"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, February 16, 2022

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய மாசி மக வழிபாடு மிக சிறப்பாக குருவருளால் பொதிகையடி பாபநாசத்தில் நடைபெற்று வருகின்றது. அதிகாலை 3 மணி அளவில் மங்கள இசையில் துவங்கி ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ அகஸ்திய மகரிஷி ஹோமம், ஸ்ரீ நவகிரக ஹோமம், சகல தேவதா ஹோமம், மங்கள ஹோமம் என ஒவ்வொரு ஹோமமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. குருவின் அருளை ஒவ்வொருவரும் பெற்று மகிழ்ந்தோம். தமிழகம் முழுதும் இருந்து இறை அன்பர்கள் கலந்து கொண்டார்கள். ஒவ்வொரு மாசி மக கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா நிறைவில் பிரசாதப் பை தருவது வழக்கம். அதில் ஒவ்வோராண்டும் குருவின் அருள்நிலையை அனைவரும் பெற்று வருகின்றோம். இந்த ஆண்டில் நாம் பெற்ற தரிசனத்தை குருநாதர் பாதம் தொட்டு சமர்ப்பிக்கின்றோம்.




2020 ஆம் ஆண்டில் தரிசனம் 



இன்றைய குருநாள் அன்னசேவை ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ முருகன் கோயிலிலும், செங்கல்பட்டு அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபையிலும் இணைய குருவருளால் பணிக்கப்பட்டோம். இந்த ஆண்டு மாசி மக வழிபாட்டில்  அக்னிதீர்த்தக்கரை - மாசி மகம் 10,008 தீப பூஜையில் அருள் பெற்றோம். இது ஒவ்வொரு ஆண்டில் நமது விருப்பமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் நேரில் கலந்து கொண்டு குருவின் பேரருளில் திளைத்தோம். இவையெல்லாம் குருவின் அருளாலே அன்றி வேறொன்றும் இல்லை. விரைவில் தனிப்பதிவில் தரிசனம் பெறுவோம்.
 
வாழ வழி காட்டும் குருவை போற்றுகின்றோம். குருவின் தாளினை எப்போதும் போற்றி மகிழ்கின்றோம்.

அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
அகண்டபரி பூரணத்தின் அருளே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியரே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்துநின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!

--திருவள்ளுவ ஞானம்


அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 17.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/17022022.html

ஓம் கும்பமுனி குருவே சரணம்!  - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_13.html

 சகல தோஷமும் பாவமும் நீக்கும் மாசி மகம் - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/08032020.html

 மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

 செங்கல்பட்டு ஸ்ரீ அகத்தியர் ஞானக் கோட்டம் - கும்ப பௌர்ணமி மாசி மக விழா - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_15.html

No comments:

Post a Comment