"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, May 27, 2021

கருணைக் கடலே கந்தா போற்றி!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

வைகாசி விசாகம் அன்று காப்பாய் கந்தா என்ற தலைப்பில் அனைவரையும் சந்தித்தோம். இன்று மீண்டும் கருணைக்கடலாம் கந்தன் பாதம் பற்ற உள்ளோம். பற்றினால் போதுமா? போற்றவும் உள்ளோம். தற்போது உள்ள இந்த சூழ்நிலையில் லோக க்ஷேமம் வேண்டி தினசரி பிரார்த்தனை செய்து கோளறு பதிகம், திருநீலகண்ட பதிகம் போன்ற பதிகங்கள் ஓதி, குருவிடம் சரணாகதி அடையுங்கள். சித்தன் அருள் வலைத்தளத்தில் நம் குருநாதரின் அருள் வாக்குகள் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றில் இருந்து சில முக்கிய செய்திகளை உங்களுடன் விரைவில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

அன்பர்களே..மீண்டும் மீண்டும் முருகப்பெருமானின் தரிசனம் இந்தப் பதிவின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த தொற்றுக்கிருமி போராட்டத்தில் நாம் வாழ என்ன காரணம்? இதனை குரு வாக்காக நாம் இங்கே பகிர்கின்றோம். அன்றைய தினம் இந்த பெருந்தொற்று நோய்க்கான தீர்வும் கிடைத்தது. பதிவின் இறுதியில் அறிய தருகின்றோம்.

புண்ணியம் செய்வதை நம் வேலையாக கொள்ள வேண்டும். நித்தமும் தானம், தர்மம் செய்யாமல் இருக்க மாட்டோம் என்று மனதில் நிறுத்துங்கள். இதற்கு பொருள் வேண்டுமல்லவா? இப்படி நீங்கள் நினைத்தால் இது மிகப் பெரும் தவறு. பொருள் உள்ளவர்கள் பொருள் கொண்டு புண்ணியம் செய்யுங்கள். பொருள் இல்லாதவர்கள் உங்களிடம் உள்ள அருள் கொண்டு புண்ணியம் செய்யுங்கள். லோக க்ஷேமம் வேண்டி தினமும் பிரார்த்தனை செய்யுங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம் செய்து இன்றைய பதிவில் சென்ற ஆண்டில் நம் தளம் சார்பில் நடைபெற்ற வைகாசி விசாக வழிபாட்டின் தரிசனம் பெற இருக்கின்றோம்.

வழக்கம் போல் வைகாசி விசாக சேவை எங்கே செய்வது என்று யோசித்த போது, கூடுவாஞ்சேரி ஸ்ரீ வேலி அம்மன் கோயில் நம் நினைவில் வர உடனே குருக்களை தொடர்பு கொண்டோம்.

                                     


குருக்களும் வைகாசி விசாக பூஜைக்கு சரி என்று கூறினார்கள். அன்றைய தினம் ஜூன் மாதம் 4 ஆம் தேதி காலை சுமார் 9 மணி அளவில் கோயிலுக்கு சென்றோம். நம் தளம் சார்பில் விளக்கேற்ற தீப எண்ணெய் கொடுத்தோம்.







பால், தயிர், சந்தானம்,விபூதி, பன்னீர், இளநீர், பூக்கள் என பூஜை பொருட்கள் தயாராக இருந்தது. பார்ப்பதற்கு சிறு அளவில் இருப்பது போல் தெரிந்தது. ஆனால் இந்த காலத்தில் இது போன்று ஏற்பாடு செய்து இருந்தது மனதிற்கு இதமாக இருந்தது. வழக்கம் போல் ஒவ்வொரு அபிஷேகமாக கண்டு களித்தோம்.


அபிஷேகம் முடிந்து அலங்கார தரிசனம் பெற்றோம். கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அலங்காரம் போன்றவற்றை படித்தோம்.

  நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.






அடுத்து தீப தரிசனம் பெற்றோம். லோக ஷேமத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டோம்.





கருணைக் கடலாம் கந்தனின் தரிசனம் பெற்றோம். எம்மில் உள்ள பஞ்சமாபாதங்களை அழித்து விடு முருகா என்று வேண்டினோம்.




  சிந்திக் கிலேனின்று சேவிக் கிலேன்றண்டைச் சிற்றடியை
வந்திக் கிலேனொன்றும் வாழ்த்து கிலேன் மயில் வாகனனைச்
சந்திக் கிலேன் பொய்யை நிந்திக் கிலேனுண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே.  


  பெறுதற் கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக்
குறுகிப் பணிந்து பெறக்கற் றிலேன் மத கும்பகம்பத்
தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லி
இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே.



  விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே.



  சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.



   குமரா சரணஞ் சரணமென் றண்டர் குழாந்துதிக்கும்
அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங்கண்ட
தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங்
கெமராசன் விட்ட கடையேடு வந்தினி யென்செயுமே

    

  சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே.

அடுத்து அங்கே ஒரு சிவன் அடியார் வந்து நம்மிடம் பதிகம் உள்ள நகல் ஒன்றை கொடுத்தார். அதில் தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்றுத் திருப்பதிகம் இருந்தது. முருகப்பெருமான் சந்நிதியில் வைகாசி விசாகம் அன்று நமக்கு கிடைத்தது. இதனை நாம் அன்றாடம் படித்து 




பதிகம் படிப்பதால் என்ன பலன்? இது போன்ற திருமுறைகளை நாம் தினமும் நம்பிக்கை கொண்டு படித்து வந்தால் கேட்பது கிடைக்கும். திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.

இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான். கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாற நாயனார் என்று அழைக்கப்பட்டார். வளைந்த முதுகு தண்டை சரி செய்து நிமிர செய்தது திருநீற்றுப் பதிகமம், திருநீறும் ஆகும்.

இன்றும் காய்ச்சல் போன்ற வெப்பு நோய்களுக்கு திருநீற்றுப் பதிகம் பாடலைப் பாடி திருநீறு பூசிக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே உள்ளது. ஆம். திருநீற்றுப் பதிகம் பாடி இந்தப் பெருந்தொற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வோம்.

திருநீற்றுப் பதிகம்

பாடல் – 1
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

பொருள்:
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.

பாடல் – 2
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

பொருள்:
குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.

பாடல் – 3
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

பொருள்:
திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.

பாடல் – 4
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

பொருள்:
திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.

பாடல் – 5
பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.

பொருள்:
திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.

பாடல் – 6
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

பொருள்:
அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மனவருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது.

பாடல் – 7
எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே.

பொருள்:
கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது.

பாடல் – 8
இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.

பொருள்:
பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது.

பாடல் – 9
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே.

பொருள்:
நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது.

பாடல் – 10
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே.

பொருள்:
மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை (கமண்டலத்தை) ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளை அடைந்தவரும் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.

பாடல் – 11
ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

பொருள்:
ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார்.

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_13.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

No comments:

Post a Comment