"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, January 8, 2020

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை மலை வலம் & படி விழா அழைப்பிதழ் (11.01.2020 & 12.01.2020)

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

நாம் ஏற்கனவே கூறியது போல், வள்ளிமலை தரிசனம் நம்மை இன்னும் பக்தியில் ஆழ்த்துகின்றது. பக்தி மட்டுமா என்றால் இல்லவே இல்லை. பக்தியின் உச்சம் காட்டுவதோடு ஞானத்தின் ஆழத்தையும் காட்டுகின்றது. வள்ளிமலை கிரிவலம், மலையேற்றம், தரிசனம், வள்ளிமலை தவப்பீடம், வள்ளிமலை சுவாமிகள் ஆசிரமம் என ஒவ்வொன்றாக வள்ளிமலை அற்புதங்கள் என தொடர்பதிவாக நாம் தந்துள்ளோம். இனிப்பு என்றால் எப்போதும் அதன் சுவை இருப்பது போல் வள்ளிமலை என்றாலே எப்போதும் முருகன் தான். இந்தப் பதிவின் நோக்கமே வள்ளிமலை மலை வலம் அழைப்பிதழ் தருவதற்குத் தான்.

ஆறுமுகனே தெய்வம்
அன்னோன் குருசாமி
வேறு தெய்வம் சொல்லில் விருதாவே
நூறு தரம் மெய் சொன்னேன்
மெய் சொன்னேன் வேத முடிவிதுவே
பொய் சொன்னால் வாய் புழுத்துப் போம்

என்று தண்டபாணி சுவாமிகள் பாடி இருக்கின்றார். நாம் இப்போது தான் முருகனின் அருட்கடலை சிறு துளியாக பருகி வருகின்றோம். முருகன் அருளை வள்ளிமலையில் நாம் பெற்ற போது, இனி வருடத்திற்கு ஒரு முறை நாம் வள்ளிமலை கட்டாயம் செல்ல வேண்டும் என்று மனதுள் இறுத்தினோம்.



அப்படி என்ன தான் இருக்கின்றது வள்ளிமலையில் என்று நீங்கள் கேட்கும் கேள்வி நம் காதில் விழுகின்றது.குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். இந்த குன்றில் குமாரனோடு வள்ளியும் இருப்பதால் வள்ளிமலை மிக மிக பிரசித்தி பெற்றது. மலை என்றால் வலம் செல்வது நன்றாம். இங்கு கிரிவலம் செல்வது நம் வளங்களை தரும் என்பது திண்ணம். திருஅண்ணாமலை போன்று வணிக கடைகள் கிரிவலப் பாதையில் இல்லை. எனவே நாம் நம் விருப்பப்படி கிரிவலம் செல்லலாம். சுமார் 1 மணி நேரம் போதுமானது. இயற்கை காற்று, பசுமை காட்சிகள், வள்ளி பிறந்த இடம் என அனைத்தும் ஒருங்கே சேரும் போது வள்ளிமலை ...வளங்களை அள்ளித்தரும் மலை தான்.



அடுத்து இங்கே மலையேற்றம் மிக சிறப்பு பெற்றது. மலையேற்றத்திற்கு இங்கே படிகள் அமைத்து உள்ளார்கள். இடையில் ஓரிடத்தில் ஓய்வு மண்டபம் வரும். இங்கே சித்தர்களின் அருளாசி பெறலாம். இவையெல்லாம் அடுத்து தொடர்பதிவாக வர காத்திருக்கின்றது. நாம் மலை ஏறும் படிகளில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று அல்லது அதனை ஒட்டிய நாட்களில் படி உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இந்த படி பூசைக்கு பின்னர் ஒரு பெரிய கதையே உண்டு. தொடர்பதிவில் ஒவ்வொன்றாக காணலாம். அதுவரை பொறுத்திருங்கள். நம் குழுவிற்கும் படி பூசை செய்ய அருள் கிடைத்திருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.விரைவில் அறிவிப்பு வெளியாகும்.


இதோ வள்ளிமலை படி பூசை மற்றும் கிரிவலம் வருகின்ற விடுமுறை தினத்தில் நடைபெற உள்ளது.அதற்கான அழைப்பிதழை இங்கே இணைக்கின்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் சென்று முருகன் அருள் பெற வேண்டுகின்றோம். 







எப்படிச்  செல்வது ?


வள்ளிமலை, வேலூர் – சோளிங்கர் செல்லும் சாலையில் இருக்கிறது. வேலூர் பேருந்து
நிலையத்தில் இருந்து வள்ளிமலைக்கு நேரடி பேருந்து வசதி இருக்கிறது.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.


மீள்பதிவாக:-


வள்ளிமலை அற்புதங்கள் - (7) - https://tut-temples.blogspot.com/2019/12/7_26.html

வள்ளிமலை அற்புதங்கள் - (6) - https://tut-temples.blogspot.com/2019/12/6.html

வள்ளிமலை அற்புதங்கள் (5) - https://tut-temples.blogspot.com/2019/12/5_3.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html

 முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html


No comments:

Post a Comment