"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, January 12, 2020

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய பதிவில் சென்ற மாதம் நமக்கு ஒரு வாய்ப்பு தந்த திருஅண்ணாமலை சித்தாஸ்ரமத்தில் நடைபெற்ற மகேஸ்வர பூசை பற்றி தான் காண உள்ளோம். நம்மைப் பொறுத்த வரையில் வருடத்திற்கு ஒரு முறை மகேஸ்வர பூசை செய்வது மிக மிக நன்று. நாம் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களை இங்கே இந்த மகேஸ்வர பூசையில் சமர்ப்பிக்க நமக்கெல்லாம் ஒரு வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும். அப்படி என்றால் நாம் பாவங்கள் செய்து விட்டு ,இங்கு வந்து பிராயசித்தம் தேடிக் கொள்ளலாமா? என்று விதண்டாவாத கேள்வி வேண்டவே வேண்டாம். இந்த அக்னி மலையில் நம் பாதம் படவே கொஞ்சமாவது புண்ணியம் வேண்டும். அதிலும் சில பங்கு இருந்தால் தான் இது போன்ற பூசைகள் கண்டு கேட்டு உணர முடியும்.

இதற்கு முந்தைய பதிவில் சாதுக்களை அமர வைத்து, வாழை இலை போட்டு, உணவு பதார்த்தங்கள் பரிமாறிய நிலையில் இருந்தோம். அங்கிருந்து மீண்டும் மகேஸ்வர பூசை ஆரம்பம்.


தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பது எத்துணை உண்மை. உணர்ந்து தான் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அதுவும் திருஅண்ணாமலை போன்ற தலங்களில் சாதுக்களுக்கு நாம் அன்னதானம் செய்ய நமக்கு ஒரு வாய்ப்பு வேண்டும்.









சாதுக்களிடம் ஆசி வேண்டுவதை விட நாம் வேறு என்ன செய்ய முடியும். அனைவரும் சேர்ந்து நின்று சாதுக்களை வணங்கினோம்.

























அடுத்து சரணவணபவா சுவாமிகள் சாதுக்கள் ஒவ்வொருவரையம் சிவனாக பாவித்து தூபம் காட்ட தொடங்கினார்.





மூக்குப் பொடி சித்தரின் தரிசனமும் பெற்றோம்.






























அடுத்து சாதுக்களுக்கு நறுமண சாம்பிராணி,குங்கிலியம் போட்டு அந்த இடம் முழுதும் கயிலாயம் போலாக்கி விட்டார்.











அடுத்து வழிபாடு நடைபெற்றது. என்னே என்று புரியவில்லை. ஜோதி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அருட்பெருஞ்ஜோதியை வணங்கினோம்.








ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
                                                           ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
                                                           ஜோதி ஜோதி ஜோதி யருட்
                                                           ஜோதி ஜோதி ஜோதி சிவம்.                                       

இதோ ஒவ்வொரு சிவத்திற்கும் ஜோதி காட்ட உள்ளோம்.




















வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி 
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி 
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.     

என்று மனதுள் நினைத்தோம்.





                                  


ஒவ்வொரு ஜோதியையும் பாருங்கள். ஒவ்வொன்றும் வித்தியாசமாக உள்ளது. 

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே. 

என்று அடியார் பெருமக்களை பாடினோம்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முழுமை செய்கின்றோம். மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம்.

 ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.
வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.
ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே. 

 வழிநடத்தும் குருமார்களுக்கு நன்றி.

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் !
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை !
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற !
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே !

மேலும் விபரங்களுக்கு:

ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம், கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில், திருவண்ணாமலை, செல்: (0)9944800220 (இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)


மீள்பதிவாக:-

 அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html


 ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

No comments:

Post a Comment