அகத்தியர்
அன்பின் ஆழம் மூலம் நமக்கு கருணை மழை பொழிந்து வரும் சித்தர். அகத்தியரை வழிபட நாம்
எத்தனை பிறவிகள் எடுத்து வந்தோம் என்று நமக்குத் தெரியாது, புல்லாகி பூடாகி புழுவாகி மரமாய்
இதோ இந்த மனித பிறவியில் நுழைந்திருக்கும் நாம் குரு வழிபாடு, சித்தர்கள் பூஜை என்று செய்து வருகின்றோம். நாம் மாதந்தோறும் ஆயில்ய ஆராதனை கூடுவாஞ்சேரியில் உள்ள அகத்தியர் மகரிஷிக்கு செய்து வருகின்றோம். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை/ திங்கட் கிழமை (12.01.2020 & 13.01.2020) அன்று வருகின்ற ஆயில்யம் மகா குருபூஜை. இந்த குரு பூஜையை ஒட்டி, உலகெங்கும் உள்ள அகத்தியர் ஆலயங்களில் வழிபாடு, பூஜை என நடைபெற உள்ளது. நமக்குக் கிடைத்த தகவல்களை இங்கே தொகுத்து ஒருங்கே தர முயற்சிக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள் அருகே நடைபெறும் அகத்தியர் பூசையில் கலந்து கொண்டு சித்தர் பெருமக்களின் அருள் பெற வேண்டுகின்றோம்.இந்த ஒரே பதிவில் வருகின்ற மார்கழி ஆயில்ய பூசை தகவல்களை இங்கே தருகின்றோம். இவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வசதியான நேரம் கிடைக்கும் போது அப்படியே தரிசனம் செய்து கொள்ள ஏதுவாக இந்தப் பதிவு உங்களுக்கு பயன்படும் என்று நாம் நம்புகின்றோம்.
என்னென்னெ கோயில்கள் என்று ஒரு பட்டியல் தருகின்றோம், அடுத்து கோயிலோடு சேர்ந்து ஆயில்ய பூசையின் விபரங்களை தருகின்றோம்.
1. பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்
2. பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்ய நாயகி உடனாய ஸ்ரீ மாயூரநாத ஆலயம்
3. கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் - பாடல் பெற்ற தலமாக
4. திண்டுக்கல் - அகஸ்தியர்புரம் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி விழா - மலைக்கோயில்
5. தோகைமலை அகத்தியர் ஆலயம்.
1. பஞ்சட்டி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவில்
அகத்திய முனிவர் செய்த ஐந்து யாகங்களுக்கு பஞ்ஜேஷ்டி என்று பெயர். (இஷ்டி என்றால் யாகம். ஐந்து யாகங்கள் என்பதால் பஞ்ச இஷ்டி) அதுவே இத்தலப் பெயரானது. அந்த யாகத்துக்கு அசுர சக்திகளும், தீயசக்திகளும் தடை ஏற்படுத்திட முயல, அகத்திய முனிவர் தேவியைத் துதித்து காத்தருள வேண்டினார். உடனே அம்பிகை மூன்று கண்களைக் கொண்ட திரிநேத்ரதாரணியாக இத்தலத்தில் தோன்றி, தனது இடது காலை முன் வைத்து மூன்றாவது கண்ணால் அந்த அசுர சக்திகளையும், தீய சக்திகளையும் எரித்துச் சாம்பலாக்கினாள். பிறகு அகத்திய முனிவர், அம்பிகைக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டும், அவள் சாந்த நிலைக்குத் திரும்பவும் அம்பாளுக்கு முன்பாக மிகப் பெரிய துர்க்கா மஹா யந்திரத்தை தமது கையாலே பிரதிஷ்டை செய்தார். அம்பாளை இப்படி திரிநேத்ரதாரணியாக அதாவது முக்கண்ணுடையாளாக இந்தத் தலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும்.
முதலில் பஞ்சட்டி அகத்தீஸ்வரர் தீருக்கோயில் குறிப்புகளும், பூசை விபரங்களும். இத்தலத்து ஈசன், அகத்தீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருள்பாலிக்கின்றார். அகத்தியர் இந்தத் தலத்துக்கு வருவதற்கு முன்பே இங்கு ஈஸ்வரன் லிங்க வடிவில் கோயில் கொண்டிருந்தாராம். அகத்தியர் வந்து வழிபாடு செய்ததால் அகத்தீஸ்வரர் என்றே ஈஸ்வரன் அழைக்கப்படலானார். லிங்கத்தின் இடதுபாகத்தில் அம்பாள் மனோன்மணி சக்தியை ஒரு ரூபமான தோற்றத்தில் வைத்து சிவசக்தி சொரூபமாக அகத்திய முனிவர் பூஜித்துள்ளார்.
அகத்தியரால் செய்யப்பட்ட ஐந்து யாகங்களில் அன்னதானத்தையே மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். எனவே இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள் மீண்டும் கிடைப்பதாகவும், உயர் பதவிகள் தேடி வரும் என்றும், பிறவிப்பயனைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
இத்தனை சிறப்புகளைக் கொண்ட கோயியிலில் நடைபெற உள்ள குரு பூஜை அழைப்பு கீழே.
அடுத்து நாம் காண இருப்பது கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்.
3. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ கும்பமுனி அருள் பெற வேண்டுகிறோம். மேலும் விபரங்களுக்கு - https://tut-temples.blogspot.com/2020/01/9.html
4. திண்டுக்கல் - அகஸ்தியர்புரம் அகத்தியர் ஜெயந்தி விழா
6. கும்பமலையில் அகத்திய மாமுனிக்கு குருபூஜை
கீழே இணைத்துள்ள அழைப்பிதழை மேலும் விபரங்களுக்கு சரி பார்க்கவும்.
தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html
பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html
தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html
பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html
அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html
அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html
பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020.html
பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html
ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

7. மருதமலை ஐ.ஓ.பி காலனி ஸ்ரீ அகத்தியர் குரு பூசை
8. பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம்
9. கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி
10. தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி
11. பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா
இவற்றுள் நாம் இன்னும் பல கோயில்களுக்கு செல்லவில்லை. இந்த பதிவின் மூலம் நம் குருநாதரிடம் விண்ணப்பம் வைக்கின்றோம். விரைவில் மேற்கண்ட தளங்களில் நம் குருவின் அருள் பெற இறையருள் இயம்பட்டும்.இது போல் இன்னும் பல தளங்களில் யாருக்கும் வெளியே தெரியாத வண்ணம் ஸ்ரீ அகத்தியருக்கு பூசை நடைபெற உள்ளது. வருகின்ற மார்கழி ஆயில்யம் குரு பரம்பரையை பின்பற்றும் அனைவருக்கும் மிக மிக உகந்த நாள். மிக மிக மகிழ்வோடு நாம் நம் குருவை வரவேற்போம். அது போல் நமக்கு பல வழிகளில் ஜீவ நாடி படித்து நம்மை வழிநடத்தும் குருநாதர்களின் பாதம் பணிகின்றோம்.
1. பஞ்சட்டி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவில்
அகத்திய முனிவர் செய்த ஐந்து யாகங்களுக்கு பஞ்ஜேஷ்டி என்று பெயர். (இஷ்டி என்றால் யாகம். ஐந்து யாகங்கள் என்பதால் பஞ்ச இஷ்டி) அதுவே இத்தலப் பெயரானது. அந்த யாகத்துக்கு அசுர சக்திகளும், தீயசக்திகளும் தடை ஏற்படுத்திட முயல, அகத்திய முனிவர் தேவியைத் துதித்து காத்தருள வேண்டினார். உடனே அம்பிகை மூன்று கண்களைக் கொண்ட திரிநேத்ரதாரணியாக இத்தலத்தில் தோன்றி, தனது இடது காலை முன் வைத்து மூன்றாவது கண்ணால் அந்த அசுர சக்திகளையும், தீய சக்திகளையும் எரித்துச் சாம்பலாக்கினாள். பிறகு அகத்திய முனிவர், அம்பிகைக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டும், அவள் சாந்த நிலைக்குத் திரும்பவும் அம்பாளுக்கு முன்பாக மிகப் பெரிய துர்க்கா மஹா யந்திரத்தை தமது கையாலே பிரதிஷ்டை செய்தார். அம்பாளை இப்படி திரிநேத்ரதாரணியாக அதாவது முக்கண்ணுடையாளாக இந்தத் தலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும்.
முதலில் பஞ்சட்டி அகத்தீஸ்வரர் தீருக்கோயில் குறிப்புகளும், பூசை விபரங்களும். இத்தலத்து ஈசன், அகத்தீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருள்பாலிக்கின்றார். அகத்தியர் இந்தத் தலத்துக்கு வருவதற்கு முன்பே இங்கு ஈஸ்வரன் லிங்க வடிவில் கோயில் கொண்டிருந்தாராம். அகத்தியர் வந்து வழிபாடு செய்ததால் அகத்தீஸ்வரர் என்றே ஈஸ்வரன் அழைக்கப்படலானார். லிங்கத்தின் இடதுபாகத்தில் அம்பாள் மனோன்மணி சக்தியை ஒரு ரூபமான தோற்றத்தில் வைத்து சிவசக்தி சொரூபமாக அகத்திய முனிவர் பூஜித்துள்ளார்.
அகத்தியரால் செய்யப்பட்ட ஐந்து யாகங்களில் அன்னதானத்தையே மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். எனவே இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள் மீண்டும் கிடைப்பதாகவும், உயர் பதவிகள் தேடி வரும் என்றும், பிறவிப்பயனைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
இத்தனை சிறப்புகளைக் கொண்ட கோயியிலில் நடைபெற உள்ள குரு பூஜை அழைப்பு கீழே.
பஞ்ஜேஷ்டி அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் நிகழும் மங்கலகரமான விகாரி ஆண்டு மார்கழி மாதம் 28ம்நாள் (13/01/2020) திங்கள்கிழமை ஶ்ரீ அகஸ்திய முனிவருக்கு ஆயில்ய நக்ஷத்திரத்தை(ஜன்ம நக்ஷத்திரம்) முன்னிட்டு ஶ்ரீஅகஸ்தியர் ஜெயந்திவிழா நடைபெற இருக்கிறது
நிகழ்ச்சிகள்:
காலை 9மணி முதல் ஶ்ரீ அகஸ்திய முனிவருக்கு சிறப்பு மஹா அயிஷேகம்
சிறப்பு அலங்காரம்,பலவகையான வாசனைமலர்களைக்கொண்டு சிறப்பு மலர்வழிபாடு (புஷ்பாபிஷேகம்), உலக நன்மையை வேண்டி கூட்டு பிரார்த்தனை,மஹா தீபாராதனை மற்றும் அன்னப்ரசாதம் விநியோகம்
அனைவரும் வருக அகத்தீசன் அருள் பெருக
அடுத்து நாம் காண இருப்பது பனப்பாக்கம் மாயூரநாதர் கோயிலில் அருள் பாலிக்கும் அகத்தியர் தரிசனமும், ஆயில்ய ஆராதனையும். பனப்பாக்கம் அகத்தியர் கோயிலில் நடைபெற்ற 108 கலச பூஜை பற்றியும், பனப்பாக்கம் திருத்தல மகிமை பற்றியும் ஏற்கனவே பதிவிட்டுள்ளோம். தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்னர் அங்கே உழவாரப்பணி செய்தோம் மீண்டும் ஒருமுறை மீள்பதிவாய் பதிவின் இறுதியில் கண்டு மகிழவும்.
2. பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020
வருகின்ற 12/ 01/2020 ஞாயிற்று கிழமை கூடார வல்லி அன்று ஆயில்ய நட்சத்திர பூஜை பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்ய நாயகி உடனாய ஸ்ரீ மாயூரநாத ஆலயத்தில் வீற்றிருக்கின்ற ஸ்ரீ லோப மாத சமேத ஸ்ரீ அகத்திய முனிவருக்கு மாலை அபிஷேகமும், அதை தொடர்ந்து 108 அகல் விளக்கு தீபம் ஏற்படும் அதை தொடர்ந்து தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்க படும்.
அனைவரும் வாரீர்!! அருள் பெறுவீர்!!!
மேலும் விபரங்களுக்கு:- https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html
அடுத்து நாம் காண இருப்பது கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்.
3. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்
இறை நேயர்களே.
கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற மகான்கள், ஞானிகள் தவம் புரிந்துள்ளனர்.அவர்களில் சைவத்தை பரப்புவதில் சிறந்தவரும் 18 சித்தர்களில் முதன்மையானவருமான ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு நிகழும் மங்களகரமான விகாரி ஆண்டு மார்கழி மாதம் 28ம்நாள் (13/01/2020) திங்கள்கிழமை ஆயில்ய நட்சத்திர தினமான அன்று காலை விசேஷ ஹோமம் ,அபிஷேகம், அன்னதானம், மற்றும் மாலை சித்தர் திருவீதி உலாவும் நடை பெற உள்ளது.
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ கும்பமுனி அருள் பெற வேண்டுகிறோம். மேலும் விபரங்களுக்கு - https://tut-temples.blogspot.com/2020/01/9.html
4. திண்டுக்கல் - அகஸ்தியர்புரம் அகத்தியர் ஜெயந்தி விழா
18 சித்தர்களில் முதலாவது சித்தரான அகத்திய மாமுனியின் ஜெயந்தி விழா வருகிற டிசம்பர் 26 ம்தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை உலக சித்தர்கள் தினம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விழா திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வெள்ளி மலை அடிவாரம் (தியானப்பாறை) ஸ்ரீ அகஸ்தியர் மகரிஷி ஒளி தேக ஷேத்ரம் "அகஸ்தியர்புரத்தில் நடக்கிறது. திண்டுக்கல் சிறுமலை வெள்ளி மலை அடிவாரம், தியானப் பாறை அகத்தியர் ஒளிதேக ஷேத்ரத்தில் வரும் 12ம் தேதி (ஞாயிற்று) அன்று மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில், காலை 11 மணி முதல் ( குரு ஹோரையில்) யாகம் மற்றும் அபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. அத்துடன் அன்னதானமும் காலை 7 மணி முதல் நடக்கிறது
தொடர்புக்கு: : 9942887641, 9442029945 , 9786395006 , 9786834050
பஸ் ரூட் : திண்டுக்கல் To அகஸ்தியர்புரம்
காலை 6:15,9:15, மதியம் 12.15 மாலை 4.20 இரவு 10.20
திண்டுக்கல் To சிறுமலை
காலை 4.35,5.30,8.00,9.15,10.00,10.30, 10.40, 11.30 மதியம் 1.20.
இந்த அழைப்பிதழை பார்க்கும் போதே மனம் லயிக்கின்றது. அகத்தியம் உணருகின்றது. குருவே சரணம் என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றது.
மேலும் விபரங்களுக்கு:- https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html
5. தோகைமலை அகத்தியர் ஆலயம்.
தோகைமலையில் உள்ள அகத்தியமுனிவருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை 12.01.2020 அன்று குருபூஜை நடைபெறுகிறது,காலை 8.00 மணி முதல் யாகவேள்வியும்,21 வகை சிறப்பு அபிசேகம் நடைபெறுகிறது,குருஅருளும் திருவருளும் பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்..
கீழே இணைத்துள்ள அழைப்பிதழை மேலும் விபரங்களுக்கு சரி பார்க்கவும்.
7. மருதமலை ஐ.ஓ.பி காலனியில் நடைபெற உள்ள பூஜை தகவல்
மேலும் விபரங்களுக்கு: https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html
8. பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020
மெய்யன்பர்களே..கீழே அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.விடுமுறை தினமாதலால் வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருள் பெற வேண்டுகின்றோம்.
மேலும் விபரங்களுக்கு:- https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html
9. கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 3 ஆம் ஆண்டு வழிபாடு அழைப்பிதழ்
மெய் அன்பர்களே.
நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் மார்கழி மாதம் 27 ஆம் நாள் 12.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆயில்ய நட்சத்திரமும்,சித்த யோகமும் கூடிய சுப தினத்தில் மாலை 4 மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய மகரிஷி அவர்களுக்கு 108 தீப விளக்கேற்றி அலங்காரம் செய்து ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.
நிகழ்ச்சி நிரல்:-
12.01.2020- மாலை 4 மணி - சித்தர்கள் போற்றி தொகுப்பு ஓதுதல்
12.01.2020 - மாலை 5 மணி - அபிஷேகம்
12.01.2020 - மாலை 6 மணி - 108 தீப விளக்கு ஏற்றல்
12.01.2020 இரவு 7 மணி - சந்தன காப்பு அலங்காரம் தீபாராதனை & பிரசாதம் விநியோகம்
தொடர்புக்கு : 7904612352
10. தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020
ஸ்ரீ அகத்திய மாமுனிவர் திரிசடையுடன் அமர்ந்த கோலத்தில் வலது கையில் சின் முத்திரை, ஜபமாலையுடனும், இடது கையில் கமண்டலத்துடனும் காட்சி அளிக்கிறார். ஸ்ரீ உலோபமுத்ரா தேவி அமிர்தகலசம் தாங்கி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.எம் ஐயன் அகத்தியப்பெருமான் எனையாளும் ஈசனே . அகத்தின் ஈசன் அகத்தீசன் எனவும் கொள்ளலாம்.
இவ்வுலகம் உய்யும் பொருட்டு எம் ஐயன் ஆற்றி வரும் பணி அளப்பரியது.நாடி வருபவர்களுக்கு அறம்,பொருள், இன்பம் அளித்து வீடுபேறும் அளித்திட பல ஊர்களில் கோயில் கொண்டுள்ளார்.அவ்வகையில் காஞ்சிபுரம் அருகில் தூசி எனும் ஊரில் அபிராமி சமேத அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தம் இல்லாள் லோபமுத்ரா தேவியுடன் வீற்றிருந்து அருள்கிறார்.நன்மக்கள் ஒன்று கூடி "அகத்தியர் குழுமம் "ஆகி பல திருப்பணிகள் செய்து வருகிறார்கள். அவற்றில் ஒன்று "ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி".
ஸ்ரீ அகத்திய மாமுனிவர் திரிசடையுடன் அமர்ந்த கோலத்தில் வலது கையில் சின் முத்திரை, ஜபமாலையுடனும், இடது கையில் கமண்டலத்துடனும் காட்சி அளிக்கிறார். ஸ்ரீ உலோபமுத்ரா தேவி அமிர்தகலசம் தாங்கி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
எம் ஐயன் அகத்தியப்பெருமான் எனையாளும் ஈசனே . அகத்தின் ஈசன் அகத்தீசன் எனவும் கொள்ளலாம்.
இந்த வைபவம் வரும் 13.01.2020 மார்கழி மாதம் 28 - ஆம் நாள் திங்கட்கிழமை காலை 9:00 மணி முதல் தூசி கிராமத்தில் நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் தங்கள் உற்றார் உறவினர்களுடன் வந்து கண்டுகளித்து எல்லா வளமும் தடையில்லாமல் கிடைத்திட வாழ்வில் நீங்கா புகழ்பெற ஐயனின் அருள்பெற அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html
11. பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா !
13/01/2020, திங்கட்கிழமை அன்று நம் குருநாதரின் திருநட்சத்திரம் வருகிறது. உலகெங்கும் உள்ள அகத்தியர் கோவில்களில்/ சன்னதிகளில் அன்றைய தினம் மிகச்சிறப்பாக அபிஷேக பூஜைகள்/ஆராதனைகள் நடைபெறும்.
அடியேன் எல்லா வருடமும் அந்த தினத்தில், பாலராமபுரத்தில் அமைந்துள்ள "ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவிலில்" நடக்கும் பூசையில் கலந்து கொள்வேன். அனைத்துமே அவர் அருளால் மிக சிறப்பாக அமையும்.
"சித்தன் அருள்" வலைப்பூவின் அகத்தியர் அடியவர்கள்/வாசகர்கள் அகத்தியர் திரு நட்சத்திர விழா/கோவில் பூசையில் பங்குபெறுகிற கோவில் தொடர்பை கேட்டிருந்தனர். உரிய தகவல்களை கீழே தருகிறேன்.
விருப்பமுள்ளவர், இந்த தகவலை உபயோகித்து தொடர்பு கொண்டு, அகத்தியர் திருநட்சத்திர விழாவில் பங்கேற்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
ஸ்ரீ அகஸ்தியர் ஸ்வாமி திருக்கோவில்,
பாலராமபுரம், திருவனந்தபுரம், கேரளா.
தொடர்புக்கு : திரு. ரதீஷ், பாலராமபுரம் 9020202121
திரு. சுமேஷ், பூஜாரி, அகத்தியர் கோவில் 9497866079
அன்றைய தின அபிஷேக பூஜைகள் தொடர்பான விவரங்கள்.
காலை 5 மணிக்கு கோவில் திறக்கப்படும்.
காலை 5.30 மணிக்கு நிர்மாலய தரிசனம் பின்னர்
அபிஷேக பூஜைகள்.
காலை 6.30 மணிக்கு பூஜை, தீபாராதனை
காலை 8.45க்கு நிவேதனம், ஆரத்தி.
காலை 9 மணிக்கு கோவில் நடை சார்த்தப்படும்.
மாலை 5 மணி முதல் 7.30 வரை கோவில் திறந்திருக்கும்.
13/01/2020 அன்று ஏதேனும் ஒரு அகத்தியப்பெருமான் கோவிலில், பூஜையில் பங்குபெற்று, உழவாரப்பணி செய்து, அவரின் திருவருளை பெறுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
சும்மா..அழைப்பிதழ் மட்டும் தந்தால் போதுமா? என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. இதோ..
பாலராமபுரத்தில் உள்ள அகத்தியர் கோவிலில் நம் குருநாதர், லோபா முத்திரா தாய்க்கான சென்ற வருட திருவிழா, மிகச்சிறப்பாக நடந்தது. இந்த நாட்களில், புஷ்பாபிஷேகம், பூஜைகள் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்

நம் குருநாதரின் தரிசனத்திற்காக எப்போதும் போல் காத்திருக்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு :- https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html
நமக்கு கிடைத்த தகவல்களை ஒருங்கே இங்கே தொகுத்து தந்திருக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள் அருகில் நடைபெறும் குருபூஜையில் கலந்து கொண்டு சித்தர்களின் அருள் பெறவும். கலந்து கொள்ள இயலாதவர்கள் அன்று காலை மாலை நிகழ்த்தும் தினசரி வழிபாட்டில்
ஓம் ஸ்ரீம் லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடி சரணம்
என்று மனதில் நீங்கள் நினைக்கும் எண்ணிக்கையில் போற்றி செய்து, மனதார தியானிக்கவும்.
இந்தப் பதிவிற்காக பல்வேறு வழிகளில் அலைபேசி, சமூக ஊடகங்கள் வழியாக (facebook,whatsapp ) தகவல்களை திரட்டித் தந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
நிங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
மீள்பதிவாக:-
பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html
தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html
பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html
அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html
அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html
பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020.html
பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html
ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html
No comments:
Post a Comment