அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
மாசி மாத வழிபாட்டில் மாசி மாத மக நட்சத்திர வழிபாடு இன்றியமையாத ஒன்று. நாளை மாசி மாத ஆயில்ய நட்சத்திர வழிபாடும் உள்ளது. மாசி மகம் சகல தோஷமும் நீக்கும் நாள் ஆகும். அதிலும் நம் குருநாதரின் அருளால் வருடந்தோறும் மாசி மகத்தன்று கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழாவில் கடந்த 3 ஆண்டுகளாக நாம் கலந்து கொண்டு குருவருள் பெற்று வருகின்றோம்.இந்த ஆண்டும் வருகின்ற 17.02.2022 அன்று கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா பாபநாசத்தில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ் பகிர்ந்து அனைவரையும் வருக! வருக!! என்று இரு கரம் கூப்பி வரவேற்கின்றோம்.
மாசி மகம் சித்தர்களின் மஹா யாகம் -பாபநாசம்
குரு தேவர் திருவடி சரணம்!
குரு தேவர் திருவடி காப்பு!!
குரு தேவர் திருவடி போற்றி!!!
மாசி மாதம் 5 ஆம் தேதி ஆங்கில வருடம் 2022 பிப்ரவரி 17 ஆம் தேதி வியாழக் கிழமை
தலையாய சித்தரும் மஹரிஷியும் கும்பமுனியுமானகுரு நாதரின் பெரும்கருணையினால்,பொதிகை மலை அடிவாரத்தில் இறைவன் தன் திருமண கோலத்தை, அம்மை அப்பர் தரிசனத்தை அகஸ்திய மஹா முனிவருக்கு நல்கிய பாபநாசத்தில், மேற்குறிப்பிட்ட திங்களில் சித்தர்களின் யாகம் அன்ன சேவையுடன் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது
இதன் பொருட்டு அன்பர்களும் அடியார்களும் நண்பர்களும் அனைவரும் தங்கள் சுற்றம் சூழ வருகை புரிந்து,இறைவன் கருணையினால் சித்தர்களின் , ரிஷிகளின் கருணையினால் அவர்கள் அருளையும் ஆசிகளையும் அகத்திய அன்பர்கள் அனைவரும் பெற வேண்டி அனைவரையும் வேண்டுகிறோம்.
குறிப்பு: அடியார்கள் தங்களால் இயன்ற அளவில் அன்னதானத்திற்கு உதவிட வேண்டுகின்றோம்
ஓம் அகத்தீசாய நமஹ
திருச்சிற்றம்பலம்
குருவருளும் , திருவருளும் துணை நிற்கட்டும்.
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
நீங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
கண்களில் ஒளியாகி
கருத்தினில் பொருளாகி
எண்ணமதில் நினைவாகி
இதயமதில் அன்பாகி
என் உடலுக்குத் துணையாகி
என் உள்ளத்தில் நிறைவாகி
என் செயல்யாவும் உனதாகி
என்னை நடத்தும் வழியாகி
என்னுள்ளே நீயாகி
உன்னாலே நானாகி
என்னை ஆள்கின்ற தேவனாகி
என் குருநாதனின் தாளே போற்றி
என் குருநாதனின் தாளே போற்றி
என் குருநாதனின் தாளே போற்றி! போற்றி
ஐந்திலக்கணம் தந்த அகஸ்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவயோகியே
கடலுண்ட காருண்யரே கும்ப முனியே
குருவே சரணம்... சரணம்.. சரணம்
அகத்தினுள் இருந்து அழகாய் ஆர்பரித்து
எழுந்து நின்ற என்னிலா ஈஷருக்கு பட்டம்
சூட்டி எண்ணத்தில் கலந்து
எண்ணத்தை சுத்தமாக்கி
அத்தனை சுத்தமும் அற்புதமாய்
தேர்ந்தெடுத்த என் சற்குருவே அகஸ்தியா வா... வா....
அண்டம் வலம் வரும் அருளே போற்றி
அறிவில் குருவாய் அமர்ந்தாய் போற்றி
அடியாரைக் காக்கும் கருணையே போற்றி
அகத்தில் சிவமாம் அகத்தீஷாய திருவடியே போற்றி! போற்றி
ஓம் அகத்தீஸ்வராய வித்மஹே பொதிகை சஞ்சாராய தீமஹி தன்னோ ஸ்ரீ ஞானகுரு ப்ரசோதயாத்
ஓம் சத் சிவமே அகஸ்தியா போற்றி
ஓம் சித் சிவமே அகஸ்தியா போற்றி
ஓம் ஆனந்த சிவமே அகஸ்தியா போற்றி ஓம் சத்சிம் ஆனந்த சிவமே அகஸ்தியா போற்றி! போற்றி
அவன் அருளாலே அவன் தாள் பணிந்து
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சந்திப்போம்
மீள்பதிவாக:-
ஓம் கும்பமுனி குருவே சரணம்! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_13.html
சகல தோஷமும் பாவமும் நீக்கும் மாசி மகம் - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/08032020.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html
No comments:
Post a Comment