அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவை தொடர விரும்பி இங்கே வந்தோம். ஆனால் குருவருளால் இன்று குருவின் தரிசனம் இன்றைய பதிவில் பெற உள்ளோம். இது தான்..இப்படித் தான் என்று நாம் எதையுமே தீர்மானிப்பது இல்லை. நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குருநாதரின் அருளாலே என்று உணர்த்தப்பட்டு வருகின்றோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் தொற்றுக்கிருமி கட்டுப்பாட்டில் இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி, பல தடைகளோடு அன்றாட வாழ்க்கையில் இருந்து வருகின்றோம். இப்படி ஒரு அசாதாரண சூழலை நாம் சந்திக்க போகின்றோம் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த சூழ்நிலையில் லோக க்ஷேமம் வேண்டி தினசரி பிரார்த்தனை செய்து கோளறு பதிகம் ஓதி, குருவிடம் சரணாகதி அடையுங்கள். இன்றைய பதிவிலும் குருவின் அருள் பேச உள்ளோம். விரைவில் ஜீவ நாடி அற்புதங்கள் தொடர்பதிவு தொடர உள்ளோம்.
குரு என்பவர் சுயநலம் இல்லாதவர்,தன்னலம் இல்லாதவர்,பிறர் நலம் காண்பவர்,உண்மையை அறிந்தவர் ,உலகில் நமக்காக வாழ்பவர்,நம் குறைகளை தீர்ப்பவர்,ஊழ்வினை அகற்றுபவர்,கர்மாக்களை வாங்குபவர், நான் எனது என்ற சொல் சொல்லாதவர்,நல்வழியை காட்டுபவர்
பொய் இல்லாத நிலையை அடைந்தவர்,வாழ்க்கையில் வழி காட்டுபவர், உன்னை உனக்கு நீ யார் என அறிமுகப்படுத்துபவர்,நான் யார் என காட்டியவர்,எல்லாம் அவரே என்று சொல்லக்கூடியவர், அது தான் என் கடைசி நிலையையும் காண்பிக்க கூடியவர்,அர்த்தமுள்ள அழுகை எது எனக்காட்டியவர்,அர்த்தமுள்ள அழுகையும் அர்த்தமற்ற சிரிப்பையும் தனக்குள் காட்டுபவர்
எந்நிலையிலும் தன்நிலை இழக்காதவர்,எந்நிலையில் இருந்தாலும் நமக்காக தன் நிலை இறங்கி வரக்கூடியவர்,வாழ்க்கை இதுதான் என காட்டியவர்,சிந்தையில் நாடிவரும் குழந்தைகளையே கவனிக்க கூடியவர், இருளைப்போக்கி ஒளியை காட்டியவர்,நிரந்தரமானது எது என உணர்த்தக்கூடியவர்,எல்லாம் ஒன்றே என்று உணர்த்தியவர், தனிமையில் இருக்கக்கூடியவர்,தனிமையிலும் இனிமையான பரம்பொருளே அவர்தான் என வாழ்பவர்,எதையும் (நல்வழிப்படுத்த) நமக்காக செய்யக்கூடியவர்
தன்னை நினைக்கும் உண்மையாகப்பற்றிய எந்த குழந்தைகளையும் கீழே தள்ளாதவர், நம் சுகதுக்கத்தை பகிர்ந்து கொள்பவர்
இன்னும் சொல்லலாம் …. !அவர் சொல் கேட்டே நடக்கப் பழகுங்கள்.அவரிடம் உரிமையுடனும்,அன்புடனும்,பணிவுடனும் அமைதியாக நடந்து கொள்வீர்.
ஆம். நாம் எப்போதும் நம் குருநாதரின் சொற்படியே நடந்து வருகின்றோம். இந்த தொற்றுக்கிருமி காலத்தில் அனைவரும் தங்கள் குருவைப் பற்றுங்கள். குருவைப் போற்றுங்கள்.
வழக்கமான நமது சேவைகளாக கூடுவாஞ்சேரி கோயிலில் குருநாதர் வழிபாடு, நீர் தானம், அன்னதானம் அனைத்தும் குருவருளால் நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த பெருந்தொற்று காலத்தில் அன்னசேவைக்கு பொருளுதவி செய்துள்ளோம்.
1. சேலம் சபரி ஐயா
2. மதுரை ரேவதி அறக்கட்டளை
3. மதுரை இறையருள் மன்றம்
4. ஆதி சிவன் ட்ரஸ்ட்
5. பானு அன்னூர்
6. திருஅண்ணாமலை அன்னதானம்
அட்சய திருதியை சேவையாக திரு,முல்லைவனம் ஐயா, திரு.சேகர் ஐயா ( கிளி சேகர் ), தயவு சித்தாஸ்ரமம் என நம் சேவையை தொடர்ந்து வருகின்றோம். அனைத்தும் குருவருளால் தான் நடைபெற்று வருகின்றது. இது ஒருபுறமிருக்க, இந்த தொற்றுக்கிருமி காலத்தில் நம்மை வழிநடத்தி வருகின்றார். இதனை இனிவரும் பதிவில் அறிய தருகின்றோம்.
இனி கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் தரிசனம் காண இருக்கின்றோம். கடந்த இரண்டு மாதங்களில் சித்திரை, வைகாசி மாத ஆயில்ய தரிசனம் காண இருக்கின்றோம்.
மதியேது வ விதியேது கதியுந்தன் பொற்பாதமே என்று போற்றிக் கொண்டே இருந்தோம்.
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html
ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html
எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html
பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html
வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html
No comments:
Post a Comment