அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய நாளில் நால்வரின் பாதம் பணிவோம் என்ற தலைப்பில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நால்வர் என்றதும் இங்கே நாம் பேசும் நால்வர் வேறு. ஆம்! இன்று 4 மகான்களின் குருபூஜை காண உள்ளோம். ஏற்கனவே இரண்டு மகான்களின் குருபூஜை தகவலும், தரிசனம் பெற்றுள்ளோம். அடுத்து இரண்டு மகான்களை இந்த பதிவில் காண இருக்கின்றோம்.
இன்று குருபூஜை காணும் மகான்கள்.
1. பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்
2. திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள்
3. ஸ்ரீ சற்குரு நாத மாமுனி சுவாமிகள்
4. ஶ்ரீலஶ்ரீ பழனி சாக்கடை சித்தர்
இப்பொழுது பதிவின் தலைப்பு சரியாக இருக்கின்றது அல்லவா? சரி..இனி ஸ்ரீ சற்குரு நாத மாமுனி சுவாமிகள் பற்றி காண உள்ளோம்.
திருச்சி மாவட்டத்தில் திருவானைக்கோவில் ஸ்ரீ சற்குரு இராஜயோகத் திருமடத்தில் அகத்தியர் மரபு வழித் தோன்றலான ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவர் 1915, ம் வருடம் எண் கோண வடிவிலான கருங்கல் 12 அடி ஆழத்தில், நிலவறை அமைத்து அதனுள் அமர்ந்து நிர்விகல்ப சமாதி இயற்றி 48 நாட்கள் [ஒரு மண்டலம்] காற்று,நீர்,உணவு இன்றி தவம் இயற்றி தெய்வீக இறை ஆற்றலை பூரணமாக வடித்துள்ளார்.
ஸ்ரீ சற்குரு மகான் அமைத்த அற்புத இராஜயோக தவ மையங்களில் ஒன்றுதான் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில் அமைந்துள்ள ஸ்ரீ சற்குரு இராஜயோகத் திருமடம் ஆகும்.
ஶ்ரீலஶ்ரீ பழனி சாக்கடை சித்தர்
சாக்கடை சித்தர் என்பவர் பழனி மலையின் அடிவாரமான அய்யம்புள்ளி பகுதியில் வாழ்ந்து மறைந்த சித்தராவார்.இப்பெயரைக் கொண்டே பல்வேறு சித்தர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். கரூர் மாவட்டம் குளித்தலை நகரிலும் சாக்கடை சித்தர் என்றொருவர் இருந்துள்ளார்.
சாக்கடை சித்தரின் இயற்பெயர் தெரியவில்லை. இவர் வடநாட்டிலிருந்து தனது 55 வயதில் பழநிக்கு வந்தார்.பழநிமலையில் முருகன் கோயிலுக்கு செல்லுகின்ற அய்யம்புள்ளி சாலையில் சாக்கடை மேடையின் மீது கூடாரமிட்டு வாழ்ந்தார். சாக்கடை நீரைப் பகுவதையும், அதிலேயே குளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தமையால் சாக்கடை சித்தர் என பக்தர்கள் அழைத்தனர்.
யாரிடமும் பேசாமல் இருப்பார். இவரை வழிபட்டால் நல்லது நடக்கும் என உள்ளூர் வெளியூர் பக்தர்கள் பலரும் வணங்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment