனம் மலேஷியா குழுவினர் செய்ய நான்கு கால பூசையிலிருந்து சில காட்சிகள் இங்கே.













கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்



அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - 20.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/20022022.html

 கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் அடியார்க்கும் அடியேன் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/06022022_5.html

ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் - 03.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/03022022.html

 திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் - 26.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/26012022_25.html

சண்டேசுவர நாயனார் குரு பூஜை - 22.01.22 - https://tut-temples.blogspot.com/2022/01/220122.html

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் - 16.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/16012022.html

கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன் - 15.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/15012022.html

 தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் - 09.01.2022  - https://tut-temples.blogspot.com/2022/01/09012022.html

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் - 03.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/03012022.html

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

No comments:

Post a Comment